திருமணம் தடை படுபவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் திருமணத்தடைகள் விரைவில் அகலும்.
திருமணம் நிறைவேற எளிய மந்திரம்
திங்கட்பகவின்மணம் நாறும்
சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்திய வாஎண்
ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்து
மோதரங் கக்கடலுள்
வெங்கட் பணியணை மேல் துயில்
கூரும் விழுப்பொருளே.
பாற்கடலின் அலைகளுக்கிடையே கொடிய கண்களையுடைய பாம்பணையின் மேல் வைஷ்ணவி என்னும் பெயருடன் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் அன்னை அபிராமியே! பிறைநிலவின் மணம் வீசும் சிறந்த நின் திருவடிகளை எங்கள் சிரத்தின் மேல் கொள்ள எங்களுக்கு வாய்க்கப் பெற்ற பாக்கியம் வேறு தேவர்களுக்கும் வாய்க்குமோ.
The post திருமணம் நிறைவேற எளிய மந்திரம்..! appeared first on SwasthikTv.