Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

ஆயுளை நிர்ணயிக்கும் வல்லமை பெற்ற யந்திர சனீஸ்வர பகவான்

$
0
0

 திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள திருஏரிகுப்பத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எந்திர சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த சனீஸ்வரபகவானை வணங்கினால் ஜாதக ரீதியான தோஷம் உள்ளவர்கள், வியாபாரத்தில் தொழில் சிறக்கவும், நீண்ட ஆயிலுடன் இருக்கவும் இங்குள்ள பாஸ்கரா தீர்த்தத்தில் நீராடி எள்;தீபம் ஏற்றினால் அனைத்து பிரச்சனைகளும் விலகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. நவகிரகங்களில் ஒருவரான சனி பகவானை சிலைவடிவில் தரிசித்திருப்பீர்கள் ஆனால் இத்தலத்தில் சனி பகவான் எந்திரம் பொரித்த சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.

 இங்கு மூலஸ்தானத்தில் 2 அரை அடி சிவலிங்க வடிவமாக அமைந்துள்ளது சிவனை போலவே சூரியன் சந்திரன் மற்றும் வருனன் நடுவே காகம் உள்ளது.

ஆறுகோன அமைப்பில் உள்ள ஸ்டார் கோனத்தில் உள்ளது

 சனீஸ்வரரே இங்கு பிரதான மூலவர் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் படைவீட்டை தலைநகராகக் கொண்டு சம்புவராய மன்னர்கள் அரசு புரிந்து வந்தனர். அவர்களின் படை தளபதிகளுள் ஒருவராக விளங்கிய வையாபுரி என்பவர் ஒருசமயம் குதிரையில் செல்லும்போது தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

 அதற்கு பரிகாரமாக அவர், தான் கீழே விழுந்த இடத்தில் யந்திர வடிவில் சனீஸ்வர பகவானைத் தாபித்து வணங்கி பூரண குணமடைந்தார். கால மாற்றத்தால் புதைந்து கிடந்த ஆவ்விக்கிரகத்தைச் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர் என்பது வரலாறு. இங்குள்ள திறந்த வெளிக்கருவறையில் சுமார் 5 அடி உயரமும் 2 அடியாக உள்ளது.

பிராத்தனை :

 சனிப் பெயர்ச்சியால் உண்டாகும் தோஷம் நீங்கவும், ஜாதக ரீதியாக சனிநீசம் பெற்றவர்கலும், திருமணம் குழந்தைபாக்கியம் கிடைக்கவும், வழக்குகளில் வெற்றிபெறவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். சனிபகவான் மனிதர்களின் ஆயுளை நிர்ணயக்கும் வல்லமைப்பெற்றவர் நீண்ட ஆயுளுடன் இருக்கும் வியாபாரம் செழிக்கவும் எள்தீபம் ஏற்றி பிராத்தனையை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.

அமைவிடம்:

   திருவண்ணாமலையில் இருந்து 45 கி.மி தூரத்திலும் வேலூரில் இருந்து 30 கி.மி. தூரத்தில் உள்ளது.

தொடர்புக்கு :  04181-248424

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #enthirasaneeswarar

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post ஆயுளை நிர்ணயிக்கும் வல்லமை பெற்ற யந்திர சனீஸ்வர பகவான் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


சித்தன் அருள் - 204 - அகத்தியர் அறிவுரை - 20


விருப்பங்கள் நிறைவேற காமாட்சி தேவி மந்திரம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


என்னிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்ட சீரியல் குழு அதிகாரி: நடிகை திவ்யா!


சோழர் பாசன திட்டம் என்றால் என்ன? அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை-பின்னணி...


வெண்முரசு- குருபூர்ணிமா சிறப்புச் சலுகை


தொ.மு.சியின் புதுமைப்பித்தன் -கிருஷ்ணன் சங்கரன்


தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>