Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

கஷ்டங்களை போக்கும் கர்நாடக சொக்கநாதப்பெருமாள்

$
0
0

 சோழமன்னர்கள் ஆட்சி காலத்தில் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் பல இடங்களில் கோயில்கள் கட்டியுள்ளனர். சொக்கநாதபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமத அருள் பலிக்கிறார். கவலையோடு வேண்டுவோரின் கண்ணீரை துடைத்து, கஷ்டங்களை போக்கும் சொக்கநாதபெருமாள் பக்தர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

முழுக்க முழுக்க சைவ நெறியை:

 சிக்பள்ளாபூர், சிந்தாமணி தாலுகாகளில் நந்தீஸ்வரன் என்ற பெயரில் கோயில் கட்டினர். பங்காருபேட்டை தாலுகா, கோலார் தங்கவயலில் சோமேஷ்வரன், முல்பாகல் தாலுகாவில் உள்ள ஆவணியில் ராமலிங்கேஷ்வரன், முல்பாகலில் கணபதி ஆகிய பெயர்களில் கோயில் கட்டியுள்ளனர். முழுக்க முழுக்க சைவ நெறியை பின்பற்றி அதனடிப்படையில் வழிபாடுகள் நடத்தியது மட்டுமில்லாமல் சைவ முறையை போற்றும் வகையில் ஆங்காங்கே சிவன், கணபதி, சுப்ரமணியசுவாமி, சவுடேஷ்வரி கோயில்கள் கட்டினர்.

 அதே சோழ மன்னர்கள் பெங்களூரு மாநகரின் மைய பகுதியில் இருந்து சில மையில் தூரத்தில் உள்ள தொம்மலூர் பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சொக்கநாதபெருமாள் என்ற பெயரில் விஷ்ணு கோயில் கட்டி வெகுவிமர்சையாக கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். எலகங்கா, அல்சூர், தொம்மலூர் உள்பட அதை சுற்றியுள்ள பகுதியில் விஷ்ணுவை போற்றி வணங்கும் வைணவர்கள் அதிகம் வாழ்ந்தனர். அவர்களின் வேண்டுக்கோளை ஏற்று சொக்கநாதன் என்று சிவபெருமானை அழைப்பது போல், சொக்கநாத பெருமாள் என்ற பெயரில் விஷ்ணு கோயில் கட்டியுள்ளனர். இது தொடர்பாக கோயிலை சுற்றி அவர்கள் தமிழ் மொழியில் செதுக்கியுள்ள கல்வெட்டில் பதிவு செய்துள்ளனர்.

சோதனை போக்கும் சொக்கநாதபெருமாள்:-

 பெங்களூரு மகாத்மாகாந்தி சாலையில் இருந்து பழைய ஏர்போர்ட் சாலைக்கு செல்லும் வழியில் தொம்மலூர் உள்ளது. சோழமன்னர்கள் ஆட்சி செய்தபோது அதை தாமல்ஊரு என்று தமிழில் அழைத்துள்ளனர். அப்பகுதியில் இருந்த குளங்களில் அதிகளவு தாமரை மலர்கள் மலர்ந்திருந்த காரணத்தால் இப்பெயரை அவர்கள் சூட்டியதாக தெரியவருகிறது. தாமல் ஊரு என்ற பெயரில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் டொம்பலூர் என்றும் பிறகு தொம்மலூர் என்று அழைக்கப்படுகிறது.  கருவறையில் சொக்கநாதபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமத அருள் பலிக்கிறார். கவலையோடு வேண்டுவோரின் கண்ணீரை துடைத்து, கஷ்டங்களை போக்கும் சொக்கநாதபெருமாள் இன்றளவும் பக்தர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

5 கால பூஜை

 சொக்கநாதபெருமாள் கோயிலில் தினமும் காலை 8.30 மணி முதல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் 9 மணிவரையும் நடை திறக்கப்படுகிறது. தினமும் 5 கால பூஜை நடக்கிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.கன்னட வருட பிறப்பான உகாதி, வைகுண்ட ஏகாதசி, தீபாவளி பண்டிகை நாட்களிலும், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் சிறப்பு வழிப்பாடுகள் நடக்கிறது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #chokanaathaperumal

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post கஷ்டங்களை போக்கும் கர்நாடக சொக்கநாதப்பெருமாள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>