மதுரை அடுத்துள்ள அழகர் கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இங்கு தாயார் சுந்தரவள்ளி உடன் பரமசாமி என்ற பெயரில் பெருமாள் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் விவசாயம் சொழிப்பு, வியாபாரம் விருத்தி புதிய தொழில் தொடங்க வாய்ப்புக்கள் வரும் என்பது என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அழகர் மலை கிழக்கு மேற்காக 21 மைல் நீளமும் ஆயிரம் அடி உயரமும் உடையது. இந்த மலையின் தென்புற அடிவாரத்தில்தான் அழகர்கோயில் உள்ளது. கருவறையில் மூலவர் சுந்தரராஜப்பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவியுடன் காட்சி தருகிறார். தவிர உற்சவர் தியாகபேரர் சுந்தரபாகு நித்திய உற்சவர் நலந்திகழ் நாராயணன் ஏறு திருவுடையான் உள்ளிட்டோரின் சிலைகளும் உள்ளன, பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 93-வது திவ்ய தேசம்.
ஸ்ரீரங்கம் முதல் இடத்தையும் காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் மூன்றாவது இடத்தை அழகர் கோவில் பெற்றுள்ளது, மூலவர் தெய்வ பிரதிஷ்டை அனையாவிளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். மற்ற தலத்தில் நின்ற கோலத்தில் காட்சி தரும் ஆண்டால் இங்கு அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பஞ்சாயுதம் (சங்கு சக்கரம், சுதை,வில்,வால்) தாங்கிய கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.
பிராத்தனை:
பிராத்தனை நிறைவேறியதும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர். மேலும் எடைக்கு எடை நாணயம் எடைக்கு எடை தாணியங்கள் ஆகியவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்துகின்றனர், தல விருட்சம்-ஜோதி விருட்சம், சந்தனமரம்.
சித்திரை திருவிழா:
அழகர் கோவிலில் தான் லட்சுமி பெருமாளை கைப்பிடித்தாள் அன்று முதல் சுந்தரவள்ளி என்று பெயர் பெற்ற அண்னை இந்த திருமண கோலம் அனைவரது மனதையும் கொள்ளைகொண்டது மக்கள் மனதை கொள்ளைக்கொண்டதால் இவர் கள்ளழகர் ஆனார். மதுரையில் நடக்கும் திருவிழா மீனாட்சிஅம்மன் திருக்கல்யாணமும், அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கண்டு வந்தால்.
நுபுர கங்கை:
சிலம்பாறு-ராக்காயி அம்மன் கோவில் அம்மன் கால் சிலம்பில் இருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவநதி வந்துகொண்டு இருப்பது இங்கு அதிசயம்.
புரண பெயர்கள்:
திருமாலிருஞ்சோலை உத்யானசயனம் சோலைமலை மாலிருங்குன்றம் வனகிரி விருஷபாத்திரி அல்லது இடபகிரி என பல பெயர்கள் உள்ளன. அழகர் மலை கிழக்கு மேற்காக 21 மைல் நீளமும்இ ஆயிரம் அடி உயரமும் உடையது. இந்த மலையின் தென்புற அடிவாரத்தில்தான் அழகர்கோயில் உள்ளது. கருவறையில் மூலவர் சுந்தரராஜப்பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவியுடன் காட்சி தருகிறார். தவிர உற்சவர் தியாகபேரர் சுந்தரபாகு நித்திய உற்சவர் நலந்திகழ் நாராயணன் ஏறு திருவுடையான் உள்ளிட்டோரின் சிலைகளும் உள்ளன.
ரங்கநாதரை கணவராக அடைய வேண்டி பிரார்த்தனை செய்த ஆண்டாள்
ரங்கநாதரை கணவராக அடைய வேண்டி பிரார்த்தனை செய்த ஆண்டாள் நூறு அண்டாவில் ‘அக்கார அடிசில்’ செய்து படையல் வைப்பதாக வேண்டிக் கொண்டாராம். இந்த வேண்டுதல் செய்து ஒரு மண்டலம் முடியும் முன்பு ரங்கநாதருடன் ஐக்கியமாகி விடுகிறார். அதனால் சொல்லியபடி படையலை செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பின்னர் இதை கேள்விப்பட்டு ஆண்டாளின் நேர்த்திக்கடனை ராமானுஜர் செலுத்தியதாக புராணங்கள் கூறுகின்றன. ஆண்டாளுக்கு அருகிலேயே மண்டூக மகரிஷி ஹயக்ரீவர் கிருஷ்ணன் ருக்மணி சத்தியபாமா சந்நிதிகள் உள்ளன. எட்டு கைகளுடன் கூடிய கிருஷ்ணன் சந்நிதியில் வாசல் கதவும் உள்ளது.
ஆழ்வார் என்ற பட்டப்பெயரோடு வீற்றிருக்கிறார்:
இரண்டாம் பிரகாரத்தில் அக்னி மூலையில் வலம்புரி விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற பட்டப்பெயரோடு வீற்றிருக்கிறார். கன்னி மூலையில் சோலைமலை நாச்சியார் வாயு மூலையில் சீனிவாசன் ஸ்ரீதேவி பூமாதேவி யோக நரசிம்மர் உள்ளிட்டோர் உள்ளனர். மேலும் குபேரமூலையில் தேவசேனாதிபதியும் ஈசானிய மூலையில் ஷேத்ரபாலகனும் உள்ளனர். மூன்றாம் பிரகாரத்தில் கருட மண்டபமும் கருடன் சந்நிதியும் இருக்கின்றன. பெருமாளுக்கு மேலே உள்ள விமானத்தில் மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியன் தங்கத்தகடு பொருத்தினான். அது கொள்ளையர்களால் களவாடப்பட்டதால் இப்போது செப்புத்தகட்டில் தங்கமுலாம் பூசி பொருத்தியுள்ளனர்.
திருமலைநாயக்கர் செய்த கட்டில்:
நான்காம் பிரகாரத்தின் அக்னி மூலையில் ஆழ்வார் மற்றும் ஆச்சாரியார்கள் சந்நிதிஇ அதையடுத்து கல்யாண சுந்தரவல்லித் தாயார் மற்றும் சக்கரத்தாழ்வார் சந்நிதிகள் உள்ளன. இப்பிரகாரத்தில் பள்ளியறை மண்டபம் உள்ளது. யானைத் தந்த கட்டில் ஒன்றும் உள்ளது. திருமலைநாயக்கர் செய்த கட்டில் இது. நான்காம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆண்டாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
ஐந்தாம் பிரகாரத்தில் அனுமான் கிருஷ்ணர் ராமர் சந்நிதிகள் 6ம் பிரகாரத்தில் நந்தவனம் உள்ளன. 7ம் பிரகாரத்தில் சப்த கன்னிகள் உள்ளனர். நாராயணவாவி தீர்த்தமும் உள்ளது. ஆடி பிரம்மோற்சவத்தின் போது இங்கு தீர்த்தவாரி நடக்கிறது. அழகர் கோயிலின் மிக முக்கியமான அம்சம் தீர்த்தம்தான். நூபுர கங்கை என அழைக்கப்படும் இந்த தீர்த்தம் அடிவாரத்திலிருந்து 3 கிமீ உள்ளது.
அமைவிடம் :
மதுரையில் இருந்து அழகர் கோவில் 21 கி.மி தூரத்தில் உள்ளது.
தொடர்புக்கு: 0452-2470228
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #sreekalahasthi #azhagar kovil #azhagar
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அழகர் கோவில் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.