Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

மூன்றடி மண் கேட்ட திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்

$
0
0

 விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தாயார் பூங்கோவில் நாச்சியாருடன் திருவிக்கிரமர் (உலகளர்ந்த பெருமாள்) என்ற பெயரில் பெருமாள் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் நல்ல பதவிகளை அடைய விரும்புகிறவர்கள் பதவி உயர்வு பதவியை இழந்தவர்களும் இங்கு வந்து சாமியை வேண்டி தரிசிக்கிறனர். இக்கோவிலில் தனிச்சிறப்பாக கல்யாண பாக்கியம் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

பெருமாளின் மங்களா சாசனம்:

 பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 43-வது திவ்ய தேசம் இங்கு விஷ்ணுவும் துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கின்றனர், மூலவரின் திருமேனி தாருவால் (மரம்) ஆனது இவ்வளவு பெரிய பெருமாள் கோவில் வேறு எங்கும் கிடையாது. சாளகிரமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் உள்ளார், தமிழகத்தில் இது 3-வது பெரிய கோபுரம் ஆகும் 5-ஏக்கர் பரப்பளவில் உள்ளது, ராஜகோபுரம் 192-அடி உயரம் கொண்டது  11 நிலைகளை கொண்டது முதல் இடம் ஸ்ரீரங்கம் 2-வது ஸ்ரீவில்லிபுதூர் 3-வது உலகளர்ந்த பெருமாள் கோவில் ஆகும். இத்தலத்தை நடுநாட்டு திருப்பதி என்று கூறுகின்றனர்,இங்கு தல விருச்சமாக புன்னை மரம்.

தீர்த்தம் பொன்னைஆறு கிருஷ்ணாதீர்த்தம் ஸ்ரீசக்கரதீர்த்தம்

மகாபலி சக்கரவர்த்தி:

 அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், நாடு போற்றும் நல்லாட்சியை புரிந்து கொண்டிருந்தான் மகாபலி சக்கர வர்த்தி. மகாபலி தனது முன்பிறவியில் எலியாக இருந்தான். அப்போது சிவன் கோவில் ஒன்றில் விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு எலியின் மூக்கு நுனியால் விளக்கு திரி தூண்டப்பட்டு, விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்த அந்த எலியை, மறு பிறவியில் நாடு போற்றும் சக்கரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார் சிவபெருமான்.

 அவனே மகாபலி சக்கரவர்த்தியாக பிறப்பெடுத்தான். அவன் தன் நாட்டு மக்களுக்கு செய்த நற்காரியங்கள், அவனை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு போயிருந்தது. இந்த நிலையில் நாட்டின் நலன் கருதி வேள்வி ஒன்றை நடத்த முன்வந்தான் மகாபலி சக்கரவர்த்தி.  இதை அறிந்த தேவர்கள் கலங்கிப் போனார்கள். ஏற்கனவே பல நற்காரியங்கள் செய்திருக்கும் நிலையில், இந்த வேள்வியையும் முடித்து விட்டால், அசுரகுலத்தைச் சேர்ந்த அவன் இந்திரப்பதவியை அடைந்துவிடக்கூடும் என்று அவர்கள் எண்ணினர். அதனைத் தடுத்தருளும்படி மகா விஷ்ணுவிடம் போய் நின்றனர். முடியாது. அதனால் தேவர்களான எங்களுக்கு பெரும் ஆபத்து வரலாம். எனவே அவனது வேள்வியை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று வேண்டினர். ‘சிறப்பான ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் மகாபலியைப் பார்த்து, இந்த தேவர்களுக்குத்தான் எத்தனை பொறாமை. அவனால் இவர்களுக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று என்னிடமே வந்து நிற்கிறார்கள்’ என்று எண்ணிக் கொண்டார் மகாவிஷ்ணு. இருப்பினும் தேவர்களை காப்பது தன் கடமை என்பதால் அவர்களுக்கு உதவ முன்வந்தார். அதே நேரத்தில் மகாபலியின் சிறப்பை உலகம் அறியச் செய்யவும் அவர் சித்தம் கொண்டார்.

அதற்காக வாமன (குள்ளமான) அவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு. 3 அடி உயரமே கொண்ட அவர், ஒரு கையில் தாழம்பூ குடையும், மற்றொரு கையில் கமண்டலம் கொண்டு மகாபலி நடத்தும் வேள்வி சாலைக்குச் சென்றார். அவரை வரவேற்ற மகாபலி, தானம் வழங்க முற்பட்டான்.

ஆனால் வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அசுர குல குருவான சுக்ராச்சாரியார் அறிந்து கொண்டார். அவர் மகாபலியிடம், ‘மகாபலி! வந்திருக்கும் அந்தணரின் மேல் எனக்கு சந்தேகமாக உள்ளது. அவர் திருமாலின் அவதாரமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. எனவே தானம் கொடுப்பதில் அவசரம் வேண்டாம்’ என்று அறிவுறுத்தினார்.
மகிழ்ச்சியில் திளைத்தான் மகாபலி. ‘குருவே! என்னிடம் தானம் பெற வந்திருப்பது திருமாலின் அவதாரம் என்றால், இதைவிட பெரிய பேறு எனக்கு  என்ன இருக்கப் போகிறது!’ என்று கூறியவன், அத்துடன் நில்லாமல், கமண்டலத்தை எடுத்து நீர் வார்த்து தானத்தைக் கொடுக்க முன்வந்தான். இனி அவனை தடுக்க முடியாது என்பதை அறிந்த சுக்ராச்சாரியார், தும்பி  (வண்டு)யின் உருவம் கொண்டு கமண்டலத்திற்குள் புகுந்து நீர் வரும் வழியை அடைத்துக்கொண்டார்.

உலகளந்த பெருமாள்:

 இதை பார்த்த வாமனர், தர்ப்பைப் புல் ஒன்றை எடுத்து நீரை அடைத்திருந்த  வண்டை நோக்கி குத்தினார். இதில் சுக்ராச்சாரியாரின் கண் பார்வை பறி போனது. மகாபலி சக்கரவர்த்தி நீர் வார்த்து தானத்தை கொடுத்தான். பின்னர் தங்களுக்கு உரிய நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று  வாமனரை நோக்கி கூறினான். இதற்காகவே காத்திருந்த வாமனர், குள்ள உருவில் இருந்து வானுயரத் திற்கு உயர்ந்தார். இதைப் பார்த்து ஆச்சரியத்தில் மலைத்துப் போய் நின் றான் மகாபலி சக்கரவர்த்தி. உயர்ந்து நின்ற வாமனர் முதல் அடியைக்  கொண்டு மண்ணுலகையும், இரண்டாம் அடியாக விண்ணுலகையும் அளந்து  முடித்தார். பின்னர் மகாபலியிடம், ‘சக்கரவர்த்தியே! நான் இரு உலகங்களையும் இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது’ என்று கேட்டார். ‘இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்’ என்று நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்த்தி இருந்தான். மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார், தொடர்ந்து ‘மகாபலியே! உன் நல்லாட்சியால் உன் நாட்டை வளம் பெறச்  செய்தாய். அதனால் நீ பெற்ற பலன்கள் அனைத்தும் உனக்கு உயர்வைத் தந்தது. இப்போது நீ எனக்கு வழங்கிய தானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்று இருப்பாய்’ என்று அருளினார், பாதாளத்திற்கு சென்ற மகாபலி சக்கரவர்த்தி, ‘திருமாலே! நான் என் நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் மிகுந்த பற்று வைத்திருக்கிறேன். அதைத் தாங்களும் அறிவீர்கள். எனவே வருடத்திற்கு ஒரு முறை மட்டும் நான் என் நாட்டிற்கு வந்து என் மக்களின் சிறந்த வாழ்க்கையை பார்க்க அனுமதிக்க வேண்டுகிறேன்’ என்றான்.

அப்படியே ஆகட்டும்என்று ஒப்புதல் அளித்தார் மகாவிஷ்ணு :

 அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத் திருநாள் அன்று மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய நாட்டையும், நாட்டு மக்களையும் பார்ப்பதற்காக வருகிறார். அவரை வரவேற்கும் விதமாகவே கேரள மக்கள் 10 நாட்கள் திருவிழாவாக ஓணம் பண்டிகையை நடத்துகின்றனர்.

அமைவிடம்:

   திருவண்ணாமலையில் இருந்து 40 கி.மி. தூரத்திலும் விழுப்புரத்தில் இருந்து 35 கி.மி தூரத்திலும் உள்ளது.

தொடர்புக்கு : 9486279990

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #shiva #perumal #thirukoviloor

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post மூன்றடி மண் கேட்ட திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>