தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலாதிரிபுர சுந்தரி கோவில் உள்ளது. அம்பாள் பல வடிவங்களில் ஒன்றாக பாலாதிரிபுரசுந்தரி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இந்த அம்பாளை வணங்கினால் வாழ்க்கையில் சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. பல வடிவங்களில் ஒன்று பாலா திரிபுரசுந்தரி. லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உற்பத்தியானவன் பண்டன் எனும் அசுரன். ஒரு பெண்ணைத் தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான். அந்த உற்சாகத்தில் அவன் தேவர்களையும் ஏனையோரையும் துன்புறுத்தினான். அவர்கள் பராசக்தியைச் சரணடைய, தேவி தன் சேனைகளோடு போர் புரிந்து பண்டாசுரனை வதைத்தாள்.
மூவுலகங்கள் என மூவகைப் பிரிவுகளுக்கெல்லாம் இவள் உரியவள் என்கிறது கௌடபாத சூத்திர உரை, சந்திர கண்டம். சூரிய கண்டம். அக்கினி கண்டம் என்றும் முப்பிரிவுடைய சக்கரத்திற்கு இவளே தலைவி என்றார் அபிராமி பட்டர். திருமூலர் தன் திருமந்திரத்தில், பராசக்தி சாதகர்களுக்கு சாதகமான பாலா ஆவாள்.ன்று பாடியுள்ளார்: இத்தனை சிறப்பு வாய்ந்த வாலை தெய்வத்தையே சித்தர்கள் அகப்புற வழிகளில் பூசை செய்தார்கள். இங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீவாலை குருசுவாமியும் அவரின் சீடர் ஸ்ரீகாசியானந்தரும் வாலையை வழிபட்டு சித்தி பெற்று தன் தாயின் பெயரையே தம் பெயராகக் கொண்டனர்.
வாலாம்பிகையை வணங்க சகல பாக்கியங்களையும் அடைவது நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆலயத்தின் வெளி பிராகாரத்தில் வர்ண ஆகர்ஷண பைரவர் அருள்கிறார். இவரை வழிபட்டால் நமது ஜன்ம பாவ வினைகள் அனைத்தும் தீரும். நினைத்த காரியம் தடையின்றி எளிதில் கைகூடும். பிராகாரத்தில் அணிக்கை விநாயகர். மாணிக்கவாசகருடன், ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜர் ஸ்ரீமனோன்மணி அம்பாள், ஸ்ரீசந்திரசகர மூர்த்தி. கன்னி விநாயகர், பாலமுருகன், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், பிரதோஷ நந்தி மற்றும் நித்யானந்த மண்டபத்தில் அன்னபூரணி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். வெளிப் பிராகாரத்தில் மஞ்சணத்தி மரத்தடியில் ஸ்தல விருட்ச விநாயகரும், உச்சிஷ்ட கணபதியும் அருள்பாலிக்கிறார்கள். பண்டாசுரனுடன் நடந்த யுத்தத்தில் அகர தளபதி ஒருவன். விக்ன யந்திரத்தை ஸ்ரீநகர கோட்டைக்குள் லலிதாம்பிகையின் சகல தோழியரும், மந்த்ரிணியும் புகமுடியாதபடி எறிந்துவிடுகிறான். இதனால் லலிதையின் சக தோழியரும். தளபதியும், மந்த்ரிணியும் ஸ்தம்பனம் ஆகிவிட்டனர். அப்பொழுது கணபதி அந்த அகர எந்திரத்தை அழித்து அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டுவந்தார்.
அம்பிகை லலிதை அகம் மகிழ்ந்து மகா சித்த கணபதிக்கு தன் ஸ்ரீநகர கோட்டையில் முக்கிய அந்தஸ்தை அளித்தாள். இதனாலேயே பாலா வழிபாட்டில் ஸ்ரீவித்யா உபாசனையில் கணபதி வழிபாடு பிரதானம் ஆகும், மஹா கணபதி மந்திரம் மூலாதாரமாகச் சொல்லப் படுகிறது. இவரை வணங்கினால் தடையின்றி அம்பிகையின் அருள் கிடைக்கும். ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தி அன்றும் இந்த உச்சிஷ்ட கணபதிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அன்று முதல் அன்பர்கள் திருக்கோயிலில் உள்ள வேப்பிலை, மஞ்சணத்தி இலை, வில்வம் இலை, புளிய இலை, எலுமிச்சை பழச்சாறு இவற்றுடன் திருநீறு மற்றும் திருமண் சேர்த்து. திருக்கோயிலின் பிராகாரத்தில் உள்ள அம்மிகளில் அவரவர்களே அரைத்து. இறைவனின் திருவடியில் வைத்து பின் அருந்தி வருகிறார்கள், திருமாத்திரை அக மற்றும் புற நோய்களுக்கு அரு மருந்தாகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. தலவிருட்சம் கோயிலின் பிராகாரத்திலுள்ள மஞ்சணத்தி மரமே ஆகும். இந்த விருட்சத்தின் நிழலிலேயே ஸ்ரீவாலை குருசுவாமியும். ஸ்ரீகாசியானந்தரும் ஸ்ரீவாலை பூஜை செய்து வந்ததாக நம்பப்படுகிறது.
அமைவிடம்:
தூத்துகுடியில் இருந்து 27 கி.மி. தூரத்தில் உள்ளது.
தொடர்புக்கு : – 9500485233
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #shiva #balathirupurasundari #Kommadikottai
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post சகல பாக்கியம் தரும் கொம்மடிக்கோட்டை பாலா திரிபுரசுந்தரி appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.