Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

ஜலத்தில் மறைந்திருந்து அருள் தரும் ஆத்திவரதர்!

$
0
0

     காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான அத்தி இக்கோயிலில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு அத்தி வரதர் மற்றும் தங்க பல்லியும். இங்கு உள்ள அத்தி வரதர் என்னும் பெருமாளை, நாம் 40 வருடத்திற்கு ஓரு முறை தான் தரிசிக்கமுடியும். ஏனெனில் அவர் இருப்பதோ, நம் கண்ணனுக்கு புலபடாத தண்ணீருக்கு அடியில் கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள ஓரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறான் அத்தி வரத பெருமாள். இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவதில்லையாதலால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார். பெருமாளின் தாருமயமான திருமேனி மரத்தினால் செய்யப்பட்டது மிகப்பெரிய அத்திமரத்தால் வடித்து பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிரமம்மனின் யாக தீயினின்று images2தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத்தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து, சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். பெருமாள் பெரும் ஊஷ்ணத்தை தணிக்கவே தெப்பக்குளத்தில் வாசம் செய்கிறாராம். அப்படியே இவரை வெள்ளித்தகடு பதித்த பெட்டியில் சயனக்கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர்.
பழைய சீவரபெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்துவிட்டனர். ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை ஈறைத்து விட்டு ஆதி அத்திவரதரை வெளியே கொண்டு வருவார்கள்.
வெள்ளிதகடுகள் பதித்த பெட்டியில் சயனகோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 வருடங்களுக்கு ஓரு முறை,மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளியிருப்பார்.
பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, ஊற்சவ விழா வழிபாட்டோடு, 10 நாட்கள் கண்குளிர தரிசிக்கலாம். பிறகு மீண்டும் வெள்ளித்தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப்பட்டுவிடுவார். 1939 மற்றும் 1979ம் ஆண்டுகளில் நடந்த இந்த kanchiவைபவம். அடுத்து 2019ம் ஆண்டு நடக்கும். வைகுண்டநாதப் பெருமாள் கோயில் காஞ்சி நகரத்தினுள்ளேயே பொலிவுற அமைந்திருக்கிறது. மேற்கு நோக்கி வீற்றிருக்கும் வைகுண்டப் பெருமாளுக்குப் பரமபத நாதர் என்ற பெயரும் உண்டு. தாயார் வைகுந்தவல்லி திருமால் மீது இழ்ந்த பக்திகொண்ட பரமேஸ்வரன் என்னும் பல்லவ மன்னன் எழுப்பிய இலயம். எனவே இந்தத் தலத்துக்கு பரமேஸ்வரவிண்ணகரம் (பரமேச்சுர விண்ணகரம்) என்ற பெயர் வழங்கப்படுகிறது. விண்ணகரம் கி.பி.674-800 காலக்கட்டத்தில் 2ம் நந்தி வர்ம பல்லவனால் கட்டப்பட்ட கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைவிடம் :-
காஞ்சிபுரம் பஸ்நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரமே உள்ள திருத்தலமாகும்.

செய்தி : ப.பரசுராமன்
படங்கள்:ப.வசந்த்

The post ஜலத்தில் மறைந்திருந்து அருள் தரும் ஆத்திவரதர்! appeared first on Swasthiktv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>