Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அமானுஷ்யக் கனவுகளை போக்க நெட்டூரி பகவதி அம்மனை வேண்டுங்கள்

$
0
0

     நாம் கனவு காண்பதும்,கனவில் நல்ல கனவு,கெட்ட கனவு என்று வருவதும் இயல்பே.சிலருக்கு தெய்வம் கனவில் வரும்.சிலருக்கு அமானுஷ்யக் கனவுகள் வரும். பலருக்கும் அடிக்கடி பாம்பு கனவில் வரும்.கனவில் மட்டுமல்ல, நிஜத்திலும் பாம்பு என்றால் பயம் ஏற்படுவது இயல்பு. இப்படிப் பட்ட பாம்பு பயம் போக நாம் என்ன செய்யலாம்?

    கேரள மாநிலம் சிட்டிலன்சேரி என்னும் ஊரில் செரு நெட்டூரி பகவதி அம்மன் கோயில் உள்ளது.அங்கு சென்று அம்மனை வழிபட்டால்,பயங்கள் எல்லாம் பயந்தோடும், நாக தோஷங்கள் நிவர்த்தியாகி நன்மைகள் நடக்கும்.இந்த அம்மன் தங்கத்தில் செய்யப்பட்ட விக்ரஹமாக ஜொலிக்கின்றது. செரு நெட்டூரி பகவதிக்கு புஷ்பாஞ்சலி மற்றும் படிக்கட்டணம் வைத்து தரிசித்து வழிபடுவதும்,செம்பருத்தி மலர்களைக் கொண்டு பூஜிப் பதும் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. விக்னேஸ்வரர், சிவபெருமான் மற்றும் நவகன்னிகைகளும் வீற்றிருந்து அருள்செய்கிறார்கள். ஆதிசேஷனைப் போல் காட்சியளிக்கும் ஐந்து தலை நாகம் இவ்வாலயத்தின் சிறப்பாகும். இந்நாகத்திற்கும் தினமும் வழிபாடு நடக்கின்றது. நாகத்தின் அடியில் நாகதேவதைகளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பகவதி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி செய்து தீவினைகளை தீர்த்துக் கொள்ளலாம். ஆலயத்தில் பெரும் பாலான பூனைகள் பகவதியின் அருகே சென்று வருகின்றன. அவைகளுக்கு தடையேதுமில்லை. கோயில் முழுவதும் மாலை நேரத்தில் தீபங்கள் ஏற்றி வைக்கப்படுகின்றன. அப்படி ஏற்றப்படும் தீபத்தின் ஒளியிலும்,கற்பூர ஆரத்தியின் ஒளியிலும் அம்மன் ஜொலித்துத் தோன்றும் காட்சி காணக் கிடைக்காதது.

அருளும் பிரசாதம்:

      பாயசம் தான் இங்கு தரும் பிரசாதம். முன்கூட்டியே பணம் கட்டுவோருக்கு மட்டுமே இந்தப் பாயசம் வழங்கப்படுகிறது.

வழிபாடுகள்:

    ஒவ்வொரு ஆண்டும் மகரமாதத்தில் (தை மாதம்) இந்தக் கோயிலில் ஆராட்டு உற்சவம் நடைபெறுகின்றது. இந்த உற்சவம் உத்திர நட்சத்திர நாள் அன்று கோடி ஏற்றத்துடன் தொடங்கும். உற்சவ காலத்தில் வேத மந்திரங்கள் ஓதப்படும் மற்றும் கலைநிகழ்சிகளும் நடத்தப்படுகின்றன. பலருக்கும் குல தெய்வமாக விளங்கும் இந்த பகவதியை ‘அம்மே பகவதி’ என்று அழைக்கும் பக்தர்களுக்கு வேண்டியதைத் தந்து அருளுவதாகக் கருத்து. இந்த பகவதி மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் பாம்பு போன்ற ஜந்துக்கள் பயத்தை நீக்கும் என்றும் பலரும் நம்புகிறார்கள்.

அமைந்திருக்கும் இடம்:

  கேரளாவில் பாலக் காட்டிலிருந்து சுமார் 20கி.மீ  தூரத்தில் ஆலத்தூர் அருகே சிட்டிலன்சேரியில் அமைந்துள்ளது இந்த செரு நெட்டூரி பகவதி அம்மன் ஆலயம். பாலக் காட்டிலிருந்து நிறைய பஸ் வசதி மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

தரிசன நேரம்:

காலை 6 மணி – 10 மணி வரை.

மாலை 5 மணி – இரவு 8 மணி வரை.

The post அமானுஷ்யக் கனவுகளை போக்க நெட்டூரி பகவதி அம்மனை வேண்டுங்கள் appeared first on Swasthiktv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>