தூத்துக்குடி மாவட்டத்தில்லுள்ள வீரை வளநாடு என்னும் குலசேகரன் பட்டிணத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாரம்மன் கோவில் உள்ளது இங்கு அம்பாள் முத்தாரம்மன் என்ற பெயரில் ஞானமூர்த்தியுடன் அருள்பாலிக்கிறார். இன்று 02.10.2016 கொடியோற்றத்துடன் தசராவிழா தொடங்குகிறது. இந்த அம்பாளை வணங்கினால் அம்மை நோய் உள்ளவர்கள் மற்றும் கை கால் ஊனம், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் வந்து வழிப்பட்டால் நோய் தீரும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. பிரத்தனைகள் நிறைவேறியதும் நேர்த்திகடனாக மாவிளக்கு பூஜை அங்க பிரதச்சனம், தீ சட்டி எடுத்தல், வேல் அம்பு குத்துதல், ஆகியவை பக்தர்களின் முக்கிய நேர்த்திக்கடனாக உள்ளது. ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் உண்டியல் காணிக்கை ஆகியவையும் பக்தர்கள் நேர்த்திகடனாக செய்கின்றனர். ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும் வீட்டில் செவ்வாயும் இருந்தால் அதைபரிவர்த்தனை யோகம் என்பார்.
அதேபோல் இங்கு சுவாமி ஆற்றலை அம்பாள் வாங்கி சிவமயமாக உள்ளார். அம்பாள் ஆற்றலை சுவாமி வாங்கி உள்ளார். இதை பரிவர்த்தனை தலம் என்பார்கள். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மதுரையை மீனாட்சி ஆட்சி செய்வதை போல் இங்கு முத்தாரம்மன் ஆட்சியே நடைபெறுகிறது. அகத்தியரின் சாபத்தால் வரமுனி என்ற முனிவர், எருமைத் தலையும், மனித உடலும் கொண்ட ‘மகிஷ’ உருவத்தில் அழையும்படி ஆனது. அசுர குலத்தில் பிறந்த மகிஷன், கடுமையான தவம் இருந்து சிவபெருமானிடமும், பிரம்மதேவரிடமும் பல வரங்களை வரமாகப் பெற்றான். அந்த வரங்களின் காரணமாக அவன் தேவர் களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
சிவபெருமான், பார்வதி தேவியை உதவி புரிய கோரினார். இதையடுத்து அன்னை தேவர்களுக்கும், முனிவர்களுக்கு அபயம் அளிக்க முன்வந்தாள். பின்னர் மகிஷா சுரனை வதம் செய்வதற்காக ஒன்பது நாட்கள் தவமிருந்து, பத்தாம் நாளில் காளி வடிவம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தாள்.
தசரா திருவிழா:
இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக முத்தாரம்மன் ஆலயத்தில் ‘தசரா திருவிழா’ வெகு சிறப்பாக நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் 9 நாட்கள் அம்மன் தவம் செய்யும் நிகழ்வும், 10–ம் நாளான விஜயதசமி அன்று, மகிஷாசுரனை அன்னை வதம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகின்றன. இந்த விழாவிற்காக பக்தர்கள் பலர் காப்பு கட்டி, பல்வேறு வேடங்கள் தரித்து அம்மனுக்கு விரதம் இருப்பது வழக்கமாக உள்ளது. ‘தசரா திருவிழா’. மைசூர், உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் நடைபெறும் தசரா விழாவைப் போன்று தமிழகத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலயம் சிறப்புக்குரிய இடமாக உள்ளது. இந்த ஆலயத்தில் ஒரே பீடத்தில் வடக்கு திசை நோக்கி ஈசன் ஞானமூர்த்தீஸ்வரராகவும், அம்பாள் முத்தாரம்மனாகவும் சுயம்புவாக இருந்து அருள்பாலித்து வரு கிறார்கள்.
குலசேகரப்பாண்டியன் என்னும் மன்னனே இந்த கோவிலை கட்டியுள்ளான். மேலும் இந்த ஊரில் உள்ள அறம் வளர்த்த நாயகி சமேத கச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவிலையும் இந்த அரசனே கட்டி முடித்துள்ளான். அக்கசாலை விநாயகர் கோவில், விண்ணகரப் பெருமாள் கோவில், சிதம்பரேஸ்வரர் கோவில், வீரகாளி, பத்ரகாளி, கருங்காளி, முப்புடாதி, உச்சினி, மகாகாளி, அங்காளம்மன், ஈஸ்வரி அம்மன், வண்டி மறித்த அம்மன் என அஷ்ட காளி கோவில்களும் அமைந்துள்ளன. ஞானமூர்த்தீஸ்வரரின் சுயம்பு விக்கிரகங்களை ஆரம்ப காலத்தில் வழிபட்டு வந்த பக்தர்கள், அம்மையப்பன் இருவரையும் பெரிய திருஉருவில் வழிபட விருப்பம் கொண்டனர். அப்போது கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய முத்தாரம்மன், ‘எங்கள் திருமேனியை கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி என்ற ஊரில் உள்ள சிற்பி சுப்பையா என்பவரிடம் பெற்றுக்கொள்ளுங்கள்’ என கூறி மறைந்தாள்.
அம்மனின் அருளால் சிலையை செதுக்கிய சிற்பியிடம் இருந்து அம்மையப்பனின் சிலையைப் பெற்று வந்து 1934–ம் ஆண்டு கருவறையில் பிரதிஷ்டை செய்தனர். பழைய சுயம்பு சிலைகள் தற்போது கருவறையின் அடியில் உள்ளதாக கூறப்படுகிறது. இத்தல கருவறையின் எதிரில் நின்றாலே ஆன்மிக அதிர்வுகளை பக்தர்கள் உணர்வார்கள். இத்தல ஞானமூர்த்தீஸ்வரர் இடது காலை மடக்கிய நிலையில் இரண்டு திருக்கரங்களுடன், வலக்கரத்தில் செங்கோலும், இடக்கரத்தில் விபூதிக் கொப்பரையும் கொண்டு அருள்பாலிக்கிறார். முத்தாரம்மன் வலது காலை மடக்கிய நிலையில் நான்கு திருக்கரங்களுடன், வலது மேல் கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் திரி சூலமும், இடது மேல் கரத்தில் நாகபாசமும், கீழ் கரத்தில் விபூதி கொப்பரையும் கொண்டுள்ளாள்.
எலுமிச்சை பழ மாலையும், செவ்வரளி மாலையும்:
முத்தாரம்மனுக்கு எலுமிச்சை பழ மாலையும், செவ்வரளி மாலையும் உகந்தவையாகும். ஆலய மகா மண்டபத்தில் கருப்பசாமி, பேச்சியம்மன், பைரவர் சன்னிதிகள் உள்ளன. பேய், பிசாசு, காத்து கருப்புகளை நம்மை அண்ட விடாது கருப்பசாமி காத்தருள்வார். மூன்று வயதாகியும் சரியாக பேச்சு வராத குழந்தைகளை இந்த தலத்திற்கு அழைத்து வந்து பேச்சியம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். இங்குள்ள பைரவரை அஷ்டமி நாட்களில் மாலை வேளையில் நெய் தீபம் ஏற்றி, வில்வ இலையால் அர்ச்சித்து, உளுந்துவடை மாலை சாற்றி வழிபட்டால் வறுமை அகலும். வளங்கள் பெருகும். கோவில் பிரகாரத்தை வலம் வரும் போது, விநாயகர், துர்க்கை, அர்த்த நாரீஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகிய தெய்வங்களையும் வழிபடலாம்.
அம்மை நோய்:
தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் சக்தியாக முத்தாரம்மன் வீற்றிருக்கிறாள். குறிப்பாக அம்மை நோய். உடலில் அம்மை நோய் முத்து முத்தாக இருந்தால், ஆமணக்கு விதை வாங்கி அம்மனுக்கு காணிக்கை செலுத்து கின்றனர். பொடிப் பொடியாக இருந்தால் அரிசியும், தடிமனாக இருந்தால் பூசணிக்காயும் வாங்கி முத்தாரம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்கு உடனடி பலன் கிடைப்பதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். முத்து + ஆற்று + அம்மன், உடம்பில் உள்ள அம்மை முத்துக்களை ஆற்றும் அம்மன் முத்தாரம்மன்.
செவ்வாய் தோஷம் நீங்க செவ்வாய்க்கிழமையில் அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை கிடைக்கும். ராகு தோஷம் அகல செவ்வாய்க் கிழமையில் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும். எலுமிச்சை பழத்தின் மேற்புறத்தில் துவாரமிட்டு, சாற்றை எடுத்து விட்டு, அதனுள் சிறிது நெய்விட்டு, திரியிட்டு எலுமிச்சை பழ தீபமேற்ற வேண்டும். ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள். ஆடி மாதம் 3–ம் செவ்வாய் அன்று திருவிழா நடைபெறும். சித்திரை வருடப் பிறப்பில் சிறப்பு வழிபாடு உண்டு. தசரா எனப்படும் நவராத்திரி விழாவும் இங்கு பிரசித்தி பெற்றதாகும்.
தினம் ஒரு அலங்காரம்:
கொடியேற்றத்துடன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடங்குகிறது. நவராத்திரி விழாவின் முதல் நாள் முத்தாரம்மன் துர்க்கையாகவும், இரண்டாம் நாள் விஸ்வகர்மேஸ்வரராகவும், மூன்றாம் நாள் பார்வதிதேவியாகவும், நான்காம் நாள் பாலசுப்பிரமணியராகவும், ஐந்தாம் நாள் கிருஷ்ணராகவும், ஆறாம் நாள் மகிஷாசுரமர்த்தினியாகவும், ஏழாம் நாள் நடராஜராகவும், எட்டாம் நாள் மகாலட்சுமியாகவும், ஒன்பதாம் நாள் சரஸ்வதியாகவும் காட்சி தந்து வீதி உலா வருவாள்.
ஈசனையும், உமையாளையும்:
முன்காலத்தில் குலசேகரன்பட்டினத்தில் துறைமுகம் செயல்பட்டு வந்தது. ஒரு முறை வியாபாரி ஒருவர் தன் மனைவியுடன் குலசேகரன்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பல் ஒன்றில் பொருட்களை ஏற்றிக்கொண்டு கடல் பயணம் மேற்கொண்டார். அப்போது திடீரென ஏற்பட்ட புயல் காரணமாக கப்பல் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வியாபாரியும், அவரது மனைவியும் சிவபெருமானையும், பார்வதிதேவியையும் மனமுருக வேண்டினர். இதையடுத்து இறைவனும் இறைவியும் அந்த தம்பதியருக்கு காட்சி கொடுத்து அருளினர். புயலின் தாக்கம் குறைந்தது. தங்களுக்கு காட்சி கொடுத்த ஈசனையும், உமையாளையும் உலக மக்களுக்கும் காட்சி தரும்படி அவர்கள் வேண்டினர். அவர் களின் வேண்டுதல்படி சிவபெருமான் ஞானமூர்த்தீஸ்வரராகவும், அம்பாள் முத்தாரம்மனாகவும் சுயம்புவாக குலசேகரன்பட்டினம் கடற்கரையில் எழுந்தருளியதாகவும் ஒரு செவி வழிக் கதை உள்ளது.
அமைவிடம்:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்திற்கு பஸ் வசதி உள்ளது.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #amman
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post நோய்களை தீர்க்கும் குலசேகரப்பட்டினம் ஞானமூர்த்தியுடன் முத்தாரம்மன் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.