திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வந்தவாசி சாலையில் உள்ள நல்லாளம் கிராமத்தில் 1800 ஆண்டுகள் முன் கட்டப்பட்டு இயற்கை சீற்றத்தால் சிதிலமடைந்த சக்தி வாய்ந்த மழலை முனீஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு காளிகாம்பாள் உடன் மழலை முனீஸ்வரன் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. மேலும் திருமண ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பதும் தீராத நோய்கள் தீரும் என்பது இத்தலத்தின் சிறப்பு. காளிகாம்பாள் சிவனின் அம்சமாக விளங்குவதால் இங்கு விபூதியே பிரசாதமாக பக்தர்களுக்கு தரப்படுகிறது.
தலம் உருவான வரலாறு:
‘சொல்லாலும் மனத்தாலும் தூயஉடல் தன்னாலும்
நல்லாளம் முனீஸ்வரரை நாடுதிரேல் – (எல்லாசம்)
சம்பத்துவரும் பழிநீங்கும் பகை ஒழியும் பாரினிப் சக்தி சித்தி பெரும்”
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நல்லாளம் கிராமத்தில் ஏணையில் இருக்கும் சிறு குழந்தைகள் அடிக்கடி காணமல் போகும் குழந்தையின் பெற்றோர்கள் அலைந்து தேடி திரியும் போது கோவில் அருகே உள்ள மரத்தின்மேல் குழந்தை அழும் சத்தம் கேட்கும் பிறகு பெற்றோர்கள் கையேந்தி வணங்கி தன் பிள்ளையை பெற்று செல்வார்கள் இச்சம்பவம் அந்த கிராமத்தில் அடிக்கடி நடைபெறுகிறது. ஒரு நாள் அதே கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்ற பெண் அவ்வழியாக ஆடுகளை ஓட்டி செல்லும் போது முட்புதரில் இருந்து அசரீய ஒலி கேட்டது காமாட்சி நான் மழலைமுனீஸ்வரன் நான் இங்கு முட்புதரின் உள்ளே சிக்கி தவிக்;கிறேன். என்னை மீட்டு எனக்கு இங்கே ஒரு ஆலயம் கட்டிதா? என்று செல்லி மறைந்தார் முனீஸ்வரன். உடனே ஊருக்கு சென்ற காமாட்சி ஊர் மக்களை அழைத்து வந்து முட்புதர்களை சுத்தம் செய்தபோது 4 அடி உயரம் பீடத்தின் மீது சுயம்புவாக மழலை முனீஸ்வரன் காளிகாம்பாள் மற்றும் நகலிங்கம் சிலைகள் இருந்தது, பின்னர் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து சிரிய பந்தல் போட்டனர் பின்னர் கடந்த 1995-ஆம் ஆண்டு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர்.
மழலை முனீஸ்வரன்:
பார்வதி தேவிக்கும். சிவபெருமானுக்கும் ஏற்ப்பட்ட வாக்கு வாதத்தில் சிவபெருமான் கோபித்து கொண்டு சுடுகாட்டு வழியாக சிவபெருமான் செல்கிறார். அப்போது தனது காலில் இறந்து போன அழகான குழந்தைகளின் சடலம் தட்டுப்பட்டது. அந்த குழந்தைகளை கையில் தூக்கி பார்த்து கண்கலங்கிய சிவபெருமான் இந்த சின்ன சிரிய மழலைச்செல்வங்களுக்கு இப்படி ஒரு கதிய என்று மனம் வருந்தினார் இனிமேல் இந்த மழலைச் செல்வங்கள் மட்டும் என்னால் ஆக்கபட வேண்டும் என்றார். இக்குழந்தைகளின் முதல் குழந்தைகளின் தலைமுடியை காணிக்கையாக செலுத்த வேண்டும் என்று அருளினார். இச்சம்பவம் அன்று முதல் இன்று வரை முடிகாணிக்கை செலுத்தும் முறை நடந்து கொண்டு இருக்கிறது.
குழந்தை பாக்கியம்:
இக்கோவிலுக்கு வெளியும் மற்றும் வெளிமாநிலம் பக்தர்கள் தம்பதிகளாக வந்த குழந்தை வரம் வேண்டி வேண்டிகொள்கின்றனர். பின்னர் பிராத்தனைகள் நிறைவேறியதும் ஆடி மற்றும் தை மாதங்களில் கோவிலுக்கு வந்து சுவாமி அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து குழந்தைகளுக்கு முடிஎடுத்து காதுகுத்தி மொட்டை அடித்து அன்னதானம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்த வரவில்லை என்றால் அவர்களுக்கு நினைவு படுத்த குழந்தைகளின் முடிகளை சடைமுடியாக மாற்றி விடுவார் என்பது இத்தலத்தில் ஐதீகம்.
மண்குதிரையில் வலம்:
மண்குதிரையில் முனீஸ்வரன் இரவு நேரத்தில் ஊரைசுற்றி வலம் வந்து காப்பதாகவும் ஊரில் இதுவரை எந்த ஒரு திருட்டு சம்பவமும் இது வரை நடந்தது இல்லை என்று முனீஸ்வரனை கிராமமக்கள் போற்றுகின்றனர்.
காளிகாம்பாள்:
இங்கு அம்மன் சுயம்புவாக கிழக்கு பார்த்த வண்ணம் வாவேன்று அழைத்து கருணை பெங்கும் விழியுடன் பெண்களின் திருமாங்கல்யத்தை காப்பவராக காட்சி தருகிறார். பிரகாரத்தில் மண்குதிரைகள் சனீஸ்வரன் சன்னதியுள்ளது.
இஷ்ட தேவதைகள்:
வாமுனீ, கரிமுனீ, மச்சமுனீ, ஜடாமுனீ, சட்டமுனீ, எல்லையை காக்கும் யோகமுனீ, லாடமுனீ, தவமுனீ, ஜெயமுனீ, செம்முனீ, ஆகிய பிரமாண்ட சிலைகள் உள்ளன, இப்போது கோவிலை காமாட்சி வகையாற சேர்ந்த N.P ராமலிங்கம் நிர்வாகித்து வருகிறார்.
அமைவிடம் :
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வந்தவாசி நெடுஞ்சாலையில் கோவிலூர் கூட்ரோட்டில் இருந்து 2-வது கி.மி தூரத்தில் உள்ளது.
தொடர்புக்கு :
N.P ராமலிங்கம் – 9952351560.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #muneeshvaran
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post புத்திர பாக்கியம் தரும் மழலை ஸ்ரீ முனீஸ்வரன் appeared first on Swasthiktv.