கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள ஆதிராஜா மங்கல்யபுரம் என்னும் திருவதிகையில் பழமை வாய்ந்த அக்காத்தம்மன் கோவிலில் அருள் பாலிக்கும் சூர சம்ஹாரகாளி கோவில் உள்ளது. இங்கு சுயம்புவாக பரமேஸ்வர பரமலிங்கமுடன் சூரசம்ஹார காளி என்ற பெயரில் அம்மன் அருள் பாலிக்கிறார். இந்த அம்மனை கோவில் எதிரில் உள்ள திருகுளத்தில் நீராடி ஈர ஆடையுடன் அம்மனிடம் முறையிடடல் சகல தோஷங்களும் தீர்ந்து கஷ்டங்கள் விலகும் என்பதும் பில்லி, சூணியங்கள் விலகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. மேலும் தடைப்பட்ட திருமணம் மற்றும் நீண்ட நாள் குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த அம்மனை வணங்கினால் விரைவில் குழந்தை பேறு பாக்கியமும், திருமணமும் நடக்கும் என்பது இத்தலத்தின் ஐதீகம். பிராத்தனைகள் நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து செவ்வாடை சாத்தி பக்தர்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றுகின்றனர். சூரசம்ஹார காளி சிவனின் அம்சமாக விளங்குவதால் இங்கு விபூதி மற்றும் மஞ்சள் பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது.
அர்ஜீனன் மகாபாரத பேருக்கு போகும் முன் போரில் வெற்றி பெற 8-ஆம் நாள் காளியம்மனின் வில்அம்பு காலடியில் வைத்து வணங்கி சென்று போரில் வெற்றி கண்டார் என வில்லிபாரப்பாடல் கூறுகிறது. பண்ருட்டியில் மாரியம்மாள் சாமிக்கண்ணுக்கு மகனாக பிறந்த காத்தவராயன் என்பவரின் செள்ளாலசபாபதி சத்திரத்தில் உரங்கி கொண்டு இருந்தபோது கணவில் திருவதிகை கிழக்கு எல்லையில் தற்காத்தம்மன் என்ற காளி கோவில் இருக்கிறது நீ எதிரே உள்ள திருக்குலத்தில் குளித்து விட்டு வா.. உன் குறைகள் தீரும் என்று அசரிய ஒளி கேட்டது. பின்னர் அந்த இடத்திற்கு சென்ற காத்தவராயன் சுயம்புவாக இருந்த சுவாமி சிலைக்கு சிரிய கொட்டகை அமைத்து பின்னர் 2001-ல் கும்பாபிஷேகம் நடத்தினர்.
அவர் சிறிய அளவில் கோவில் கட்டி ஊர்மக்கள் வழிப்பட்டு வந்தனர். இந்தஅம்மன் அமைப்பில் கம்பீரமும் முகத்தில் வெற்றிப்புன்முறுவலுடன் பக்தர்களை வா வென்று அழைக்கும் அன்னையாகவும் வலதுகரத்தில் மலர் ஒன்றைப்பிடித்தும் இடதுகரத்தை தொடையின் மீது செம்மாந்த நிலையில் பதிய வைத்து மிடுக்கான தோற்றத்தில் காட்சி தருகிறார். கலை நயமிக்க இந்த உருவஅமைப்பு தமிழகத்தில் வேறு எந்த கோவிலிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிகையை காத்த அம்மன் அக்காத்தம்மன் என்று பெயர் பெற்றாலும். அக்காத்தமன் என்ற பெயருக்கேற்ப உண்மையான பெயர் காரணம் ஒன்று உண்டு. புராணத்தின் வழியே இப்பெயர் கிடைக்கிறது. ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று கடமைகளையும் செய்யக்கூடிய கடவுளாக பிரம்மா, விஷ்னு, சிவனும் அவர்களின் தேவியர்களான கலைமகள், அலைமகள், மலைமகள் மற்றும் முருகன் ஆகியோர்களின் ஆற்றலில் உருவானவர்களே ‘சப்த மாதர்கள் என பெயர்கொண்ட அன்னையர் ஏழுவராகும் சப்தம் என்பதற்கு ‘ஏழு” என்று பொருள் ‘ஒலி” என்பதற்கு மற்றொரு பொருள், உலகம் ஒலியாலும் ஒளியாலும் பிறந்தது. எனவே தான் ஒலியாகிய ஏழு கன்னியரையும், ஒலியாகிய சூரியனையும் நாம் தெய்வமாக வழிபடுகிறோம். சித்திரை மாதம் காளியம்மன் மீது சூரிய ஒளிபடுவது இக்கோவிலின் சிறப்பாகும். ஏழுகன்னியரும் (சப்தமாதர்) சும்பன், நிசும்பன், என்ற இரு அசுரர்களை அழிக்க தோன்றியவர்கள் மகேஸ்வரி, வைஷ்ணவி, வராகி, பிராமி, கௌமாரி, இந்திராணி மற்றும் சமுண்டி என்றும் ஏழு அன்னையர்கள் மட்டுமின்றி வருணன், யமி, என்னும் இரு கன்னியரையும் சேர்த்து நவகன்னியர்கள் என்கின்றனர். இவர்களைத்தவிர காளிதேவியின் ஆற்றல் பல சிதறல்களாக உருவெடுத்து பல்வேறு பெயர்களில் பல உருவங்களிலில் உலகெங்கிலும் மக்களால் வணங்கப்படுகிறார்.
காடும், காட்டைச் சார்ந்த நிலமும் முல்லை என்பர். முல்லை தெய்வம் திருமால், குறிஞ்சியின் தெய்வம் முருகன், மருதத்தின் தெய்வம் இந்திரன், நெய்தலின் தெய்வம் வருணன். இந்த நான்கு நிலப்பிரிவுகள் மட்டுமின்றி வேறொரு நிலபிரிவும் உண்டு ‘பாலை” என்று இதற்கு பெயர் உண்டு பாலை நிலத்தின் தெய்வமாக காளி விளங்குகிறால் காளியம்மனுக்கு ‘கொற்றாவை” என்ற பெயரும் உண்டு கொற்றம் அவ்வை கொற்றவை என்றானது, ‘கொற்றம்” என்பது ‘வெற்றி” என்பதாகுதம் அவ்வை என்றும் ‘அம்மை” என்பதின் மருவுச் செல்லாக அமைந்துள்ளது. பாலை நிலத்தை சார்ந்துள்ள மறவர்களுக்குப் போரில் கொற்றத்தைத் (வெற்றியை) தருபவள் கொற்றவை அம்மனாகும். அங்காளம்மன் மாரி, பிடாரி, பகவதி, குமரி, கன்னி, என்பன போன்ற பெயர்கள் இந்த அம்மனின் ஆதிப் பெயர்களாகும் பாலை நிலத்தின் தெய்வமாக காளியம்மனைப் பரவியே பண்டைய கால அரசர்கள் பல போர்களில் மாபெரும் வெற்றிகளை குவித்தனர். வரலாறு, புராணம், இதிகாசங்களில் எல்லாம் அம்மனுக்கு தனி சிறப்பு உண்டு. இப்படி உலகெங்கிலும் புரிந்து அதன் மூலம் மக்களுக்கு வாழும் முறைகளைப் போதித்து அருள் புரிந்த காளியம்மன் திருவதிகையையும் பார்வையால் சுபிட்சமடையச் செய்தாள்.
தமிழகத்தில் எட்டு வீரட்டத்தலங்கள் உண்டு அட்ட வீரட்டானங்கள் என்று பெயர் உண்டு. எட்டு வீரட்டங்களுள் திருவதிகை மூன்றாவது இடம் பெற்றுஉள்ளது. திருவதிகை என்ற பெயர் தோன்றுவதற்குமுன் 7-ம் நூற்றாண்டில் ‘அதியரை மங்கை” என்றும் பின்னர் அதியரைய மங்கலம், அதிராஜ மங்கலபுரம் மற்றும் ஆதிராஜமங்கல்யபுரம் என்று தேவாரப்பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் கூறப்பட்டுள்ளது திருவதிகையில் மூன்று திசைகளில் வாழ்ந்த திரிபுர அசுரர்களின் கோட்டைகளைச் சிவபெருமான் அழித்தார். பொன், வெள்ளி, இரும்பால் ஆன கோட்டைகளை அமைத்து தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்கள் வாழ்ந்தனர் அவர்கள், தவம் செய்யும் ஞானியர்களுக்கும், தேவர்களுக்கும், பல துன்பங்களை விளைவித்தனர் அவர்களின் தாக்குதல்களை தாங்க முடியாத தேவர்களும் ஞானிகளும் சிவபெருமானிடம் முறையிட்டு வணங்கினர் அவர்களின் வேண்டுதல்களுக்கு மனம் இறங்கிய சிவபெருமான் அசுரர்கள் முன் தோன்றி எரித்தார்.
அசுரர்களை அழிக்கச் சிவபெருமான் புறப்பட்ட போருக்கு தேவர்கள் துணைநின்றனர். தேரின் தளத்தட்டாக பூமியும், சூரிய சந்திரர் இருசக்கரங்களாகவும் தேவர்கள் குதிரைகளாகவும், மேருமலை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பு நாணாகவும், திருமால் அம்பாகவும், பிரம்மன் தேரோட்டியாகவும் அமர்ந்து இத்தனை பேர்களின் உதவியால் தான் சிவன். முப்புரங்களை அழிக்ப்போகிறான் என்று தேவர்கள் அகந்தை கொண்டனர். தேரில் ஏறிச் சிவ பெருமான் நாண்பூட்டிவில்லை வலைக்க தேரின் அச்சு முறிந்தது, சிவபெருமான் சக்தி இழந்தவராக கருதப்பட்டதால் தேவர்கள் நகைத்து அகந்தை கொண்டனர். இத்தனையும் இயங்குவதற்கு சக்தி வேண்டுமல்லவா ? சக்தி எங்கே இருந்தாள் – என்ன செய்தால். சக்தியை சிவன் நினைத்தார் சக்தி தோன்றி சிரித்தாள் !
சிவனும் சிரித்தார் மூன்று புரங்களும் எரிந்து சாம்பலானது தேவர்கள் தம் அகந்தையை நினைத்து வருத்தினர். எனவே தான் திருவதிகையில் சிவபெருமான் திரிபுராந்தகர், திரிபுரசுந்தரர், வீரட்டானேசுவரர், என்றும், அம்பாள் திரிபுரசுந்தரி, திரிபுராந்தகி என்றும் பெயர் பெற்றார், திரிபுரம் எரித்து புராணத்திற் கொப்பவே திருவதிகையில் வீரட்டானோசுவரர் போற்றப் பெருகிறார். அம்பாக மாரிதிரிபுரம் அழிக்க உதவியதால் சரநாராயணப் பெருமாள் என்று வணங்கப்படுகிறார்.
அம்பாக மாரிதிரிபுரம் எரித்தினால் சக்தி, திரிபுரக் காளி என்றும் வீராமாகாளி, திரிபுரபைரவி, சூரசம்ஹாரக்காளி என்றும் தேவர்களை காத்தது மட்டுமின்றி தஞ்சமென்று வந்த பக்தர்களை காப்பதினால் தற்காத்தம்மன் என்றும், அதிகை வல்லி அக்காத்தம்மன் என்றும் அசுரர்களை அழித்த பெருமிதத்தில் சூரசம்ஹாரகாளி என்னும் பெயரில் தனியே அமர்ந்து திருவதிகையில் வீரட்டானேசுவரரை எதிர் நோக்கி இன்றும் அக்காத்தம்மன் என்று போற்றி பக்தர்களால் வணங்கப்படுகிறார்.
என்றும் இறைப்பணியில் :
அக்காத்தம்மன் எஸ்.காத்தவராயன்
தொடர்புக்கு :
அர்ச்சகர் – பி.சசிகுமார் – 9344499788-9344808032.
அமைவிடம்:
பண்ருட்டியில் இருந்து திருவதிகைக்கு பஸ் மற்றும் ஆட்டோக்கள் வசதி உள்ளது.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post சகல தோஷங்களையும் தீர்க்கும் திருவதிகை சூரசம்ஹார காளி appeared first on Swasthiktv.