கோவை மாவட்டம் வெள்ளூரில் (தேனூர் அன்னதான சிவபுரி) 10 நூற்றாண்டில் சோழர்களால் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீ தேவி பூதேவி தாயாருடன் கரிவரதராஜா பெருமாள் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை திருமணத்தடை உள்ள பெண்களும் மேலும் தொழில் மேன்மை பெறவும் வழக்குகளில் வெற்றிகள் பெறவும் இவரை வேண்டி கொள்கின்றனர், பிராத்தனைகள் நிறைவேறியதும் துளசிமாலை சார்த்தி நோர்த்திகடனை நிறைவோற்றுகின்றனர்.
கரிகால் சோழன் போரின் போது இப்பகுதிக்கு வந்துள்ளார். அப்போது வெள்ளலூர் பகுதியில் பிராமணர்கள் அதிகளவில் வாழ்ந்து வந்தனர். அப்பகுதியில் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக அவர்கள் சிங்காநல்லூர் பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த கரிகால் சோழன் பிராமணர்களுக்கு அப்பகுதியை மானியமாக வழங்கி, ஒரு கோயிலையும் கட்டிக்கொடுத்தார். அப்படி கட்டப்பட்ட கோயில் தான் இக்கோயிலில் உள்ள மூலவர் விக்கிரகத்தை பல்லவர்கள் வைத்துள்ளனர். அதற்கான ஆதாரங்களும் அந்த விக்கிரகத்தில் பொறிக்கப்பட்டுள்ளதாம். இந்த விக்கிரகம் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. மூலவர் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.மேலும், தனது எட்டு கைகளில் சங்கு, சக்கரம், கதை, வில், அம்பு, கத்தி, கேடயம் போன்ற எட்டு ஆயுதங்களை ஏந்திய நிலையில் உள்ளார். இது வாமனன் அவதாரத்தின் போது மகாபலி சக்ரவர்த்திக்கு அளிக்கப்பட்ட விஸ்வரூப காட்சியாகும். ஓணம் பண்டிகையின் பத்து நாட்களும் இக்கோயிலில் உற்சவம் நடைபெறும். அந்த பத்து நாட்களிலும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவதுடன் சந்திர பிரபை, சூரிய பிரபை, அம்சவாகனம், சேஷ வாகனம், யாழ் வாகனம், யானை மற்றும் குதிரை வாகனம் என பத்து நாட்களும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா நடத்தப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் போது சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அன்று ரா பத்து, பகல் பத்து பூஜைகள் நடக்கும்.
நவராத்திரியின் போது ஒன்பது நாள் உற்சவம் நடத்தப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமையிலும் சிறப்புவழிபாடு நடக்கிறது. பங்குனி உத்திரத்தின் போது தாயார் கல்யாண உற்சவம் நடக்கிறது. இதில், கலந்துகொள்வதால் திருமணமாகாத பெண்களுக்கு திருமண தடை நீங்கும் என்பது ஐதிகம். பெரும்பாலான கோயில்களில் கிழக்கு பார்த்தபடியாக பெருமாள் அமர்ந்திருப்பார். ஆனால், இக்கோயிலில் வடக்கு பார்த்து அமர்ந்துள்ளதால் பக்தர்கள் வேண்டிய காரியங்கள் நடக்கிறது.
அமைவிடம்:
கோவை காந்திபுரத்தில் இருந்து வெள்ளூருக்கு பஸ் வசதி உள்ளது.
தொடர்புக்கு: 9362959219
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post திருமணத்தடை நீக்கும் கோவை கரிவரதராஜா பெருமாள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.