Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

சந்தான லட்சுமி விரதத்தை கடைபிடிப்பது எப்படி

$
0
0

 வளர்பிறையும் நல்ல திதியும் அமைந்த நல்ல ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வீட்டில் ஓர் அறையில் கிழக்கு முகமாக பீடமமைத்து, நெல்லைப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு தட்டை வைக்க வேண்டும். அதில் பச்சரிசி பரப்ப வேண்டும். பச்சரிசித் தட்டில் கலசம் வைத்து, கலசத்தில் முழுவதும் நீர் ஊற்றி மாவிலையும் தேங்காயும் வைக்க வேண்டும். முகமில்லாமல் ஒரு வட்டமாய் இருக்கும் வாழைப்பூ குத்துவிளக்கைக் கலசத்திற்கு அருகில் வைக்க வேண்டும். சந்தானலட்சுமி, தானியலட்சுமி, சந்தான கிருஷ்ணன் ஆகிய தெய்வ பூஜைக்கு இந்த விளக்கைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது சாஸ்திர விதி.

 ஞாயிற்றுக்கிழமை சூரியன் தோன்றுவதற்கு முன், இவற்றைத் தயாராக வைத்திருந்து, சூரியன் தோன்றும் வேளையில் விநாயகர் பூஜையைத் தொடங்க வேண்டும். கலச பூஜையைத் தனலட்சுமி ஸ்தோத்திரங்களைச் சொல்லி, கற்பூர தீப தூபம் காட்டி வணங்க வேண்டும். திருவிளக்குப் பூஜையை அஷ்டோத்ர ஈத நாமாவளி சொல்லிப் பூஜை செய்து வணங்க வேண்டும். தனலட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லிக் கலசத்தைப் பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தவுடன, கணவனும், மனைவியும் ஒன்றாகத் தட்டைப்பிடித்துக் கற்பூர தீபாராதனை காட்டி வணங்க வேண்டும். இருவரும் சேர்ந்தே உடலின் எட்டு உறுப்புகளும் தரையில்படும்படி (அஷ்டாங்க) ஆணும் ஆறு உறுப்புகளும் தரையில் படும்படி பெண்ணும் நமஸ்காரம் செய்ய வேண்டும்.

 கணவன்-மனைவி இருவர் மட்டுமே செய்யும் இந்த பூஜை முடிந்ததும், அக்கம் பக்கமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகளை அழைத்துவரச் சொல்லி, பூஜை பீடத்தைச் சுற்றி அமரச் சொல்ல வேண்டும். பின்பு, மீண்டும் கலச பூஜை, கற்பூர தூப தீபம் காட்டி வணங்கிவிட்டு, பிரசாதங்களுள் பசுவின் பால், தேன், இளநீர், எள் உருண்டை ஆகியவை தவிர மற்றவற்றைக் குழந்தைகளுக்கத் தரவேண்டும். கணவனும், மனைவியும், எள் உருண்டைகளை உண்டு விட்டு, பால், தேன், இளநீர் ஆகியன கலந்த சந்தான பானத்தை அருந்த வேண்டும். இந்த முறைப்படி, கரு தோன்றும் வரை பதினொரு வாரம், பதினாறு வாரம், இருபத்தொரு வாரம், நாற்பது வாரம், நாற்பத்தெட்டு வாரம் என விரதம் இருக்கலாம். ஒரே வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தனலட்சுமி விரதத்தையும் புதன்கிழமை சந்தானகிருஷ்ண விரதத்தையும் கடைபிடிக்கலாம்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post சந்தான லட்சுமி விரதத்தை கடைபிடிப்பது எப்படி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


”சின்னம்மா”வுக்கு போட்டியாக ”ஜூனியர் அம்மா” உருவாகிறாரா ?


திருச்சி அன்னை ஆசிரமத்தில் … …


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 877 - தாவர விதி!


ஆசீர்வாத மந்திரங்கள்


குரு நித்யா எனக்கு யார்?


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


திருமூலர் அருளிய உயிர்காக்கும் ரகசிய மந்திரம்


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>