புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள (செர்ண விராலியங்கிரி) விராலிமலையில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருணகிரி நாதரால் பாடல் பெற்ற முருகர் கோவில் இங்கு தாயார் வள்ளி தேவசேனவுடன் (ஆறுமுகம்) சன்முகநாதன் என்ற பெயரில் முருகன் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் குழந்தை பாக்கியமும் மனநிம்மதியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
பிராத்தனைகள் நிறைவேறியதும் குழந்தை பிறந்தவுடன் முருகனிடம் ஒப்படைத்துவிட்டு குழந்தையின் மாமன்மார்கள் மற்றும் உறவினர்கள் குழந்தைக்கு பதிலாக தவிட்டை தந்து குழந்தையை பெற்று கொண்டு பெற்றோர்கள் செல்கின்றனர் மயில் நிறைந்த மலை ஆறுமுக பெருமான் வீட்டிற்கும் தெற்கு பார்த்த மயில் அசுரமயில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தல விருச்சமாக விராலி செடியும் தீரத்தமாக நாக தீர்த்தம் உள்ளது, வள்ளி திருமணம் செய்த தலம் என்று இத்தலம் கூறப்படுகிறது. இங்கு முருகன் 10 அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும்.
வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் :
இந்தத் திருத்தலம். 207 படிகளைக் கடந்தால் கோயிலை அடையலாம். ஆறுமுகப்பெருமான் வீற்றிருக்கும் தெற்குப் பார்த்த மயில் அசுர மயில் என்றழைக்கப்படுகிறது. வயலூரில் அருணகிரிநாதருக்குக் காட்சி தந்த முருகன், விராலிமலைக்கு வரச் சொன்னதால் இங்கு அருணகிரிநாதர் வந்தார். வயலூரில் இருந்து புறப்பட்ட அருணகிரிநாதர் விராலிமலை செல்ல வழி தெரியாமல் தவிக்கவே, வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து அருணகிரி நாதருக்கு வழிகாட்டி அழைத்து வந்தாராம்.
தற்போது கோயில் இருக்கும் இடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அந்த மரத்தினுள் மறைந்து விட்டதாகவும், அவ்விடத்தையே ஆறுமுகனாரின் உறைவிடமாக கொண்டு வழிபடத் துவங்கியதாகவும் கூறுவர். இத்தலத்தில் வசிஷ்டரும், அவர் தம் இல்லாள் அருந்ததியும் சாபம் நீங்க தவமிருந்தனர். இம்மலையில் தான் பரகாயப் பிரவேசனம் என்னும் சித்தியை அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் வழங்கியதாகப் புராணம் உண்டு. நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம் மற்றும் ஆயுள் நீடிக்கவும் இங்குள்ள முருகனாரை வேண்டிச் செல்வர். பங்குனி உத்திரம், கந்தசஷ்டி ஆகியவை இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள்.
தவிட்டை கொடுத்து பிள்ளையைப் பெற்றுச் செல்லும் சடங்கு;
இங்கு முடி இறக்கி காது குத்தல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கப்பிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டம், அடிப்பிரதட்சணம் நிறைவேற்றுகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கின்றனர். கார்த்திகை மாதம் விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் செய்யலாம்.
வளைந்த தம்புரா நாரதர்:
விராலிமலை சண்முகர் கோயிலில் நாரதர் உற்சவராக இருக்கிறார். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவன் அவரது ஒரு தலையை கொய்தார். அப்போது, நாரதர் தன் தந்தை எந்தத் தவறும் செய்யவில்லை என்று சிவனிடம் வாதிட்டார். இதனால் அவர் சிவநிந்தனைக்கு ஆளானார். அவரது தம்புராவும் வளைந்தது. எனவே, இத்தலத்தில் முருகப் பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு நாரதர் உற்சவராக இருக்கிறார். இவரது தம்புரா வளைந்து காணப்படுகிறது. கோயில் திருவிழாவின் போது சுவாமி முன்பாக இவரும் உலா செல்வது சிறப்பாகும்.
கோயிலை சுற்றி அதிகமான மயில்கள் உள்ளன. கோயில் வளாகத்தில் நாரத முனி மற்றும் ரிஷி காஷ்யபரின் சிலைகள் உள்ளன. கோயில் தூண்களில் ஆறுமுகம் மற்றும் அருணகிரி நாதரின் பல்வேறு உருவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் விசித்திர வழக்கம்;
எந்த ஒரு முருகன் கோயிலிலும் இல்லாத சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் விசித்திர வழக்கம் இக்கோயிலில் உண்டு. இதற்கு ஒரு கதையும் உண்டு. சூறாவளிக் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்ற அடியவர் நிற்கையில், அருகில் நின்ற மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றை கருப்பமுத்து கொடுத்தாராம். பின்னர், இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமல் போய் விட்டது கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதை கண்டு, தம்மிடம் ருட்டு பெற்றவர் எம்பிரானே என உணர்ந்தார் எனவும், அன்று முதல் சுருட்டு படைக்கும் பழக்கம் உருவானதாகவும் கூறுவர்.
தொடர்புக்கு :
91-4322-221084
9842390416
அமைவிடம்:
புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை 40 கி.மி. தூரத்தில் உள்ளது.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post தவிடு கொடுத்து குழந்தையை எடுத்து வரும் விராலியங்கிரி முருகர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.