Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

சூரபத்மனை அழிக்க குமாரபுரி முருகனுக்கு படைக்கலத்தை தந்தருளிய சிவன்

$
0
0

 தஞ்சாவூர் (Tanjore) மாவட்டம் கும்பகோணம் (kumbakonam)  அடுத்துள்ள சேங்கனூர் (குமாரபுரி) என்ற கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகர் (lord murugan) கோவில் உள்ளது இங்கு முருகப்பெருமான் சூர பதுமனை அழிக்க சிவபெருமானை (lord shiva) வேண்டி படைக்கலம் பெற்றார்.

 மிக வலிமையான ‘உருத்திர பாசுபதம்’ வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் இருக்க முடிவு செய்தார் முருகப்பெருமான் (lord murugan). அதற்காக அவர் மண்ணியாற்றங்கரையில் சிவலிங்கம் இல்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்க நினைத்தார். ஆனால் அங்கு சென்றபோது மணல் முழுவதும் சிவலிங்கமாக இருப்பதைக் கண்டார். இதனால் அங்கு நின்றபடியே சிவபெருமானை வேண்டி படைக்கலத்தை பெற்றார். சேய் ஆகிய முருகப்பெருமானுக்கு (lord murugan) அருளிய தலம் என்பதால் ‘சேய்ஞலூர்’ என்று பெயர் பெற்றது. காலப் போக்கில் இப்பெயர் மருவி ‘சேங்கனூர்’ என்று வழங்கப்படுகிறது. இத்தலத்திற்கு சத்தியகிரி, குமாரபுரி, சண்டேஸ்வரபுரம் என்ற வேறு பெயர்களும் உள்ளன.

 இங்குள்ள இறைவன் சக்திகிரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி ‘சகிதேவி’ என்ற திருநாமம் கொண்டுள்ளார். இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் தனது நான்கு கரங்களில் அட்சரமாலையும், தாமரை மலரும், அபய, வரத முத்திரையும் காட்டி அருளியபடி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். எல்லா சிவன் கோவில்களிலும் அருள்பாலிக்கும் சண்டிகேஸ்வரர், இத்தலத்தில் தான் அவதாரம் செய்தார். இவர் இத்தலத்தில் வேறெங்கும் காணக் கிடைக்காத வகையில், பிரகாரத்தின் வடக்குப்புறம் அர்த்தநாரி திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

சிபி சக்கரவர்த்தி தன் கிரக தோஷம் நீங்க

 சிவாலயங்களில் தீர்த்த யாத்திரை செய்து வந்தான். அவ்வாறு இத்தலத்திற்கும் வந்து இறைவனை வழிபட்டான். பின்னர் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை முக்கிய இடங்களில் இருந்து 360 அந்தண தம்பதியரை இத்தலத்திற்கு வரவழைத்தான். வழியில் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அந்த தம்பதியரால் அங்கு வர முடியவில்லை. சிபி மகராஜன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீடும், ஒரு கறவைப் பசுவும், சிறிது நிலமும் தானமாகக் கொடுத்து இத்தலத்திலேயே அவர்களைக் குடியமர்த்தினான். 359 பேருக்கு தானம் கொடுத்த பிறகு, கடைசி தானத்தை பெற எவரும் இல்லை. இதனால் மன்னன் துயரம் மடைந்தான். அவனது வாட்டத்தைப் போக்கும் வகையில் இறைவனும், இறைவியும் வயதான உருவம் கொண்டு அங்கு வந்து மன்னன் கொடுத்த தானத்தைப் பெற்றுக் கொண்டனர். இதனால் மன்னன் மகிழ்ந்தான்.

 சுவாமி வீடு:

 அடுத்த நாள் ஒவ்வொரு வீடாகச் சென்று நலம் விசாரிக்கச் சென்றான். இறுதியாக வயோதிக அந்தணர் வீட்டுக்குச் சென்றான். வீடு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்துத் திறந்தால் உள்ளே கயிலாசநாதரும், சிவலோகநாயகியும் காட்சி தந்தனர். இறுதியாக வந்து தன்னிடம் தானம் பெற்றவர் சிவபெருமானே என்பதை உணர்ந்த மன்னன் இறைவனை வணங்கி தன் இருப்பிடம் திரும்பினான். தற்போது அந்த இடம் ‘சுவாமி வீடு’ என்ற பெயரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புக்கு: 9944238917

அமைவிடம்:

                தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சூரபத்மனை அழிக்க குமாரபுரி முருகனுக்கு படைக்கலத்தை தந்தருளிய சிவன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles