ஐயப்ப சாமிகள் அறிய வேண்டிய மொத்தம் 25 விளக்கங்கள் – இப்பகுதியில் 6 முதல் 10 வரை
- பெரும்பாலும் மாலை அணிவிக்க சற்குரு ஒருவர் அவசியம். இந்த சற்குரு என்பவர் பல முறை ஐயப்பனின் ஆலயம் சென்று வந்தவராக இருக்க வேண்டும். குறைந்தது பத்து ஆண்டுகள் தொடர்ந்து மலை சென்று மீண்டவரை பழமலை சாமி (மலைப் பயணம் செய்து செய்து பழைமை அடைந்தவர்) பல மலைசாமி (பல தடவை மலை யாத்திர செய்தவர்) என்று அழைப்பர். இவரும் நல்ல குருநாதராகவும், வழிகாட்டியாகவும் இருப்பவர். பதினெட்டு முறை சென்று மீண்டவர் `சற்குரு’ என்று போற்றப்படுகின்றார். யார் நமக்கு மாலையை அணிவிக்கிறார்களோ அவர் தான் நம் குருநாதர் என்பதை மறக்கக் கூடாது.
விளக்கம்: ஸ்ரீபரமேஸ்வரர் தகப்பனாக இல்லாமல், குருவாக நின்று உபதேசித்து உயர்ந்த மணிகளை உடைய மாலையை தர்ம சாஸ்தாவின் கழுத்திலே அணிவித்த நிகழ்ச்சியை நினைவூட்டவே இப்படி குருமார்களினால் மாலை அணிவிக்கப்படும் சடங்கு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
- சிலர் முத்திரை மாலையை பெற்றோரின் மூலம் அணிந்து கொள்வதுண்டு. அதுவும் மேற்சொன்ன நிகழ்ச்சியைக் குறிப்பதற்குத்தான். குருவாகவும் தந்தையாகவும் நிற்பவன் அவன்தானே!
- மாலை அணிந்தவுடன் தான் ஏற்றுக் கொண்ட குரு நாதருக்கு இயன்ற காணிக்கைகளைத் தர வேண்டும்.
விளக்கம்: மாலையுடன் தோன்றிய மணிகண்டன் ராஜசேகரனுக்கு மகிழ்வை கொடுத்தான். மஹிஷியைக் கொன்றதன் மூலம் தேவர்கள் புலிகளாக மாறி காணிக்கைகள் ஆயினர். முனிவர்களுக்குத் தானே காணிக்கையாகி பொன்னம் பலமேட்டில் ஒளிர்ந்தான். பக்தர்களுக்கும் தன்னை ஈன்றவர்களுக்கும் காணிக்கை ஆனான். இதனை நினைவு கூரவே குருநாதருக்கு காணிக்கை கொடுப்பது ஒரு ஐதீகமாக கருதப்படுகிறது.
- மாலை அணிந்தவுடன் ஆலயத்தை பிரதட்சிணம் செய்து, தேங்காயை விடலையாக உடைக்க வேண்டும்.
விளக்கம்: இது மணிகண்டனின் பூதங்களைத் திருப்திபடுத்துவதற்காக செய்யப்படுகிறது. மாலை அணிந்த அத்திருநாளில் ஏழைகளும், ஆதரவற்றவர்களும் அத் தேங்காய்களை எடுப்பதால் திருப்தியுற்று ஆசீர்வதிப்பவர்களாக மாறுகின்றனர்.
- மாலை அணிவது சபரிமலைக்கு வரும் ஐயப்ப சாமிகளின் உடைகள் கருப்பு வண்ணத்தில் இருக்கலாம். நீல நிறமாக இருக்கலாம். மஞ்சள் ஆடையும் நல்லதே! சிலர் பச்சை நிற வேஷ்டி கட்டுவதுண்டு. காவி நிற உடை விலகக்கப்பட வேண்டும்.
விளக்கம்: கருப்பு வண்ணம் அணிவதால் சனீஸ்வரரையும், நீல வண்ணம் அணிவதால் தர்ம சாஸ்தாவையும், பொன் வண்ணமாக அணிவதால் ஸ்ரீபரமேஸ்வரரையும், பச்சை வண்ணம் ஸ்ரீமந் நாராயணரையும், திருப்திபடுத்தும், இவை தற்காலிக சந்நியாசத்தின் அடையாளங்கள். காவி நிற உடை என்பது நிரந்தர சந்நியாசத்தின் அடையாளம். காவி கட்டியவன் மீண்டும் இல்லறத்துக்குத் திரும்பக் கூடாது என்றொரு விதி உண்டு. இதனை யாரும் மதிப்பது இல்லை.
இப்படி வண்ண வண்ண ஆடைகளை ஏன் கட்ட வேண்டும் கொடிய கானகத்தின் நடுவே, பச்சை இலைகளுக்கு நடுவே நடந்து செல்லும்போது அடையாளம் காட்டுவது இவ்வண்ண ஆடைகளே ஆகும். எனவேதான் கருப்பு, நீலநிற ஆடைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. பச்சை வண்ண ஆடை பெரும்பாலும் அணியப்படுவது இல்லை. இதோடு தத்துவ ரீதியாக இன்னுமொரு விளக்கமும் சொல்லப்படுவதுண்டு.
கருப்பு இருள், சிலர் இதனைக் காத்து கருப்பு என்று எழுதுவதுண்டு. இது தவறு. கருப்பு என்றால் கோபம் என்பது பொருளாகும். இருள் என்பது அறியாமை, அஞ்ஞானம் என்றும் சொல்வதுண்டு. நாங்கள் அறியாதவர்கள். அஞ்ஞானம் நிரம்பப் பெற்றவர்கள். எனவே பரிசுத்த பரம்பொருளான உன்னைச் சரண் அடைகின்றோம் என்று காட்டவே கருப்பும், அதை ஒட்டிய வண்ணமான நீலமும் உபயோகிக்கப்படுகிறது.
சனிச்சுவரனுக்கு பிரியமான வண்ணங்கள் கருப்பும், நீலமும். இதனை அணிவதால் சனியின் திருப்திக்கும் பாத்திரங்களாவார்கள். அதன் பிறகு பழக்கத்தை மாற்ற சில அறியாதவர்களினால், பச்சையும், காவியும், பொன் நிறமும் பயன்படுத்தப்பட்டன. இவை ஏற்கத்தக்கதல்ல. நிரந்தரத் துறவின் அடையாளமான காவியைக் குடும்பஸ்தர்கள் அணிந்து விட்டுக் களைவது நல்லதல்ல. இது விதியை மீறிய செயல்.
மஞ்சள் வண்ணமும், சிவப்பு வண்ணமும் அம்பிக்கையைத் தவிர வேறு எந்த இறை வனுக்கும் பொருத்தமான தன்று. பொன் வண்ணம் வீட்டிலிருந்து கொண்டே துறவு மனப்பான்மையுடன் நடந்து கொள்பவர்களுக்கு உயர்ந்தது. ஐயப்ப பக்தர்கள் மலைக்குப் போகும் முன், விரதத்தைக் கடைப்பிடிக்கும்போது, அசுத்தமானவர்கள் அவர்களை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்ற நினைவூட்டுதலுக்காகவே வண்ணங்களில் உடைகளை அணிகிறார்கள் என்பது முக்கியமானது.
சபரிமலை யாத்திரை தொடரும்….
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post சபரிமலை யாத்திரை பாகம் – 8 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.