திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடி அடுத்துள்ள காட்டுப்புத்தூரில் என்னும் தேவனாம்பட்டு தேவகிரி மலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலைப்போல் பராந்தக சோழனால் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இங்கு தாயார் வள்ளி தேவசேனாவுடன் ‘சண்முகர் சுவாமி” என்ற பெயரில் முருகன் அருள் பாலிக்கிறார். இங்குள்ள முருகனை பிரம்மதேவன் பூஜீத்து வழிப்பட்ட போது அவரை பிடிக்க குளக்கரையிலேயே காத்திருந்தார் சனீஸ்வரபகவான் என்று அருணாச்சலபுராணத்திலும் காஞ்சிபுராணத்திலும், காசிபுராணத்திலும் விரிவாக உள்ளது.
உலகயே மிரளவைக்கும் சனீஸ்வரனின் வரலாறு சூரியனுக்குரிய மனைவியரில் ஒருவர் உஷா இவள் சூரியனின் வெப்பம் தாங்காததால் தன்நிழலையே ஒரு பெண்ணாக்கி சாயாதேவி என்ற பெயரில் தாங்கி இருந்தால், சாயதேவிக்கு சனீஸ்வரன் பிறந்தார் பின்னர் உண்மை தெரிந்ததும் சூரியன் தன்தை ஏமாற்றிய மனைவியை வெறுத்து ஒதுக்கினார். அவளுக்கு பிறந்த சனீஸ்வரனை விட்டுவிட்டார்.
இத்தலத்தில் நளமகாசக்கரவர்த்தி கபிலர் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழன் பூஜீத்து வழிப்பட்டதால் இத்தலம் சிறப்பு மிக்க தலமாக விளங்குகிறது. இங்குள்ள சுயம்பு சனீஸ்வரபகவானை வழிப்பட்டு முதலாம் ராஜேந்திர சோழன் போரில் வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள தேவகிரிமலையில் தான் ‘காகம்” தோன்றிய என்று காஞ்சிபுராணத்தில் நமக்கு விளக்கமாகவும் தெளிவாகவும் கூறிப்பிடப்பட்டுள்ளது.
முருகப் பெருமானிடம் சிவனை வழிப்பட அனுஸ்ட்டானம் செய்ய பார்வதிதேவியார் தீர்த்தம் கொண்டு வரச்சென்னார் அப்போது முருகன் கையில் இருந்த (வஜ்ஜீர சக்தியை) வேலை பர்வதமலையை பார்த்து (பருவதகிரி) ஏவினார். அப்போது பருவதமலையில் தவம் இருந்த பிரம்மபுத்திரர்கள் மீது முருகப் பெருமான் வீசிய வேல் அவர்களின் சிரசுகளை துண்டிக்கப்பட்டு ரத்தம் பிறட்டு ஆறாக ஓடியது.
(குழந்தை முருகன் பெருமான் உருவாகியதால் ‘சேய்” என்பது மருவி இப்பொழுது செய்யாறு என்று அழைக்கப்பட்டுகிறது).
உடனே முருகப் பெருமான் அன்னை பார்வதி தேவியிடம் நடந்த வற்றை எடுத்து கூறினார். பிரம்ம புத்திரர்களும் பார்வதிதேவியிடம் நடந்ததை பற்றி முறையிட்டனர். அதற்கு பார்வதி தேவியார் தோஷம் நிவர்த்தியாக செய் நதிக்கரை வடகரையில் (செய்யாறு) சப்த கரைக்கண்டீஸ்வரரையும் வழிபட்டு பின் நட்சத்திரகிரியில் சுயம்புவாக இருக்கும் சிவபெருமானை வணங்கி பின் தென்கரையில் உள்ள சப்த கைலாச நாதரையும் தெற்கே உள்ள தேவகிரி மலையில் தோஷம் நீங்கி நிவர்த்தி அடைவாய் என்று அருளாசி வழங்கினார். தாய் சொல்லை தட்டாத முருகப் பெருமான் தோஷம் நீங்க தேவகிரி மலையில் குடிகொண்டிருந்த போது அவரை பூஜீத்து வணங்கி வழிப்பட்டு கொண்டிருந்த பிரம்மாவை பிடிக்க சனீஸ்வரபகவான் குளக்கரையிலேயே காத்திருந்தார்.
தேவகிரி மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் நீராடி சனீஸ்வரபகவானுக்கு நல்லெண்னைய் மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிப்பட்டால் அவர்களை பிடித்த ஏழரை சனி, அஷ்டம சனி, பாதச்சனி, கண்டசனி, விலகும் என்பதும் இத்தளத்திற்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கை மேலும் நீண்ட நாள் தடைப்பட்ட திருமணமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும். என்பது இத்தல்லத்தின் சிறப்பாக உள்ளது. பிராத்தனைகள் நிறைவேறியதும் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சார்த்தி பக்தர்கள் தங்கள் நேரத்திகடனை நிறைவேற்றுகின்றனர்.
சனிபகவான் முதன்முதலில் வடதிசையில் உள்ள வேதகிரி மலையிலிருந்து தென்திசையில் உள்ள திருநள்ளாருக்கு சென்றார் என்கிறது. காஞ்சிபுராணமும் அருணாச்சலப்புராணமும் இந்த மலையின் கீழ்உள்ள சரவணப்பொய்கை தீர்த்தம் மற்றும் நளதீர்த்தின் நீராடிய பின் சாப விமோசனம் பெற்றார் நளமாகா சக்கரவர்த்தி இத்தலத்தில் சனி பகவான் பிரம்மாவை பிடிக்காத காரணத்தால் அனைத்து நட்சத்திர காரர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக உள்ளது.
வடக்கு நோக்கி அமர்ந்த்து ஈஸ்வரப்பட்டத்துடன் சுயம்பு ‘சனீஸ்வரன்” பெயர் தாங்கி குளக்கரையில் அருள்பாலிப்பதால் இவரை வழிப்பட்டால் சனியால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து நீங்கப் பெறலாம் என்பது இத்தலத்தின் ஐதீகம்.
மேலும் திருநள்ளாருக்கு முன் தோன்றிய சுயம்பு சனீஸ்வரன் என்பதால் இத்தலத்தில் கண்ட சனி, பாதசனி உள்ளவர்கள் வழிப்பட்டால் விபத்துக்கள் ஏற்பாடது என்பது இத்தலத்தில் சிறப்பு.
தொடர்புக்கு:
என்.சுந்தரமூர்த்தி குருக்கள்
9487229930
04175-246380
அமைவிடம்:
திருவண்ணாமலை இருந்து வேலூர் செல்லும் சாலையில் மல்லவாடியில் இருந்து 10-வது கி.மி தூரத்தில் தேவனாம்பட்டு வேதகிரி மலை உள்ளது.
இங்குள்ள செல்ல டவுன் பஸ் எண்: 50, 15 போன்ற பஸ்களில் செல்லலாம்.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post பிரம்மாவை பிடிக்க காத்திருந்த சுயம்பு சனீஸ்வரபகவான் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.