நான் மிகவும் பாக்கியவான்… நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நான் நல்ல செல்வத்தோடு இருக்கிறேன். இப்படி இருக்க என்னிடம் என்ன உள்ளது ? இதன் ரகசியம் சொல்லவா . . . . .
என்னுடைய பணத்தேவைகளைக் கவனித்துக்கொள்ள
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னுடைய உடல் ஆரோக்கியத்தை
அற்புதமாக கவனிக்க
திருஎவ்வுள்ளூர் வைத்தியர் வீரராகவன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என் மனதில் கவலைகள் உண்டாகும்போது,
‘கவலைப்படாதே’ என்று சொல்ல
திருக்கச்சி பேரருளாளன் வரதராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு குறைவில்லாமல் அழகழகான,
அற்புதமான வஸ்திரங்கள் எப்பொழுதும் தர
த்வாரகாநாதன் ரண் சோட் ஜீ
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு வேண்டிய ருசியான,ஆகாரத்தை,
என் ஆயுள் முழுவதும் தர
பூரி நாயகன் ஜகந்நாதன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என் குடும்பத்தை என்றும் சந்தோஷமாகக் காப்பாற்ற,
திருமலைமேல் திருப்பதி ஸ்ரீநிவாஸன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை விரோதிகளிடமிருந்து எல்லா சமயங்களிலும் காப்பாற்ற,
அஹோபிலம் மாலோல நரசிம்மன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என் வாழ்க்கையை சரியான பாதையில் நடத்த
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை இரவில் சுகமாக தூங்க வைக்க
திருப்புளியங்குடி பூமிபாலர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை காலையில் அன்போடு அழகாக எழுப்ப
திருக்குறுங்குடி சுந்தர பரிபூரண நம்பி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னோடு ஆனந்தமாக குள்ளக்குளிர குடைந்து நீராட
யமுனைத்துறைவன் பாங்கே பிகாரி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
நான் சொன்னபடி செய்யவும்,
என்னோடு எல்லா இடத்திற்கு வரவும்,
திருவெஃகா சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னை உரிமையோடு தொட்டுப் பேசவும்,
என்னோடு விளையாடவும்
பண்டரீபுரம் விட்டலன்,பாண்டுரங்கன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .
எனக்கு பொழுது போகாத சமயங்களில்,
என்னோடு உட்கார்ந்து பேச
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு வேண்டிய உபதேசங்களைச் சொல்லித்தரவும்,
என்னைக் குளுமையாக வைக்கவும் எப்பொழுதும்
பத்ரிகாஸ்ரமம் நாராயணன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
எனக்கு எல்லா ஆழ்வார்களையும் தரிசிக்கவைப்பதற்கும்,
பூமியில் வாழ எல்லா வளங்களையும் தருவதற்கும்,
ஸ்ரீரங்கம் ரங்கராஜன்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
நான் கொஞ்சிமகிழவும்,
எனக்கு அன்புத்தொல்லை தரவும்,
குருவாயூர் உன்னி க்ருஷ்ணன் குருவாயூரப்பன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .
என்னோடு கடற்கரையில் காலார நடந்துகொண்டு,
வயிறு குலுங்க சிரிக்க வைக்க,
திருக்கடல்மல்லை ஸ்தல சயனப் பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
என்னிடம் தைரியமாகப் பொய் சொல்ல,
என்னை உரிமையோடு மத்தால் அடித்துத் திருத்த,
உடுப்பி ஸ்ரீ க்ருஷ்ணன்
என்னோடு எனக்காக இருக்கிறான் . . .
எனக்காக தூது செல்ல, எனக்காக வாதாட,
திருப்பாடகம் பாண்டவர் தூத பெருமாள்
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
அதனால் என் தேவைகளைப் பற்றி, என் வாழ்க்கையைப் பற்றி, என் எதிர்காலத்தைப் பற்றி,என் மரணத்தைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றி, என் கௌரவத்தைப் பற்றி நான் யோசிப்பதேயில்லை.
எனக்கு மோக்ஷத்தைத் தர,
என் மனதிற்கு சாந்தி தர,
எனக்கு புகழைத் தர,
திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
என்னோடு எனக்காக இருக்கிறார் . . .
இத்தனை பேர் என்னோடு இருக்க, நான் எதைப்பற்றி கவலைப்படவேண்டும்? நான் ஆனந்தத்தில் நீந்திக் களித்துக்கொண்டிருக்கிறேன். எப்பொழுதும் ஆனந்தமாகவே இருப்பேன். எல்லா ஜன்மங்களிலும் நிச்சயம் ஆனந்தமாகவே இருப்பேன். நீயும் இவர்களை உன்னோடு வைத்துக்கொள் ! உன் வாழ்க்கையும் நிச்சயம் ஆனந்தமாகவே இருக்கும்.
The post இப்படி இருக்க என்னிடம் என்ன உள்ளது? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.