பிள்ளையார் சக்தி வாய்ந்த மந்திரம்!
குளக்கரையிலும், ஆற்றங்கரையிலும் கூட அமர்ந்து அருள் செய்வதால் விநாயகர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருந்து வருகிறார். விநாயகருக்கு சிதறு தேங்காய் விட்டால், நமது துன்பங்களும் சிதறி ஓடி விடும் என்பது நம்பிக்கை.
இவர் கிரக தோஷங்களை நீக்கும் தெய்வமாக விளங்குகிறார். குழந்தைகளுக்கு பிரியமான தெய்வம் என்பதனாலும், பிள்ளை குணம் கொண்டவர் என்பதாலும் இவரை பிள்ளையார் என்று அழைப்பதாக சொல்லப்படுவதுண்டு.
சதுர்த்தி விரதம்:
இந்து மதத்தில் எத்தனையோ கடவுள்கள் இருந்தாலும் எந்த காரியத்தை செய்தாலும் முதலில் வணங்க வேண்டிய தெய்வம் விநாயகர். மஞ்சள், சந்தனம், சாணம் என எந்த பொருளால், எந்த வடிவத்தில் பிடித்து வைத்து வழிபட்டாலும், அந்த பொருளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்யக் கூடிய எளிமையான தெய்வம் விநாயகர்.
இரண்டு அருகம்புல்லை கிள்ளி வைத்து, எளிமையாக அவல் சர்க்கரை மட்டும் வைத்து வழிபட்டால் கூட மனம் மகிழ்ந்து, அளவில்லாத நலன்களை தரக் கூடியவர் விநாயகர். கணபதி, விநாயகர், கணேசர் என எத்தனையோ பெயர்களால் அழைக்கப்படும் விநாயகப் பெருமானுக்குரிய விரதம் சதுர்த்தி விரதமாகும்.
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமிக்கு அடுத்து வரும் கிருஷ்ணபட்ச நான்காம் நாளை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.
தினமும் காலையில் விநாயகரை வணங்கி விட்டு, அன்றைய நாளை துவங்கினால், வாழ்வில் தடைகள் விலகி, நலங்கள் சேரும் என்பது நம்பிக்கை. அது முடியவில்லை என்றால் விநாயகருக்கு உரிய சதுர்த்தி திதியில் மட்டுமாவது அவரை வணங்க வேண்டியது சிறப்பு.
விநாயகரை வழிபடும் முறை
விநாயகரை வழிபடும் போது அருகம்புல் சாற்றி, தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் இட்டு வணங்க வேண்டும் என்பது முறை. அதே போல் விநாயகரை 9 முறை வலம் வர வேண்டும் என்பதும் முறை. இந்த முறையில் விநாயகரை சதுர்த்தி நாளில் வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமும், தடைகளும், எதிர்ப்புக்களும் நம்மை விட்டு விலகிச் செல்லும். சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
விநாயகர் காயத்ரி மந்திரம்
ஓம் ஏக தந்த்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமகி
தன்னோ தந்த் ப்ரஜோதயாத்
கணபதி மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா
விநாயகர் சகஸ்ரநாமம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ
விக்நோப சாந்தயே
விநாயகர் அஷ்டாக்ஷர மந்திரம்: வெற்றிக்கான மந்திரம்
ஓம் கம் கணபதயே நம
கணபதி திரியக்ஷரி மந்திரம்: செல்வ சேர
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம்
ஹரித்ரா கணபதி மந்திரம் : வீடு, நிலம் பெற!
ஓம் ஹூம் கம் க்லெளம் ஹரித் ராகணபதயே
வர வரத ஸர்வஜனஹ்ருதயம் ஸ்தயம்பய ஸ்தம்பய ஸ்வாஹா
ஹேரம்ப கணபதி மந்திரம் : தடைகள் விலக!
ஓம் கம் நம
ஓம் கூம் நம
லக்ஷ்மி கணபதி மந்திரம்: குழந்தை பாக்கியம் பெற!
ஓம் நமோ லக்ஷ்மீகணேஷாய மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா
சக்தி கணபதி மந்திரம் - பயம் நீங்க
ஸ்ரீம் கணபதயே நம
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் வஷூமானய ஸ்வாஹா
ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹாகணபதயே ஸ்வாஹா
வக்ரதுண்ட மந்திரம்: பெரும் துயர்கள் விலக
வக்ரதுண்டாய ஹூம்
The post பிள்ளையார் சக்தி வாய்ந்த மந்திரம்! appeared first on SwasthikTv.