ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 28/07/2016 appeared first on SWASTHIKTV.COM.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 28/07/2016 appeared first on SWASTHIKTV.COM.
கார்த்திகை என்பது முருகனின் பெயர்களுள் ஒன்றான கார்த்திகேயன் என்ற பெயரை குறிக்கும். அதுவே கால போக்கில் கிருத்திகை என்று மரூவியுள்ளது. எல்லா மாதங்களிலும் கிருத்திகை வரும். ஆனால் ஆடிக்கிருத்திகை போன்ற சிறப்பு தை மாதக் கிருத்திகையில் கூட இருக்காது.
உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப்பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகை விழாவும் ஒன்று.
கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம் ஆகும். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோவில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமரிசையாக நடக்கும்.
நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.இன்று ஆடிக்கிருத்திக்கை என்பதால் முருகனை மனமுருக வழிப்பட்டு அவனின் அருளை பெறுவோமாக..!
The post ஆறுபடை வீடுகளிலும் கொண்டாடப்படும் உற்சவ ஆடி கிருத்திகை appeared first on SWASTHIKTV.COM.
திருச்சி அடுத்துள்ள குமர வயலூரில் சிவபெருமான் உடன் மகன் முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார் இவரை நாகசர்ப தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் அன்று திருகுலத்தில் முழுகி முருகனை தரிசித்தால் திருமணத்தடை நீங்கி சுபாகாரியம் நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
வயலூருக்கு வா என்று அழைத்த முருகன்:
திருவண்ணாமலை கோபுரத்திலிருந்து கீழே விழுந்த அருணகிரி நாதரை காப்பாற்றி முத்தை திரு என்று அடிஎடுத்துக் கொடுத்த முருகப்பெருமான் வயலூருக்கு வா என்று அழைக்க இங்கு வந்து தான் முருகப்பெருமானை அருணகிரியார் பொய்யாகணபதியை வணங்கி கண்டு கொண்டார். அருணகிரி நாதருக்கு தன் வேலால் ஒம் என்ற பிரணவ மந்திரத்தை முருகப் பெருமான் எழுதினார். திருப்புகழின் பெருமையில் வயலூர் முருகனுக்கு தனிச்சிறப்பு உண்டு. கிருபானந்த வாரியாரின் தனிப்பட்ட ஈடுபாட்டின் காரணமாக உலகப் புகழ் பெற்ற கோயிலாக இன்று இக்கோயில் திகழ்கிறது.
முத்தைத்தரு‘ எனத்துவங்கும் பாடல்:
திருவண்ணாமலையில் முருகன் அருள் பெற்ற அருணகிரியார், அவர் அடியெடுத்துக்கொடுக்க ‘முத்தைத்தரு’ எனத்துவங்கும் திருப்புகழ் பாடினார். அதன்பின் அவர் வேறு பாடல் பாடவில்லை. ஒருசமயம் அவர் முருகனைத் தரிசனம் செய்தபோது ஒலித்த அசரீரி ‘வயலூருக்கு வா’ என்றது. மகிழ்ந்த அருணகிரியார் இங்கு வந்தார். அப்போது, முருகன் அவருக்குக் காட்சி தரவில்லை. தான் ஏமாற்றமடைந்ததாக உணர்ந்தவர்,’அசரீரி பொய்யோ’ என உரக்கக் கத்தினார். அப்போது, விநாயகர் அவர் முன் தோன்றி ‘அசரீரி உண்மையே’ எனச்சொல்லி, இங்கிருந்த சுப்பிரமணியரைக் காட்டினார். முருகன், தனது வேலால் அருணகிரிநாதரின் நாக்கில் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன்பின் இத்தல முருகனைப் போற்றி அவர் 18 பாடல்கள் பாடிய அருணகிரியார், பல முருக தலங்களுக்கும் சென்று திருப்புகழ் பாடினார். இவ்வாறு நமக்கு திருப்புகழ் என்ற ஒப்பற்ற பாடல்கள் கிடைக்க அருள் செய்தவர் இங்குள்ள முருகன் ஆவார்.
எழுத்துத் துறையில் உள்ளவர்கள், பாடலாசிரியர்கள் சிறப்பு பெற:
சிவன் சன்னதிக்குப் பின்புறம் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இது சிவத்தலம் என்றாலும், இவரே விசேஷ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். சுவாமி, மணக்கோலத்தில் குமரனாக இருப்பதால், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்டவர்கள் இவரை வழிபட, தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும். கந்த சஷ்டியின்போது முருகன் தெய்வானை, பங்குனி உத்திர திருவிழாவில் முருகன் வள்ளி திருக்கல்யாணம் நடக்கும். வள்ளி திருமணத்தின் போது, முருகனுக்கு வேடன், கிழவன் போல அலங்காரம் செய்தும், யானையால் வள்ளி விரட்டப்படுவது போலவும் பாவனையாகச் செய்வர். தைப்பூசத்தன்று அருகிலுள்ள 4 கோயில் சுவாமிகளுடன், முருகன் சேர்ந்து பஞ்ச மூர்த்திகளாகக் காட்சி தருவர். அருணகிரியார் திருப்புகழ் பாட அருளிய முருகன் என்பதால், எழுத்துத் துறையில் உள்ளவர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வேண்டிக்கொள்ள கலையில் சிறப்பிடம் பெறலாம்.
வாரியார் திருப்பணி:
முருகபக்தரான கிருபானந்த வாரியார், 1934ம் ஆண்டில், இக்கோயிலுக்கு வந்தார்.
பின்னர் கோவில் கும்பாஷேகத்தை நடத்தினார்
அமைவீடம்:
திருச்சியில் இருந்து குமர வயலூருக்கு பஸ் வசதி உள்ளது
The post அருணகிரி நாதரை வயலூருக்கு வா என்று அழைத்த முருகன் appeared first on SWASTHIKTV.COM.
Arunagiri’s poems can be enjoyed for their literary value as well as for their devotional. Arunagirinathar has combined his poetic skill and his devotion towards Muruga with remarkable ease. Scholars hail Thiruppugazh both as a literary masterpiece and as a work of devotion.
The post Thiruppugazh Episode – 3 appeared first on SWASTHIKTV.COM.
The post சிவபெருமானின் 25 அவதாரங்களின் இருப்பிடங்கள் appeared first on SWASTHIKTV.COM.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 29/07/2016 appeared first on SWASTHIKTV.COM.
1 ஆகாயம் – சிதம்பரேசுவரர்:
சென்னையில் அமைந்திருக்கும் ஆகாய ஸ்தலமாக சிதம்பரேசுவரர் ஆலயம் ஆகும். இதன் மூலவர்திருமூலநாதசுவாமி ஆவார். மிகவும் பழுதடைந்த கோவில். தினமும் காலை 6 மணிமுதல் 11.30 வரையிலும், மாலை 5 மணி முதல் 9 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும். 1994 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற இத்திருக்கோவிலின் தல மரம் வில்வம் ஆகும்தில்லை சிதம்பரம் போன்றே இங்கும் ஸ்படிக லிங்க பூஜை தினமும் காலை மற்றும் இரவு8.30க்கு நடைபெற்றுவருகிறது.
2 மண் – ஏகாம்பரேஸ்வரர்:
சென்னையின் மண் ஸ்தலமாக அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். தலமரமாக வன்னிமரம் அமைந்திருக்கிறது.சென்னையில்வன்னிமரத்தடியிலும், அரசமரத்தடியிலும் சிவலிங்கம் அமைந்திருப்பது இங்கே மட்டுமே! மண் ராசிகளான ரிஷபம்,கன்னி,மகர ராசிகள் மற்றும் ரிஷப லக்னம்,கன்னி லக்னம், மகரலக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவான சிவ அருள் இங்கே வந்து அடிக்கடி வழிபட,அல்லது இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்ய கிட்டும்.
3 நீர் – கங்காதரேசுவரர்:
சென்னையின் நீர் ஸ்தலமான கங்காதரேசுவரர்,தாமரைத்தாய் மற்றும் பங்கஜாம்பாளுடன் அருள்புரிந்து கொண்டிருக்கிறார். கடக லக்னம் அல்லது கடகராசி, விருச்சிக லக்னம் அல்லது விருச்சிக ராசி,மீன லக்னம்அல்லது மீன ராசியில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்துக்கு அடிக்கடி வருகை தந்து சிவ அபிஷேகம் அல்லது ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர அவர்களின் நியாயமான நோக்கங்கள் நிறைவேறும்.ஏனெனில்,இந்த ராசி மற்றும் லக்னமானது நீர் ராசியைச் சேர்ந்தது ஆகும்.
4 நெருப்பு – அருணாச்சலேசுவரர்,அபிதகுலசாம்பாள்:
சென்னையின் நெருப்பு ஸ்தலமாக அருணாச்சலேசுவரர்+அபிதகுலசாம்பாள் திருக்கோவில் திகழுகிறது.நெருப்பு ஸ்தலமான அண்ணாமலைச் சமமான இத்திருக்கோவில் சவுகார்ப்பேட்டையில் அமைந்திருக்கிறது. ஜீவகாருண்யத்தை நமக்குப் போதித்த ராமலிங்க வள்ளலார் வழிபட்ட ஆலயம் இது. இங்கேபெரிய சிவலிங்கத் திருமேனி அம்பாள் 6 அடி உயரத்தில் அருள்பாலித்து வருகிறார். மேஷ லக்னம் மற்றும் மேஷ ராசி,சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசி,தனுசு லக்னம் மற்றும்தனுசு ராசியில் பிறந்தவர்கள் அடிக்கடி இங்கே வந்து வழிபட அவர்களின் நியாயமானநோக்கங்கள் நிறைவேறும்;தகுந்த ஆன்மீக குருவை அடையலாம்;மற்ற ராசிக்காரர்களும்இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர மிகுந்த ஆன்மீக வளர்ச்சியைப் பெறுவார்கள்.
5 வாயு – காளத்தீசுவரர்,ஞானபிரசன்னாம்பிகை:
சென்னையின் வாயு ஸ்தலமான அருள்நிறை காளத்தீசுவரர்+ஞானபிரசன்னாம்பிகை அம்மன் திருக்கோவில், மிதுன லக்னம் அல்லது மிதுன ராசி,துலாம் லக்னம் அல்லது துலாம் ராசி,கும்ப லக்னம்அல்லது கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சிவகடாட்சம் இங்கே கிடைத்துக் கொண்டேஇருக்கும்;யாரெல்லாம் இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு அல்லது சிவ வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்களுக்கு சிவகடாட்சமும்,பைரவ கடாட்சமும் எளிதில் கிட்டும்.
The post சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள் appeared first on SWASTHIKTV.COM.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 30/07/2016 appeared first on SWASTHIKTV.COM.
திருவாரூரில் வசித்த சங்கீத வித்வான் ராமபிரும்மம், சாந்தா தேவியாரின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் தியாகராஜர். இளமையிலேயே இசைப்புலமை பெற்ற தியாகராஜருக்கு எட்டாம் வயதில் தந்தை காயத்ரி, ராமதாரக மந்திர உபதேசம் செய்தார். தந்தையிடமிருந்த ராமர் சிலையை வாங்கி, தினமும் “ராம சடாட்சரி’ மந்திரத்தை பாராயணம் செய்து வழிபட்டார். தாயார் அவருக்கு ராமதாசர், புரந்தரதாசரின் கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுத்தார். கல்லூரியில் ராமாயணம் படித்தவருக்கு, ராமர் மீது பக்தி கூடியது. தினமும் 1 லட்சத்து 25 ஆயிரம் முறை ராமநாமம் சொல்லி, 38ம் வயதிற்குள் 96 கோடி முறை பாராயணம் செய்து விட்டார்.
அவரது 38ம் வயதின் கடைசி நாளில், ராமனை மனமுருகிப் பாடியபோது, வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவர் வெளியே வந்தபோது, விஸ்வாமித்திரரின் யாகத்திற்கு ராம, லட்சுமணர் செல்வது போல காட்சி கிடைக்கப்பெற்றார். பின், பலருக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்தார். இவர் காவிரிக்கரையில் ஐக்கியமான இவ்விடத்தில் பிருந்தாவனம் எழுப்பப்பட்டது. காவிரியின் வடகரையில் அமைந்த பிருந்தாவனம் இது. தியாகராஜர் ஜீவசமாதியான இடத்தின் மேலே அவரது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் பத்மாசனத்தில் அமர்ந்து, வலது கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையில் கீர்த்தனை ஓலைச்சுவடி வைத்திருக்கிறார். மார்பில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். இவருக்கு பின்புள்ள பீடத்தில் தியாகராஜர் பூஜித்த ஸ்படிக லிங்கம் உள்ளது.
பிருந்தாவனத்தின் முன்புறம் இசை தெய்வங்களான நாரதர், தும்புரு உள்ளனர். சன்னதியைச் சுற்றிலும் இங்கு ஐக்கியமான தியாகராஜரின் 4 சீடர்கள் உள்ளனர். முன் மண்டபத்தில் லவ, குசனுக்கு உபதேசம் செய்யும் வால்மீகியின் சிலை வடிவம் உள்ளது. சங்கீதம் கற்க செல்வோர் தியாகராஜருக்கு தேன் அபிஷேகம் செய்து, அதை சாப்பிட்டுச் செல்கின்றனர். சங்கீதம் கற்றவர்கள் முதலில் இங்கு வந்து அரங்கேற்றம் செய்கின்றனர். தியாகராஜருக்கு தினமும் காவிரி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, மதியம் சுத்தான்னம், இரவில் பால், பழம் நைவேத்யம் செய்து பூஜிக்கின்றனர். தேய்பிறை பஞ்சமி நாட்களில் தியாகராஜருக்கு விசேஷ அபிஷேகத்துடன், உற்சவர் புறப்பாடு நடக்கும். பஞ்ச கீர்த்தனை விழா: இவரது ஆராதனை விழா 5 நாள் நடக்கும். விழாவின்போது தினமும் நள்ளிரவு வரையில் தியாகராஜர் கீர்த்தனைகளைப் பாடி கச்சேரி நடக்கும். பஞ்சமியன்று காலையில் தியாகராஜர் வாழ்ந்த வீட்டிற்கு, தியாகராஜர் சென்று வருவார். அப்போது, தியாகராஜரின் பிரபலமான சேதுலாரா கீர்த்தனை இசைக்கப்படும். பின், விசேஷ அபிஷேகம் செய்வர். அவ்வேளையில் அனைத்து இசைக்கலைஞர்களும் “பஞ்சரத்ன கீர்த்தனை’ பாடுவர்.
இதுவே, இவ்விழாவின் முக்கிய நிகழ்வாகும். தியாகராஜர் இந்த கீர்த்தனைகள் பாடியபோது தான், ராமபிரான் அவருக்கு காட்சி கொடுத்தார்.
முன் மண்டபத்தில் தியாகராஜருக்கு காட்சி தந்த மூலராமர், இருக்கிறார். இவருக்கு தினமும் விசேஷ திருமஞ்சனம் நடக்கும். ராம நவமி விழாவில் சீதையுடன் திருக்கல்யாணம் நடக்கும். தியாகராஜர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருக்கோவிலூர், திருப்பதி, திருச்சி லால்குடி சப்தபுரீஸ்வரர், சுவாமி மலை முருகன் மற்றும் விநாயகர், ஆஞ்சநேயர் உட்பட பல சுவாமிகளைப் போற்றி, மொத்தம் 24 ஆயிரம் கீர்த்தனைகள் பாடியுள்ளார். இதில், 750 மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன. இங்கு எந்த விழா நடந்தாலும் விநாயகர் கீர்த்தனையும் துவங்கி, ஆஞ்சநேயர் கீர்த்தனையுடன் தான் முடிக்கின்றனர்.
கோயிலுக்கு எதிரே வெளியில் இரண்டு கச்சேரி மேடைகள் உள்ளன. இங்கு வரும் இசைக்கலைஞர்கள் இந்த மேடையின் மீது, தியாகராஜர் கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி செலுத்துகின்றனர். அருகில், இவ்விடத்தில் தியாகராஜருக்கு வழிபாடு ஏற்படுத்திக் கொடுத்த நாகரத்தினம்மாள் சிலை உள்ளது. பிரகாரத்தில் விநாயகர், தவக்கோலத்தில் யோக ஆஞ்சநேயர் உள்ளனர். கோயிலுக்கு வெளியே தியாகராஜர் தியானம் செய்த அரசமரம் உள்ளது. சித்திரை பூசம் நட்சத்திரத்தில் நடக்கும் தியாகராஜர் திருநட்சத்திர விழாவின்போது, மகாபிஷேகம் நடக்கும். சிவராத்திரிக்கு முதல் நாள் காலையில் இருந்து மறுநாள் காலை வரையில் இங்கு சன்னதி அடைப்பதில்லை. முழு நாளும் தியாகராஜர் சிவன் மீது பாடிய கீர்த்தனைகளை அகண்டகானம்
(இடைவிடாது பாடுதல்) செய்வர்.
தியாகராஜர் பிருந்தாவனம்,
திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்.
The post தியாகராஜர் பஞ்சரத்ன கீர்த்தனை பாடியபோது காட்சியளித்த ராமபிரான் appeared first on SWASTHIKTV.COM.
நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக…
சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்
சென்னையில் அமைந்துள்ள பஞ்சபூத ஸ்தலங்களின் இருப்பிடமும் செல்லும் வழியும் வாசகர்களின் விருப்பத்திற்கு இணங்க பதிவு செய்யப்படுகிறது.
1 ஆகாயம் – சிதம்பரேசுவரர்:
சென்னையில் அமைந்திருக்கும் ஆகாய ஸ்தலமாக சிதம்பரேசுவரர் ஆலயம் ஆகும். இதன் மூலவர்திருமூலநாதசுவாமி ஆவார். மிகவும் பழுதடைந்த கோவில். தினமும் காலை 6 மணிமுதல் 11.30 வரையிலும், மாலை 5 மணி முதல் 9 மணிவரையிலும் கோவில் திறந்திருக்கும். 1994 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற இத்திருக்கோவிலின் தல மரம் வில்வம் ஆகும்தில்லை சிதம்பரம் போன்றே இங்கும் ஸ்படிக லிங்க பூஜை தினமும் காலை மற்றும் இரவு8.30க்கு நடைபெற்றுவருகிறது.
NO:112,அவதான பாப்பையா தெரு,
சூளை ,
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில்
சென்னை-112
7C, 7B, 7D, 164, 59, 159 என்ற எண்ணுடைய பேருந்தில்பயணித்து புவனேஸ்வரி திரையரங்கம் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
2 மண் – ஏகாம்பரேஸ்வரர்:
சென்னையின் மண் ஸ்தலமாக அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் ஆகும். தலமரமாக வன்னிமரம் அமைந்திருக்கிறது.சென்னையில்வன்னிமரத்தடியிலும், அரசமரத்தடியிலும் சிவலிங்கம் அமைந்திருப்பது இங்கே மட்டுமே! மண் ராசிகளான ரிஷபம்,கன்னி,மகர ராசிகள் மற்றும் ரிஷப லக்னம்,கன்னி லக்னம், மகரலக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவான சிவ அருள் இங்கே வந்து அடிக்கடி வழிபட,அல்லது இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்ய கிட்டும்.
NO:315, தங்கச்சாலை தெரு,பூங்கா நகர், சென்னை-3 என்ற முகவரியில் அமைந்திருக்கிறது 1, 21, 51, 57, 18A என்ற எண்ணுள்ள பேருந்தில் பயணித்து கந்தசாமி கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.அங்கிருந்து ராசப்பதெரு வழியே தங்கச்சாலை தெரு திரும்பி சிறிதுதொலைவில் அமைந்திருக்கிறது.
3 நீர் – கங்காதரேசுவரர்:
சென்னையின் நீர் ஸ்தலமான கங்காதரேசுவரர்,தாமரைத்தாய் மற்றும் பங்கஜாம்பாளுடன் அருள்புரிந்து கொண்டிருக்கிறார். கடக லக்னம் அல்லது கடகராசி, விருச்சிக லக்னம் அல்லது விருச்சிக ராசி,மீன லக்னம்அல்லது மீன ராசியில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்துக்கு அடிக்கடி வருகை தந்து சிவ அபிஷேகம் அல்லது ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர அவர்களின் நியாயமான நோக்கங்கள் நிறைவேறும்.ஏனெனில்,இந்த ராசி மற்றும் லக்னமானது நீர் ராசியைச் சேர்ந்தது ஆகும்.
7A, 7F, 7H, 34, 16A, 22, 29D, 23C, 27K என்ற எண்ணுள்ள பேருந்துகளில் ஏதாவது ஒன்றில் பயணித்து கங்காதரேசுவரர் சிவன் கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.இந்த ஆலயம் புரசைவாக்கத்தில் அமைந்திருக்கிறது.
4 நெருப்பு – அருணாச்சலேசுவரர்,அபிதகுலசாம்பாள்:
சென்னையின் நெருப்பு ஸ்தலமாக அருணாச்சலேசுவரர்+அபிதகுலசாம்பாள் திருக்கோவில் திகழுகிறது.நெருப்பு ஸ்தலமான அண்ணாமலைச் சமமான இத்திருக்கோவில் சவுகார்ப்பேட்டையில் அமைந்திருக்கிறது. ஜீவகாருண்யத்தை நமக்குப் போதித்த ராமலிங்க வள்ளலார் வழிபட்ட ஆலயம் இது. இங்கேபெரிய சிவலிங்கத் திருமேனி அம்பாள் 6 அடி உயரத்தில் அருள்பாலித்து வருகிறார். மேஷ லக்னம் மற்றும் மேஷ ராசி,சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசி,தனுசு லக்னம் மற்றும்தனுசு ராசியில் பிறந்தவர்கள் அடிக்கடி இங்கே வந்து வழிபட அவர்களின் நியாயமானநோக்கங்கள் நிறைவேறும்;தகுந்த ஆன்மீக குருவை அடையலாம்;மற்ற ராசிக்காரர்களும்இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர மிகுந்த ஆன்மீக வளர்ச்சியைப் பெறுவார்கள்.
இத்திருக்கோவில் சவுகார்ப்பேட்டையில் அமைந்திருக்கிறது. NO:24,பள்ளியப்பன்தெரு,சவுக்கார்பேட்டை, சென்னை-79.
28, 34, 37, 159 இந்த எண்ணுள்ள பேருந்துகளில் பயணித்து யானைக்கவுனி காவல் நிலையம்நிறுத்தத்தில் இறங்கி,வால்டாக்ஸ் ரோட்டில் அண்ணாப்பிள்ளை தெரு வழியாக சிறிதுதொலைவில் பயணித்தால் இந்த திருக்கோவிலை அடையலாம்.
5 வாயு – காளத்தீசுவரர்,ஞானபிரசன்னாம்பிகை:
சென்னையின் வாயு ஸ்தலமான அருள்நிறை காளத்தீசுவரர்+ஞானபிரசன்னாம்பிகை அம்மன் திருக்கோவில், மிதுன லக்னம் அல்லது மிதுன ராசி,துலாம் லக்னம் அல்லது துலாம் ராசி,கும்ப லக்னம்அல்லது கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சிவகடாட்சம் இங்கே கிடைத்துக் கொண்டேஇருக்கும்;யாரெல்லாம் இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு அல்லது சிவ வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்களுக்கு சிவகடாட்சமும்,பைரவ கடாட்சமும் எளிதில் கிட்டும்.
NO:155, பவளக்காரத்தெரு,பாரிமுனை,சென்னையில் அமைந்திருக்கிறது. காலை 7 மணிமுதல் 11 மணி வரையிலும்,மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் இத்திருக்கோவில்திறந்திருக்கும்.
38H, 44, 44C, 56C, 116 என்ற எண்ணுள்ள பேருந்தில் ஒன்றில் பயணித்து மாணவர் மன்றம் அல்லது தம்புச்செட்டித்தெரு அல்லது பவளக்காரத் தெரு நிறுத்தத்தில் இறங்கவேண்டும்.சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் கடைசியில் இந்த திருக்கோவில்அமைந்திருக்கிறது.அல்லது ராயபுரம் மேம்பாலம் எதிரில் பவளக்காரத்தெரு நுழைந்தவுடன் இந்த திருக்கோவிலை அடையலாம்.
The post சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்களுக்கு செல்லும் வழி appeared first on SWASTHIKTV.COM.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரதிஷ்ட்டை செய்துள்ள மேதா தட்சிணாமுர்த்திமிகவும் பிரசித்தி வாய்ந்தது.
பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் தேவர்களுக்கு எல்லாம் தலைவன்.ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம் குருதான்.குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை இடப்பெயர்ச்சியடைகிறார்.குரு
நம் வாழ்வில் மிக முக்கியமானவை இரண்டு உள்ளது. தனம் என்று சொல்லக்கூடிய பணம், புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு பகவான் தான்.திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குருபலம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள். குருவின் அருள் இருந்தால் தான் ஞானம், கூர்ந்த மதிநுட்பம், ராஜாங்க யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி,கல்வி, வேத உபதேசம் போன்ற பல துறைகளில் பிரகாசிக்கலாம்.எனவேதான் குரு பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல ஸ்தான ஆதிபத்யம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்து விட்டால் அந்த ஜாதகத்துக்கு அந்த ஒரு பலமே போதுமானது. கவுரவம், செல்வாக்கு, பட்டம்,பதவிகள் தானாக தேடி வரும்.ஆன்மீக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார்.குரு பார்வை கோடி நன்மை குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி.குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
இவர் வாக்கிய பஞ்சாங்கப்படி 2.08.2016 செவ்வாய் கிழமை காலை சுமார் 9.30மணியளவிலும். திருக்கணிதப்படி ஆகஸ்ட் மாதம்,11 தேதி (11.08.2016) வியாழக் கிழமை இரவு சுமார் 9.30 அளவிலும் குருபகவான் சிம்மராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார். இடப்பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டுதன்வந்திரிபீடத்தில் இடப்பெயர்ச்சி நேரத்தில் இரண்டு முறை குருபெயர்ச்சி பரிகார மஹாயாகம் நடைபெறுகிறது
அவரவர் ஜாதகத்தில் நடக்கும் தசா புக்திகளுக்கு ஏற்ப நன்மை தீமை சமமாக கொடுக்கும் தன்மை கொண்டது என்பதை மனதில் கொள்ளவும்.
இந்த குருபெயர்ச்சியில் அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியராசிகள்.மேஷம், கடகம் ,கன்னி ,துலாம் ,தனுசு ,மற்றும் கும்பம்.
குரு பகவான் அருளும் யோக பலன்களை அனுபவிக்க மேற்கண்ட 12ராசிக்காரர்களும் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் குருபெயர்ச்சி மஹா யாகத்தில் பங்கேற்று பரிகாரம் சங்கல்பம் செய்து கொள்ளலாம்.
இந்தஆண்டு நடைபெறும் குருபெயர்ச்சி யாகத்திற்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் ஜோதிடர்கள் பங்கேற்க உள்ளதால் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு –
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
The post தன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சிவிழா வரும் ஆகஸ்டு 02 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறுகிறது. appeared first on SWASTHIKTV.COM.
1, ஓமாம்புலியூர்
தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.
2, உத்திரகோசமங்கை
பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
3, இன்னம்பர்
அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
4, திருவுசாத்தானம்
இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.
5, ஆலங்குடி
சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
6, திருவான்மியூர்
அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
7, திருவாவடுதுறை
அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
8, சிதம்பரம்
பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
9, திருப்பூவாளியூர்
நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
10, திருமங்களம்
சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
11, திருக்கழு குன்றம்
சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
12, திருமயிலை
1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.
13, செய்யாறு
வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
14, திருவெண்காடு
நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.
15, திருப்பனந்தாள்
அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
16, திருக்கடவூர்
பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
17, திருவானைக்கா
அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
18, மயிலாடுதுறை
குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.
19, திருவாவடுதுறை
அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
20, தென்மருதூர்
1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.
21, விருத்தாசலம்
இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
22, திருப்பெருந்துறை
மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.
23, உத்தரமாயூரம்
ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
24, காஞ்சி
ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
25, திருப்புறம்பயம்
சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
26, விளநகர்
அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.
27, திருத்துருத்தி
சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.
28, கரூர்
ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
29, திருவோத்தூர்
ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்
“நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!
The post ஈசன் உபதேசித்த ஸ்தலங்கள் appeared first on SWASTHIKTV.COM.
கும்பகோணம் ராமசுவாமி கோவில் சிறப்பு பெற்ற வைணவ தலம். இங்கு கருவறையில் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகனன், அனுமார் இருக்கும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். வடக்கு நோக்கிய கருவறையில் மூலவர் இராமரும் சீதைப்பிராட்டியும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, இலக்குவன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்துருக்கனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்க அனைவரும் எழுந்தருளியுள்ளனர். இராம பிரான் இடது காலை மடக்கி வலது காலை பூமியில் தொங்கவிட்டு அமர்ந்துள்ள கோலம் மிக அருமை. எல்லா மூர்த்திகளும் பட்டாபிஷேக நிலையில் காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சியாகும். தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ள இராமபிரானின் பட்டாபிஷேகக் கோலத்தினை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.
The post இராமபிரானின் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமசுவாமி கோவில் appeared first on SWASTHIKTV.COM.
கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அடுத்துள்ள திருவதிகையில் சரநாராயண பெருமாள் உடன் ஹேமாம்புஜவல்லித்தாயார் அருள் பாலிக்கிறார். இவரை திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்குள்ள பெருமாளை வழிபாடு செய்யதால் திருப்பதி தரிசனம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள மூலவர் சாளக்கிராமத்தால் ஆணவர், நரசிம்மர் அமர்ந்த நிலையிலும் இருப்பது வழக்கம் ஆனால் இங்கு சயன கோலத்தில் படுத்த நிலையில் அருள்பாலிப்பது இத்தலத்தில் மட்டும்தான்.
சிவனுக்கு அம்பாக விஷ்ணு:
சிவபெருமான் திரிபுர அசுரர்களை போரிட்டு அழிக்க தேவர்கள் தேர் ஒன்றினை படைத்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சூரிய, சந்திரர் தேரின் இரு சக்கரங்களாகவும், பூமி தேரின் தட்டாகவும், நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், மேருமலை வில்லாகவும், ஆதிசேஷன் நாணாகவும் பிரம்மன் தேர் ஓட்டுபவராகவும், விஷ்ணு அம்பாகவும் இருந்து சிவனுக்கு உதவினர் என்கிறது புராண நூல்கள். இதன் மூலம், சிவனுக்கு விஷ்ணு அம்பாக (சரமாக) இருந்து போருக்கு உதவியதால் விஷ்ணு இத்தலத்தில் ‘சரநாராயணப்பெருமாள்’ என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலில் திரிபுரம் எரிக்கும் திருவிழா நாளில், கருட வாகனத்தில் பெருமாள் சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
சயன நரசிம்மர்:
சரநாராயணப்பெருமாள், சயன நரசிம்மர், ஹேமாம்புஜ வல்லித்தாயார் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. சரநாராயணப்பெருமாள் திருக்கோயில் உள்ள இடம் அதிகாபுரி க்ஷேத்திரம் ஆகும். விமானம் – நளினகவிமானம். இங்குள்ள மூலவர் சரநாராயணப்பெருமாள் முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனவர். இவர் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். வில்லிபுத்தூரார் எழுதிய மகாபாரதத்தில் அர்ஜுனன் குருக்ஷேத்திரப்போர் முடிந்து, பிராயச்சித்தத்திற்காக இங்கு வந்து வழிபட்டதாக புராணம் கூறுகிறது.பிரமாண்ட புராணத்தில் இந்த பெருமா ளைப்பற்றியும் கூறப்பட் டுள்ளது. இத்திருக்கோயில் பல்லவ அரசர்களால் நிர்மாணிக்கப்பட்டது. திருமாலின் திவ்வியத்திருத்தலங்களில் இக்கோயிலில் தான் சயன நரசிம்மர் சயன திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். இது ஒர் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார். எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர் திருவஹீந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது. சிவனைப்போலவே இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இங்கு தாயாரின் சன்னதி தனியாக உள்ளது. தாயாரின் திருநாமம் ஹேமாம்புஜ நாயகி, செங்கமலத்தாயார் என்பதாகும். ஒவ்வொரு உத்திரத்தன்றும் இவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மற்ற கோயில்களில் கைகூப்பி நிற்கும் கருடாழ்வார், இங்கு கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் இங்குள்ள கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாக புராணம் கூறுகிறது. ஆயிரத்து 300 வருடங்களுக்கு முன்பு ஊரின் மட்டத்திற்கு கீழ் இந்த ஊர் ‘ஓம்’ என்ற வடிவில் இருந்திருக்கிறது. இங்குள்ள பெருமாள் உப்பிலியப்பன் சீனிவாசனைப்போல், மார்க்கண்டேய மகரிஷி மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் மிருகண்ட மகரிஷியின் மகன் மார்க்கண்டேய மகரிஷி. புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்குள்ள பெருமாளை வழிபாடு செய்யலாம்.
திருவிழாகள்:
சித்திரை விசேஷ திருமஞ்சனம், வைகாசி வசந்த உற்சவம், ஆடி – ஒவ்வொரு வெள்ளியிலும் ஊஞ்சல் சேவை, ஆவணி – ஸ்ரீஜெயந்தி உற்சவம், புரட்டாசி – பெருமாள் புறப்பாடு, ஐப்பசி – தீபாவளி உற்சவம், கார்த்திகை – திருக்கார்த்திகை உற்சவம், மார்கழி – தனுர்மாத பூஜை, தை – உள் புறப்பாடு, மாசி – ஒரு நாள் மண்டகப்படி, பங்குனி – உத்திர திருமஞ்சனம் என மாதம் தோறும் ஒரு விழா.
The post திருப்பதி தரிசனம் திருவதிகையில் appeared first on SWASTHIKTV.COM.
கோவை மாவட்டத்தில் உள்ள ஆவாரம் பாளையத்தில் சந்தனம் மனம் கமழும், சத்திய மங்கலம் வனங்கள் சூழந்த காட்டு பகுதியில் 500 ஆண்டுகள் பழைமையானதும் பிரசித்தி பெற்றுதுமான பண்ணாரியம்மன் கோவில் உள்ளது. இந்த பண்ணாரி அம்மனை மனதார வேண்டி கொண்டு அக்னி குண்டம் இறங்கினால் தீராத குறையும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
பங்குனியில் அக்னி குண்டம் திருவிழா:
இக்கோயிலுக்கு நூழையும் முன் பெரிய திரிசூலமும் அடுத்து கொடிமரமும், பிரகாரத்தில் பிரமாண்டமான மகா மண்டபம் அமைந்துள்ளது சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மகோவில் திருவிழா தமிழமே திரும்பி பார்க்கும் வகையில் நடைபெறும்.
அக்னி குண்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்
வரை குண்டத்தில் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறை வேற்றுகின்றனர்
தோல் நோய் தீர்க்கும் உப்பு, மிளகு:
அதே நாலில் இங்கு வந்து அம்மனுக்கு மிளகு, உப்பு போடுவதாக பிராத்தனை செய்து கொள்கின்றனர். பின்னர் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமானதும் பக்தர்கள் வேண்டுதலை நிறை வேற்றுகின்றனர். மேலும் மனதில் எப்போதும் கவலை, தொழிலில் பிரச்சனைகள், குடும்பத்தில் பிரச்சனைகள், வாழ்வில் பல சிக்கல்கள் தீர பண்ணாரியம்மனை இங்கு வந்து பிரத்திக்கொள்கின்றனர்.
திருவிழாக்கள்:
பங்குனி மாதம், பவுர்ணமி, ஆடிமாதம், சித்திரை மாதம், நவராத்திரி.
The post அக்னி குண்டம் இறங்கியவுடன் குறை தீர்க்கும் பண்ணாரி மாரியம்மன் appeared first on SWASTHIKTV.COM.
குருபகவான் சிம்மத்தில் இருந்து கன்னிராசிக்கு இடம் பெயரும் குரு பெயர்ச்சி நன்மைதரும், ஆடிப்பெருக்கு, ஆடி அம்மாவாசை என மூன்றும் இன்று நடப்பது விஷேசம்.குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர். நம் முன்னோர் ‘ குரு பார்க்க கோடி புண்ணியம்’ என்பார்கள். குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல… குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம் தான். பெயர்ச்சியன்று தேவர்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் அதிபதியாக இருக்கும் பிரகஸ்பதி என்கிற குருபகவானை வணங்க வேண்டும்.
அங்கிரச முனிவருக்கு பிறந் ‘பிரகஸ்பதி’ என்ற குருபகவான், கல்வியில் கல்வியில் சிறந்து விளங்க சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார். சிவபெருமான் குருபகவானின் தவத்தை ஏற்று, நவக்கிரங்களில் ஒருவராக திகழ ஆசி வழங்கினார். அத்துடன் சூரிய பகவானுக்கு மேலான சக்தி படைத்தவராகவும் திகழ ஆசி வழங்கினார். அதுபோல, மங்களங்கள யாவும் தரும் சக்தியையும் கொடுத்தார். எனவேதான், சிவனின் சக்தியை பெற்ற குருபகவானை, குரு பெயர்ச்சி அன்று வணங்குவது குருவின் ஆசி பெற வேண்டிதான், பெண்கள் மஞ்சள் நிற கயிற்றில் அல்லது இயற்கையாக மஞ்சள் நிறமுடைய தங்கத்தை திருமாங்கல்யமாக அணிகின்றனர். ஏன் மஞ்சளை அணிய வேண்டும்?
குரு பகவானின் நிறம் மஞ்சள்:
குரு பகவானின் நிறம் மஞ்சள், எனவேதான், இவருக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து பக்தர்கள் வணங்குகின்றனர். மஞ்சள் வஸ்திரமும் அணிவிக்கலாம். இதனால் குருதோஷம் நீங்கும். வியாழன்தோறும் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று இரண்டு நெய் தீபம் ஏற்றி, நவக்கிர சன்னதியில் உள்ள குரு பகவானை வணங்கினால், திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இறந்த முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் ஏற்றது ஆடி அமாவாசை:
அமாவாசை திதி. ஆண்டுக்கொரு முறை இறந்தவர்களின் திதி நாளில் திவசம் செய்தாலும், மாதந்தோறும் அமாவாசையன்று நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியம். அதிலும் ஆடி அமாவாசை மிகவும் விசேஷம். ஆடி அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுப்பது சிறப்பு. வஸ்திரதானம் செய்வது, நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பி்க்கை. இத்தகைய வழிபாடுகளால் முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும். மேலும் அவர்களது பரிபூரண ஆசீர்வாதம் நமது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடிப்பட்டம் தேடி விதை:
ஆடி மாதமம் 18ம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி வார்கள் நதிக்கரை, குளக்கரைக்கு சென்று பூஜித்து படையலிட்டு, நோன்புக்கயிறு கட்டிக்கொள்வார்கள். மணமாகாத பெண்கள் கூட கழுத்தில் மஞ்சள் நூல் கட்டும் நாளாக கணவன் நலனுக்காக பிரார்த்திக்கலாம். காதொலை, கருகமணி, காப்பரிசி வைத்து பூஜை செய்யும் கன்னிப்பெண் சீக்கிரமே நல்ல கணவனை அடைவாள் என்பது நம்பிக்கை. பிள்ளையார் பிடித்து
ஆற்றில் வாழை இலையை விரித்து, பிள்ளையார் பிடித்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடைகள் இல்லாத விளைச்சலுக்காக விநாயகரை போற்றி வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல, அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும்
ஆடிப்பெருக்கு நாளில் நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால்தான், அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும்.
இப்படி வரும் முப்பெரும் விழாவில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும்.
The post சிவனின் சக்தியை பெற்ற குருபகவான் appeared first on SWASTHIKTV.COM.
ஸ்ரீ ருத்ரம் (நூல்) யசூர் வேதத்தின்தலைசிறந்த பகுதியாகக் கருதப்படுவது ஸ்ரீ ருத்ரம். சமசுகிருதமொழியில் அமைந்த ஸ்ரீ ருத்ரம் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் ஸ்ரீ அண்ணா. இந்நூல்இராமகிருஷ்ண மடம், சென்னை, நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது.[1]
ஸ்ரீருத்ரம் நூலின் சிறப்பு
ஸ்ரீருத்ரம் யசூர் வேத தைத்திரீய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள் நாலாவது காண்டத்தின் நடுநாயகமாக அமைந்துள்ளது. இதனுடைய இருதய ஸ்தானத்தில் இருப்பது சிவாயநம எனும் பஞ்சாட்சர மந்திரம் கொண்டிருப்பதால் ஆத்திகர்களால் ஸ்ரீ ருத்ரத்தை தினசரி பூசையிலும், ஜெபத்திலும், ஹோமத்திலும், தியானத்திலும், பாராயணத்திலும் தொன்று தொட்டு சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஸ்ரீருத்ரம், “ருத்ரோபநிடதம்” என்றும் “சதருத்ரீயம்” என்றும் சிறப்புப் பெயர் வாய்ந்தது. வாழ்க்கை எனும் துயரக்கடலிருந்து நம்மை விடுவித்துமுக்திக்கு கருவியானதால் இதுஉபநிடதம் என்று அழைக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான வடிவங்களில் ஸ்ரீ ருத்திரனை இந்நூலில் போற்றப்படுவதாலும் இதனைசதருத்ரீயம் எனப்படுகிறது.
ஸ்ரீருத்ரம் நூலின் உரையாசிரியர்கள்
ஸ்ரீ ருத்ரம் நூலுக்கு எழுதப்பட்ட உரைகளில் சாயாணாச்சாரியார், அபிநவ சங்கராச்சாரியார், பட்டபாஸ்கரர், விஷ்ணு சூரி ஆகியவர்கள் சமசுகிருத மொழியில் எழுதிய உரைகளே தற்பொழுது அச்சில் உள்ளது. நூலின் அமைப்பு நமகம் (ருத்ரனுக்கு நமஸ்காரங்கள் செய்தல்); சமகம் (ருத்திரனிடம் நமக்கு வேண்டியதை பிரார்த்தனை செய்து வேண்டுதல்); லகுந்யாசம் (தன்னை ஸ்ரீருத்ர வடிவான சிவனாகவேதியானம் செய்தல்; ஸ்ரீமகாந்நியாசம்(தலை முதல் பாதம் வரை பஞ்சாங்க ருத்ரர்களுக்கு நியாஸ பூர்வகமாக ஜெபம், ஹோமம், அர்ச்சனை மற்றும் அபிசேகம் ஆகியவற்றின் முறை எடுத்துக் கூறல்), சிவ அஷ்ட தோத்திரம், ருத்ர விதான பூஜை, ருத்ர திரிசதீ செய்தல் போன்ற செய்யும் முறைகள் குறித்து வாசகர்களுக்குப் பயன்படும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
ஸ்ரீருத்ரம் நூலைப் செபித்தலின் பயன்
இந்நூலில் ஸ்ரீருத்ரத்தை செபித்தலின் பயன் கூறப்பட்டுள்ளது. யார் யார் எந்தப்பயனை விரும்பினாலும் ஸ்ரீருத்ரம் நூலில் உள்ள மந்திரங்களைத் தொடர்ந்து செபித்தால் நினைத்த காரியங்கள் ஈடேறும். ருத்ர ஜெபத்தால் எல்லா தேவதைகளும் திருப்தி அடைகின்றனர் என்று சூதசம்ஹிதை கூறுகிறது. மேலும் இந்த ஜெபமே அனைத்து பாவங்களுக்குச் சிறந்த பிராயசித்தமாகவும் (பரிகாரமாகவும்) விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீருத்திரத்தின் சிறப்பு மந்திரம்
திரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்|உர்வாருகமிவ பந்தனான் – ம்ருயோர் – முக்ஷீயமாம்ருதாத்|பொருள்: (சுகந்திம்) இயற்கையான நறுமணமுடையவரும் (புஷ்டிவர்த்தனம்) கருணையால் அடியார்களைக் காத்து வளர்ப்பவரும் ஆகிய (திரியம்பகம்) முக்கண்ணனை (யஜாமஹே) பூஜித்து வழிபடுகிறோம். (உர்வாருகம் இவ) வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து விடுவது போல (ம்ருத்யோர்) இறப்பின் (பந்தனாத்) பிடிப்பிலிருந்து (முக்ஷீய) உமதருளால் விடுபடுவோமாக. (மா அம்ருதாத்) மோட்சமார்க்கத்திலிருந்து விலகாமலிருப்போமாக.
ஸ்ரீருத்ரம் பாராயணம் எவ்வாறு செய்வது
இந்நூலில் ஸ்ரீருத்ரத்தை எவ்வாறு பாராயணம் செய்வது குறித்து விளக்கப்படுகிறது. ஸ்ரீருத்ர மந்திரத்தின் முதல் அனுவாகத்தில் ஈசுவரனுடைய கட்டளையை மீறி நடந்தவர்களிடம் முன் கோபம் கொண்ட ருத்ரன் தோன்ற வேண்டுமென்ற பிரார்த்தனையும், இரண்டாவது அனுவாகம் முதல் ஒன்பதாவது அனுவாகம் வரை ருத்ரனின் சர்வேசுவர தத்துவம், சர்வ சரீர தத்துவம், சர்வ அந்தர்யாமி தத்துவம் முதலிய பெருமைகளை குறிக்கும் திருநாமங்களால் நமஸ்காரமும், பத்தாவது அனுவாகத்தில் நம்முன் தோன்றியருத்ரனிடம் நாம் நினைத்த காரியங்கள் வெற்றி அடையவும், நமக்கு வேண்டாதவற்றை நீக்கவும் பிரார்த்தனையும், பதினோராவது அனுவாகத்தில் ருத்ர கணங்களுக்கு நமஸ்காரமும் கூறப்படுகிறது.
முதலில் ருத்ரத்தை ஜெபித்து அதற்குப் பின் சமகத்தையும் ஜெபிப்பது செய்வது சாதாரணமான முறை. இதனை லகு ருத்ரம் என்பர். ஒரு முறை ருத்ரத்தின் பதினொரு அனுவாகத்தையும் ஜெபித்துப் பிறகு சமகத்தின் முதல் அனுவாகத்தையும், இரண்டாம் முறை ருத்ரத்தை பதினோரு முறை ஜெபித்துச் சமகத்தின் இரண்டாவது அனுவாகத்தையும், அவ்வாறாகப் பதினோராவது முறை ஜெபித்து பதினோறாவது அனுவாகத்தையும் பாராயணம் செய்தால் அது “ருத்ரைகாதசினீ” (பதினோரு ருத்திரர்கள்) எனப்படும். இதனை மகா ருத்ரம் என்பர். பதினோரு லகு ருத்ரம் ஒரு மகா ருத்ரம். பதினோரு மகா ருத்ரம் ஒரு அதி ருத்ரம் ஆகும்
The post நினைத்த காரியங்கள் நிறைவேற ஸ்ரீ ருத்ர மந்திரம் appeared first on SWASTHIKTV.COM.
மஹா பெரியவா பெரியவரின் தரிசனத்திற்காக அம்மாவும் பெண்ணும் வந்து நின்றார்கள் . ஒரு தட்டில் இருந்த மஞ்சள் , குங்குமம் , பழம் , பாக்கு., தேங்காய் , புஷ்பம் அதற்கு மேல் திருமாங்கல்யம் என்று அந்த பெண்ணின் திருமணத்தை பறை சாற்றியது. இன்னொரு தட்டில் கூரை ப்புடவையையும் அந்த அம்மாள் எடுத்துவைத்தாள் . ஜீவ இம்சை என்பதாலும் அது தேவையற்ற ஆடம்பரம் என்றும் பெரியவர் பட்டு உடைகளை விரும்புவதில்லை என பலர் அறிந்ததே . அதை அறியாததால் அந்த அம்மாள் அரக்கு நிற கூரை ப்புடவையை தட்டில் வைத்து ஆசிக்காக காத்திருந்தாள். ஆனால் மடத்து சிப்பந்திகளுக்கு மனம் ஒப்பவில்லை. அதனால் புடவைத் தட்டை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு மற்ற மங்கல திரவியங்கள் உள்ள தட்டை மட்டும் பெரியவர் ஆசிக்காக நகர்த்தினார்கள் . உடனே அந்த அம்மாள் ஆதங்கத்துடன் கடினமான வாக்குக்குவாதம் செய்ய ஆரம்பித்து விட்டார் .
அப்பொழுது பெரியவர் உள்ளிருந்து நடப்பதை கேட்டபடி வெளியே வருகிறார். ஆமாம் , புடவையை நகர்த்திதான் வைக்கணும் என்பதுபோல் கூறினார்.. அங்கே இருந்தவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. யார் தவறு செய்தாலும் அவர் மனம் லேசாக நோகும்படியாக கூட பெரியவர் என்றுமே சொன்னதில்லை , செய்ததில்லை. அவரே கூறைப்புடவையை தள்ளி வைத்துவிட்டாரே .
பெரியவர் மடத்து சிப்பந்தியிடம் ஒரு குச்சியை கொண்டு வரச்சொல்கிறார்.. ஒதுக்கிவைக்கப்பட்ட பட்டுப்புடவையின் மடிப்பை குச்சியால் விரிக்க , அங்கே இருந்த பக்தர்கள் அச்சமுறும் வகையில் ஒரு பெரிய கருந்தேளும் இரண்டு குட்டி தேள்களும் காணப்பட்டன.. இதனால்தான் ஒதுக்க சொன்னேன் என்பதுபோல் அந்த பெண்ணை பார்த்துவிட்டு , மடத்து சிப்பந்தியிடம் அந்த ஜீவராசிகளை வெளிய கொண்டுவிடும்படி கூறுகிறார்.
பிறகு அந்தப்பெண்ணிடம் , கூரைப்புடவை அரக்கில் இருக்கக்கூடாது . மஞ்சளோ, வேறே மங்கலகரமான கலரோ வாங்கிக்கோ . இங்கே நடந்ததை யெல்லாம் கடைக்காரனிடம் சொல்லவேண்டாம் என்று சொல்லி என்று ஆசிர்வதித்தார் தான்மறுக்கும் பட்டுத்துணி தேளின் விஷத்திற்கு சமமானவை என்று அனைவருக்கும் புரியும்படியும், தேவையற்ற ஆடம்பரத்தை விருப்புவதில்லை என்றும் அனைவருக்கும் புரியும்படி செய்தார் பெரியவா
The post தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்த்து எளிமையை கடை பிடித்த மஹா பெரியவா appeared first on SWASTHIKTV.COM.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ளது திருமங்கலக்குடி. இங்கு சிவபெருமான் பிராணநாதர் என்ற பெயருடனும், அம்பாள் மங்களநாயகி என்ற திருநாமத்துடனும் எழுந்தருளியிருக்கிறார்கள். இத்தல இறைவனும், இறைவியும் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தையும் போக்கி அருள்பாலிக்கிறார்கள். திருமணத்தடை, கல்விக் குறைபாடு, வேலை வாய்ப்பின்மை, குழந்தை பேறு இல்லாமை, கணவன்– மனைவி ஒற்றுமையின்மை, தொழிலில் சரிவு போன்ற கிரகங்களின் சஞ்சாரத்தில் ஏற்படும் துன்பங்கள் அனைத்தையும் களைந்து புதிய வாழ்க்கை அளிப் பதில் இத்தல இறைவன் தன்னிகரற்று விளங்குகிறார்.
The post கிரக சஞ்சாரத்தில் ஏற்படும் துன்பங்களை நீக்கும் பிராணநாதர் appeared first on SWASTHIKTV.COM.
சென்னை அடுத்துள்ள திருவெற்றியூரில் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இங்கு வடிவுடையாம்பிகை உடன் படம் பாக்கநாதர், ஆதிபுரீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார். இங்கு சுவாமிக்கும் மூன்று அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து பவுர்ணமியில் வணங்கினால். சகலபிரச்சனைகளும் தீரும். மேலும் திருமணம், புத்திர பாக்கிய தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
எல்லாமே இரண்டு:
இங்கு சுயம்பு மூர்த்தியாக சிவன் அருள்பாலிக்கிறார். எல்லாம் இரண்டு திருவெற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரிஸ்வரர், ஒற்றிஸ்வரர், என இரண்டு, வடிவுடையாம்பிகை, வட்டபாறையம்மன் என இரண்டு அத்தி மகிழும் என இரண்டு தலவிருட்சம் பிரம்ம தீர்த்தம், அத்திதீர்த்தம் என இரண்டு, காரணம் காமீகம் என இரண்டு ஆகம பூஜைகள் என இரண்டுகள் இத்தலத்தில் இரண்டு என்று எண்ணிக்கை பிரதானம் பெற்றிஇருக்கிறது. இங்கு சிவன் பாணலிங்க வடிவில் உயரமாக காட்சி தருகிறார். அம்மனின் 51-சக்தி பீடங்களில் இது இஷீ சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவார பாடல் பெற்ற 274 சிவலாயங்களில் இது 253-வது மாணிக்க தியாகர் சப்தவிடங்கத்தலங்களில் இத்தலம் ஒன்றாகும் தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால் இவரது பெயரிலே இத்தலம் அழைக்கப்படுகிறது.
உயிரை விடதுணிந்த சிற்பி:
பிரளயகாலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிதாக உலகம் தோன்றும். அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளயகாலம் வந்தபோது, உலகம் அழிவதை பிரம்மா விரும்பவில்லை. எனவே, உலகம் அழியாமல் காக்கும்படி சிவனை வேண்டி யாகம் நடத்தினார். யாகத்தின் மத்தியில் அக்னி வடிவில் தோன்றிய சிவன், அவரது வேண்டுதலை ஏற்றார். பின், பிரம்மாவின் வேண்டுதலுக்காக லிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோயிலாக உருவானது. பிரளயம் நீங்கி, உலகம் மீண்டும் துவங்கிய வேளையில் இங்கு எழுந்தருளியதால் இத்தலத்து சிவன், ‘ஆதிபுரீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். பிரளய வெள்ளத்தை ஒற்றச் செய்து (விலகச்செய்தல்) அருளியதால் தலம் ‘திருவொற்றியூர்’ என்று பெயர் பெற்றது.
பலன் தரும்அம்பாள்:
சென்னை சுற்றுவட்டாரத்தில் மூன்று அம்பிகையர் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக இருந்து அருளுகின்றனர். பல்லாண்டுகளுக்கு முன்பு மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக சிற்பி ஒருவர், பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அந்த பாறை வெடித்து மூன்று பாகங்களாகச் சிதறியது. கலங்கிய சிற்பி, தன் உயிரை விடத்துணிந்தார். அப்போது அம்பிகை அவருக்கு காட்சி தந்து, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினாள். அதன்படி சிற்பி மூன்று சிலைகள் வடித்து இக்கோயில்களில் பிரதிஷ்டை செய்தார். இதில் இத்தலம் ஞானசக்திக்குரியதாகும்.இக்கோயிலில் மேலூரில் திருவுடைநாயகி இச்சா சக்தியாகவும், திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் தலத்தில் கொடியிடைநாயகி கிரியா சக்தியாகவும் அருளுகின்றனர். இந்த மூன்று அம்பிகையரையும் பவுர்ணமியன்று காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளில் வழிபடுவது விசேஷ பலன்களைத் தரும். அன்று இந்த மூன்று கோயில்களும் நாள் முழுதும் திறந்திருக்கும். இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அம்பாள் வடிவுடைநாயகி, வட்டப்பாறையம்மன் இருவரும் தனித்தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதிகளில் காட்சி தருகின்றார் தியாகராஜர்.
The post மூன்று திருத்தலங்களை கேட்டு அடம் பிடித்த அம்பாள் appeared first on SWASTHIKTV.COM.