ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்
9324087044 , 9769347044
The post ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் வழங்குபவர் ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர் appeared first on SWASTHIKTV.COM.
ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்
9324087044 , 9769347044
The post ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் வழங்குபவர் ஜோதிட பிதாமஹர் ஸ்ரீ சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர் appeared first on SWASTHIKTV.COM.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அடுத்துள்ள கொள்ளேகாலில் 300 அடி உயரம் கொண்ட மலை மீது மாதேஸ்வரன் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார் இவரை வணங்கினால் விஷக்கடி, குடும்ப பிரச்சனைகள் தீரும், தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை இந்த அழகிய மலைச்சாரலில் ‘மாதேஸ்வரன்’ என்ற பரமேஸ்வரன் குடி கொண்டிருக்கும் மலை ‘மாதேஸ்வரன் மலை’ என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள 14ம் நூற்றாண்டுகாலகல்வெட்டுகள் மாதேஸ்வரன் என்ற ஒரு சிறுவன், பரமேஸ்வரனின் அருளால் அந்த ஈஸ்வரனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு வானத்திலிருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.
வானத்திலிருந்து தோன்றிய சிறுவன்:
சித்தநஞ்ச தேசிகர் என்ற ஒரு சித்புருஷர் தனது ‘சுத்தூர்’மாட சிம்மாசமான மடத்தில் பணியாற்ற தனது சீடனாக ஏற்றுக் கொண்டார். அந்த சீடனுக்கு சிவசக்தியின்’ அருட்கடாட்சத்தைப் பலவகையிலும் கற்றுக் கொடுத்து, அந்த ஈசனின் அருளால் அவனுக்கு வாரி வழங்கி அந்த சிறுவனை ஒரு சிவபக்தனாக வளர்த்தார். அந்தச் சிறுவனிடம் அவ்வப்போது அதிசயத்தக்க சில மாற்றங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. அவன் சில அற்புதங்களை அவ்வப்போது அந்த மடத்திலே ஈசனின் அருளால் நிகழ்த்திக் காட்டினான். ஒரு சமயம் பரமேஸ்வரனுக்குப் பூஜை செய்ய மலர்களைப் பறித்துவர அந்தச் சிறுவனையும், அவனுடன் மற்ற சீடர்களையும் அந்த வனப்பகுதிக்குள் அனுப்பினார், சித்தநந்ததேசிகர். குருவின் கட்டளைப்படி இதர சீடர்கள் பூப்பறித்து வந்து நின்றனர். ஆனால், அந்த சிறுவனைக் காணவில்லை. அவன் எங்கே என்று மற்ற சீடர்களைக் கேட்டார், குரு.
சிறுவன் காட்டுப்புலி ஒன்றின்மீது அமர்ந்து கொண்டு:
அவன் தங்களை விட்டுப் பிரிந்து தனியாக சென்று விட்டான் என்று பதில் வந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்தச் சிறுவன் காட்டுப்புலி ஒன்றின்மீது அமர்ந்து கொண்டு, பூக்களுக்குப் பதில் தேள், பூரான், பாம்பு, அரணை போன்ற விஷப் பூச்சிகளைப் பூக்கூடையில் நிரப்பிக் கொண்டு வந்தான். புலிமீது அமர்ந்திருக்கும் அவனைக் கண்டு குரு பயந்து போய் செய்வதறியாது திகைத்து நின்றார். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவன் புலியின் மீதிருந்து இறங்கி, புலியின் தாடையைத் தடவினான். அடுத்த நொடி புலி மாயமாய் மறைந்து விட்டது. பூக்கூடையில் இருந்த விஷப் பூச்சிகளை குருவிடம் காட்டி விட்டு அருகிலிருந்த குளத்து நீரில் போட்டு எடுத்தான். அவையெல்லாம் மணமிக்க மலர்களாக மாறின. அந்த மலர்களைக் கொண்டு வந்து குருவின் முன் கொட்டினான். இந்த செயல்களைக் கண்ட குரு மிகுந்த ஆச்சரியப்பட்டு போனார். இது இந்த சிறுவனின் செயல் அல்ல. சிவபெருமானின் அருட்கடாட்சத்தால்தான் இவனுக்கு இந்த யோக சக்தி ஏற்பட்டுள்ளது.
மாதேஸ்வரன்:
எனவே, இவன் சிவபெருமானின் அவதாரமாகத்தான் இருக்க வேண்டுமென்று கருதி அவனை உயர்ந்த இடத்தில் வைக்க விரும்பினார். அந்த மலைப்பகுதியில் தங்களுடைய ஆண் பிள்ளைகளுக்கு அந்த கிராம மக்கள் பெரும்பாலும் மாதன்என்ற பெயரைத்தான் வைப்பார்கள். ஆகவே அந்த குரு இந்த சிறுவனுக்கு மாதன் என்ற பெயரோடு ஈஸ்வரன் என்ற திருப்பெயரையும் சேர்த்து மாதேஸ்வரன் என அழைத்தார். பிறகு அவனை குடகு மலையிலுள்ள பிரபுலிங்க மலை என்ற இடத்திலிருக்கும் திரு ஆதி கணேஸ்வரர் என்ற தனது குருவிடம், மேலும் நல்ல கல்வி கற்று மேம்பட, அனுப்பி வைத்தார். அப்படியே சென்ற மாதேஸ்வரன், அந்த குருவிடமிருந்து வேதம், யாகம், யோகம், தவம் ஆகியவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றான். கூடவே தன் சித்துவேலைகளையும் செய்து காட்டினான். விஷப்பூச்சிகளை வைத்து சில அதிசயத்தக்க லீலைகளை செய்து காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவான்.
நோய் தீர்க்கும் விபூதி:
பல்லியைப் பாம்பாக்குவான், பாம்பைப் பூரானாக்குவான், ஓடிக் கொண்டிருக்கும் தேள் சட்டென்று அரணையாகி விடும். அதேபோல அரணை பல்லியாகி விடும்! இப்படியெல்லாம் சித்து வேலைகள் செய்து அந்த கிராம மக்களை அசத்துவான். மக்கள் சிலசமயம் இவனிடம் வந்து அருள்வாக்குக் கேட்பார்கள். மாதேஸ்வரன் சொன்னதெல்லாம் அப்படியே நடக்கும். ஒருவர் ஒரு பசுமாட்டைக் கொண்டு வந்து மாதேஸ்வரன் முன்பு காட்டி ‘‘இது மலட்டுப் பசுவாக அமைந்து விட்டது பாலே சுரப்பதில்லை’என்று குறைபட்டுக் கொண்டார். அவன் அந்தப் பசுவைத் தொட்டான். அப்போதே அந்தப் பசு பால் சொரிய ஆரம்பித்து விட்டது. வியந்து நின்றான் பசுவின் சொந்தக்காரன். ஒரு சமயம் ஒருவர் தீராத நோயொன்று தன்னைப் பாடாய்ப்படுத்துகிறது என்றார். வெறுங்கையில் விபூதியை வரவழைத்த மாதேஸ்வரன் அந்த விபூதியை அந்த நோயாளி உடல் முழுவதும் பூசினான். அவன் நோய் தீர்ந்து குணமடைந்தான்.
லிங்க வடிவமாகவே உருமாறி விட்டான்:
குளுமையான அந்தப் பச்சைப்புல் தரையில் அப்படியே அமர்ந்து ஈஸ்வர தியானத்தில் ஆழ்ந்தான் மாதேஸ்வரன். இப்படி தினமும் ஆழ்நிலை தியானத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தன. ஒருகட்டத்தில் அவன் அப்படியே ஒரு கல் லிங்க வடிவமாகவே உருமாறி விட்டான். மாதேஸ்வரன் மறைந்துபோய் மாதேஸ்வர லிங்கமானான் அவன்! மனிதனே இறைவனாகும் பேரற்புதம் அங்கே நிகழ்ந்தது.
குலதெய்வம்:
அணுமலை, கனுமலை, ஜெனுமலை, பச்சைமலை, பவளமலை, லிங்கமலை, பொன்னாச்சி மலை ஆகிய ஏழு மலைகள் இணைந்ததே மாதேஸ்வரன் மலை. இங்கு வாழும் சோளிகர், ஜேனுகுருபர், காடுகுருபர், குருபகவுடர் இனத்தவர்களுக்கு ஸ்ரீமாதேஸ்வரனே குலதெய்வம். இவர்களில் தம்மடிகள் என்பவர்கள் லிங்கத்தைக் கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டிருப்பார்கள். கண்ணப்ப நாயனாரின் வாரிசுகள் இந்தக் கோயிலில் அர்ச்சகர்கள். இவர்கள் எல்லாம் இக்கோயிலைச் சுற்றிய கிராமங்களிலேயே வசிக்கிறார்கள். சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜை நடைபெறும். குடும்பப் பிரச்னைகள் நீங்கவும், தீராத நோய்களிலிருந்து விடுபடவும், குறிப்பாக விஷப்பூச்சிக் கடியிலிருந்து நிவாரணம் பெறவும், பசுமாடு முதலான கால்நடைகள் பிணி தீரவும், அவை நிறைய பால் வழங்கவும், இந்த மாதேஸ்வரனை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். இங்கேயுள்ள அந்தர கங்கை குளத்தில் நீராடினால் காசி, கேதார்நாத், ராமேஸ்வரம் போன்ற தலங்களில் நீராடிய பலன் கிடைக்கும். குடும்பக் குறைகள் தீர, ரிஷபம் அல்லது புலி வாகனத்தில் மாதேஸ்வரனை அமர்த்தி கோயிலை வலம் வந்து வேண்டுதல் செய்கிறார்கள்.
The post நோய் தீர்க்கும் கொள்ளேகால் ஸ்ரீ மாதேஸ்வரன் appeared first on SWASTHIKTV.COM.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 04/08/2016 appeared first on SWASTHIKTV.COM.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சுருட்டபள்ளியில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது இங்கு பார்வதி தேவிவுடன் சிவ பெருமான் சயனகோனத்தின் பள்ளி கொண்ட ஈஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார்.இவரை வணங்கினால் மாங்கள்ய பாக்கியம் நிலைக்கும் என்பது பெண்களின் தீராத நம்பிக்கை
சிவனை நின்ற நிலையிலோ அல்லது லிங்க வடிவிலோ தான் பார்த்திருப்போம். பெருமாளை மட்டும்தான் சயனக்கோலத்தில் பார்க்கமுடியும். ஆனால் பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை இங்கு தரிசிக்கலாம். இவரை பள்ளிகொண்டீஸ்வரர் என அழைக்கிறார்கள். சிவன் ஒரு முறை கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடியபோது அதன் உக்கிரம் தாங்காமல் அனைத்து உலங்கங்களும் நடுங்கத் தொடங்கின. பார்வதிதேவி தேவர்கள் யோகிகள் ஞானிகள் என்று யார் வேண்டியும் சிவன் கேட்பதாக இல்லை. சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு வேண்டினார். அவரிடம் சிவன் “ நான் எங்கே போய் ஆடுவது?” என்று கேட்க “ என் தலையில் ஏறி ஆடுங்கள் நான் தாங்கிக் கொள்கிறேன் “ என்று நந்தி பதிலளித்தார்.
சிவனும் நந்தியின் இரு கொம்புக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடி கோபம் தணிந்தார். பிரமாண்ட வடிவம் கொண்டு பார்வதியின் மடியில் ஆனந்த புன்னகையுடன் சிவன் சயனத்தில் உள்ளார். கர்ப்பக்கிரக சுவரில் தேவர்கள் ரிஷிகள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். ‘ சர்வமங்களா ‘ என்ற பெயருடன் அம்பாள் பார்வதி விளங்குகிறாள். அம்பாளை வணங்கும் பெண்களுக்கு சர்வ மங்களமும் குறிப்பாக மாங்கல்ய பாக்கியம் அமையும். சிவன் பள்ளி கொண்ட நிலையில் அருள் புரியும் தலம் என்பதால் பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் என்றும் சுருட்டப்பள்ளி கிராமத்தில் இருப்பதால் சுருட்டப்பள்ளி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஆந்திராவில் கோயில் பல இருந்தாலும் அர்ச்சகர்கள் தமிழில் பூஜை செய்வது இங்குதான் சிவனுக்கு எதிரிலுள்ள சின்ன நந்திக்கு பிரதோஷ பூஜையும் சிவராத்திரியன்று உற்சவருக்கு நான்கு கால அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பாக நடக்கும். இதைத் தவிர தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தி இங்கு காட்சி தருகிறார்.
The post சுருட்டப்பள்ளியில் பள்ளி கொண்ட சிவன் appeared first on SWASTHIKTV.COM.
வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி நாளை காலை ஆடி மாதம் 3 வது வெள்ளிக்கிழமை 11ஆம் ஆண்டு ‘கூழ் வார்க்கும் திருவிழா நண்பகல் 12.00 மணியளவில், நவகன்னிமார்களுக்கும் முனீஸ்வரனுக்கும் பொங்கல் வைத்து படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர். அதிமதுரம்,சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்-இவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிடவேண்டும். அதன்பிறகே ஆடிக் கஞ்சியைப் பரிமாற உள்ளோம்.
பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள மகிசாசுரமர்த்தினி அம்மனின் அருளை பெற்று நவகன்னியரின் அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுக்காள்கிறோம். மேலும் திருவாடிப்பூரத்தை முன்னிட்டு ஆரோக்ய லட்சுமி தாயார் மரகதாம்பிகை அன்னபூரணி தேவி,குபேர லட்சுமி மற்றும் இதர தெய்வங்களை தரிசித்து மாங்கல்ய தோஷங்கள் நீங்கி வீடு மனை மக்களுடன் வாழ அழைக்கின்றோம் இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
The post ஆடிவெள்ளியை முன்னிட்டு தன்வந்த்ரி பீடத்தில் நவகன்னி பூஜையுடன் கூழ்வார்த்தல் திருவிழா appeared first on SWASTHIKTV.COM.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 05/08/2016 appeared first on SWASTHIKTV.COM.
கைலாயத்தில் சிவனும் பார்வதியும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது அதை கைலைநாதனான சிவனிடம் கேட்க ஆரம்பித்தார். அதாவது, மக்கள் கங்கையில் நீராடினால் தங்களது பாவம் போய்விடும் என்று நீராடுகிறார்களே, அவர்களில் எல்லொரது பாவமும் போய்விடுமா? ….. என்பதுதான் அந்த கேள்வி.
அதற்க சிவபெருமானோ அதற்கான பதிலை ஒரு சிறு நாடகமாக நடத்தி காட்ட எண்ணி பார்வதி என்ன செய்யவேண்டும் என்று கூறினார். அதன்படி சிவன் வயதான ரிஷி போலவும், பார்வதி ரிஷி பத்தினியாகவும் மாறினார்கள். கங்கையில் தீர்த்தமாடி வரும் வழியில் சிறு பள்ளம் தோன்றச் செய்து சிவன் அதில் விழ்ந்து தத்தளித்தபடியும், பார்வதிதேவி பள்ளத்தின் அருகே நின்று தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்று கூக்குரலிட்டு கத்தியபடி இருந்தார்.
கங்கையில் குளித்துவிட்டு வந்த பலர் பள்ளத்தில் கிடந்த சிவனை வெளியே தூக்க வந்தபோது பார்வதிதேவி தனது கணவர் ஒரு உத்தமமான ரிஷி என்றும் அவரை பாவம் செய்தவர் தொட்டால் மறுகணமே சாம்பலாகி விடுவார்கள் என்று கூறி எச்சரிக்கை செய்தார். இதனால் உதவ வந்த அனைவரும் பயந்து அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தனர். அப்பொழுது ஒருவன் துணிந்து வந்து பள்ளத்தில் இருந்தவரை தூக்க முனைந்தான். பார்வதி தேவியார் அவனையும் எச்சரிக்கை செய்தார். ஆனால் அவன் தான் இப்பொழுதுதான் கங்கையில் நீராடி வருவதாகவும் தன்னுடைய பாவமெல்லாம் கங்கையில் கரைந்து விட்டது என்று உரைத்து அவரைத் தூக்க பள்ளத்தில் இறங்கினான். அவனது பதிலைக் கேட்டு சிவனும், சக்தியும் மகிழ்ந்து அவனுக்கு சுய உருவில் காட்சி தந்து ஆசி கூறி மறைந்தனர்.
இதிலிருந்து நம்பிக்கையோடு கங்கையில் நீராடுபவர்களுக்குத்தான் அவர்களது பாவம் போகும் என்ற உண்மையை பார்வதி தேவியார் உணர்ந்து கொண்டார். கங்கையில் நீராடுவது மட்டுமல்ல, எந்த ஒரு செயலின் பலனும் அதைச் செய்வர் கொண்டிருக்கும் நம்பிக்கையை பொறுத்தே கிடைக்கும்.
The post பாவம் போக்கும் கங்கை பற்றி பார்வதியிடம் கூறிய சிவன் appeared first on SWASTHIKTV.COM.
ஆடிப்பூர தினத்தில் ஆண்டாள் பிறந்ததாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் இடம் பெயர்ந்த போது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி, பூர நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. வடமாநிலங்களில் ‘கோதாதேவி’ என்று அழைப்பர்.
ஆண்டாள் அவதரித்த திருத்தலமான திருவில்லிபுத்தூரை, ‘கோதாதேவி அவதார ஸ்தலம்’ என்றும் அழைப்பதுண்டு. இதனால் ஆடிப்பூரத்தன்று திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவ கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். வைணவ கோயில்களிலும் திருவாடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் தேரோட்டமும் நடைபெறும். மங்கலமான இந்நாளில் திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் அம்மன் ஆலயங்களுக்கு சென்று மனதார வணங்கினால், மனம் போல் மாங்கல்யம், புத்திர பாக்கியம் கிடைக்கும். புனிதமான இந்த தினத்தில் அம்பிகை பூப்பெய்தினாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அம்பிகைக்கு, தங்கள் வீட்டு பெண் போல் வளைகாப்பு வைபவமும், பூப்பெய்தல் சடங்கும் நடத்தி பக்தர்கள் வழிபடுவார்கள். மேலும், சித்தர்கள், யோகிகள் இந்நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஆடி மாதத்தில் ‘பூரம்’ நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் தினமே ஆடிப்பூரம். இது அனைத்து அம்மனுக்கும் உரிய திருநாளாக போற்றப்படுகிறது. மனிதர்களை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு, உலகத்தை காக்கும் அன்னை தோன்றிய நாளே ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுவதாக ஆன்மிக பெரியோர்கள் கூறுவதுண்டு. எனவே, இந்நாளில் அன்னை உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவார் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமையன்று ஆடிப்பூரம் வருவது கூடுதல் சிறப்பு.
ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.
தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர். இந்த நாளில் இக்கோயிலுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம்.
The post ஆண்டாளின் அவதார திருநாள் ஆடிப்பூரம் appeared first on SWASTHIKTV.COM.
Article Written By : Sudha Ambikadas
Bhrighati means large, expanded form, Sahasra means a thousand.
Devoting the prayers to Lord Maha Vishnu, in whose heart lies Sri Maha Lakshmi (Srinivasa), who is the savior. When we offer our prayers through learned pandits, called Vaadyaar’s who belong to Brahmin community, we are honoring Maa Saraswati also.
The Pooja is elaborated with 1000 archanai daily on 100 kalashashombus.
The Homam is done again to protect the intention and intensity of the poojai. The homam is a Maha Sudarshanam.
The 1000 namaskarams to be completed in sets, this is an exercise done on our behalf by two or more appointed BrahmanaVaadyaars, who understand the importance and can coordinate with the archanai, timing themselves, and do not shirk from the task and participation is whole hearted. Try doing it, it is not an easy one.
A Brahmin is one whose life purpose is to guide others on the path of righteousness through surrender and devotion to the Divine.
He is one who does not spend time on his own self, is always either trying to root out a problem faced by one who approaches him, reading scriptures, trying to understand better use of the same or else at the feet of the divine. He is supposed to be well versed with the planetary positions and astrology as well. He teaches the client to mark the efficiency of time. Timely acts – timely rituals – timed havans and poojas have a greater impact than those where time is not a consideration.
The right havans/rituals/poojas done at the right timing take you beyond the boundaries of time and space. Obstacles are released. Abundance in prevalent.
In the yesteryears, the Brahmin would perform a pavmaanampaarayanam for a specified number of days after performance of a ritual at a persons place, but since that does not seem possible in todays electronic world, the knowledgable Brahmin performs the required number of recitions alongside the Havan he conducts.
And giving in daanam, ie, humbly donating to the Brahmins with due respect, gives benefits great.
Here in the process of the Bhragati Sahasra, we shall donate a count of 11 kalashams to the Brahmins. 7 will be donated towards the positive enhancement of the KalatraSthanam, that is improving relationships with the spouse., and 4 for the activation for the sukhasthaanam, the fourth house in one’s horoscope, increased abundance and luxuries.
Stringing gold, silver, pearl and coral, and donating the same to 7 brahmins, gives ones IndraBalam – means the power of Lord Indra.Lord Indira – the Kong of heavens – ruler responsible for rain & thunder, was the one who never faced struggle and live life of comfort and ease, and had a harem of apsaras besides his beloved wives.Indra is known as Sakra in Buddhism and he rules the 33 gods. Whatever be his vices, Lord Indra always had the support of the Medicine Devas – The AshwininKumars, and Goddess Saraswati, always getting antidotes from the demons to restore the god to his senses after over intoxication. So this IndraBalam also in turn makes you physically strong with the right help always available.
15 kg Nallayennai
15 kg Rice
15 kg Jaggery
All above three for daanam at Shivalayams after performace of the poojai
DashaDaanangal
The Brighati Sahasra requires the following materials which is procured by our team itself.
Gangajalam from Haridwar – Rishikesh or TriveniSangam
Gupta Gangai from Vanchiyam on the interiors of kumbakonnam, which is a combination of 999 teerthams
Koditeerthamie the 23 teerthams from Rameshwaram
Sowparnika waters from Mookambikai
The waters are for transmutation of the Icha Shakti, Kriya Shakti &Gyana Shakti
100 Kalashashombus
100 coconuts to place on the kalashashombu’s
100 sets of vettalaipaaku daily, for each of the kalashashombus
Vastrams for the KalashaShombu’s 100 numbers daily
100 sets of bananas daily for the KalashaShombus
15 sets of coconuts daily for breaking daily – 45 nos
15 sets of vetallaipaaku daily for the coconuts
15 sets of bananas for the coconuts
150 muzhushengal or whole bricks to create the garudan
Kolammaavu, and the vaadyar to draw the respective kolams/sacred geometry for required results.
387 to 501 coins
The Brighati Sahasra pooja will consist of the following where in we shall be combining a few mantras to cover all kinds of doshas and release any obstacle that may ever be thought and unthought of.
Family Abhishekam
KalashaArchanai
Garuda Sevai
1000 sahasranamaparayanam
1000 sahasranamanamaskaram
1000 sahasranamaarchanai
Sarpa Bali Kolam
PaumaanaParayanam
Sri Brahmanaspati chant of 108 times
Sri SaligramaPooja
Sri Rudram&ChamakamParayanam
HariVayuStutipuracharanam – Hanuman – 32 mantras – kalvi, parent, childs, husband, staff, servant, friends, partners associates, known and unknown good bad…
The pooja is a rare one to perform and can be counted to a limited few to have got it performed. It has to be done in utmost secrecy, place chosen with care, no internal or external disturbances are entertained so the successful completion can yield good results.
Only the karta is allowed with his family. ShagunShastra is checked for each new round of avartis that begins.
Great care is taken to feed the Vaadyaars the right energetic food that is nutritious – blends with the shashtras and does not make them lethargic.
Each time a Vaadyaar uses the loo, he needs to bathe and change the set of clothing.
Vastra supply is done in ample, the comfort zone of the Vaadyaars is priority here.
The poojas and homams organized by us are planned in such a way (care to make the person favourable to the clients star – who is at the same time well read – to sit for the pooja so as to bring favourable results) that the client is able to see subtle changes which are progressive in a sublte manner. Subtle changes are so welcome since they are so delicate and precise. There is an art of evaluation the cost of the pooja which will vary from person to person, and yes Time is the Game factor.
II LokaSamasthaSukhinoBhavatu II
For more details, you may get in touch with www.swasthitv.com
Write Your Feedback at : editor@swasthiktv.com.
Write To Sudha Ambikadas : sudhaambikadas@gmail.com
No portion of this content can be copied or shared on any other platform without permission. If anyone found to do so, will be liable to prosecution and penalties as per the law. Sudha Ambikadas.
The post “Sankalpam-Siddh” The Bhrighati Sahasra appeared first on SWASTHIKTV.COM.
1.ஓம் ஸ்ரீ சாயி நாதாய நம:
2.ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நம:
3.ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
4.ஓம் சேஷ சாயினே நம:
5.ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
6.ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
7.ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
8.ஓம் பூதாவாஸாய நம:
9.ஓம் பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
10.ஓம் காலாதீதாய நம:
11.ஓம் காலாய நம:
12.ஓம் காலகாலாய நம:
13.ஓம் காலதர்பதமனாய நம:
14.ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
15.ஓம் அமர்த்யாய நம:
16.ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
17.ஓம் ஜீவாதாராய நம:
18.ஓம் ஸர்வாதாராய நம:
19.ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
20.ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:
21.ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
22.ஓம் ஆரோக்யஷேமதாய நம:
23.ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
24.ஓம் ருத்திஸித்திதாய நம:
25.ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
26.ஓம் யோகஷேமவஹாய நம:
27.ஓம் ஆபத்பாந்தவாய நம:
28.ஓம் மார்க்கபந்தவே நம:
29.ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம
30.ஓம் ப்ரியாய நம:
31.ஓம் ப்ரீதிவர்தனாய நம:
32.ஓம் அந்தர்யாமினே நம:
33.ஓம் ஸச்சிதாத்மனே நம:
34.ஓம் ஆனந்தாய நம:
35.ஓம் ஆனந்ததாய நம:
36.ஓம் பரமேச்வராய நம:
37.ஓம் பரப்ரம்ஹணே நம:
38.ஓம் பரமாத்மனே நம:
39.ஓம் ஞானஸ்வரூபிணே நம:
40.ஓம் ஜகத பித்ரே நம:
41.ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
42.ஓம் பக்தாபயப்ரதாய நம:
43.ஓம் பக்த பாராதீனாய நம:
44.ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
45.ஓம் சரணாகதவத்ஸலாய நம:
46.ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
47.ஓம் ஞான வைராக்யதாய நம:
48.ஓம் ப்ரேமப்ரதாய நம:
49.ஓம் ஸம்சய ஹ்ருதய தெளர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:
50.ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:
51.ஓம் கர்மத்வம்சினே நம:
52.ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
53.ஓம் குணாதீத குணாத்மனே நம:
54.ஓம் அனந்த கல்யாண குணாய நம:
55.ஓம் அமித பராக்ரமாய நம:
56.ஓம் ஜயினே நம:
57.ஓம் துர்தர்ஷாஷோப்யாய நம:
58.ஓம் அபராஜிதாய நம:
59.ஓம் த்ருலோகேக்ஷு அஸ்கந்திதகதயே நம:
60.ஓம் அசக்யராஹிதாய நம:
61.ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
62.ஓம் ஸுரூபஸுந்தராய நம:
63.ஓம் ஸுலோசனாய நம:
64.ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
65.ஓம் அரூபாவ்யக்தாய நம:
66.ஓம் அசிந்த்யாய நம:
67.ஓம் ஸுக்ஷ்மாய நம:
68.ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
69.ஓம் மனோவாக தீதாய நம:
70.ஓம் ப்ரேமமூர்த்தயே நம:
71.ஓம் ஸுலபதுர்லபாய நம:
72.ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
73.ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
74.ஓம் ஸர்வபாரப்ருதே நம:
75.ஓம் அகர்மானேக கர்மஸுகர்மினே நம:
76.ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
77.ஓம் தீர்த்தாய நம:
78.ஓம் வாஸுதேவாய நம:
79.ஓம் ஸதாம் கதயே நம:
80.ஓம் ஸத்பராயணாய நம:
81.ஓம் லோகநாதாய நம:
82.ஓம் பாவனானகாய நம:
83.ஓம் அம்ருதாம்சவே நம:
84.ஓம் பாஸ்கரப்ரபாய நம:
85.ஓம் ப்ரஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
86.ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
87.ஓம் ஸித்தேச்வராய நம:
88.ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
89.ஓம் யோகேச்வராய நம:
90.ஓம் பகவதே நம:
91.ஓம் பக்தவத்ஸலாய நம:
92.ஓம் ஸத்புருஷாய நம:
93.ஓம் புருஷோத்தமாய நம:
94.ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
95.ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:
96.ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
97.ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
98.ஓம் தஷிணாமூர்த்தயே நம:
99.ஓம் வேங்கடேசரமணாய நம:
100.ஓம் அத்புதானந்தசர்யாய நம:
101.ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
102.ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
103.ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
104.ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
105.ஓம் ஸர்வ மங்களகராய நம:
106.ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
107.ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
108.ஓம் ஸ்ரீ ஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:
The post ஸ்ரீ ஷீரடி சாயி பாபாவின் அஷ்டோத்ர சத நாமாவளி appeared first on SWASTHIKTV.COM.
1. மச்ச அவதாரம்- இலகில் தோன்றிய முதல் உயிரினம் கடலில் தோன்றிய unicellular உயிரினமாகிய கடல் உயிரினம்.
2. கூர்ம அவதாரம்- reptiles ஊர்வன, அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி..நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம்.
3. வராக அவதாரம்- mammals, பாலூட்டி உயிரினம். பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி. விலங்கு உயிரினம்.
4. நரசிம்ம அவதாரம்- பாதி மிருகம் பாதி மனிதன்..பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம்.
5. வாமண அவதாரம்- குள்ள மனிதன்…பரிணாம வளர்ச்சியின் முதல் மனிதன்…
6. பரசுராம அவதாரம்- மனிதனாக மாறிய பரிணாம வள்ர்ச்சி அவனை வேட்டையாட வேல், கத்தி செய்யும் தொழில்நுட்ப மனிதனாக மாற்றியது.
7. ராம அவதாரம்- விலங்குகளை வேட்டையாடும் மனிதனாக இருந்தவனை, தாய் தந்தை மக்கள் மனைவி சமுகம் என்ற சமுதாய மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்தான்.
8. பலராம அவதாரம்- வேட்டையாடி, ஒரு சமுகமாக வாழ ஆரம்பித்த மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சியில் நிலங்களை உழுது பயிரிடும் வளர்ச்சியை அடைந்தான்.
9. கிருஷ்ண அவதாரம்- சமுகம், விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன் தனக்கான நீதி தர்மங்களை வகுத்தான். வாழ்க்கை நெறிமுறைகள்,தர்மம்,அதர்மம் என்பதை போதிக்கும் ஆசானாக பரிணாம வளர்ச்சியை அடைந்தான்.
The post மஹாவிஷ்ணுவின் 9 அவதாரங்கள் உணர்த்தும் அறிவியல் appeared first on SWASTHIKTV.COM.
அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை படைத்தவர் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது முகங்களான கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும், ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் தரும். பக்தர்கள் வேண்டியதை வேண்டிய வாறு அருள்கிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர்.
இவரது தாடை நீண்டு இருக்கும். முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹ முகம், அனுமன் முகம், ஹயக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடி வில் ஒருங்கிணைந்து உள்ளார். கிழக்கு முகம் ஹனும னாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் “பிரதிவாதி முகஸ்நம்பி” என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும்.
தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம். மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்.
வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவ ற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும். மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.
இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல்வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும்.
The post தோஷம் நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் appeared first on SWASTHIKTV.COM.
ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாக பஞ்சமி விரதம் தொடங்குகிறது. ஒவ்வொரு மாதமும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதேபோல், சுக்ல பஞ்சமியில் கருட விரதத்தைத் தொடங்க வேண்டும். ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது. வரலட்சுமி விரதம் கொண்டாடுவதற்கு ஒரு வாரத்துக்குமுன், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த இரு பண்டிகைகளும், சகோதரர்களின் நலத்தை விரும்பி, சகோதரர்களும், சகோதரிகளும் கொண்டாடும் இரு முக்கிய பண்டிகைகளாகும்.
சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது.
பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினம்.
இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள்.
விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.
The post குடும்பத்தில் சகல சௌபாக்கியம் பெறுக நாக பஞ்சமி விரதம் appeared first on Swasthiktv-Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.
கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, சுபர்ணீ என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், சுபர்ணீ அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை, கத்ருவுக்கும், சுபர்ணீ க்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர். போட்டியின் முடிவில் சுபர்ணீ தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள்.
கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான்.
அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான்.
தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில், கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். அந்தக் கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது.
The post தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தை மீட்ட தினம் கருட பஞ்சமி appeared first on Swasthiktv-Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.
சென்னையை அடுத்த புட்லூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்.இவ்வாலயத்தில் அம்மன் புற்று உருவில் அருள் பாலிக்கிறார் .
அம்மன் உருவான கதை:
ஒரு குடியானவன் செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடனாகபெற்று அதை திருப்பமுடியாமல் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தார். அந்த இரக்கமற்ற செல்வந்தர் அதற்க்கு பதிலாக ஒரு கரடுமுரடான நிலத்தை உழுது செப்பநிடுமாறு அந்த குடியானவனை மிரட்டினார் . அவர் சொல்படி அந்த குடியானவன் நிலத்தை உழுத போது ஓரிடத்திலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. அவ்விடத்தை சுத்தம் செய்து பார்த்த போது அங்கே ஒரு கர்பிணிப்பெண் வடிவில் புற்று ரூபமாக அம்மன் கானக்கிடைக்கப்பெற்றாள். உடனே அவ்வூர்மக்கள் ஒரு கோவிலை எழுப்பி “அங்காளபரமேஸ்வரி” என்ற திருநாமத்துடன் அம்பாளை வழிபடலானார். இதனால் அவ்விடமும் புட்லூர் என்று பெயர் பெற்றது. புற்று அம்மனின் தலைக்குபின்னால் சிவன் லிங்க வடிவிலும் அம்பாள் சிலையும் விநாயகர் சிலையும் பிரதீஷ்டிக்கப்பட்டுள்ளது.
எந்த சக்தி ஸ்தலத்திலும் இல்லாத ஒரு ஆச்சர்யம் இங்கே அமைந்துள்ளது. சிவன் உள்ளே இருப்பதால் சக்தியின் சிம்ம வாகனத்திற்கு பதில் நந்தியை இங்கே காணமுடிகிறது. அம்மனுக்கு இங்கே பக்தர்கள் கொண்டு வரும் மஞ்சளும் குங்குமமும் வளையலும் சாத்தப்படுகிறது. எலுமிச்சையுடன் வேப்பிலையும் சேர்த்து கோர்க்கப்பட்ட மாலை இந்த அம்மனுக்கு மிக விசேஷமாக அணிவிக்கபடுகிறது .அம்மனின் காலடியில் வைத்த எலும்மிச்சை கனியும் வளையல்களும் பிரசாதமாக வழங்கபடுகிறது
குழந்தை பாக்கியம் பெற:
குழந்தை பேறற்ற பெண்கள் இங்கே 9 வாரங்கள் தொடர்ந்து வந்து கோவிலில் நீராடி 11 முறை வெளிப்ரகாரத்தில் அமைந்திருக்கும் புற்றுடன் கூடிய ஸ்தல விருக்க்ஷமான வேப்பமரத்தையும் சேர்த்து சுற்றி வந்து கடைசி சுற்றில் வேப்பமரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் கை மேல் பலனளிப்பாள் இந்த புட்லூரம்மன்..
The post கேட்கும் வரம் தந்து அருளும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் appeared first on Swasthiktv-Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.
சென்னை சிங்கப் பெருமான் கோவில் அடுத்துள்ள சாஸ்திரம்பாக்கத்தில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன்கோவில் உள்ளது இங்கு சிவ பெருமான் தையல்நாயகி உடன் வட வைத்தீஸ்வரன் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் தீரும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் காலப்போக்கில் சிதிலமடைந்து, மண் மூடி போய்விட்டது. முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து பாம்புகள் நடமாடும் இடமாக மாறிப்போனது. இப்போது கோவில் கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து வருகிறது.
வட வைத்தியநாதர்:
ஆலயம் கிழக்கு நோக்கியபடி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், முற்றிலும் செங்கல்லால் கட்டப்பட்ட 16 கால் மண்டபம் காணப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே கருவறையில் கிழக்கு நோக்கிய படி மூலவர் வட வைத்தீஸ்வரன் அருள்பாலித்து வருகிறார். இறைவனின் இடது பக்கத்தின் தனிச் சன்னிதியில் மாங்கல்ய பலம் தரும் அன்னையாக தையல்நாயகி அம்மன், கமல பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்பாளின் சன்னிதி அருகே, இறைவனின் சன்னிதியை நோக்கியபடி காலத்தை நிர்ணயிக்கும் கால பைரவர், நாய் வாகனத்துடன் அற்புதமாக காட்சியளிக்கிறார். மூலவருக்கு முன்பாக நந்தியம்பெருமான் வீற்றிருக்கிறார். இத்தல இறைவன் வந்த பிணி, வரும் பிணிகளை நீக்கும் சக்தி படைத்தவராக விளங்குகிறார். இதனாலேயே இவரை வட வைத்தியநாதர் என்று அழைக்கின்றனர்.
இங்குள்ள இறைவன் சன்னிதியில் துவார பாலகர்களாக விநாயகப் பெருமானும், முருகப்பெருமானும் வீற்றிருக்கின்றனர். பரிகார தெய்வங்களான தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி, லிங்கோத்பவர், பிரம்மதேவர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். கணபதிக்கு தனி சன்னிதி, வாயு மூலையில் வள்ளி- தெய்வானை சமேத சண்முகநாதர் ஆகியோருக்கு சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை. ஆலயத்தின் தல விருட்ச மாக விலா மரமும், அரச மரமும் உள்ளன.
விஸ்வாமித்திர முனிவரின் கண் நோயைத் தீர்த்தவர்:
இங்குள்ள கல்வெட்டில் சிதிலமடைந்து விட்ட காரணத்தால், இறைவனின் பெயர் ‘மிருத்யூஞ்ஜிஸ்வரர்’ என்றும், இறைவியின் திருநாமம் பாலாம்பிகா என்ற பவரோக விநாசினி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் மனக் கஷ்டத்தையும், பணக் கஷ்டத்தையும் போக்கும் தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. இத்தல இறைவன் விஸ்வாமித்திர முனிவரின் கண் நோயைத் தீர்த்தவர் என்று கூறப்படுகிறது. ஒரு முறை விஸ்வாமித்திர முனிவர், சாஸ்திரப்பாக்கத்தின் அருகே உள்ள திருக்கச்சூர் சிவபெருமான் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
அப்போது ‘ராவணனை அழிப்பதற்காக, ராமபிரான் மனிதனாக அவதரித்துள்ளார். உலக மக்களைக் காக்கும் பொருட்டு, மகாவிஷ்ணு எடுத்துள்ள இந்த அவதாரத்தில், ராவணனை எதிர்த்து ஜெயிக்கும் வரை ராமனுக்கு நோய்கள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளும்படி, திருக்கச்சூர் தலத்தில் உள்ள இருள்நீக்கி அம்மனிடம் விஸ்வாமித்திரர் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு இருள்நீக்கி அம்பாள், ‘நோயைத் தடுக்கும் பலை, அதிபலை என்ற மூலிகையின் பெயரைச் சொன்னாலே ராமன் உள்பட பூலோகத்தார் அனைவரும் நோயில் இருந்து தப்பி பயன்பெறுவார்கள்’ என்று அருளினார். அந்த தலத்தில் வழிபட்டு திரும்பும் வேளையில்தான் விஸ்வாமித்திரர் கண் நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அருகில் உள்ள சாஸ்திரப்பாக்கம் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வடவைத்தியநாதர் பெருமாளை வழிபட்டு தன்னுடைய கண் நோய் நீங்கும் அற்புதத்தைப் பெற்றார்
The post பணக்கஷ்டம்,மனக்கஷ்டம் தீர்க்கும் சாஸ்திரம்பாக்கம் வட வைத்தீஸ்வரன் appeared first on Swasthiktv-Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், கோழிக்குத்தி அமைந்துள்ளது. இங்கு பெருமாள் அத்திமரத்தில் தோன்றி அருளாசி வழங்கினார். குடகுமலைப் பகுதியை, நிர்மலன் என்ற மன்னன் அரசாட்சி செய்து வந்தான். அவன் தொழு நோயால் பாதிக்கப்பட்டான். இதற்குப் பல்வேறு நாட்டின் மருத்துவர்களும் முயற்சி செய்தும் பலன் ஏற்படவில்லை. இதனால் மிகவும் மனம் வருந்திய மன்னன், மனம் போன போக்கில் பயணமானான். அப்போது வழியில் முனிவர் ஒருவர், வீணையை இசைத்து பாடிக் கொண்டு இருந்தார். அவரைக் கண்டு வணங்கிய நிர்மலன் தன் நிலையை எடுத்துக் கூறித் தனக்கு வழிகாட்டுமாறு வேண்டி நின்றான். முனிவரும் அதற்கு மனமிரங்கி ஒரு மந்திரத்தை உபதேசம் செய்தார். ‘இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தால் வழி கிடைக்கும்’ என்று கூறினார்.
திருக்குளங்களில் நீராடினான் மன்னன்:
அதன்படி மன்னன் அதை நாள்தோறும் ஜெபித்தபோது, அங்கே ஒரு அசரீரி ஒலித்தது. ‘உனக்கு கடுமையான தோஷம் ஏற்பட்டுள்ளதால், இந்த நோய் உன்னைப் பற்றியுள்ளது. காவிரிக்கரை வழியே பயணம் செய்து, வழியில் தென்படும் ஆலயத் திருக்குளங்களில் எல்லாம் நீராடி வா. எந்தத் தீர்த்தத்தில் உனக்கு நோய் தீர்ந்து சரியாகிறதோ, அங்கேயே தங்கியிருந்து இறைவனை வழிபடு’ என்றது. இதனால் மனம் மகிழ்ந்த நிர்மலன், அசரீரி கூறியது போலவே, காவிரிக் கரையில் உள்ள பல்வேறு திருக்கோவில்களுக்குச் சென்று, அங்குள்ள திருக்குளங்களில் நீராடினான். பின்னர் அடுத்த ஆலயத்தைத் தேடி பயணம் மேற்கொண்டான். ஆனாலும் மன்னனின் நோய் குணம் பெறவில்லை. மனம் சோர்ந்து மூவலூர் திருத்தலம் வந்து சேர்ந்தான்.
சிவபெருமானுக்கும், பெருமாளுக்கும் நன்றி:
அங்கே மார்க்கசகாயேஸ்வரரை வணங்கி வேண்டி நின்ற போது, மீண்டும் அசரீரி ஒலித்தது. ‘நிர்மலா! மனம் கலங்காதே! உன்னுடைய தோஷம் நீங்கி, நீ பூரண குணமடையும் காலம் கனிந்துள்ளது. வடக்கே சற்று தொலைவில் ஒரு திருக்குளம் தென்படும். அதில் நீராடு! அதுவே உனக்கு விடுதலையைத் தரும்’ என்றது. அதனால், மனம் மகிழ்ந்த நிர்மலன் ஆலயமாகத் திருக்குளத்தினைத் தேடிய போது, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அழகிய திருக்குளம் தென்பட்டது. அதில் ஆனந்தமாக நீராடி எழுந்த போது நோய் தீர்ந்து, உடல் பொன் நிறமாய் காட்சியளித்தது. இதனால் மனம் மகிழ்ந்த நிர்மலன் சிவபெருமானுக்கும், பெருமாளுக்கும் நன்றி கூறி அங்கேயே வழிபடலானான். அப்போது அவன் முன்பாக அத்திமரம் ஒன்று தோன்றியது. அதில் பிரமாண்ட வடிவில் சீனிவாசப்பெருமாள் சங்கு சக்கரத்துடன் காட்சி தந்து அருள் வழங்கினார்.
அத்திமரத்தில் அழகிய பெருமாள்:
நிர்மலன் இதே தலத்தில் தங்கி ரிஷியாக மாறினான். பிற்காலத்தில் பிப்பில மகரிஷி என அழைக்கப்பட்டார். இவர் நீராடி பேறு பெற்ற தீர்த்தம் ‘பிப்பில மகரிஷி தீர்த்தம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிப்பில மகரிஷியின் சிறப்பைக் கேள்விப்பட்ட தஞ்சை சரபோஜி மன்னன், இத்தலம் வந்து பெருமாளைத் தரிசித்தான். தனக்கு போர்களின் மூலம் ஏற்பட்ட தோஷத்தை போக்கியருள வேண்டும் என்று வேண்டி நின்றான். இந்த மன்னனுக்கும், பெருமாள் அத்திமரத்தில் தோன்றி அருளாசி வழங்கினார். மனம் மகிழ்ந்த மன்னன் தான் கண்ட காட்சியை சிலையாக வடிக்க விரும்பி பதினான்கு அடி உயர அத்திமரத்தில் அழகிய பெருமாளின் திருவுருவை அமைத்து புதிய ஆலயமும் எழுப்பினான்.
கிழக்கு நோக்கிய எளிய ராஜகோபுரத்தினைக் கொண்டு சிறிய ஆலயமாக அமைந்துள்ளது உள்மண்டபத்தில் மூலவருக்கு வலதுபுறம் சக்கரத்தாழ்வாரும், இடதுபுறம் யோக நரசிம்மரும், கிழக்கு நோக்கி காட்சி தர, தெற்கு முகமாய் நர்த்தன கிருஷ்ணன் காட்சி தரு கிறார். வெளிப்பிரகாரத்தில் விநாயகர், விசுவக்சேனர், ராமானுஜர், பிப்பில மகரிஷி காட்சி தருகின்றனர்.
இக்கோவிலில் அமைந்திருக்கும் அனுமன் சிலையைத் தட்டினால், ஏழு ஸ்வரங்கள் ஒலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர் சப்தஸ்வர அனுமன் என அழைக்கப்படுகிறார். தலமரம் அத்திமரமாகும். தலத் தீர்த்தம் விஸ்வ புஷ்கரணி. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவருக்கு கண்கண்ட தலமாக இத்திருக்கோவில் அமைந்துள்ளது. கலைத்துறையினருக்கு புகழும், வளமும், சேர்க்கும் ஆலயமாகவும் இது போற்றப்படுகிறது.
The post அத்திமரத்தில் தோன்றிய பெருமாள் appeared first on Swasthiktv-Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.
ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்
9962081424
The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 09/08/2016 appeared first on Swasthiktv-Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.
சடைமுடியுடைய தலையை தன் கையில் தாங்கியபடி நெருப்பு குண்டத்தை வலம் வந்தார். பூக்குழியில் இறங்குவது போல், அந்த தீக்குழியில் இறங்கினார். அப்போது வானில் இருந்து மலர் மழை பெய்தது. புகழ்சோழ நாயனார் சிவபெருமான் திருவடி அடைந்தார். சிவ பக்தனாக இருந்த 63 நாயன்மார்களில் ஒருவர் புகழ்சோழ நாயனார். பல அரசர்களை வென்று தன் கட்டுக்குள் வைத்திருந்த அவர், தன்னுடைய அரசனாக சிவபெருமானையே முன்வைத்து ஆட்சியை செய்து வந்தார். பல அரசர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அவர்களிடம் இருந்து கப்பங்கள் பெற்று, அந்த பொருட்களால் சைவ நெறியை தழைக்கச் செய்தார்.
யானை பறித்து மலர்களை கீழே கொட்டியது:
ஒரு முறை கருவூர் என்ற இடத்தில் சிவகாமியாண்டார் என்ற சிவனடியார் வாழ்ந்தார். அவர் தினமும் மலர் பறித்து அதனை இறைவனுக்கு சமர்ப்பிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். வழக்கம்போல் ஒரு நாள் பூக்கள் நிரம்பிய கூடையுடன் ஆலயத்தை நோக்கி சென்றபோது, பட்டத்து யானை ஒன்று அந்தக் கூடையை பறித்து மலர்களை கீழே கொட்டியது. இதனால் இறைவனுக்கு மலர் சாத்த முடியாத நிலையை எண்ணி சிவகாமியாண்டார் தவித்தார்.
பாகனையும் உயிர்த்தெழச் செய்தார்:
இதை அறிந்த அங்கு வந்த எறிபத்த நாயனார், மலரை பறித்து தரையில் கொட்டிய யானையையும், யானையை தடுக்கத் தவறிய பாகனையும் வெட்டி வீழ்த்தினார். இதுபற்றி கேள்விப்பட்டு அங்கு வந்தார் புகழ்சோழ நாயனார். பின்னர் அவர் எறிபத்தரிடம், ‘யானை என்னுடைய அரண்மனையைச் சேர்ந்தது, அது செய்த குற்றம் என்னையேச் சேரும். எனவே என்னையும் கொல்லும்’ என்றார். அப்போது இறைவன் அவர்கள் முன்பாக தோன்றி அனைவருக்கும் அருள் புரிந்தார். யானையையும், பாகனையும் உயிர்த்தெழச் செய்தார்.
புகழ்சோழ நாயனார் ஒரு நாள் தன் அமைச்சர்களுடன் நமது அரசாட்சிக்கு அடங்காது, மாறுபட்ட அரசர்கள் இருப்பார்களானால் அவர்களைப் பற்றி கூறுங்கள்’ என்று கேட்டார். கப்பம் செலுத்தாத அரசன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் அதிகன். மலைகளை மதில்களாக சூழ்ந்த நகரில் காவல் மிக்கவனாக அரசு புரிந்து வருகிறான்’ என்றார்.
எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்:
அந்த அரசனை சிறைபிடித்து வரும்படி தன்னுடைய நால்வகைப் படைகளை அனுப்பிவைத்தார் புகழ்சோழ நாயனார். அந்த படைகள் அதிகன் அரசாட்சி செய்த இடத்திற்கு சென்று போரிட்டன. கடுமையான போரில் அதிகனுடைய சேனைகள் தோல்வியைத் தழுவின. எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்களாக கிடந்தன. அதிகன் அமைத்திருந்த மலை அரண்கள் உடைத்தெறியப்பட்டன.
குவிக்கப்பட்டிருந்த தலைகள்:
போரில் மாண்ட எதிர் சேனை வீரர்களின் தலைகளை ஒன்று விடாமல் எடுத்துக் கொண்டு, புகழ்சோழ நாயனாரின் முன்பாக கொண்டு வந்து குவித்தனர் தளபதிகள். தன்னுடைய அரச சேனையின் திறமையைக் கண்டு மெய்சிலிர்த்தார் புகழ்சோழ நாயனார். தன் முன் குவிக்கப்பட்டிருந்த தலைகளை பார்த்தார். அப்போது அந்த குவியல்களுக்கு மத்தியில் சடை முடியுடன், நெற்றியில் திருநீறு அணியப்பட்டிருந்த தலை ஒன்று இருப்பதைக் கண்டு மனம் நடுங்கினார். ‘ஐயயோ! என் வாழ்வில் அனைத்து பலன்களையும் இழந்து விட்டேனே. செய்யக்கூடாத செயலை செய்து பெரும் பாவத்தை சுமந்து கொண்டேனே. சடைமுடியை கொண்ட சிவனடியாரின் தலையைக் கண்டும், என் இதயம் இன்னும் வெடிக்காமல் இருக்கிறதே. இனி இந்த உலகில் வாழ எனக்குத் தகுதியில்லை’ என்று கதறினார் பின்னர் அமைச்சர்களை உரிய காலத்தில் என் புதல்வனிடம் ஒப்படைப்பீர்களாக!’ என்று கட்டளையிட்டார்.
பின் விறகுகளை இட்டு, பெருந்தீ வளர்த்தார். தங்கள் அரசனின் செயலைக் கண்டு அமைச்சர்கள் மனம் கலங்கிப் போனார்கள். மனம் கலங்க வேண்டாம். கடமையை நீங்கள் தவறாது செய்யுங்கள்’ என்று கூறிய புகழ்சோழ நாயனார், சடைமுடியுடைய தலையை தன் கையில் தாங்கியபடி நெருப்பு குண்டத்தை வலம் வந்தார். பூக்குழியில் இறங்குவது போல், அந்த தீக்குழியில் இறங்கினார். அப்போது வானில் இருந்து மலர் மழை பெய்தது. புகழ்சோழ நாயனார் சிவபெருமான் திருவடி என்னும் பேரின்ப நிழலை அடைந்தார்.
The post சடைமுடி தலையுடன் குண்டத்தில் இறங்கிய புகழ்சோழ நாயனார் appeared first on Swasthiktv-Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.
வங்க தேசத்தின் தலைநகரான கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் குதிராம் – சந்திரமணி என்னும் தம்பதியருக்கு மகனாக 1836 ஆம் ஆண்டு அவதரித்தார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். ராம கிருஷ்ணரின் இயற்பெயர் கதாதரன் என்பது.
சிறு வயதில் படிப்பின் மேல் நாட்டம் இல்லாத ராம கிருஷ்ணர் தன் அண்ணன் ராம்குமார் பூசாரியாக இருந்து வந்த தட்சினேஸ்வர காளி கோவிலுக்கு சென்று வரும் பழக்கத்தால் காளி தேவியின் தீவிர பக்தரானார்.
பார்க்கும் அனைத்தையுமே தன் இஷ்ட தெய்வமாக பாவிக்கும் ப்ராப்தம் அனைவருக்கும் அமையாது. அந்த ப்ராப்தம் முழுதாக அமையப்பெற்றவர் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர். காளியின் மேலுள்ள பக்தி பல முறை அவரை பித்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் அவருடைய பெற்றோர்களும் ஊர் உலகத்தினரும் அவருக்கு சித்த பிரமை பிடித்துவிட்டதாக எண்ணிய காலமும் உண்டு.
அதற்கு உதாரணமாக இரு சம்பவங்களை இங்கே காணலாம்.சாதாரண சம்பவங்கள் அல்ல அன்னை காளியே நேரில் தோன்றிய மெய்சிலிர்க்கும் சம்பவங்கள்.
தன் அண்ணனின் மறைவுக்கு பின் காளி தேவிக்கு நித்ய பூஜை செய்யும் பாக்கியத்தை பெற்ற ராமகிருஷ்ணர் அன்னையை எப்படியாவது நேரில் பார்த்திட பேராசை பட்டார். எனவே அன்னையை எண்ணி தொடர்ந்து தீவிர தியானத்தில் இருந்தார். அன்னை நேரில் வரவில்லை.ஒருகட்டத்தில் விரக்தியின் உச்சத்தை அடைந்த ராமகிருஷ்ணர் நேரே காளியின் சிலை அருகே சென்று அவளுடைய ஒரு கையில் உள்ள வாளை உருவி “உன்னை எனக்கு காட்டமாட்டாயா ? ” என்று கேட்டுக்கொண்டே தன்னுடைய கரங்களை துண்டிக்க துணிந்தார். உடனே அங்கே காலி தேவி தோன்றி தன் பக்தனுக்கு காட்சியளித்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய செயலை தடுத்து நிறுத்தவும் செய்தாள். கேட்கவும் வேண்டுமா ராமக்ரிஷ்ணரின் நிலையை? காளியை கண்டதும் பேரானந்தப்பரவசமடைந்தார் அன்னையை தவிர வேறொன்றும் அவர் கண்ணிற்கு புலப்படவில்லை.
பேரொளிப்ரவாகமாக தன் முன் காலி தோன்றிய அந்த நாளுக்குப்பிறகு அவருடைய பக்தி மேலும் முற்றியது. எப்படி என்கிறீர்களா ? அன்னையை அவர் கோபித்துக்கொள்ளும் அளவிற்கு..
தினமும் காளிக்கு பூஜையின் முடிவில் நிவேதனம் செய்யப்படும் உணவு, பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும். இப்படி இருக்க ஒரு நாள் ராமகிருஷ்ணர் காளியை நோக்கி ” இது என்ன தினமும் உனக்கு உணவு படைப்பதும் அதை நீ உண்ணாமலேயே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதுமாக வெறும் ஒரு சடங்காகாகவே எனக்கு தோன்றுகிறது. எனக்காக நீ ஒரு நாள் இந்த உணவை சாப்பிட வேண்டும் என்றும், என் கையாலேயே அதை உனக்கு நான் ஊட்டி விட வேண்டும் என்றும் காளியிடம் முறையிட்டார்.
காளி தேவியும் ஒரு குழந்தையை போல் ராமக்ரிஷ்ணரின் முன் தோன்றி ” இவ்வுலக உயிர்கள் அனைத்தும் என்னுள் அடக்கம் அப்படி இருக்க அவர்கள் சாப்பிட்டால் நான் சாப்பிட்டதாகத் தானே அர்த்தம்” என்றாள் .இருப்பினும் தன் பக்தனின் சொல்லை ஏற்று அவர் உணவை உருட்டிக்கொடுக்க தான் அதை வாங்கி உண்டாள்.
காளி மாதா கரங்களில் ஆயுதங்களுடன், தோற்றத்தில் பயங்கரியாக இருந்தாலும், ஒரு குழந்தையை போல் ஒரு பக்தனின் ஆசைக்கு இசைந்து, அவன் உருட்டிக்கொடுத்த உருண்டையை வாஞ்சையுடன் வாங்கி உண்டதை நம் அகக்கண்ணில் நினைத்துப்பார்த்தால் புரியும் – பக்தி என்பது எத்தகைய அற்பணிப்பை உள்ளடக்கியது என்பது.
The post காளி தேவியை நேரில் பார்க்க ஆசைப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணர் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.