Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

சிவன் இடத்தில் சித்தி விநாயகர்

$
0
0

 பழமையும்,பெருமையும் வாய்ந்த ஆவியூர் ராஜேந்திர சோழீஸ்வரமுடையார் திருக்கோவில் சிவனாலயம் என்றாலும் இங்கு சிவனில்லை அவருக்கு பதிலாக அவரது பிள்ளை விநாயகர் எழுந்தருளியுள்ளார்.கி.பி 11 ம் நூற்றாண்டில் முதலாம் இராஜேந்திர சோழனால் எழுப்பப்பட்ட திருக்கோயில் இது.இந்த காலத்தில் பாண்டியநாடும் சோழர்களின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது.இதனை முன்னிட்டு மூலவர் இராஜேந்திர சோழீஸ்வரமுடையார் என அழைக்கப்படுகிறார்.ஆவியூர்,வயலூர் நாடு எனும் பகுதியில் அடங்கிய சிற்றூராக விளங்குகிறது.நாளடைவில் கோயிலின் மேல் தளம் சிதிலமடைந்து வழிபாடுகளும் குறைந்தது.எனவே மூலவரும் ஆதிபிரானுமாகிய ஆவுடை லிங்கேஸ்வரர் திருமேனி மறைந்து போனது.வெகு காலம் ஆகியும் புதர் மண்டிக் கிடந்தது இந்த ஆலயம்.பின்பு சில வழிபோக்கர்கள் கண்ணில் பட்டதே இதற்கு புனர்வாழ்வு பெற வழிவகுத்தது.

  MAMP06NAMMA3_1288764gமூலவர் இல்லாமல் போகவே மூலமுதற் கடவுளான விநாயகரைப் பிரதிஷ்டை செய்து நித்ய பூஜைகள் நடைபெற்று வருகின்றன.முகமண்டபம்,அம்மன் சன்னதி என எல்லாமே மாயமாகிப் போன நிலையில், அர்த்தமண்டபம்,கருவறை,மூலவர் விமானம் ஆகியவை சிதிலமடைந்து போனது.ஒருவேளை பூஜை மட்டுமே நடக்கும் இந்தக் கோவிலை இப்பொழுது சீர்படுத்தி வருகிறார்கள்.

வழிபாடுகள்:

 வெள்ளிக்கிழமைகள்,பிரதோஷம்,பௌர்ணமி,திருவாதிரை,சங்கடஹரசதுர்த்தி,சிவராத்திரி மற்றும் மார்கழி மாத 30 நாட்களும் விசேஷ அபிஷேக,ஆராதனைகள் நடைபெறும்.இங்கு இந்த ஆலயத்தில் வேண்டுவோர் வேண்டியபடி எல்லாம் கிடைக்கப்பெற்று வளமோடு வாழ்கிறார்கள்.

அமைந்துள்ள இடம்:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி மதுரை நெடுஞ்சாலையில் 15 கி மீ தொலைவில் ஆவியூர் அமைந்துள்ளது.பஸ் வசதி உண்டு.

தரிசன நேரம்:

காலை 7 – 10 மணி வரை.

மாலை 5 – இரவு 8 மணி வரை.

 

The post சிவன் இடத்தில் சித்தி விநாயகர் appeared first on Swasthiktv.


கர்ப்பிணிப் பெண் வேண்டி மலையிலிருந்து கீழேவந்த ஆஞ்சநேயர்

$
0
0

 ராமனுக்கும்,ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில் லட்சுமணன் மூச்சு பேச்சு இல்லாமல் இருக்க,ஹனுமான் மூலிகைகள் நிரந்த மலையைத் தூகிக் கொண்டு வந்து அவரைக் காப்பாற்றினான்.அப்படிக் கொண்டுவரும்போது அந்த மலையிலிருந்து கீழே சிலப் பகுதிகள் விழுந்தன.அப்படி விழுந்த பகுதிகளை “சஞ்சீவி மலை” என்று அழைக்கப்பட்டு வருகிறோம்.அவற்றுள் ஒன்றுதான் “தித்தியோப்பன அள்ளி” என்ற ஊருக்கு அருகே உள்ள சஞ்சீவி மலை.இந்த மலையில் பசுமைக் காடுகளுக்கு நடுவே சுமார் ஐந்நூறு அடி உயரத்தில் அனுமனுக்கென்று மிக அழகான ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

 பழங்காலத்தில் இந்த அனுமன் கோயில் மலை உச்சியில் இருந்தது.அப்போது ஒரு கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மலை ஏற முடியாமல் அனுமனை வேண்ட, அவளது வேண்டுகோளுக்கு இணங்கி அனுமன் மலையைவிட்டு கீழே வந்து எழுந்தருளியதாகக் கூறப்படுகிறது.அனுமனின் பாதச் சுவடுகளை இன்றும் உச்சியில் காணலாம்.

 இந்த ஆலயம் கிருஷ்ணதேவராயர் எனும் மன்னர் காலத்தில் உருவானது.காலப் போக்கில் அந்தக் கோயில் பழமை ஆகிவிட பக்தர்களின் முயற்ச்சியால் கோபுரம்,அர்த்தமண்டபம்,மகாமண்டபம் ஆகியவை கட்டப்பட்டு இன்று சிறப்பான முறையில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இந்தக் கோயிலுக்கு செல்வதால் உண்டாகும் சிறப்புகள்:

 தெற்கு திசை நோக்கி “சஞ்சீவராய சுவாமி” என்ற பெயரால் அழைக்கப் படும் இந்த ஆஞ்சநேயர் கோயிலுக்குச் செல்வதால் மணப் பேறு, மகப்பேறு கிட்டும்.கால்நடைகள் அபிவிருத்தி அடையும்,விளைச்சல் அதிகரிக்கும்,ஆரோக்யமான வாழ்வு அமையும்.

வழிபாடுகள்:

 சித்ரா பௌர்ணமி,புரட்டாசி மூன்றாம் சனி,கார்த்திகை தீபம் சமயத்தில் பக்தர்கள் அங்கு சென்று தீபமேற்றி வழிபாட்டு வருகின்றனர்.மேலும் இந்த ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகள்,அமாவாசை,பௌர்ணமி நாட்களிலும்,அனுமன் ஜெயந்தி,ஸ்ரீராமநவமி,கோகுலாஷ்டமி நாட்களில் அன்னதானமும் உண்டு.வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சர்க்கரை,கற்கண்டு,வாழைப்பழம் எனத் தங்களால் இயன்ற பொருளை துலாபாரமாகச் செலுத்துகிறார்கள்.

 இந்தக் கோவிலில் விநாயகர்,சிவன்,நவகிரஹங்கலுக்கும் தனிச்சன்னதி அமைந்துள்ளது.இங்கு 20அடி உயரத்தில் சிமெண்ட் கொண்டு செய்யப்பட்ட அனுமன் சிலை உள்ளது. மேல்புறத்தில் உள்ள தொட்டியிலிருந்து கீழே வரும் நீரானது அனுமனின் வலது கையில் பட்டு வந்து,கீழே விழுவதாக அமைந்துள்ளது மிகவும் கண்கவர் காட்சியெனவெ சொல்லவேண்டும்.

   இந்த கோயிலின் மற்றுமொரு சிறப்பு அதன் வடமேற்கில்,”பூதகுண்டு”எனும் பெயரில் ஒரு குகை உள்ளது.அந்தக் குகைகளில் சமண முனிவர்கள் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகின்றது.சில முனிவர்கள் இங்கு வந்து த்யானம் செய்து மன அமைதி பெறுகிறார்களாம்.இம்மலையில் வீசும் மூலிகைகள் நிறைந்த காற்று உடல் மற்றும் உள்ளத்தில் உண்டாகும் நோய்களுக்கு இயற்கையான மருந்தாக அமைந்துள்ளது.

 இங்கு உள்ள சஞ்சீவராயன் அணையில் பக்தர்கள் முடியிறக்கிக் கொண்டு,அணையில் நீராடி பின்பு நடைபயணமாக வந்து சஞ்சீவராய சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

குறிப்பு:

  முன்னொரு காலத்தில் இந்த மழைக் கோயில் பகுதியில் பல சித்தர்கள் தவம் புரிந்ததாகவும்,அவர்கள் இன்றும் இரவுப் பொழுதில் இந்த ஆலய வளாகத்தில் உலாவருகிறார்கள் என்று அங்குள்ள மக்கள் கருதுகிறார்கள்.அவ்வளவு ஏன் இது அவர்களது நம்பிக்கையும் கூட.

அமைந்துள்ள இடம்:

 தர்மபுரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 23கி.மீ தொலைவில்,பொன்னாகரம் தாலுக்காவில் தித்தியோப்பன் அள்ளி ஊராட்சியில் சஞ்சீவபுரம் பகுதியில் சஞ்சீவ மலையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.பாப்பாரப்பட்டியிலிருந்து 7கி.மீ தூரத்தில் உள்ளது.

தரிசன நேரம்:

காலை (7-9) மாலை(5-6)

சனி மற்றும் விசேஷ தினங்களில் நாள் முழுவதும் ஆலயம் திறக்கப் பட்டிருக்கும்.

The post கர்ப்பிணிப் பெண் வேண்டி மலையிலிருந்து கீழேவந்த ஆஞ்சநேயர் appeared first on Swasthiktv.

பத்ரகாளியம்மன் கோயிலில் தீரும் நாக தோஷம்

$
0
0

பத்ரகாளி என்பவள் உக்கிரத்தின் உச்ச வடிவம் என்பது அறிந்த ஒன்றே.சிவந்த கண்களும்,ஆக்ரோஷமான முகமும் மிரட்டும் தோற்றமும் காளிக்கு உரிய அம்சங்கள்.அப்படிப்பட்ட காளி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு துணிவு,வெற்றி,மங்களம் உள்பட சகல சௌபாகியத்தையும் அளிப்பவள் என்பது புராண நூல்களின் கூற்று. முன்பொரு சமயத்தில் தாருகன் என்றொரு அரக்கன் இருந்தான்.அவன் மக்களை மிகவும் கொடுமை செய்தான்.அவனது கொடுமை தாங்காது பக்தர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.உடனே ஈசன் தன் கழுத்தில் உள்ள விஷத்தை வலக்கையால் மெல்லத் தடவினார்.அப்படி தடவிய அடுத்த வினாடி அற்புதமான அழகுடனும்,தீட்சண்யமான பார்வையுடனும் காளிதேவி தோன்றினாள்.

     தாருகனை அழித்து வா என்று ஈசன் கட்டளையிட காளி ஒரு பெரிய படையை உருவாக்கி தாருகனை அழிக்கப் புறப்பட்டாள்.தாருகனையும் அவனது படையினையும் துவம்சம் செய்து அழித்தாள்.நிசும்ப சூதனி,வரதான சொரூபிணி,யோகப் பிடாரி,தாண்டவக் காளி,சுகாசனக் காளி,எனப் பல பெயர்கள் இந்த காளிக்கு உண்டு.இன்முகத்துடன் பக்தர்களைக் காப்பதால் பத்ரகாளி என அழைக்கப்படுகிறாள்.இந்த பத்ரகாளி அம்மனுக்கு திருச்சியில் உள்ள அம்மன் நகரில் ஒரு கோயில் உள்ளது.ஆரம்பத்தில் ஒரு வாழைத் தோப்பின் நடுவில் ஓலைக் குடிசையில் இருந்து பின்பு ஒரு ஓடு மேய்ந்த இடத்தில் அமைந்திருந்தாள். தற்போது புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தில் அருள்புரிகிறாள்.

   patthra kali1இந்தக் கோயில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.நுழைந்த உடன் உள்ள மஹா மண்டபத்தில் வரையப் பட்டுள்ள அற்புதமான வண்ண ஓவியங்கள் கண் கவர்  காட்சியாக உள்ளது. மேலும் நுழைவாயிலில் இருபுறமும் அமைந்துள்ள துவாரபாலகர்கள் சுதை வடிவில் அமைந்திருக்க அடுத்துள்ள கருவறையில் அம்சமாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள் பத்ரகாளியம்மன்.மேற்க் கைகளில்  சங்கும், உடுக்கையும் தாங்கி,கீழ் கைகளில் குங்குமச்சிமிழும்,சூலாயுதமும் தாங்கும் இன்முகப் புன்னகையோடு காட்சி அளிக்கும் அம்மனின் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் தோணும்.தேவியின் முன் சிங்கமும்,பீடமும் அமைக்கப்பட்டுள்ளது.இந்தச் சன்னதியின் பிரகாரத்தில் மதுரைவீரன்,பட்டவன்,பிரசன்ன விநாயகர்,சாம்புவன்,முத்துக்கருப்பன் போன்ற மற்ற கடவுள்களும் அருள்கின்றனர்.மேலும் இங்கு நிறைய நாகர் திருமேனிகளும் நாகம்மா சிலையும் அந்தச் சிலையை ஒட்டி நிறைய பாம்பு புத்தும் இருப்பதாகக் கூறுகின்றனர்.இந்தப் பாம்புகள் அவ்வப்போது பக்தர்களின் பார்வையில் படுவதுண்டாம்.இந்தக் கோயிலை தரிசனம் செய்ய நாக தோஷம் வெகுவாகக் குறையும் என்பது மக்களின் நம்பிக்கை. பலநூறு குடும்பங்களுக்கு குலதெய்வம் இந்த   என்றாலும் பல முறை திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்தும் இந்த அன்னை தன் கோயிலின் மேல் கூரை போட அனுமதி கொடுக்கவில்லை என்பது பலருக்கும் வருத்தம் தரக்கூடிய விஷயமாக உள்ளது.திருச்சியில் உள்ள வெக்காளி அம்மனைப் போலவே இந்த பத்ரகாளியம்மனும் வெயிலோ,மழையோ அதைத் தன் சிரசில் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

விழாக்கள்:

சித்ரா பௌர்ணமி அன்று ஆலயம் விழாக் கோலம் கொண்டு காணப்படும்.அன்றைய தினம் திருவிளக்கு பூஜை நடைபெறும்.அதில் ஏராளமான பெண்கள் கலந்துகொள்கிறார்கள்.வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் ராகு கால நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடைபெறுகிறது. அதிலும் ஆடி மாத வெள்ளிக் கிழமை மிகவும் விசேஷம்.

இந்தப் பிரகாரத்தின் நடுவே பல நூறு ஆண்டுகள் கடந்த இச்சி மரம் உள்ளது. குழந்தை வரம் வேண்டிப் பெண்கள் பிரார்த்தனை செய்து தலவிருட்சமான இந்த மரத்தில் தொட்டில் கட்டி வருகின்றனர்.அவர்களது பிரார்த்தனையை பத்ரகாளி அம்மன் நிறைவேற்றி வருகிறாள்.

அமைந்துள்ள இடம்:

திருச்சியிலிருந்து 6 கி.மீ தொலைவில் அம்மன் நகரில் உள்ளது இந்த பத்ரகாளி அம்மன் ஆலயம்.சத்திரம் அல்லது மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பாய்லர் தொழிற்சாலை செல்லும் பேருந்தில் ஏறி சக்தி நகர் நிறுத்தத்தில் இறங்கி நடந்தே சென்று விடலாம் இந்த பத்ரகாளி அம்மன் ஆலயத்திற்கு.

தரிசன நேரம்:

காலை 7- மதியம் 1 வரை.

மாலை 4 – இரவு 8 வரை.

The post பத்ரகாளியம்மன் கோயிலில் தீரும் நாக தோஷம் appeared first on Swasthiktv.

தெற்கு முகம்  திரும்பிய வகையில் இரண்ய சூரனை வதம் செய்த வராகன்

$
0
0

     கடலூர் மாவட்டம், விருதாச்சலம் அடுத்துள்ள ஸ்ரீமுஷ்னத்தில் பூவராக சுவாமி என்ற திருநாமத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் பல இன்னல்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.

     பத்து அவதாரத்தில் மூன்றாவது அதாராமன வராகன் அவதாரம் அமையப்பெற்ற திருத்தலமாகும். தானே தோன்றிய மூர்த்திகளை கொண்ட வைணவதலங்கள் எட்டு. ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாச்சரமம், ஸ்ரீபூவராகசுவாமி சன்னதிமேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது. இரண்யாசூரன் என்கிற அசுரன், பூமியை பாயாக சுருட்டி கடலுக்கு அடியில் வைத்ததால் பூமாதேவி, தேவர்கள், ரிஷிகள், பெருமாளிடம் சென்று பூமியை காக்குமாறு முறையிட்டனர். இதனை ஏற்ற பெருமாள் வராகன் (பன்றி) அவதாரம் எடுத்து அசுரனை அழிக்க முற்பட்டார். இரண்யாசூரன் பெருமாளிடம் பக்தி கொண்டவன் என்பதால், பெருமாளை பார்த்தால் காலில் விழுந்து சரணாகதி அடைந்துவிடுவான் என கருதிய பெருமாள், வராகன் அவதாரம் எடுத்து தனது உடம்பில் உள்ள சங்கு, சக்கரத்தை மறைத்து நேருக்கு நேராக அசுரனை பார்க்காமல் தனது முகத்தை தெற்கு பக்கம் திரும்பிய வகையில் இரண்யா சூரனை வதம் செய்தார்.Srimushnam-Bhoo-Varahaswamy-Vishnu-Temple-Cuddalore-Tamilnadu3

பெருமாள் பன்னி உருவில் இருப்பதால் பார்ப்பவர்கள் பரிகாசம் செய்வார்கள் என தேவர்கள், பக்தர்கள் தரிசிக்கும் வகையில் காட்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டனர். இதனை அடுத்து பெருமாள் ஸ்ரீபூவராக பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக எழுந்தருளினார். உடன் ஆதிவராக மூர்த்தியும், கண்ணனும் எழுந்தருளியுள்ளார். பெருமாள் மனைவி அம்புஜவள்ளி தாயார் வளைய மாதேவியாகவும், தாயாருக்கு தோழியாக சப்த கன்னிகள் இருந்து வந்தனர். இவர்களின் வேண்டுதலை ஏற்று கோயிலின் அருகே அமர்ந்துள்ளனர். இக்கோயிலின் பின்புறம் நித்திய புஷ்கரணி உள்ளது. இதன் அருகே அஷ்வதநாராயணன் சன்னதி உள்ளது. பூவராகசுவாமி கோயிலில் பெருமாள் உற்சவர் யக்ஞவராகர், மாசி மாதம் மகத்திற்கு தீர்த்தவாரிக்கு சிதம்பரம் அருகே கிள்ளை கடற்கரைக்கு செல்வார்.
சித்திரை மாதம் மட்டையடி உற்சவமும், திருத்தேர் வீதிவுலமும், தெப்ப உற்சவமும் நடைபெறும். இக்கோயிலை சுற்றுலா தலமாக அரசு அறிவித்துள்ளதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் தினமும் வருகை புரிகின்றனர். இக்கோயிலை கோரைகிழங்கு, குழைவுசீனி ஆகியவற்றால் செய்யப்பட்ட பிரசாதம் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீபூவராக சுவாமியை வணங்குவோர் சிறந்த வாக்குவன்மை, பெரியபதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெற்றுவையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என புராணங்களும், மந்திரசாஸ்திரங்களும் சொல்கின்றன. பூவராக சுவாமியை தரிசனம் செய்தவர்களை தரிசனம் செய்தாலே புண்ணியம் என்பது ஐதீகம்

அமைவிடம் :
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திலிருந்து 12 கி.மி தொலைவில் உள்ளது.
தொடர்புக்கு  +91-4144-245090
சுப்பிரமணி குருக்கள் : 9442832905
செய்தி : ப. பரசுராமன்
படங்கள் : வசந்த்

The post தெற்கு முகம்  திரும்பிய வகையில் இரண்ய சூரனை வதம் செய்த வராகன் appeared first on Swasthiktv.

HOMEMADE MALAAI LADDU

$
0
0

There are so many varieties in laddu which we commonly known as rawa laddu, boondhi laddu, maa laddu etc. But this laddu is something different and which will be rich in taste.

Ingredients:

  1. Milk – 1 litre
  2. Sugar – 6 tablespoon
  3. Elaichi powder – 2 pinch
  4. Saffron – 5gm
  5. Rose water essence – 2 drops
  6. Badam – 10 nos.
  7. Lemon – ½ to squeeze.

Method of Preparation:

  1. Boil 1 litre milk and squeeze lemon in it.
  2. The milk will get spoiled
  3. Now drain half of the water from the spoilt milk
  4. Cook the balance milk for 15 – 20 mins till it observes the water completely.
  5. Take out the dry milk content, keep it separately.
  6. Now take a mixie make 6 tablespoon of sugar as powder.
  7. Add the sugar powder to that milk content
  8. Add elaichi powder and saffron
  9. Now mix all the contents well
  10. Finally add 2 drops of rose water or rose essence
  11. Cut the badam into lengthy strips.
  12. Now take muffin cups, make the mixture as laddus
  13. Place the laddu in the cups.
  14. Garnish with badam and saffron.

Now the tasty and yummy homemade malaai laddu is ready to eat.

The post HOMEMADE MALAAI LADDU appeared first on Swasthiktv.

நாகம் விட்டுச் சென்ற மாணிக்கத்தை காவல் காக்கும் அரிய மாணிக்கம் அம்பிகை

$
0
0

இன்றைய வாழ்வில் நாம் அனைவரும் செல்வத்தைத் தேடித் தான் ஓடுகிறோம்.அப்படி தேடப்படும் செல்வம் பணம்,பொருள்,நகை,வீடு,ஆபரணம் என பல வகைப் படும். கஷ்டப்பட்டு சேர்க்கும் செல்வத்தை திடீரென பறிகொடுக்கும் போது நம் நிலைமை மிகவும் மோசமாகிவிடுகிறது.அப்படி சேர்த்த செல்வத்தை நாம் காப்பாற்றி காத்துக் கொள்ள ஒரு வழி உண்டு.தன்னை நாடி வரும் பக்தர்களின் செல்வம் பரிபோகாமலும்,அவர்களது வாழ்க்கையில் காவலாக இருக்கவும் தங்களை நாடி வருவோரை காத்து நிற்கும் சக்தி தான் அரிய மாணிக்கம் எனும் அம்பிகை.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டியிலிருந்து எழுமலை என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் சுமார் 14 கி.மீ தூரத்தில் தாடையம்பட்டி எனும் ஊர் உள்ளது.இந்த ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மீ பயணித்தால் அங்கு மேலத் திருமாணிக்கம் எனும் ஊர் வரும்.இங்கு தான் அம்சமாய் குடிகொண்டு அருள்புரிகிறாள் அரிய மாணிக்கம் என்கிற அந்த அடைக்கள நாயகி.ஊருக்கும் அம்மனுக்கும் மாணிக்கம் என்ற பெயர் உருவானதற்கு ஒரு கதை உண்டு.

இது மட்டுமல்லாது இந்தத் திருக்கோவிலுக்கு அருகிலே பாண்டிய மன்னனால் திருப்பணி செய்யப்பட்ட மீனாக்ஷி சொக்கநாதர் ஆலயம் ஒன்றும் உள்ளது. நாளடைவில் இந்தக் கோயில் கேட்பார் யாருமின்றி புதையுண்டு போனது.அப்பொழுது அந்த வழியாக ஒரு அந்தணர் சென்றார்.அவர் இந்த கோயிலின் நிலைமையைப் பார்த்து மிகவும் வருந்தினார்.பின்பு அவர் அங்கேயே தங்கி வழிபாடுகளைத் தொடர்ந்தார்.அந்தக் கோவிலின் அருகில் ஒரு பாம்புப் புற்று இருந்தது.அந்த புற்றில் இருந்த நாகம் தினமும் அங்குள்ள சிவனுக்கு தன் வாயிலிருந்து மாணிக்கத்தை சமர்பித்து விழிபட்டது. நாளடைவில் மக்கள் நடமாட்டம் வர அந்த நாகம் புற்றிற்குள் ஒளிந்து கொண்டது.சிவனுக்கு அன்றாடம் பூஜை செய்த அந்தணர் தன் வறுமைக் காரணமாக வழிபாட்டை தொடர முடியாமல் தவித்தார். அப்பொழுது அந்த நாகம் அந்தணர் முன் தோன்றி மாணிக்கத்தை போட்டுவிட்டு புற்றுக்குள் சென்று விட்டது. இவ்வாறு ஒரு முறை அல்ல ஒவ்வொரு முறையும் பணம் தேவைப்படும் பொழுது மாணிக்கத்தை தந்து சென்றது நாகம்.நாகம் போட்டுச் சென்ற மாணிக்கத்தை விற்று அந்தணர் சிவனுக்கு வழிபாடுகளைத் தொடர்ந்தார்.அப்படி நாகம் விட்டுச் சென்ற மாணிக்கம் களவுபோகாமல் காத்தருளியதால் இந்த அம்பிகைக்கு அரிய மாணிக்கம் என்றும் இவள் கோயில் கொண்டிருக்கும் ஊர் திருமாணிக்கம் என்றும் பெயர் பெற்றன.இந்த அம்பிகைக்கு அம்மச்சியம்மன் என்று இன்னொரு பெயரும் உண்டு.

இன்றும் அந்த நாகம் வசித்த புற்றை இங்குள்ள மீனாக்ஷி சொக்கநாதர் கோயிலில் வடக்கு மூலையில் காணலாம்.சிவனின் அருள் பெற்ற அந்த அந்தணரும் “ஆதிமூர்த்தி” எனும் பெயரில் இந்தப் புற்றின் மீது ஐக்கியம் ஆகியுள்ளார்.இந்த ஆலயம் மேற்கு தொடர்ச்சி மலையில் வாலை ஐயனார் கோயில் பகுதியிலிருந்து கவுண்டமா எனும் நதியின் கரையில் அழகுற அமைந்துள்ளது.ஆனால் தற்போது அந்த நதி சிறு வாய்காலாகத் திகழ்கிறது.

அம்பிகையின் சன்னதிக்கு வெளியே உள்ள மூன்று வேப்ப மரங்களை அந்த அம்பிகையின் மூன்று வடிவங்களாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.அம்பிகையின் அற்புதமான வடிவம் காணக் கிடைக்காத காட்சியாகத் திகழ்கிறது.தலையில் அக்னிக் கிரீடம் தரித்திருக்கும் அம்பிகையின் எட்டு கைகளிலும் உடுக்கை,மருகம்,சூலம்,பாசம்,அங்குசம் உள்ளிட்ட ஆயுதங்களைத் தாங்கியபடி வலது காலை குத்திட்டு அமர்ந்த நிலையில் இருக்கிறாள்.மற்றும் இடது காலை ஒரு அசுரனின் தலைமேல் வைத்தபடி அமர்ந்துள்ளாள்.மேலும் பிரகாரத்தில் பைரவர்,கருப்பசாமி போன்ற காவல் தெய்வங்கள் உள்ளன.

வழிபாடு:

இந்த அம்பிகையை என்ன கேட்டாலும் கிடைக்கும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை என்கிறார்கள்.பக்தர்கள் தங்களிடம் இருக்கும் பொன் பொருள் மற்றும் விலை உயர்ந்த செல்வங்கள் பரிபோகாமலும் மற்றவர்களால் கொல்லைப் போகாமலும் இருக்க இந்த கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள்.இவ்வாறு வேண்டுதல் செய்வோர் அம்பிகைக்கு மஞ்சள் நிறப் புடவை அணிவித்தும்,நிலை மாலை என்று சொல்லப்படும் பெரிய மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.இது தவிர பொங்கல் வைத்தும்,அக்னிச் சட்டி ஏந்தியும்,பால் குடம் எடுத்தும் நேத்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்  கிழமையைத்  தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்தக் கோவிலில் பொங்கல் விழா நடக்கிறது.அப்பொழுது அம்பிகை ஊர் உலா வருகிறாள்.மேலும் தைத் திங்களன்று சன்னதியில் பொங்கல் வைத்து விசேஷ பூஜைகள் செய்யப்படும்.

வாழ்க்கையில் பொன், பொருள், மட்டுமல்லாது நம் துயரங்களிலிருந்தும் நம்மை காப்பாற்றி காபந்து செய்யும் இந்த அரிய மாணிக்கம் அம்பிகையை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசித்து வரலாம்.

The post நாகம் விட்டுச் சென்ற மாணிக்கத்தை காவல் காக்கும் அரிய மாணிக்கம் அம்பிகை appeared first on Swasthiktv.

வேதபுரீஸவரர் திருக்கோயிலில் உள்ள பனம் பழத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம்

$
0
0

   திருவண்ணாமலை அடுத்து செய்யாரில் உள்ள வேதபுரீஸவரர் திருக்கோயிலில் ஓவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருஞானசம்பந்தரின் 11 பதிகங்கள் பாடிய பின்புதான் கோயிலுள்ள பனை மரத்திலிருந்து பனம்பழம் விழுகிறது. இந்த பனம் பழத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
தொண்டை நாட்டில் பாடல் பெற்ற 32 திருத்தலங்களில் 8வது திருத்தலமக புகழ்பெற்று இறைவனின் அருளால் நிலைத்தும், பனை மரத்தினை தலவிருட்சமாக கொண்டுள்ளது இந்த திருத்தலம். இத்தலதத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் தேவர் மற்றும் முனிவர்களுக்கு வேதம் ஓதுவித்ததால் ஒத்தூர் என்று பெயர் கொண்டது. அரிய அடைமொழி திரு சேர்த்து திருவோத்தூர் என அழைக்கப்படுகிறது. cheyyartemple1
பஞ்சவர்ண நிறத்தில் எழில்மிகு தோற்றத்தில் ராஜகோபுரம் கீழ் அடுக்கின்மேல் 6 நிலைகளை கொண்டுள்ளது. இக்கோபுரத்தின் நான்கு மூலையிலும் 4 பூதங்களும் அதன் பக்கத்தில் இரு ரிஷபங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் துஷ்ட, பூத, பிரேத,பிசாசுகள் பயந்து ஓடவும், இறைவனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களை காத்து ரட்சிக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் நான்கு திசைகளிலும் கிழக்கே மூலவரின் வடிவமும், தெற்கே தட்சணாமூர்த்தி வடிவமும், வடக்கே பிரம்மா வடிவமும் வடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலினுள் நுழைந்தவுடன் வெளிப்புறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ள நந்தி பெருமான் நம்மை வரவேற்கிறார்.
இறைவன் ஸ்ரீவேதபுரீஸ்வரர் மாதவர்களுக்கும், வானவர்களுக்கும் ரிக்,யசூர்,சாம, அதர்வண வேதங்களை உபதேசம் செய்தபோது பகைவர்கள் நுழைவதை தடுக்கவே காவல் தெய்வமாக நந்தி பெருமானை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
கோயிலுக்குள் தெற்கு புறத்தில் கல்யாணகோடி தீர்த்தம் சேயாற்று உற்று நீரைத்தாங்கி உள்ளது. வடக்கே நூற்றுக்கால் மண்டபம் அமைக்கப்பட்டு அதில் இறைவனின் திருவிளையாடல்களை உணர்த்தும் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோபுர வாயிலை கடந்து உள்ளே சென்றதும், நடு மண்டபத்தில் நேர்முகமாக 7 கரங்களையுடைய கூத்தாடும் விநாயகர், ஸ்ரீவேதபுரீஸ்வரர், ஆறுமுகம், வடக்கு முகமாக ஸ்ரீபாலகுஜாம்பிகை அம்மாள், நவக்கிரகங்கள்,தலவிருட்சமான ஆண்பனை குலையீன செய்த அற்புத பனை மரம் ஆகியவற்றை தரிசிக்கலாம்.
திருஞான சம்பந்தர் கி.பி. 7-ம் நூற்றாண்டில் இத்திருத்தலம் வந்த வணங்கி வழிபட்டபோது சிவனடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க சமணர்களை தமது பக்தியின் திறத்தால் வாதத்தில் வென்று சைவ மதத்திற்கு மாற்றிய இறைவனின் அருளால் ஆண் பனையை பெண் பனையாக காய்க்குமாறு பதிகம் பாடினார். ஆண் பனைகள் அத்தனையும் குரும்பை இன்று பெண் மரங்களாக மாறி காய்கள் விழந்தன.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருஞானசம்பந்தரின் 11 பதிகம் பாடிய பின்புதான் பணம் பழம் விழுகிறது. இப்பழத்தினை சாப்பிட்டால் குழந்தை பாக்கியமும், தீராத நோய்களும் தீர்க்கும் அற்புத பிரசாதமாக திகழ்கிறது. கருவறையில் ஓத்தூருடையான் (ஸ்ரீவேபுரீஸ்வரர்) அழகிய சதுர ஆவுடையார் மீது பெருலிங்கமாக அமர்ந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்கிறார். உள்ளே வலம் வந்தால் 108 சிவலிங்கங்களை தரிசிக்க முடிகிறது. தென் சுவற்றில் மாணிக்கவாசகருடன் 63 நாயன்மார்களும், 7 கன்னியர்களும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். மேற்கு சுவற்றில் வலம்புரி விநாயகர் என்கிற கற்பக விநாயகர், திருமால்,மயில்கொண்ட ஆறுமுகன் ஆகியோர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

துர்க்கைக்கு எதிரே ஆதிகேசவ பெருமாள் வேதத்தை காக்கும் பொருட்டு பிரயோக சக்கரம் ஏந்தி காவல் கொண்டு இருக்கிறார். சண்டிக்கு நேரே அமைந்த வழியாக மூலவரை அடைந்து இறைவனை வழிபட்டு அதே வழியாக வெளிT_500_222 (1)யே வந்து பைரவர் சன்னதி கடந்து பாலகுஜாம்பிகை அம்மன் சன்னதி அடையலாம். கலை நுணுக்கத்துடன் எழில்மிகுவாக நான்கு திருங்கரங்களுடன் நின்ற கோலத்தில் வழிபடுவதோடு, சிலை வடிவில் உள்ள ஆர்த்தநாரீஸ்வரர், பனையை வணங்கி நம் வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

அமைவிடம்:-
இறைவனின் சக்தியை ஊணர்த்துகின்ற சிறப்பு வாய்ந்த வேதபுரீஸ்வரர் கோயில் காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி சாலையில் 30 கி.மீ தொலைவிலும், திண்டிவனம் 55 கி.மீ தொலைவிலும் திருவண்ணாமலையிலிருந்து 80 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

தொடர்புக்கு :-
கோயில் கிளர்க் திவாகர் – 8608999572
செய்தி : ப.பரசுராமன்
படங்கள்: ப.வசந்த்

The post வேதபுரீஸவரர் திருக்கோயிலில் உள்ள பனம் பழத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் appeared first on Swasthiktv.

ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ காலசர்ப்ப தோஷம் போக்கும் துவிதநாக பந்தம்

$
0
0

நாம் மேலே காண்பது ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவிதநாக பந்தம் ஆகும்.  இதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம்.  துவிதம் என்பதன் பொருள் இரண்டு ஆகும்.  இரண்டு நாகங்கள் ஒன்றொடொன்று பின்னி இருக்கும் தோற்றமே நாம் மேலே காணும் தோற்றம் ஆகும்.  நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமாக இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.  அதற்கு பொருள் செலவு அதிகம்.  செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது.  நாகதோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் தீராத பிரச்சனை ஒன்று தவிர்க்க முடியாததாகிறது.

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். மேற்கண்ட துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும்.  வசதி படைத்தவரகள் வெள்ளியில் நாகங்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும்.  அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும்.  திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.

thuvitha nagabantham

பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று.  அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.  நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.

ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும்.  மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.

தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.

ஓம் பாம்பன் சுவாமியே போற்றி…!

.

The post ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ காலசர்ப்ப தோஷம் போக்கும் துவிதநாக பந்தம் appeared first on Swasthiktv.


இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 17/05/2016

யானைக்கு சாப விமோசனம் கொடுத்த பெருமாள்

$
0
0

  இன்று நம் நாட்டில் உள்ள திருக்கோவில்கள் அனைத்துமே நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷம்.ஆனால் அதை அறியாத பலர் இன்று அந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாக்கத் தெரியாமல் தவிப்பது மிகவும் வருத்ததிற்குரிய விஷயம்.

  T_500_347இந்திரஜூம்னன் என்ற மன்னன் கிருதயுகத்தில் நம் பாரதத்தை ஆண்டு வந்தான் அப்படி இருக்க அவன் மக்கள் மீது கொண்ட பாசத்தாலும் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன்  மீது கொண்ட பக்தியாலும் தினமும் அவன் பகவானை பூஜை செய்து தன்னை மறந்த நிலையில் இருப்பான்.இவ்வாறு ஒரு நாள் அவன் தன்னை மறந்து இருந்த பொழுது மன்னனைக் காண துர்வாச மகரிஷி வந்தார்.பகவான் மீது கொண்ட அளவற்ற பக்தியாலும் தியான நிலையில் தன்னை மறந்து இருந்த காரணத்தாலும் மன்னன் மகரிஷி வந்த செய்தியை மறந்து விட்டான்.

    maxresdefaultசினம் கொண்ட துர்வாசர் மன்னன் தன்னை அவமதித்து விட்டதாக நினைத்து சீற்றம் கொண்டு மன்னனைப் பார்த்து பக்தியில் சிறந்தவன் என்ற மமதை உனக்கு தலைதூக்கி உள்ளது.அதனால் நான் வந்திருப்பதைக் கூட நீ மறந்துவிட்டாய்.ஆணவத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் நீ கொடிய மிருகங்களுள் மதம் பிடித்த யானையாகக் கடவாய் என்று சாபம் அளித்தார்.இதனால் நிலைகுலைந்த இந்திரஜூமன் அவரது திருவடிகளைப் பற்றி சாப விமோசனம் வேண்டினான்.கண்ணீருடன் கலங்கி நின்ற மன்னனைப் பார்த்து மனம் இறங்கி மன்னித்த துர்வாசர் பெருமாள் மீது நீ கொண்டுள்ள பக்தியால் நீ யானையாகவே இரு என்றும் ஒரு முறை உன் உயிருக்கு ஆபத்து வரும் அப்பொழுது பெருமாளை வேண்டி அழைக்க அவர் வந்து உன்னை காப்பாற்றுவார்.அப்பொழுது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார்.அக்கணமே மன்னன் யானை உருவம் பெற்று காடுமுழுவதும் மதம் பிடித்த யானையாகத் திரிந்தான்.

கபில தீர்த்தத்தின் மகிமை:

gajendra-last (1)   காலம் பல கடந்தது.யானை வடிவில் இருந்த மன்னனுக்கு சாபவிமோசனம் கிடைக்கும் நாளும் வந்தது.தண்ணீர் தாகம் எடுத்த யானை வடிவிலிருந்த மன்னன் தற்செயலாக கபிஸ்தலம் திருத்தலத்தில் உள்ள கபிலதீர்ததில் நீர் அருந்தச் சென்றான்.அப்பொழுது முதலையின் உருவில் இருந்த கூஹூ எனும் அரக்கன் யானையின் கால்களை பிடித்து குளத்திற்குள் இழுத்தது.நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னும் தன பலம் இழந்த யானை குளத்தின் நடுவே உள்ள ஒரு தாமரை மலரை எடுத்து துதிக்கையால் பறித்து வானத்தை நோக்கி வீசியது.அப்படி வீசிய மலர் வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளின் கால்களில் விழுந்தது.அடுத்த நொடியே எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் கபிஸ்தலம் வந்தைண்டார்.அவர் அங்கு வந்து கஜேந்திர உருவில் இருந்த மன்னனை காத்து முக்தியளித்தார். அப்படியே அவனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

 மூலவர் கஜேந்திர வரதன் எனும் பெயரில் எழுந்தருளியுள்ளார்.தாயார் ரமாமணவல்லி.இவள் பொற்றாமரையாள் என்றும் போற்றப்படுகிறாள்.இங்கு பெருமாள் தாயார் அழகைக் காண கண் கோடி வேண்டும்.பல பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.வாழ்நாளில் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய திவ்ய தம்பதிகளாக விளங்குகிறார்கள் இந்தப் பெருமாள் மற்றும் தாயார்.ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு விதமாக காட்சியளிக்கும் எம்பெருமானின் இந்தத் திருக்கோவிலின் அழகை வேறு எந்தத் திருத்தலத்திலும் காண முடியாதது.

அமைந்துள்ள இடம்:

 தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியாக கும்பகோணம் செல்லும் பாதையில் கம்பீரமாக நிற்கும் இந்த கபிஸ்தலம் அமைந்துள்ளது.தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

 

The post யானைக்கு சாப விமோசனம் கொடுத்த பெருமாள் appeared first on Swasthiktv.

அண்ணாமலையாருக்கு மூன்று ஆறுகளில் தீர்த்தவாரி!

$
0
0

     இறைவனின் புனித நீராடலே தீர்த்தவாரி. கோயில் குளங்கள், பெருக்கெடுத்தோடும் ஆறுகள் ஆகியவற்றில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன் வழியில், அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் தீர்த்தவாரிகள் தனிச்சிறப்புக்குரியவை. ஆடிப்புர உற்சவத்தின் போது அண்ணாமலையார் திருக்கோயிலில் அமைந்துள்ள சிவ கங்கை தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெறும். அதேபோல், கார்த்திகை தீபத்தின் முக்கிய விழாவான மகாதீபம் நடைபெறும் நாளில் பிரம்ம  தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெறும்.d21 இவைதவிர, இயற்கையின் வினோதமான நிகழ்வுகளான சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகியவை நிகழ்ந்து முடிந்ததும் பிரம்ம தீர்த்தத்தில் சந்திரசேகரர் தீர்த்தவாரி நடைபெறுவது இக்கோயிலின் மரபாகும். மேலும், தைப்பூச விழாவின்போது கிரிவலப்பாதையில் ஈசான்ய லிங்க சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ள ஈசான்ய தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

 7 theerthavari. 7இவையெல்லாம் திருக்கோயில் குளங்களில் நிகழும் தீர்த்தவாரிகள். அண்ணாமலையார் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு, ஆறுகளில்  நடைபெறும் தீர்த்தவாரிகளில் பங்கேற்கும் நிகழ்வுகள் விசேஷமானது. அதன்படி, அண்ணாமலைக்கு அருகில்  பாயும் தென்பெண்ணை, வடபெண்ணை என அழைக்கப்படும் செய்யாறு, கவுதம முனிவரால் உருவாக்கப்பட்ட கவுதமி நதி ஆகியவற்றில் நடைபெறும் தீர்த்தவாரியில் அண்ணாமலையார் அருள்பாலிக்கிறார்.

 விழுப்புரம் மாவட்டம், மணலூர்பேட்டையில் உள்ள தென்பெண்ணை அற்றில் ஆண்டுக்கு ஓரு முறை சுவாமி தீர்த்தவாரிக்கு செல்கிறார். வழிநெடுக உள்ள கிராமங்களில் சுவாமிக்கு மண்டகபடி நடைபெறும். ஆண்டுதோறும் தை 5ம் தேதி உத்ராயண புண்ணியகாலத்தில் இந்த தீர்த்தவாரி வைபவம் நடைபெறும்.

  om2811302மாசி மாதத்தில் ரதசப்தமி திதியன்று கலசபாக்கத்தில் உள்ள செய்யாற்றில் சந்திரசேகரர் அலங்கார ரூபத்தில் எழுந்தருள்வது நிகழும். அப்பொழுது செய்யாற்றில் ரதசப்தமி தீர்த்தவாரி நடைபெறும். மேலும், அண்ணாமலையாரையே தவப்புதல்வராக பாவித்த வள்ளாள   மகாராஜாவுக்கு, மகன் நிறைவேற்றும் கடமையாக ஆண்டுதோறும் திருவண்ணாமலை அடுத்த, பள்ளிக்கொண்டா கிராமத்தில் கவுதம  நதிக்கரையில் மாசி மகத்தன்று நடைபெறும் தீர்த்தவாரியில் சுவாமி எழுந்தருள்கிறார்.

செய்தி:ப.பரசுராமன்

படங்கள்:ப.வசந்த்

 

The post அண்ணாமலையாருக்கு மூன்று ஆறுகளில் தீர்த்தவாரி! appeared first on Swasthiktv.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 18/05/2016

“கண்களைக் காத்தருளும்” புதூர் சுயம்பு ஸ்ரீமாரியம்மன்

$
0
0

 

  திருவண்ணாமலை அடுத்துள்ள புதூர் கிராமத்தில் பக்தர்களின் கண்களைக் காக்கும் சுயம்பு மாரியம்மனாக இங்கு அருள்பாலிக்கிறாள். இயற்கையைத் தாயாக வழிபடும் மரபு வழியில் தென்நாட்டின் பெருந்தெய்வமாகவும், குறிப்பாக தமிழகத்தின் தலை சிறந்த அன்னையாக விளங்கக்கூடிய அம்மன் வடிவம் மாரியம்மன் ஆகும்.

மாரியம்மன் என்னும் பெயர் வரக் காரணம்?

  ARC_1583மாரி என்றால் மழை. மழையையும் அதனால் தோன்றக்கூடிய குளிர்ச்சியையும் வளமையையும் ஓரு பெண்ணாக உருவகப்படுத்திய பண்டைய கால தமிழ்மக்கள் அவளையே தாயாக வழிப்பட்டனர். மழை என்பதையும் – தாய் என்பதையும் சேர்த்து மாரியம்மன் என்று அழைத்தனர்.

  எந்நாட்டவர்க்கும் இறைவனாம் தெந்நாடுடைய சிவன் திருக்கோயில் கொண்ட நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலையின்   வடமேற்கில் திரிசூல பருவமலையின் தெற்கில் உலகின் சிறந்த சந்தனம் தழைக்கும் ஜவ்வாதுமலையின் கிழக்கிலும் பீம நதிக்கரையில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் நன்னன் என்றும் செங்கம் மன்னன் காலத்திற்குமுன் நிறுவபெற்றதுமான அருள்மிகு சுயம்பு மாரியம்மன் ஆலயம் உள்ளது. இயற்கை சூழல் நிறைந்த வேலங்கன் காடுகளுக்கு மத்தியில் ஆட்சிப்புரிகிறாள்.

ஸ்தலம் உருவான வரலாறு :-

  ஆதிகாலத்தில் விவசாயம் செய்த நிலத்தில் ஏர் உழும்போது ஏறுடைய கார்பட்டு ரத்தம் வழிந்தது. விவசாயம் செய்தவர்கள் ரத்தம் வருவதை பார்த்து பயந்து ஒடினர். அப்போது ஓரு பெண் சிறுமி மேல் அம்மன் அருள் வந்து வாக்கு கூறி, நான் மாரியம்மன் இப்பகுதி மக்கள் படும்  துன்பங்களிலிருந்தும், நோய்களிலிருந்தும் காக்க நான் இங்கு அவதரித்து உள்ளேன். எனக்கு கோயில் அமைத்து பூஜை செய்து வழிபடுங்கள். நான் உங்களை காத்து ரட்சிக்கிறேன் என்று கூறியபின்,  சிறுமி மயங்கி விழுந்தாள். அப்போது சிறுமி முகத்தில் ரத்தம் வந்து கொண்டே இருந்தது. அந்த சிறுமி முகத்தில் ரத்தம் வடிவதை நிறுத்த மக்கள் மஞ்சள்  வைத்தனர். அன்று முதல் இன்று வரை அம்மன் முகத்தில் மஞ்சள் காப்பு சாத்தப்படுகிறது. ARC_1580அம்மனுக்கு சாத்திய மஞ்சள் முடக்கு அம்மை, புட்டாள அம்மை, வாதம், கை, கால், வீக்கம் போன்ற என்னற்ற நோய்களுக்கு  மருந்தாக வழங்கப்படுகிறது. கண் பார்வை குறைபாடு, கண் பூவிழுதல், கண் சிவந்து நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு சுயம்பு அம்மன் மீது அபிஷேகம் செய்த எண்ணெய்யை பிரசாதமாக வழங்கப்படுகிறது.  செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மட்டும் அந்த எண்ணெய் கண்ணில் இட்டு வர கண் பிரச்சினை குணமடைகிறது. கண் பார்வை சரியானதும் அம்மனுக்கு வெள்ளி தங்கம் போன்றவற்றில் செய்த கண்மலர், வழங்கி பக்தர்கள் தன் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

ARC_1569குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இந்த சுயம்பு அம்மன் பிள்ளைப்பேறும் வழங்குகிறாள். மஞ்சள் வண்ண துணியில் கூழாங்கற்களை அடிமடியில் வைத்துகட்டி கோயிலை வலம் வந்து அம்மன் சன்னதி முன் கட்டி தொட்டில் ஆட்டி விடுவர். பிறகு பிள்ளைப்பேறு கிடைத்ததும் அம்மனுக்கு எடைக்கு எடை நாணயங்கள், வெல்லம், பழம் போன்றவற்றை அவரவர் வசதிக்கேற்ப காணிக்கையை செலுத்தி வருகின்றனர்.

திருவிழா :-

ஆடி, ஆவணி, தை மாதங்களில் திருவிழா காலங்களில் ஆந்திரா, கர்நாடகா, மற்றும் தமிழகமெங்கும் இருந்தும்,ஜவ்வாதுமலை, புதூர் நாடு போன்ற மலைகிராமங்களிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுயம்பு அம்மனைக் காண வருகின்றனர். திருவிழா காலங்களில் அம்மனுக்கு பொங்கல்  வைத்தல், மாவிளக்கு ஏற்றுதல், அங்கபிரதட்சனம் செய்தல், தீச்சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல், வேப்பிலை ஆடை கட்டுதல், ஆடு மாடுகளை நேர்த்தி விடுதல், நெல், கம்பு போன்ற தானிய வகைகள் வழங்குதல் போன்றவற்றை சுயம்பு அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்களும் ஜவ்வாதுமலை கிராம மக்களும் இந்த சுயம்பு அம்மனை குலதெய்வமாக வழிபடுகின்றனர். இவர்கள் தங்கள் குடும்பம், கால்நடைகள் நோய் நொடிகள் இல்லாமல் வளர இந்த சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.

அமைவிடம் :-

செங்கம் to போளூர் நெடுஞ்சாலையில் செங்கத்திலிருந்து  10 கி.மீ தொலைவிலும் உள்ளது.

திருவண்ணாமலையிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் உள்ளது.

தொடர்புக்கு :-

கோயில் தர்மகர்த்தா – ஜெயக்குமார் : 9443471145

அர்ச்சகர்-   தினகரன் – 9442416059

படமும் செய்தியும்

ப.பரசுராமன்.

The post “கண்களைக் காத்தருளும்” புதூர் சுயம்பு ஸ்ரீமாரியம்மன் appeared first on Swasthiktv.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 19/05/2016

தன்வந்திரி பீடத்தில் மாபெரும் நரசிம்மர் ஜெயந்தி மே மாதம் 20.05.2016 நடைபெறுகிறது.

$
0
0

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தியின் சிறப்பு

  தீமையை அழித்து அறத்தைக் காக்க திருமால் எடுத்த வடிவங்களே அவதாரங்கள் எனப்படுகின்றன. அவ்வகையில் மனித உடலுடனும் சிங்க முகத்துடனும் மாலவன் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் ஒரு குறிக்கோளுடன் திட்டமிடப்பட்டு, பிறந்து, வளர்ந்து தக்க தருணத்தில் தீமையை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் நரசிம்ம அவதாரமோ ஒரு நொடியில் தோன்றி அசுரவதம் செய்து பக்தனைக் காத்த அவதாரமாகும். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில். அந்த நாளையே ஒவ்வொரு ஆண்டும் நரசிம்ம ஜெயந்தி விழாவாக வைணவத் தலங்களில் கொண்டாடுகின்றனர்.

ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் ருண விமோட்ஷண ஹோமம்,

 வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் வருகிற 20.05.2016 வெள்ளி கிழமை காலை 10.00 மணி அளவில் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் ருண விமோட்ஷணஹோமம் நடைபெறுகிறது. மேலும் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் அமைந்துள்ள ஸ்ரீ கூர்மலட்சுமிநரசிம்மருக்கு குளுமைப் பொருளானசந்தனத்திலும்,செஞ்சந்தனமும்,சந்தனாதிதைலம்,பால்,தயிர்,தேன்,நெய்,பஞ்சாமிர்தம்,கரும்புசாறு,மஞ்சள், சந்தனம், நெல்லிபொடி,,பழச்சாறு அரிசி மாவு போன்ற பல அபிஷேக திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்  மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற உள்ளது. வஸ்திரம், செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் ருண விமோட்ஷண ஹோமத்திற்கு தேன் கலந்த மல்லிகை மலர்கள் சேர்க்கப்பட உள்ளன.

மேற்கண்டஹோமத்தில், கலந்துகொள்வதினால்ஏற்படும்பலன்கள்

1. கடன் பிரச்சினையின் தாக்கம் குறையும்.

2.எதிரிகளின் தொல்லை குறையும்.

3.பகைவர்கள்அஞ்சுவர்.

4.தொழில் வியாபாரம் சிறக்கும்.

5.ஆரோக்கியம் முன்னேற்றம் ஏற்படும்

6.எதிர் மறையான எண்ணங்கள் மறையும்.

7.குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் போன்ற  பல நன்மைகள் ஏற்படும்.நாளை என்பது நரசிம்மனுக்குஇல்லை,அவரிடம் வைக்கும் கோரிக்கை உடன் நிறைவேறும்.என்ற தகவலை டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

The post தன்வந்திரி பீடத்தில் மாபெரும் நரசிம்மர் ஜெயந்தி மே மாதம் 20.05.2016 நடைபெறுகிறது. appeared first on Swasthiktv.


‘நினைத்தாலே முக்தி தரும்” ஒரே திருத்தலம்!

$
0
0

 சிவப்பு, பழுப்பு, சாம்பல் நிறப் பாறைகள் நிறைந்த திருவண்ணாமலை, வானுயற ஓங்கி கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. மலைக்கு மேல் இருக்கும் கடவுள்களை நாம் தரிசித்திருக்கிறோம். ஆனால் மலையே கடவுளாக நின்று அருள் பாலிக்கின்ற ஸ்தலம் திருவண்ணாமலை. திருஅண்ணாமலையே கடவுளாக வானுக்கும் பூமிக்குமாக நின்று மலையாக, உயிராக காட்சியளிக்கிறது. இம்மலை சர்வம் சிவமயம். ‘உயிருடன் உள்ள மலை” என வெளிநாட்டவர் மெய்சிலிர்த்து கூறுகின்றனர்.

 images (2)எண் திசையும் புகழும் புண்ணிய தலமாம் திருஅண்ணாமலையே ஓங்கி உயர்ந்த அந்த சிவமயத்தை பற்றி காதால் கேட்பதும், கண்ணால் பார்ப்பதும், மனமுருகி துதிப்பதும் சர்வம் சிவமயத்தோடு நாமும் கலந்து விட்டதற்கு ஒப்பாகும். சிவமயத்தோடு கலந்து, உருகி, மனம்கசிந்து அம்மலையாகிய அண்ணாமலையாரோடு அவர் பாதத்தில் அடிமைப்பட்டது போல், பெரும் சித்தர்கள், ஞானிகள் போன்றோர்க்கு முக்தியும், ஞானமும் கிடைத்த ஸ்தலம் திருவண்ணாமலை.

  திருவண்ணாமலை முழுக்க அக்னிஸ்தலம் மலையே ஒரு தீபம் போன்றது, பஞ்சபூதம் என்று சிறப்பித்து சொல்லப்படுபவை. காஞ்சி,  திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, தில்லை ஆகியவை இவற்றுள் அக்னிஸ்தலம் எனக் குறிப்பிடப்படுவது திருவண்ணாமலையே  மற்ற நான்கு ஸ்தலங்களான காஞ்சி, திருவானைக்கா, திருக்காளத்தி, தில்லை ஆகிய முறையே மண், நீர், காற்று, ஆகாய ஸ்தலங்களாக கூறப்படுகிறது.

   downloadமுக்தி தரும் ஸ்தலங்களாக கூறப்படுபவை ஐந்து. அவற்றுள் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் என அருணாசலபுராணம் கூறுகிறது. தேவையில்லாத எதை எதையோ நினைத்து எங்கெங்கோ வீணே பறக்கும் மணம். அருணாசலேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்றால் இது உண்மையிலேயே இது எவ்வளவு எளிய வழி தேவாதி தேவர்களும் காண அரியவனாகிய அருள்கேஸ்வரன் வெறும் நினைப்பால், வழிபட்டு நலம்பெறலாம் என்றால் என்ன ! அவன் கருணை  !

  வெளிநாடுகளிலிருந்தும் பலர் தங்களது ஆன்ம ஞான வேட்கையை தணித்துக் கொள்ள திருவண்ணாமலை நாடி வந்துள்ளனர்.திருவண்ணாமலை ஒரு வினோதாமான கதம்பம். தனித்து அமர்ந்து சில தெய்வங்கள் ஆழ்ந்து தவம் புரிகின்றனர். வேறு சில தெய்வங்கள் ஒன்றை ஒன்று கட்டி அனைத்து காதல் புரிகின்றனர். இது மிகவும்  வியப்பூட்டுகிறது. lingamsஇந்து மதத்தில் எல்லாவித மனப்பான்மைகளுக்கும் இடமிருக்கிறது. அது எல்லாவற்றையும் தன்னுள் அணைத்துக் கொள்ளும் ஒரு பரந்தகோட்பாடு என்று சொல்லப்படுவது சரி தான்” என்கிறார்.

 இது போன்ற பலரும் பலவிதமான விசித்திர அனுபவங்களை திருவண்ணாமலையில் பெற்றுள்ளனர். திருவண்ணாமலை கிரிவலம் சுற்றி வருகையில் மலையே மூச்சு விடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது என்றும் பெரும் உலகம் அங்கு இயங்கி கொண்டிருப்பது போலவும் அனுபவங்கள் ஏற்பட்டன என்று பல வெளிநாட்டினர் வியந்து போற்றியுள்ளார்.அத்தகைய திருவண்ணாமலை பெருமையை இச்சிறிய வடிவில் எழுதுவது என்பது கடுகை துளைத்து கடலை புகுத்துவது போல என்றாலும், கையளவு  வாங்கி, சுவைக்கப்படும் தித்திப்பான சர்க்கரை பொங்கல்போல இதனை வாசகர்களுக்கு தருகிறோம்.

செய்தி : ப.பரசுராமன்

படங்கள்: ப.வசந்த்

The post ‘நினைத்தாலே முக்தி தரும்” ஒரே திருத்தலம்! appeared first on Swasthiktv.

சிதம்பரம் நடராஜர் தெரிந்ததும் தெரியாததும்

$
0
0

 இந்த உலகத்தின் ஒட்டு மொத்த மையப்புள்ளி அமைத்திருக்கும் இடமாக, தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மையை கண்டு, இன்றைய நவீன விஞ்ஞான உலகம் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளது.

  images (1)சிதம்பரம் நடராஜர்கோவில், இன்றைய அறிவியலுடன் மட்டுமல்ல, மனிதர்களின் உடற்  கூறுடன் பொருத்துவதும் அதிசயமே, ஆகவே தான் நம்மை, அங்கு சென்று வழிபட வைத்து, உலகத்தின் காந்தசக்திக்கு கட்டுப்பட்டு, நோயின்றி வாழ, நம் முன்னோர் வழிகாட்டியுள்ளனர் இக்கோவிலின் அற்புதங்களும், ரகசியங்களும், ஆச்சர்யங்களும் ஏராளம் இன்னும், மனித ஆற்றலினால் கண்டுபிடிக்க இயலாத, பேருண்மைகள் இக்கோவிலின் அமைப்பில் புதைந்துபோய் உள்ளன.

   சர்வதேச ஆன்மிக அமைப்புகள், கடந்த எட்டு ஆண்டுகளாக, சில கோடி டாலர்கள் செலவு செய்து,தீவிர ஆராய்ச்சி நடத்தி, சிதம்பரம் நடராஜர் கால்பெருவிரலில்தான், மொத்தபூமியின் காந்தமையப்புள்ளி இருப்பதாக கண்டுபிடித்துள்ளன. இதை, பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிந்து,  இக்கோவிலை, நம் முன்னோர் கட்டினர் அவர்கள், ஆன்மிகத்தின் உள் அறிவியலை நவீன ஆய்வகங்கள், விலை உயர்ந்த நவின கருவிகள் ஏதும் இல்லாத அந்தகாலத்தில், இதை முன்னோர் கண்டறிந்துள்ளனர் என்பது,  நம்மை வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச்செல்கிறது. அணுத்துகள்கள் அசைந்தபடியே இருக்கும் என்ற உண்மையை, ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து, அதைபூமியின் மையப்புள்ளியில் அமர்த்தியது பெரிய சாதனை தான்.

   இதை 5,000 ஆண்டுகளுக்கு முன்பே, கண்டறிந்த திருமூலரின் சிந்தனை ஆற்றலும், சக்தியும் மகத்தானது, திருமூலரின் திருமந்திரம், உலகிற்கேவழிகாட்டும் அறிவியல் நூலாகும். இதை உணர, இன்றைய அறிவியல் மேலும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம் ‘சிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியம் என்றுபலரும், பலதகவல்களை கூறிவரும் வேளையில், கோவிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த விவரங்கள் அளவிட இயலாவை முன்னோர் செய்த அனைத்தும் செயல்களும், ஒருதெளிவான சிந்தனையை நோக்கியேபயணித்துள்ளது. மன்னர்கள்களுக்கு, பின்னால் இருக்கிற பல அற்புதங்கள், அதைக்கட்டியவர்களின் நுண்ணறிவை வெளிப்படுத்துகிறது.

images (9)   மனிதஉடலை அடிப்படையாகவைத்து அமைக்கப்பட்டுள்ள, சிதம்பரம் கோவிலில், ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும், ஒன்பது வாயில்களை குறிக்கின்றன. கோவிலின் விமானத்தின் மேலே உள்ள பொற்கூரை, 21,600 தங்கத்தகடுகள் மூலம் வேயப்பட்டுள்ளது இது, ஒருமனிதன், தினமும் சராசரியாக, 21,600 முறைசுவாசிக்கிறான் என்பதை குறிக்கிறது. இந்த தங்கத் தகடுகளை பொருத்த, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, இந்த எண்ணிக்கை, மனித உடலில் இருக்கும் மொத்த நாடிகளையும் குறிக்கின்றன, இதில் பல, கண்ணுக்குத் தெரியாத, உடலின் பல பாகங்களுக்கு சக்தியை சேர்ப்பவையும் அடங்கும். திருமூலர், திருமந்திரத்தில், ‘மானுடராக்கை வடிவு சிவலிங்கம், மானுடராக்கை வடிவு சிதம்பரம், மானுடராக்கை வடிவு சதாசிவம், மானுடராக்கை வடிவு திருக்கூத்தே” என்று   கூறுகிறார். அதாவது   மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்” என்ற பொருளைக் பொன்னம்பலம், சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டுள்ளது இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும், இற்த இடத்தை அடைய, ஜந்து படிகளை ஏற வேண்டும். இந்த படிகள், பஞ்சாட்சர படிகள் என அழைக்கப்படுகின்றன.

   அதாவது,’சி,வா,ய,ந,ம, “ என்ற ஐந்து எழுத்தே அது கனகசபை, பிறகோவில்களில் இருப்பதைபோன்று, நேரான வழியாக இல்லாமல், பக்கவாட்டில் வருகிறது. இந்த கனகசபை தாங்க, நான்கு தூண்கள் உள்ளன. இது நான்கு வேதங்களையும் குறிக்கின்றன. பொன்னம்பலத்தில், 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும், 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும், 64+64 மேற்பலகைகளை பீம் கொண்டன இது, 64 கலைகளை குறிக்கின்றன. இதன் குறுக்கில் செல்லும் பலவகைகள், மனித உடலில் ஓடும்பல ரத்த நாளங்களை குறிக்கின்றன.

MAHAKUMBABISHEKAM__2391752f   பொற்கூரையின் மேல் இருக்கும் ஒன்பது கலசங்கள், ஒன்பது வகையான சக்தியை குறிக்கின்றன. அர்த்த மண்டபத்தில் உள்ள ஆறு தூண்கள், ஆறு சாஸ்திரங்களையும், அர்தத மண்டபம் அருகில் இருக்கும் மண்டபத்தில் உள்ள, 18 தூண்களும், 18 புராணங்களையும் குறிக்கின்றன.சிதம்பரம் நடராஜரின், ஆனந்ததாண்டவம் என்ற கோலம், ‘காஸ்மிக்டான்ஸ், என்று பலவெளிநாட்டு அறிஞரிகளால் அழைக்கப்படுகிறது. இந்துமதசாஸ்திர, சம்பிரதாயங்கள் அறிவியல் ரீதியானவை அவை, மனிதனைமேம்படுத்த, உயர்ந்த தத்துவங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டவை.

சிதம்பரகசியம்: சித்  + அம்பரம்   ஸ்ரீ   சிதம்பரம்

    சித் அறிவு, அம்பரம் வெட்டவெளி, மனிதா உன்னிடம் ஒன்றுமே இல்லை என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.சிதம்பர ரகசியம் என்பது, சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில், சபாநாயகரின் வலதுபக்கத்தில் உள்ளது, ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே, திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வதளமாலை ஒன்று சுவரில் தொங்கிவிடப்பட்டுக்காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதை உண்ர்த்துவதே அகண்டபெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இது தான், சிதம்பரர் சிவனின்  ரூபங்களில் ஒன்றான நடராஜர் எனப்படும் நடன அவதாரக்கோலம் என்று  கூறும்போதே அடுத்து நினைவுக்கு வருவது சிதம்பரம் நடராஜர்கோயில். அந்த அளவுக்கு இந்த  திருத்தலம் அகிலமெங்கும் பிரசித்தம். அந்த அகிலப் பிரசித்திக்கு எல்லா வகையிலும் தகுதிவாய்ந்த ஒருபிரமாண்டகோயில் வளாகம்தான் இந்த நடராஜர் கோயில்.

அமைவிடம் : சென்னை, கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் இருந்து சிதம்பரம் செல்ல பஸ் வசதிஉள்ளது

தொடர்புக்கு : 9345005815

செய்தி : ஆர்.காயத்திரி

படங்கள்: ப.பரசுராமன்

The post சிதம்பரம் நடராஜர் தெரிந்ததும் தெரியாததும் appeared first on Swasthiktv.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 20/05/2016

பக்தர்களின் தீராத குறை தீர்க்கும் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி

$
0
0

 கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி என்ற பெயரில் சுவாமி உள்ளார். இவரை வணங்கினால் தீராத குறையும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை….

Padmanabhaswamy-Temple-in-Thiruvananthapuram

  பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷ மதிப்பைப்போல சோமநாதர் கோயிலில் ஆறு மடங்கு மதிப்பு வாய்ந்த ஆபரணங்களும் விளக்கு முதலானபூஜைப் பொருட்களும் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்தியப்பேரரசில் மிகவும் புகழ்பெற்றவர்கள் சுத்தோதனர், அசோகர், சந்திரகுப்தமெளஜீயர், சமுத்திரகுப்தமெளஜீயர்,ஹர்ஷவர்த்தனர் போன்ற மன்னர்கள். அவர்கள் தம்முடைய ஆஸ்திகளையும் பலப் பல கோயில்களுக்கு தானமாக தந்தனர். எதிரிகளிடமிருந்தும் கள்வர்களிடமிருந்தும் அந்த அரும் பெரும் சொத்துக்களைக் காக்க, கோயில் நிர்வாகிகள், சுரங்கத்தை வெட்டி உள்ளே அவற்றை பத்திரப்படுத்தினர்.

 எகிப்தில் மிகப் பிரசித்தமான ரூபிகாமன் பிரமிடில் உள்ள திரவியங்கள் உலகப் பிரசித்திபெற்றவை. ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் வண்ணம், தமிழகத்தில் சிதம்பரம், சீர்காழி, தஞ்சை பெரிய கோயில், குற்றாலம், திருவண்ணாமலை, திருவரங்கம், திருவானைக்கா, ராமேஸ்வரம், திருவாரூர், பழனி, திருச்செந்தூர், அழகர்கோயில் போன்ற எண்ணற்ற கோயில்களில் பாதுகாப்பாக இருக்கும் பொக்கிஷங்களைக் கணக்கிட முடியாது என்கிறது நாடி. ‘குபேரனுக்குதனத்தினும் மிகுத்து கிடக்கு அம்பலத்தடியதனிலே” என்கிறார் அகத்தியர்.

padmanabhaswamy-tempel கேரளத்தில் உள்ள ஏழு பரசுராமசேஷத்திரங்களில் சித்தர்களாலும் ரிஷிகளாலும் போற்றப்படுவது பத்மநாப சுவாமிகோயில். இங்குள்ள தீர்த்தம் பத்மநாப தீர்த்தம், பிற்காலத்தில் பத்ம தீர்த்தமாகியது. பன்னிரண்டாயிரம் சாளக்ராம கற்களால் உருவாக்கப்பட்டவர் மூலவர். ‘கட்டுச்சக்கர யோகம்” என்ற ஒன்பதாயிரமூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு மருந்தை மூலவருக்கு பூசி உள்ளனர் நம் முனிவர்கள். ஆதலால் மூலவருக்கு சாத்தப்படும், அர்ச்சிக்கப்படும் மலர்களை மயிலிறகினால்தான் அகற்றுவார்கள். ‘மூன்று வாயிலில் என்னைதரிசனம் செய்” என்று திவாகர முனிவருக்கு பத்மநாபர் ஆணையிட, மூன்று வாயில்களை நிர்மாணம் செய்தனர். இலுப்பை மரத்தடியில் யோக நித்திரை செய்யும் பத்மநாப சுவாமியின் முதல் வாயிலில் அவரது சிரத்தையும் சிவபெருமானுக்கு அருள்பாவிக்கும் பாவனையில் உள்ள வலது கரத்தையும் தரிசிக்கலாம். சிவனும், ஹரியும் நானே என்ற தத்துவம். இரண்டாம் வயிலில் பூமிதேவியும் திருமகளும் கூடியபத்மநாபர், உற்சவர் தரிசனம். மூன்றாவது வாயிலில் திருவடி தரிசனம்.

  சந்நதிக்கு முன் ஒற்றைக்கால் மண்டபம் இருக்கிறது. இங்கே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்பவரின் சொத்து முழுவதும் பத்மநாபனையேசேரும் என்பதினால், மன்னர் மார்த்தாண்டவர்மாவைத்தவிர வேறு யாருக்கும் அவ்வாறு சாஷ்டங்க நமஸ்காரம் செய்ய அனுமதி இல்லை. அதனாலேயே மன்னரின் சொத்து முழுவதும் பத்மநாபரையே சேர்ந்ததாக இருக்கிறது.

Sree-Padmanabhaswamy-Temple-Thiruvananthapuram பத்மாநாப சுவாமி கருவறையில், அவரது தலைக்கு நேர்கீழாக சுரங்கம் உள்ளது. இங்கு ஸ்ரீசக்கரமும் சுதர்னை சக்கரமும் தங்கபாளத்தில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்வார்கள். சுரங்கத்தில் கிடைத்தபொக்கிஷமே பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது. ஆனால் மூலவரின் தலைக்கு நேர் அடியில் இதனினும் அதிகமான மதிப்புடைய தங்க, வைர நகைகள் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. நரசிம்மமூர்த்தி இந்த ஆபரணங்களுக்கு காவலாக இருக்கிறார் என்பது பெரியோர் வாக்கு. சுரங்க அறைகளை திறந்து ஆபரணங்களை எடுப்பது என்பது தெய்வ குற்றம் என்ற கருத்தும் நிலவுகிறது. இதுவரை கண்டெடுக்கப்பட்ட ஆபரணங்களைக் கண்டுஉலகமே வியப்படைந்தது. ஆனால் இதைக்கண்டு சித்தர்களும் ரிஷிகளும் இறைவனும் வருத்தமுற்றனர் என்கிறது நாடி சாஸ்திரம்.
‘இலுப்பையடி யோக நித்திரை கொளும் அனந்த பத்மநாபனடி ஆஸ்தி கண்டார் வியக்கவே இது தனை கண்டு ரிஷியரெலாம் நோவசித்தருஞ் சினங் கொண்டனரே” என்றும்.

  ‘காவலாய் இருக்கும் சிங்கமுக ஈசனும் (நரசிங்கர்) பசுபதி நாதனொரு (நேபாள பசுபதி நாதர்) காடுறை நாகராசனும் மங்கள பேய்ச்சி முலையுண்டானும் கோடனந்த புரமய்யனுமாதி கேசவனும் வாடி நிற்ப” என்றும் சொல்கிறது விசுவாமித்திரர் நாடி..
பொக்கிஷத்தை எடுத்ததினால் நரசிங்கபெருமாளும் அனந்தங்காடு நாகராஜ சுவாமியும் வில்ல மங்களத்திலிருக்கும் கிருஷ்ணபரமாத்மாவும் காசர்கோட்டில் கோயில் கொண்டிருக்கும் அனந்தபுரத்து பெருமாளும் நேபாளத்திலிருக்கும் பசுபதிநாதரும் வருத்தம் கொண்டனராம்.

   அகத்தியர் இக்கோயிலைப் பற்றி, தேவர்கள் கொண்டாடும் கோயில், திருமகள் நித்ய வாசம் செய்யும் கோயில், தீராத குறை தீர்க்கும் கோயில், தவறு செய்பவரை தண்டிக்கும் கோயில் என்கிறார்.

அமைவிடம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கோயிலுக்கு செல்ல பஸ்வசதி உள்ளது.

தொடர்புக்கு :-
0471-2464606

செய்தி : ப.பரசுராமன்

படங்கள் : ப.வசந்த்

The post பக்தர்களின் தீராத குறை தீர்க்கும் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி appeared first on Swasthiktv.

பாம்பன் ஸ்வாமிகள் அருளிய குமாரஸ்தவம்

$
0
0

  பரம முருக பக்தரான பாம்பன் ஸ்வாமிகள் 1848ம்  ஆண்டில் ராமேஸ்வரத்தில் சாந்தப்ப பிள்ளைக்கும், செங்கமலத் தம்மையாருக்கும் பிறந்தார். இவரது சொந்த ஊர் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் என்பதால் இவருக்கு பாம்பன் சுவாமிகள் என்று பெயர் வந்தது. அருணகிரிநாதரை தனது ஞான குருவாகக் கொண்டார்.

ஸ்ரீ குமாரஸ்த்தவம்

ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ
ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ
ஓம் ஷட்கிரீவ பதயே நமோ நமஹ
ஓம் ஷட்கிரீட பதயே நமோ நமஹ
ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ
ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ
ஓம் நவநிதி பதயே நமோ நமஹ
ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ
ஓம் நரபதி பதயே நமோ நமஹ
ஓம் சுரபதி பதயே நமோ நமஹ
ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ
ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ
ஓம் தபராஜ பதயே நமோ நமஹ
ஓம் இகபர பதயே நமோ நமஹ

ஓம் புழல்முனி பதயே நமோ நமஹ
ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ
ஓம் நயநய பதயே நமோ நமஹ
ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ
ஓம் குஞ்சரீ  பதயே நமோ நமஹ
ஓம் வல்லீ பதயே நமோ நமஹ
ஓம் மல்ல பதயே நமோ நமஹ
ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ
ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ
ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ
ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ
ஓம் அபேத பதயே நமோ நமஹ
ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ
ஓம் வியூஹ பதயே நமோ நமஹ
ஓம் மயூர பதயே நமோ நமஹ
ஓம் பூத பதயே நமோ நமஹ
ஓம் வேத பதயே நமோ நமஹ

ஓம் புராண பதயே நமோ நமஹ

ஓம் பிராண பதயே நமோ நமஹ
ஓம் பக்த பதயே நமோ நமஹ
ஓம் முக்த பதயே நமோ நமஹ
ஓம் அகார பதயே நமோ நமஹ
ஓம் உகார பதயே நமோ நமஹ
ஓம் மகார பதயே நமோ நமஹ
ஓம் விகாச பதயே நமோ நமஹ
ஓம் ஆதி பதயே நமோ நமஹ
ஓம் பூதி பதயே நமோ நமஹ
ஓம் அமார பதயே நமோ நமஹ
ஓம் குமார பதயே நமோ நமஹ

குமாரஸ்தவம்” என்ற இந்த நூல் ஆறெழுத்து மந்திர முறையாகும்.இந்நூலில் உள்ள முதல் ஆறு அடிகள் ஆறு என்ற எண் அமையவருவது குறிப்பிடத்தக்கது. இதில் குமாரபிரானின் திருமுகம், திருக்கைவேல்,மயில்,இரு தேவியர்கள் போன்ற அனைத்தும் பேசப்படுகிறது. இதனைப் பாராயணம் செய்வோர் குமாரப் பெருமானின் இரு தேவியர்களோடு மயில்மீது அமர்ந்த காட்சியில் தரிசிக்கப் பெறுவர் என்றும் முருகப் பெருமானின் திருவருளும், பாம்பன் சுவாமிகளின் குருவருளும், மற்றும் சகல செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வார்கள்.

இவ்வாறு முருகப்பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு 6666 பாடல்களையும் 32 வியாசங்களையும் இயற்றி அருளினார் பாம்பன் சுவாமிகள்.

The post பாம்பன் ஸ்வாமிகள் அருளிய குமாரஸ்தவம் appeared first on Swasthiktv.

Viewing all 15459 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>