Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

‘இங்கே வா, உனக்கு ஒரு அற்புதம் காண்பிக்கிறேன்’ என்று சொன்ன ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

$
0
0

    காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வரதராஜ ஜோசியர்-மரகதம் தம்பதியனருக்கு மகவாகத் தோன்றியவர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். அவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது ஒரு கிருஷ்ணர் பொம்மையை அவர் கையால் தொட்டு வாங்க, அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்தக் கூடையில் இருந்த நூற்றுக்கணக்கான பொம்மைகளும் விற்றுத் தீர்ந்து விட்டது. அதனால், ‘தங்கக் கை’ சேஷாத்ரி என்று இவர் அழைக்கப்பட்டார்.

  வேதம், பாஷ்யம், ஸ்லோகம் என அனைத்தையும் சிறுவயதிலேயே நன்கு கற்றுணர்ந்த இவர், இளம் வயதிலேயே தந்தையை இழந்தார். சிற்றப்பாவால் அன்புடன் வளர்க்கப்பட்டார். ஆனாலும் அவரது கவனம் உலகியலில் செல்லவில்லை. ஆன்மீகத்தையே மனம் விரும்பியது. வடநாட்டிலிருந்து காஞ்சிபுரத்திற்கு வந்திருந்த  பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீட்சை பெற்றார். அதன் பின் மிகக் கடுமையான யோக, தவப் பயிற்சிகளை மேற்கொண்டார். உண்ணாமல், உறங்காமல் மயானத்தில் அமர்ந்து தவம் புரிந்தார். இளம் பருவத்திலேயே ஞான வைராக்ய நிலையை அடைந்தார். அஷ்டமா சித்திகள் உட்பட பல்வேறு ஆற்றல்களும் கைவரப்பெற்றார். தாயின் மறைவுக்குப் பின் அவரது அறிவுரையின் படி திருவண்ணாமலை திருத்தலத்தை வந்தடைந்தார். ஞானியரை ஈர்க்கும் ஞான மலை தன்னுள் இவரை ஈர்த்துக் கொண்டது.

Thiruvannamalai1  சுவாமிகள் அங்கு வாழ்ந்த காலத்தில் தம்மை நாடி வந்தவருக்கு அருளாற்றலை வாரி வழங்கினார். அவரது கை பட்டால் தொட்டது துலங்கியது. அவர் ஒரு கடைக்குள் நுழைந்து பொருட்களை வீசி எறிந்தால் அவர்களுக்கு நல்ல லாபம் கிட்டியது. அவர் ஆசிர்வதித்தாலோ, கட்டியணைத்தாலோ அவர்களது பாவம் நீங்கியது. பித்தரைப் போலவும், மனநிலை பாதித்தவரைப் போன்றும் காட்சியளித்த சுவாமிகள் முக்காலமும் உணர்ந்தவராக இருந்தார். அதேசமயம் குறுகிய நோக்கத்துடனும், தீய எண்ணத்துடனும் தம்மை நாடி வந்தவர்களை விட்டு ஒதுங்கினார். அவர்கள் கண்களுக்குப் படாமல் தனித்திருந்தார். தான் என்ற அகந்தை மிகுந்தவர்களையும், ஆணவம் பிடித்த தீயவர்களையும் மகான் புறக்கணித்தார். உண்மையான பக்தியும், அன்பும் உள்ளவர்களின் ஆன்ம முன்னேற்றத்திற்கு உதவினார். தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு அற்புதங்கள் புரிந்து பலரது கர்மவினைகள் அகல மகான் காரணமாக இருந்தார்.

மகானின் அற்புதம்

    சேஷாத்ரி சுவாமிகள் எப்போதும் திருவண்ணாமலையில் உள்ள கம்பத்தடி இளையனார் மண்டப வாசலிலேயே உட்கார்ந்திருப்பார். புதிதாக வந்திருக்கும் பலரும் அவரை யாரோ ஒரு சாதாரண பரதேசி என்றே எண்ணுவர். அவரது அருமை, பெருமை தெரிந்தவர்களோ மகானின் பார்வை எப்போதும் தம் மேல் படும், தமது கர்ம வினை அகலும் என்று காத்திருப்பர். சிலருக்கு தங்கள் தவப்பயனால் மகானின் அருள் கிடைக்கும். சிலருக்குக் கிடைக்காது.  சில வெளியூர் பக்தர்கள் சேஷாத்ரி சுவாமிகள் மீது அதிகப் பற்று வைத்திருந்தனர். ஒரு முறை அவரை தரிசனம் செய்ய வந்த அவர்கள், அவரை தங்கள் ஊருக்கே கூட்டிச் செல்ல முடிவெடுத்தனர். எனவே சுவாமிகள் மறுத்தும் கேளாமல், அவரை தங்கள் கையோடு கூட்டிக் கொண்டு ரயில் ஏறி விட்டனர். ரயிலும் புறப்பட்டு விட்டது. திருவண்ணாமலை எல்லையைத் தாண்டும் சமயம். ஓடும் ரயிலிலிருந்து மகான் கீழே குதித்து விட்டார். உடம்பெல்லாம் காயம். ரயிலும் நின்று விட்டது.

     கார்டும் டிரைவரும் வந்தனர். மகானைக் குற்றம் சாட்டினர். அவர்கள் மகானைப் பற்றி அறியாதவர்கள் என்பதால் மகானை பலவாறாகத் திட்டினர். அதுபோன்றே மகானின் அருமை தெரியாத சிலர் இதனை தற்கொலை முயற்சி என்றும், அவரைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் சொல்லினர். அவ்வாறே மகானைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்காக குண்டுக் கட்டாக ரயிலில் ஏற்றினர். டிரைவரும் ரயிலைக் கிளப்பினார். ரயில் ஓர் அங்குலம் கூடக் கிளம்பவில்லை. டிரைவர் பல முறை முயற்சி செய்தும் பலனில்லை. வண்டி நகரவே இல்லை. இந்த நிகழ்ச்சியைப் பார்க்கக் கூட்டம் சேர்ந்து விட்டது. அதில் சில சேஷாத்ரி பகவானின் பக்தர்களும் இருந்தனர். நடந்ததை அறிந்தனர். கார்டிடமும், டிரைவரிடமும், மகானின் பெருமையை விளக்கினர். அவரை விடுவிக்கும்படி வேண்டினர். பகவானைக் கடத்திய பக்தர்களையும் கண்டித்தனர். டிரைவரும், கார்டும் தங்கள் செயலுக்காக வருந்தி சுவாமிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். மகானைக் கூட்டிக் கொண்டு சென்ற பக்தர்களும், தங்களை மன்னிக்குமாறு வேண்டி அவர் தம் தாள் பணிந்தனர். ரயிலிலிருந்து சுவாமிகள் கீழே இறக்கி விடப்பட்டார். உடனே அவர் ‘ஹா ஹா’வெனச் சிரித்தார். டிரைவரும் ரயிலைக் கிளப்ப முயற்சித்தார். மெதுவாக ரயிலைத் தடவிக் கொடுத்த மகான், பின்னர் ‘போ, போ’ என்றார். உடன் ரயில் எந்தத் தடங்கலுமில்லாமல் புறப்பட்டுவிட்டது. காண்போர் வியக்கும் வண்ணம் நடந்த இந் நிகழச்சியின் மூலம் சேஷாத்ரி சுவாமிகளின் பெருமை மூலை முடுக்கெல்லாம் பரவியது.

      ஒருமுறை வெங்கடேச முதலியார் என்னும் அடியவரின் வீட்டிற்கு சுவாமிகள் சென்றிருந்தார். அங்கு இருந்த அவரது துணைவியார் சுப்புலக்ஷ்மி அம்மாள் மகானை வலம் வந்து தொழுதார். ‘இங்கே வா, உனக்கு ஒரு அற்புதம் காண்பிக்கிறேன்’ என்று சொன்னார் சுவாமிகள். கொல்லைப் புறத்திற்குச் சென்றார். வானத்தைப் பார்த்து ’வா வா’ என்று சொன்னார். அவ்வளவுதான். சற்று நேரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் அந்தத் தோட்டத்தில் வந்து இறங்கின. பலவித வண்ணங்களில், பல வித நிறங்களில் இருந்த அவை சுவாமிகளின் தோள் மீதும், தலை மீதும் அமர்ந்து குரலெழுப்பின. அவற்றைப் பார்க்கப் பெரும் கூட்டம் கூடி விட்டது. ’போதும் விளையாட்டு’ என்று சுப்புலக்ஷ்மி அம்மாள் சுவாமிகளிடம் சொன்னதும் சுவாமிகள் ‘சூ சூ’ என்றார். சற்று நேரத்தில் அவை ஒவ்வொன்றாகப் பறந்து சென்று விட்டன.

     தம்மை அணுகிய பல்லாயிரக்கணக்கான மக்களை மலை சுற்ற வைத்த பெருமை இம் மகானுக்குண்டு. அண்ணாமலையில் கால் வைத்த நாள் முதல் தம் இறுதிக்காலம் வரை வேறு எங்கும் செல்லாது, அண்ணாமலையையே தமது இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து முக்தியடைந்தார். திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில், அக்னி லிங்கத்தை அடுத்து, ரமணாச்ரமத்திற்கு முன்னால் இம்மகானின் மகா சமாதி ஆலயம் அமைந்துள்ளது.

The post ‘இங்கே வா, உனக்கு ஒரு அற்புதம் காண்பிக்கிறேன்’ என்று சொன்ன ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் appeared first on SWASTHIKTV.COM.


செல்வ செழிப்போடு வாழ குபேரர் யந்திர பூஜை

$
0
0

 யந்திரத்தை வைத்து வழிப்பட்டால் பல பெரிய நடக்க முடியாத விஷயங்கள் எல்லாம் நடக்கும். யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தவை. இந்த பூஜை முறைகளை பலவேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. இந்த யந்திர பூஜையை ஐப்பசி மாதங்களில் மட்டுமே செய்வது சிறப்பு(காலை 10-11 அல்லது மாலை 5-6 தொடங்குவது சிறப்பு).

ஆகர்ஷன பூஜை முறைகள்:

    குபேரர் உருவம் அல்லது படம் எடுத்துக்கொண்டு, பூஜை அறையில் குபேர யந்திரத்தை போல் அரிசி மாவினால் கோலமிடவும், அதில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு-ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவும். நாணயத்தின் மேல் ஒரு சிகப்பு ஒரு வெள்ளை பூவையும் வைக்கவும். கோலத்தின் முன் சுத்தமான நெய் தீபம் மண் அகலில் ஏற்றவும். இதை வடக்கு திசையில் செய்தால் சிறப்பு-அல்லது பூஜை அறையில் செய்யலாம். விளக்கேற்றியதும் கீழ் கண்ட குபேர மந்திரத்தை 11 முறை கூறி வழிபடவும்.

yathira poojai

மந்திரம்: ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம் க்லீம் வித்தேஸ்வராய நமஹ.

 பிறகு நிவேதனம் செய்து பூஜையை முடித்து கொள்ள வேண்டும்.

குறிப்பு:

   விளக்கு அணைந்ததும் 9 நாணயங்களையும் தனியாக வைத்து கொள்ளவும். மறு நாள் அதே நாணயத்தை உபயோகிக்கலாம். இதை ஐப்பசி மாதம் முழுதும் செய்து வர வேண்டும், அப்படி செய்து வர குபேரர் நம் அனைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி, செல்ல செழிப்போடு வாழ வைப்பார்.

 ஐப்பசி மாதம் முடிந்ததும். ஒவ்வொரு மாதமுடிவிலும் ,ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளியிலும் இதை செய்து வர அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.

The post செல்வ செழிப்போடு வாழ குபேரர் யந்திர பூஜை appeared first on SWASTHIKTV.COM.

பதினெண் சித்தர்களின் பெயர்கள்

$
0
0
  1. திருமூலர்,
  2. இராமதேவர்,
  3. கும்பமுனி,
  4. இடைக்காடர்,
  5. தன்வந்திரி,
  6. வான்மீகி,
  7. கமலமுனி,
  8. போகநாதர்,
  9. குதம்பைச் சித்தர்,
  10. மச்சமுனி,
  11.  கொங்கணர்,
  12. பதஞ்சலி,
  13. நந்திதேவர்,
  14. போதகுரு,
  15. பாம்பாட்டிச் சித்தர்.
  16. சட்டைமுனி,
  17. சுந்தரானந்த தேவர்,
  18. கோரக்கர்.

இது ஒரு பட்டியல்;

  1. அகப்பேய் சித்தர்,
  2. அழுகணிச் சித்தர்,
  3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்,
  4. சதோகநாதர்,
  5. இடைக்காட்டுச் சித்தர்,
  6. குதம்பைச் சித்தர்,
  7. புண்ணாக்குச் சித்தர்.
  8. ஞானச்சித்தர்,
  9. மௌனச் சித்தர்,
  10. பாம்பாட்டிச் சித்தர்,
  11. கல்லுளி சித்தர்,
  12. , கஞ்சமலைச் சித்தர்
  13. நொண்டிச் சித்தர்
  14. விளையாட்டுச் சித்தர்,
  15. பிரமானந்த சித்தர்,
  16. கடுவெளிச் சித்தர்,
  17. சங்கிலிச் சித்தர்,
  18. திரிகோணச்சித்தர்.

நவநாத சித்தர்கள்; 

  1. வான்மீகர்,
  2. பதஞ்சலியார்,
  3. துர்வாசர்,
  4. ஊர்வசி,
  5. சூதமுனி,
  6. வரரிஷி,
  7. வேதமுனி,
  8. கஞ்சமுனி,
  9. வியாசர்,
  10. கௌதமர்

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர்;

  1. காலாங்கி,
  2. கமலநாதர்,
  3. கலசநாதர்,
  4. யூகி,
  5. கருணானந்தர்,
  6. போகர்,
  7. சட்டைநாதர்,
  8. பதஞ்சலியார்,
  9. கோரக்கர்,
  10. பவணந்தி,
  11. புலிப்பாணி,
  12. அழுகணி,
  13. பாம்பாட்டி,
  14. இடைக்காட்டுச் சித்தர்,
  15. கௌசிகர்,
  16. வசிட்டர்,
  17. பிரம்மமுனி,
  18. வியாகர்,
  19. தன்வந்திரி,
  20. சட்டைமுனி,
  21. புண்ணாக்கீசர்,
  22. நந்தீசர், 
  23. அகப்பேய்,
  24. கொங்கணவர்,
  25. மச்சமுனி,
  26. குருபாத நாதர்,
  27. பரத்துவாசர்,
  28. கூன் தண்ணீர்,
  29. கடுவெளி,
  30. ரோமரிஷி,
  31. காகபுசுண்டர்,
  32. பராசரர்.
  33. தேரையர்,
  34. புலத்தியர்,
  35. சுந்தரானந்தர்,
  36. 36.திருமூலர்,
  37. கருவூரார்,
  38. சிவவாக்கியர்
  39. தொழுகண்,
  40. நவநாதர் (அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர்,
    ஐ. கோரக்க நாதர்)

   41.அஷ்டவசுக்கள்,

    42.சப்த ரிஷிகள்,

    இவ்வாறு பதினெட்டுப்  புராணங்கள்,  பதினெட்டுப்  படிகள், பதினெண்  குடிமை,  பதினெண்  பாஷை என்று வரையறை செய்தது போல் சித்தர்களையும்  பதினெண்  சித்தர்களாக ஒரு வரையறை செய்யலாம். சங்கப் புலவர்கள்   செய்த  நூல்கள்  பத்துப்பாட்டு,   எட்டுத்தொகை,  பதினெண் கீழ்க்கணக்கு  என்று  எண்ணிக்கையில் தொகுத்தது போலவே இப்பதினெண் சித்தர்  பாடல்களும்  பெரிய  ஞானக்கோவை என்ற நூலாகத் தொகுத்தனர். ஏனைய சித்தர் பாடல்கள் அவரவர் பெயராலேயே தொகுக்கப்பட்டன.

 இந்தப் பதினெண் சித்தர் பாடல் தொகுதியினுள் அகப்பேய், அழுகணி, கடுவெளி,  குதம்பை, பாம்பாட்டி, சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், காகபுசுண்டர்,  ஞானசித்தர்,  கந்துளிச்  சித்தர், கஞ்சமலைச் சித்தர், இடைக் காட்டுச்  சித்தர்,  புண்ணாக்குச்  சித்தர்,  குதம்பைச் சித்தர், விளையாட்டுச் சித்தர், ஆகிய பாடல்கள் உள்ளது.

The post பதினெண் சித்தர்களின் பெயர்கள் appeared first on SWASTHIKTV.COM.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 07/06/2016

பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் தென்ஆகோபிலம்

$
0
0

        நவக்கிரகங்களில் சூரியன் மையமாக அமைத்து  இருப்பதுபோல் அட்டநரசிம்மர் திருத்தலங்களுள் பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருத்தலம் மையமாக அமைந்துள்ளது. பூவரசன்குப்பத்திற்கு கிழக்கே சிங்கர் கோயில், மேற்கே பரிக்கல்  அந்திலி வடக்கே சோளிங்கர், சிங்கப்பெருமாள் கோயில் தெற்கே சிந்தலவாடி நாமக்கல் ஆகியவை அமைந்துள்ளன.தட்சிணபினாகினியான பெண்ணையாற்றில் உத்தரபாகமான வடதிசைக்கரையில் அமைந்திருக்கக்கூடிய இத்திருத்தலம் தென் அகோபிலம் என அழைக்கப்பெரும் சிறப்புடையதாகும்                                    .

3132818609_620c044b33 கிழக்குத் திசையை நோக்கியுள்ள இக்கோயில் முற்காலத்தில் மூன்று பிரகாரங்களுடனும், நான்கு மாடவீதிகளிலும் நான்கு இராஜ கோபுரங்களுடனும் இருந்துள்ளன.அட்ட நரசிம்மர் திருத்தலங்களுள் மையமாக அமைந்துள்ள இத்தலத்தின் கருவறையில் புன்னகை பூத்த முகத்துடன் கூடிய இலட்சுமி நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். பின்புற இரு கைகளில் சங்க சக்கராரியாய், முன்புற இடக்கையால் இலட்சுமியை (அமிர்த வல்லித் தாயார்) அணைத்துக்கொண்டு வலக்கரத்தால் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இடக்காலை மடக்கி வைத்து அதன் மீது இலட்சுமியை அமர்த்தியபடி இருக்கிறார். வலக்காலை கீழே தொங்கவிட்டிருக்க அந்தக் காலை தாமரை மலரொன்று தாங்கியபடி இருக்கிறது. நரசிம்மர் மடியில் அமர்ந்துள்ள திருமகளான இலட்சுமி தன் வலக்கரத்தால் நரசிம்மரை அணைத்துக் கொண்டிருக்கிறார். இடக்கரத்தில் பத்மத்தைப் பிடித்தப்படி காட்சி தரும் பேரழகு காணத்திகட்டாத தரிசணமாகும்.

   தாயார் அமிர்தவல்லி எனப் பெயர் பெற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு தன் ஓரு கண்ணால் நரசிம்மப் பெருமாளையும், மற்றொரு கண்ணால் பக்தர்களையும் தாயார் பார்த்துக்கொண்டிருப்பதாக ஒதீகம், கிடைத்தற்கரிய தேவாமிர்தம் போன்ற பலன்களைப் பக்தர்களுக்குக் கொடுப்பதில் வல்லமை உடையவர் இந்தத் தாயார் என்பதால் இத்தலத்தில் அமிர்தவல்லித் தாயார் எனப் பெயர் தாங்கியுள்ளார்.சந்நிதியின் எதிரே கருடாழ்வார் இலட்சுமி நரசிம்மப் பெருமானை வணங்கிய நிலையில் எழுந்தருளியுள்ளார். தென்புறம் நோக்கி பக்த ஆஞ்சநேயர் வணங்கியபடி உள்ளார்.

 இத்தலத்திலுள்ள ஸ்ரீ வரதாஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, வேணுகோபால், ஆதிசேடன், விஸ்வக்சேனர் போன்ற உற்சவத் திருமேனிகள் மிகப்பழமை வாய்ந்தவையாகும்.மகாமண்பத்தின் மேற்புறத்தின் மேற்கில் திருமாலின் திரு அவதாரங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு திசையில் இராமர், இலட்சுமணர், சீதப்பிராட்டியார், ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பங்களும், தென்திசையில் ஆதிசேடன் மீது பள்ளிகொண்ட அரங்கநாதரின் பாதங்களை திருமகளான பிராட்டியார் நீவி விடுவது போன்ற அற்புதமான புடைப்புச் சிற்பங்கள் விஜய நகர அரசர்களால் கலை நுணுக்கங்களை வெளிப்படுத்துகின்றன. மகா மண்டபத்தில் மேற்புறத்தில் மத்தளம் வாசிப்போர், முழவு வாசிப்போர், கோலாட்டமிடும் பேண்டிர் போன்ற கலைப் படைப்புகளும் காண்போர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் படைக்கப்பட்டுள்ளன.

 உற்சவ மண்டமான ஊஞ்சல் மண்டபத்தில் வேணுகோபாலன், ஆதிசேடன், விஷ்வக்சேனர், ஆஞ்சநேயர்,கருடாழ்வார், யோக நரசிம்மர், தசாவதாரச் சிற்பங்கள், கிருஷ்ண,வாசுதேவர், புருஷோத்தமர், பிரதியும்னர், சங்கர்ஷணர், அநிருத்தர் போன்ற சிற்பங்கள் விஜய நகரப்பேரரசின் கலைத்திறனை எடுத்துக்காட்டி நம்மை வியக்க வைக்கின்றன.மேலும் இம்மண்டபத்தின் புடைப்புச் சிற்பங்களில் ஓரு பீடத்தின் மீது திருநாமம் இன்றி வில் அம்புடன் புதுமையான செய்தியாகும். கோயிலின் இடப்புறம் ஆண்டாள் சந்நிதியும் வலப்புறம் தாயார் சந்நிதியும் அமைந்துள்ளன. வடகிழக்கு  மூலையில் (ஈசான மூலை) முற்றிலும் கருங்கல்லால் ஆன உறைக்கிணறு உள்ளது. இது இக்கோயில் கட்டப்பட்ட காலத்திலேயே படைக்கப்பட்டதாகும். 3 அடி விட்டமும் 25 அடி ஆழம் வரை கருங்கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ளது. இக்கிணறு திருவயிந்திபுரம் நிகரானதாகும்.

d5b590a8-fd29-468c-8011-4529e0f25c3c_Poovarsankuppam-lakshminarasimhar  மகா மண்டபத்தின் வலப்புறத்தில் ஓரு அறை பன்னெடுங்காலத்திற்கு முன்னர் அடைத்தே வைக்கப்பட்டிருந்தது. மொகலாய மன்னர்களின் படையெடுப்பிற்குப் பயந்து இக்கோயிலிருந்த உற்சவத் திருமேனிகளை இந்த அறையினுள்ளே புதைத்து வைத்து சுவர் போன்று எழுப்பி மூடி வைத்திருந்தனர். தமிழகத்தில் பல கோயில்களில் இதைப்போன்றே நடந்துள்ள குறிப்பிடத்தக்கது விஜயநகர பேரரசர்களால் மொகலாய அரசு வீழ்த்தப்பட்டவுடன் அறைக்குள் மறைத்து வைத்திருந்த உற்சவ மூர்த்திகளை மீண்டும் கொணரப்பட்டு பூஜைகள் நடத்தப்பெற்றன. விஜய நகர மன்னர் கிருஷ்ண தேவராயஇக்கோயிலுக்கு வருகைப் புரிந்து பூஜைகள் நடக்க ஏற்பாடுகள் செய்து திருப்பணிகளையும் நடத்தச் செய்தார்.தற்போது இக்கோயிலின் திருப்பணி சுபானு வருடம் கார்த்திகை மாதம் 17 -ஆம் தேதி 3.12.2003 புதன்கிழமை உத்திராட்டாதி நட்சத்திரம் நன்னாளில் தொடங்கப்பெற்று நடைபெற்று 8.11.2005-ல் அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆண்டாள் சந்நிதியில் திருப்பணி நடந்து கொண்டிருந்தபோது பூமிக்கடியில் ஸ்ரீ வரதராஜப் பெருமானின் உற்சவத் திருமேனி கண்டெடுக்கப்பட்டது.

   இப்பெருமாள் கிடைத்த நேரமும் காலமும் சிறப்பிக்கும் அதிசயத்திற்கும் உரியதாகும். மகாமக தினம் கும்பகோணம் தீர்த்தவாரியன்று 6.3.2004 சனிக்கிழமை பௌர்ணமி நன்னாளில் 11 மணி 11 நிமிடத்திற்கு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் சங்கு சக்தரத்தாரிபாய் எழுந்தருளியிருக்கிறார். எனவே சக்தி மிக்க திருவுருவமாக இப்பெருமாளை ஆராதனை செய்கின்றனர். பெருமானின் இத்திருமேனி பேரரழகு வாய்ந்ததாகும். இந்த உற்சவ மூர்த்தி அகோபிலத்திலுள்ள உற்சவ மூர்த்தி போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அகோபிலத்திலுள்ள உற்சவ மூர்த்தியும் ஓரே தோற்றத்தையும் காலத்தையும் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு திருமேனிகளும் ஓரே நேரத்தில் வார்க்கப்பட்டவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் அகோபிலத்து கோயிலை எழுப்பிய அரசனே பூவரசன் குப்பம் கோயிலையும் கட்டியுள்ளான் என்பதால் அதைப் போன்ற உற்சவரை இங்கும் ஸ்தாபித்து இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

 அகோபிலத்தில் திருமால் நரசிம்ம அவதாரம் கொண்டு இரண்யனை வதம் செய்த பின்னர் பிரகலாதனுக்கு திருவருள் புரிந்து பிரகலாதன் கேட்ட வரங்களை வழங்கிய பின்னர் வானவர்களான முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் கின்னரர் கிம்புருடர்களுக்கும் ஸ்ரீ லட்சுமி  நரசிம்மராகக் காட்சியளித்தார்.அதுபோன்று திரு அவதாரக் காட்சியை எங்களுக்கும் காட்டித் திருவருள் புரிய வேண்டுமென்று பூமியிலுள்ள தவமுனிவர்கள் திருமாலை நோக்கி நதிக்கரை ஒரங்களிலும், மலைகளிலும், குன்றுகளின் மீதிருந்தும் கடுந்தவம் புரிந்தனர். முனிவர்களின் வேண்டுகோளுக்கிரங்கி வேண்டியோர் வேண்டிய இடங்களில் பல தோற்றங்களில் நரசிம்மராகத் திருமால் காட்சியளித்தார்.தட்சிணபினாகினி என்று போற்றி வணங்கப்பட்ட புனித நதியான தென்பெண்ணையாற்றின் வடகரையில் சப்தரிஷிகளான அத்திரி, வசிட்டர், ஜமதக்கனி, பரத்துவாசர், கௌதமர், காசிபர், கௌசிகர் என்னும் ஏழு முனிவர்களும் கடுந்தவம் புரிந்தனர்.

 நெடுநாள் தவத்திற்குப் பிறகு அவர்களின் தவத்திற்கு மனமிரங்கி முனிவர்கள் கேட்டுக்கொண்டபடியே திருமால் ஸ்ரீ இலட்சுமி நரசிம்மராகக் காட்சி அளித்தார். இத்திருமேனி கொண்டு இங்கே எழுந்தருளி இவ்வுலக மாந்தர்களுக்கும் திருவருள் புரிய வேண்டுமென வேண்டிக் கொண்டனர். திருமாலும் மகிழ்ந்து அவ்வண்ணமே இருந்தருள் புரிவதாக அசைந்தார்.ஸ்ரீ நரசிம்மப் பெருமாளுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் பூஜை சகஸ்ர கலச திருமஞ்சனமாகும். திருமஞ்சனக் கலசங்கள் ஓவ்வொன்றிலும் ஓவ்வொரு மூலிகையும் ஓர் தேவதையையும் ஆவாகனம் செய்து (கலக்கச் செய்து) செய்யப்படும் இச்சிறப்பு திருமஞ்சனம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அமைவிடம் :-

   விழுப்புரத்திலிருந்து தென்கிழக்கில் 20 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. பண்ருட்டி விழுப்புரம் பேருந்து சாலையில் கள்ளிப்பட்டில் இறங்கினால் கிழக்கில் 3 கி.மீ தொலைவிலும் புதுவை-விழுப்புரம் விழப்புரம்-கடலூர் பேருந்து சாலையில் மடுகரைவழி சிறுவந்தாடு என்னும் ஏரிலிருந்து 3 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

கோயில் தொடர்புக்கு : இ.ஒ. முத்துலட்சுமி – 9944238917

 கிளர்க் கோபிநாத் – 9994299780

படமும் செய்தியும்

ப.பரசுராமன்.

The post பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் தென்ஆகோபிலம் appeared first on SWASTHIKTV.COM.

பிரகலாதனுக்குக் காட்சி கொடுத்த சிங்கர்குடி ஸ்ரீ லட்சுமி(ஊக்ர)நரசிம்மர்

$
0
0

 ஓரே நேர்க்கோட்டில் மூன்று இலட்சுமி நரசிம்மர் ஆலையம் அமைந்துள்ளது.இம்மூன்று திருத்தலங்களையும் ஓரே நாளில் தரிசனம் செய்வோர்க்கு நன்மைகள் விளையும் தீமைகள் அழியும் எனப் பக்தர்களின் நம்பிக்கையாகவே உள்ளது. சிங்கப் பெருமான் குடிகொண்டிருக்கும் திருத்தலம் என்கிற பெருமையை உடையதால் இத்தலம் “சிங்கர் கோயில்” என்றும் “சிங்கர்குடி” என்றும் அழைக்கப் பெறுகிறது.மேற்கு திசையை நோக்கிய திருக்கோயிலில் மேற்கு திசையை நோக்கிய கருவறையில் ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் நெடி துயர்ந்த தோற்றத்துடனும் பதினாறு கைகளுடன் காட்சியளித்தார். சங்கு, பிரயோக சக்கரம், பதாக ஹஸ்தம், குறுவாள், காணம்,வில்,கதை, கேடயம் போன்ற ஆயுதங்களை தாங்கியும் அசுரனின் தலையறுத்தல், அசுரன் ஓருவனை கத்தியால் கொல்லுதல், இரணியனின் காலைப் பற்றுதல், இரண்யனின் வயிற்றைக் கிழித்தல், குடலைப் பிடுங்குதல், குடலை மாலையாகப் பிடித்திருத்தல் வெட்டப்பட்ட தலை, இரண்யனின் தலையை அழுத்திப் பிடித்திருத்தல் போன்ற நிகழ்ச்சிகளை கொண்ட பதினாறு கரங்களுடன்  வேறெங்கும் காண முடியாத உக்கிர நரசிம்மராக காட்சியளிக்கிறார்.

 edit immmm  நரசிம்மரின் கீழே  இடப்புறம் இரண்யனின் மனைவி  நீலாவதி வலப்புறம் அசுரர் மூவர், பிரகலாதர், வசிட்ட முனிவர், சுக்கராச்சாரியார் ஆகியோர் இருக்கிறார்கள். வடக்கு திசையைப் பார்த்தப்படி யோக நரசிம்மரும், பால நரசிம்மரும் உள்ளனர். கருவறை அர்த்த மண்டபத்தையொட்டி இடப்புறம் கிழக்கு நோக்கி இலட்சுமி சந்நிதியும், வலப்புறம் கிழக்கு நோக்கி கனகவல்லித் தாயார் சந்நிதியும் உள்ளன. கருவறை மகா மண்டபத் தூண்களில் நரசிம்மரின் அவதாரங்களும், விஜய நகர மன்னர்களின் உருவங்களும், அரசிகளின் உருவங்களும் படைப்புச் சிற்பங்களாக உள்ளன. வசிட்டரின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. விநாயகர், சீதையின் அசோகவனத்துக் காட்சி, ஆஞ்சநேயர் சிற்பங்குளும் உள்ளன.இக்கோயிலின் வலப்புறம் துர்க்கை கோயில் அருகே உள்ள வசந்த மண்டபத்திலும் கலையழகுமிக்க சிற்பங்கள் உள்ளன. குளத்திற்கு எதிரேயுள்ள துர்க்கை கோயிலில் அமைந்துள்ள துர்க்கை சிலையே இக்கோயிலில் உள்ள சிலைகளில் மிகவும் பழமையானதாகும்.

  இச்சிலை கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்  காலப்  படைப்பாகும். குளத்தையொட்டி விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் அனைத்தும் கருங்கற்களால் எழுப்பப்பட்டுள்ளன. மக்களின் வேண்டுதலுக்கு உகந்த பிரார்த்தனைத் தலமாக விளங்கும் சிங்கர்குடியில் கருவறையில் எழுந்தருளி வேறெந்தத் தலங்களிலும் காணமுடியாத அதிசயக் காட்சியாகும். முகந்தனில் கோபம் கொப்பளிக்க எட்டு அடி உயரத்தில் பதினாறு கரங்களைக் கொண்டு இரண்ய கசிபுவை வதம் செய்கின்ற காட்சி நம்மை மெய்சிலிக்க வைக்கிறது. வலப்புறம் எட்டு கைகளும் இடப்புறம் எட்டு கைகளும் ஆயுதங்களைத் தாங்கி வதம் செய்கிற செயல்பாடுகளையும் செய்கின்ற காட்சி அச்சம் கலந்த பக்திப் பரவசத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

 631px-Narasimha_oil_colourநமக்குள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டே நாம் கடவுளிடம் சென்று வணங்கி வேண்டிக் கொள்கிறோம். அக்குறைகளை நீக்கி நமக்கு நன்மையை அருளுகின்ற தெய்வமாக சிங்கர்குடி நரசிம்மர் எழுந்தருளியுள்ளார் என்பது ஆன்மீகக் சான்றோர்களின் அருள்வாக்கு. வசிட்ட முனிவர் மட்டுமின்றி ஜமதக்கினி முனிவர், பிரகு முனிவர்,இந்திரன், கருடன், பிரகலாதன், சுக்கிரன் போன்றோர்களுக்கும் காட்சி கொடுத்து அவரவர் வேண்டுதலை நிவர்த்தி செய்ததாக வழிவழியாய் கூறப்பட்டு வந்து செவிவழிச் செய்தியால் அறியப்படுகிறது. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்பது மூத்தோர்கள் கூறும் முதுமொழியாகும். பதினாறு என்பது நம் வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு வகையான செல்வங்களாகும். இச்செல்வங்கள் ஓவ்வொருவருக்கும் குறைவற இருந்தால்தான் முழுமையான வாழ்க்கை வாழ்ந்ததற்கு ஓப்பாகும். அந்த பதினாறு செல்வங்கள் புகழ், கல்வி, ஆற்றல், வெற்றி,நன்மக்கள்,பொன்,நெல் (தானிய வகைகள் அனைத்தும் அடங்கும்) அறிவு, பெருமை, ஆயுள், நல்லூழ், இளமை, துணிவு, நோயின்மை,நுகர்ச்சி, பொருள் எனப்படும்.

     இச்செல்வங்கள் அனைத்தையும் ஓருவர் அடைவதென்பது கடினம். அதற்குக் கடவுளின் திருவருளும் வேண்டும்.அந்த பதினாறு செல்வங்களை அளிப்பதில் அருள்மிகு.நரசிம்மர் வல்லமை வாய்ந்ததாக அத்திருத்தலத்தில் பதினாறு கரங்களைக் தாங்கி எழுந்தருளியுள்ளார். இச்செல்வங்களைப் பெறுவதற்கு உள்ள தடைகளை நீக்கி அவற்றை அழித்து நமக்குப் பெற்றுத்தரும் ஆற்றல் மிக்கவரான லட்சுமி உக்ர நரசிம்மரைத் தொழுது வானோர்களும் சான்றோர்களும் திருவருள் பெற்ற நிகழ்வைப் போன்றே இத்தலத்திற்கு வந்து வணங்கும் ஓவ்வொருவரும் பெறலாம் என்பதே இத்தலத்தின் மாண்பாகும். இரண்ய வதம் முடிந்து பிரகலாதன் அரசாட்சிப் பொறுப்பேற்று திருமாலின் பக்தனாகவே வாழ்ந்து வரும் காலங்களில் திருமாலின் திருத்தலங்களைக் கண்டு சேவிக்க எண்ணம் கொண்டு திருமாலை தரிசித்து வரும் காலங்களில் தென்னாட்டில் யாத்திரை வந்தபோது திருவயிந்திபுரத்து தேவநாதப் பெருமாளைத் தரிசித்தார். அங்கு தேவநாதப் பெருமாள் பிரகலாதனுக்குக் காட்சி அளித்தது மட்டுமின்றி பிரகலாதனை சிங்கர் கோயிலுக்கு வரச் செய்து இரண்யவத உக்கிர (இலட்சுமி) நரசிம்மராகத் திருமால் காட்சி அளித்தார் என்பது இக்கோயிலின் சிறப்பாகும்.

திருத்தேர் :

    இக்கோயில் தேர் கி.பி.15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இத்தேரில் நரசிம்ம அவதாரங்கள் தசாவதாரம், இராமர், கோதண்டராமர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

தீர்த்தங்கள் :-

       கருட தீர்த்தம், வாமன தீர்த்தம், பிருகுமுனி தீர்த்தம், ஜமதக்கினி தீர்த்தம். இந்திர தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் உள்ளன.

தேசிங்குராஜன்:

  இத்தலத்திலுள்ள ஸ்ரீ லட்சுமி (உக்ர) நரசிம்மரை தேசிங்குராஜன் வழிப்பட்டுத் திருப்பணி செய்துள்ளான்.

பிரதோஷம்:

    ஓவ்வொரு மாதமும் பிரதோஷம் அன்று நரசிம்மருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறுகிறது. உக்கிர நரசிம்மருக்கு பிரதோஷம் உகந்ததென இங்கு நடைபெற்று வருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

அமைவிடம் :

       புதுவையிலிருந்து கடலூர் செல்லும் வழியில் 12வது கி.மீட்டரில் உள்ள தவளக்குப்பம் ஊரிலிருந்து (அபிஷேகப்பாக்கம்) 2வது கி.மீட்டரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

ஆலைய தொடர்புக்கு :

பட்டர் ஜெயக்குமார் : 0413-2618759,

இ.ஒ.நாகராஜ் – 9443441292

படமும் செய்தியும்

ப.பரசுராமன்

The post பிரகலாதனுக்குக் காட்சி கொடுத்த சிங்கர்குடி ஸ்ரீ லட்சுமி(ஊக்ர)நரசிம்மர் appeared first on SWASTHIKTV.COM.

The Conscious Soul is the Supreme God –“Aganda Paripoorana Sachidananda Sarguru Swamigal

$
0
0

 

 “I will be born to save the humanity, whenever the sacred law of Justice (Dharma) is at stake”, the great seers are born in this world in order to save the individuals souls, immersed in the ocean of sorrow of incessant births and deaths. Whenever the sacred justice is at stake and the unrighteous on their ascendancy, in order to save the devotees from the sufferings of this world and make them obtain the highest state of bliss, with grace, God, the Absolute is born in these world in human forms and explained clearly the efficacy of the spiritual path and spiritual ideals. “Aganda Paripoorana Sachidananda Sarguru Swamigal” who is one among them, was born in the form of “Sargurunathan” as a boon to TamilNadu and graced the people with his preaching of spiritual ideals.

   Sarguru travelled the length and breadth of India to save the people by his preaching. He explained to the people, the four principle objectives, worthy of human pursuit, namely, “Righteous Conduct, Wealth, Love and Salvation”. He taught them with his grace the experimental wisdom “Satchithanand only is the God”. “The Conscious Soul is the Supreme God”, “Making individual soul attain the state of the Supreme (God) Soul is the compassion for all living beings”.

  Sarguru traveled from Kanyakumari, in the South to Rishikesh, the North, upto Haridwar, from Kolkatta in the East, to Mumbai in the West, and explained to the people clearly, according to their level of non-duality, monism and spiritual doctrines and taught them clearly the philosophy that “God is One”, and “The Conscious Soul is the Supreme God”. And he further explained to them: “Self-realisation is the penance”, “One, who sees the seer, is the learned”. There are sixty four yogas. (“Yoga is a system of emancipation of the self of union of the self with the Eternal self; a system of gradual conquest of the activities of the mind and the body and the power of will so as to be free from the misery and pains of life. This they consider as yoga; The firm holding back of the senses. Then one becomes uninstructed. Yoga, truly, is the origin and the end (Katha Upanisad, VI: 11). Those who followed after meditation and abstraction (Yoga) saw the self power of God (Deva) hidden in his own qualities (SwetasvatraUpanisad, 1:3).

   Restraint of the breath, withdrawal if the senses, meditation, concentration, contemplation, absorption. Such is said to be six fold Yoga (MaitriUpanisad VI:18).. He whose self is harmonized by Yoga sees the self abiding.“Dedication to learning wisdom (Gnana Yoga) is the best among them. This“Gnana Yoga” can be accomplished with the grace of Sarguru. There is no other  way better than this”, thus explained Sarguru. Wherever he went he hadexplained not only the Spiritual Doctrines, but also how to live the worldly life –living life, pure life, and simple life, properly with propriety by living a Divine Life and attain the everlasting state of the highest bliss. The holy body of Sarguru in its graceful form captivated one and all. With his grace and compassion, he had the ability to make the lowest people of the mundane world, and those who were like beasts, come to him for salvation. On his way back to the south after his pilgrimage to the North, he performed some miracles for the people. Without having desire for the things of others, he came to Vaitheeswarankovil in Tamil Nadu on foot and was there for two years observing the vow of silence. Acclaiming his excellence, the local Chief of Saiva Mutt and the Head of the Monastery served him devotedly during his stay there.

  There he came to Chennai after visiting Chidambaram and Seerkali. When he was in Chennai he taught the spiritual knowledge, “Consciousness in Spiritual Knowledge” and “Wisdom in Spiritual Knowledge”. Then he went to Rameswaram and Dhanuskodi in the South East directionand then to Colombo, Kandi and Kathirkamam in Sri Lanka and taught the people there the spiritual truths. “Satchidanandh only is the God and making the individual soul attain the state of the Supreme God is the compassion for all the human beings. Then he reached Nagapatinam harbor by ship and after visiting manyplaces in Tamil Nadu including Vadalur, Mohanur, Kattuputhur, Vellore, Velayuthampalayam,  Karur, Tiruchirapalli; he reached Thiruvaanaikovil and showed the devotees his performance of miracles. He reached Thiruvaiyaru in 1935 and staying there in Thirukailayam; he taught the devotees the virtues of spiritual knowledge. While he was staying in Thiruvaiyaru, everyday a lamb came there for grazing.

  One day, while grazing, it was bitten by a snake and it swooned. Seeing this, the compassionate sage pats it. Immediately it started jumping about. Seeing this,’ he miracle the devotees began to have love and devotion for the saint”. While performing miracles lie this, one day some devotees, who thought that there was no lamp in the ashram, brought one. Seeing that he said, “Not necessary! The sage has lamp”. The devotees, who saw a light coming towards the ashram at that time, became rapturous and started worshipping him. After the incident, the saint cleared the doubts of the people thereby explaining the Vedas and explained his experience and went to Palani in MaduraiDistrict. After staying at Palani for some days in 1935, the sage came to Kanakkanpatti, a village five miles away from Palani and stayed there at a temple.

  Kanakkanpatti and Pottampatti are the two parts of a big village, having more than  one  thousand  houses.  While  he was  staying at Kanakkanpatti, heperformed miracles according to their state of mind. Experiencing the grace of Sarguru and getting his knowledge through realization, many people came to him, worshipped him and served him. Sensing their love, the sage taught them the spiritual truths. While staying in Pottampatti, the sage went to a garden to take bath in the well. A boy from that garden, without knowing who HE was, threatened him by saying “Who are you? Why have you come here? Get out”! and struck lightly at his body with the dried stalk of a millet. All of a sudden he became stupefied and was afraid, for he felt his hands and legs had lost sensation. His father, who cameto know of this, came to the sage and asked him for his pardon. After some days both of them donated a part of their garden land for constructing a building for Sachidananda Sabai. (When the sage was in Dindigul after this incident i.e., in1938, “Aganda Paripoorana Sachidananda Sabai” was established in the someplace and the portrait of Gurunathar was installed. From then onwards, every Tamil month, on Third Thursday, Gurupooja has been performed.) The sage established ‘Sachidananda Sabai’ in Pensioner street, Dindigul.

   When he was there, Gurupooja prayer were conducted at Kanakkanpatti with the singing of “Gurusthothra songs”. The children danced round clapping hands rhythmically, and moved round striking short coloured sticks to the rhythm of songs. The children thus sang and danced with happiness. Devotees carried every month after the Gurupooja the portrait of Sarguruin a  possession with  singing  advaita songs and dancing in order to get his grace. Once on such occasion,  some atheists of the village, who didn’t have faith in Sarguru, asked the devotees why they had made a fuss about him (Sarguru), when  he was  at Dindigul.  They asked: “ Can the  portrait of your Gurunathar speak? If at all, let him speak. So, that we can also hear him”. ‘Gurunathar showed these ignorant persons a wonderful miracle and made them his ardentdevotees. When thousands of people gathered there to take part in theprocession, a loud noise was heard from the portrait of Sarguru, which enthralled everyone with over whelming emotion. In order to make the doubtful atheists feel, a warning came from the portrait,” Leave your arrogance! Head will be split! Be careful!”. It was followed by a loud noise as if there exploded a bomb.

  The fear-stricken atheists, who understood the greatness of Sarguru, became hisdevotees and started singing in praise of him. From that day onwards manypeople, who  understood  the greatness and glory of Sarguru, became hisdevotees. They have been serving in the Sachidananda Sabai since then.When Sarguru was at Pensioner street Sabai at Dindigul, a person afflicted with leprosy and could not even walk, came there every day to have his glimpse. Seeking his ardent devotion, with his grace, he cured him of his illness. Another person, who was suffering from an incurable disease (with a bad smell emanating from his body) took refuge in the sage with devotion and love, and had his glimpse every day. He was cured of his disease. He has been praying inSarguru in his mind.,

   since then. A clerk, working in the District court, started losing his eye sight and could not work. He had the graceful glimpse of Sarguru. He got back his eye sight. From then onwards he has been serving in the Sabai. A Christian lady who had been made for a long time, came to her senses, when she had the glimpse of the sage. She fell at his feet. From then onwards, the lady who had been completely cured of her madness, started serving the usage.A camp clerk of the Governor of Tamil Nadu was suffering from an incurable stomach ache. When he heard the glory of Sarguru, came to have his glimpse at Dindigul performed gurupooja and took the sacred offering of the sage. Thismade him get cured.

   Overwhelmed with his feelings, he devoted himself to the service to the sage.After his stay at Dindigul he came to Chatirapatti in 1939 and established Sachidananda Sabai, East of Chatirapatti village, by the side of Dindigul-PalaniHighway Gurupoojas were performed on first Thursday of every Tamil month.Children sang Gurusthothra songs and danced round clapping handsrhythmically, and moved round striking short coloured sticks to the rhytim of songs. The devotees ceremoniously recited the sacred songs and texts of Gurunathar.Four years after establishing the Sabai at Chatirapatti, the AnnualGurupooja was performed for three days. The poor were fed on these threedays. All the devotees connected with the Sabai were present at this Gurupooja.Sarguru graced these devotees with his sacred teachings, which they had never heard of. The sage stayed there for a long time, performed many miracles andgraced many devotees.

  Then he left Chatirapatti in 1942 and stayed for sometime as Kodaikeelpatti, Kallakonarpatti, Tiruchirapalli, Thanjavur, Cudalore and Mathur. In 1946, when he was at Mathur Thotti, he registered the Sabai in the name of “Sri Aganda Paripoorana Sachidananda Sabai” and nominated members of the Boardfor the Sabai.Sarguru’s close devotees became ascetics and did spiritual service as well as service to him. They worked for the growth and development of the Sabai. Wherever he was with his self-realising grace and compassion, bestowed on his devotees his grace, according to their state of mind, to lead to pure worldly and at the same time develop their spiritual attainments. Sarguru Sachidananda Swamiji attained “Vidheha Mukthi” (release from the bonds of the world) on 19.11.1946 at Government Estate, Chennai. His mortalbody  was interned  at  Gurushetram  on Thursday November 21, 1946 in thepresence of ascetics and devotees of the Sabai. Five days after his departure from life, the devotees, saw the coming of anundivided  flaming  light from the North-East direction, shining above the“Samadhi” (Holy grave) and becoming one with it.

  Seeing this unusual sight, the devotees started praying and performing poojas with devotion. As bestowed his grace on devotees before his departure from life, he has been bestowing his grace on all who come to his “Samadhi” for prayer and to those who pray to him in their minds. He bestows upon them, peace of mind and his grace. There is no doubt that the Vedantic philosophical and graceful sayings of Sarguru will ever lead the people of this world in the spiritual path. This ashram is situated at Tambaram Velacherry main road in Chennai. After Sarguru’s Samadhi this place is called as GURUSHETRAM. This will be reached from Tambaram about 4 kilo meters. There are 20 branches and lot of devotees come and attended the pujas and other activities. There is a regular weekly Thursday prayers, every Sunday prayer, every Tamil month first weekThursday prayer, poornima prayer, Tamil New Year prayer and English New Year prayer performed very grand manner.

The post The Conscious Soul is the Supreme God – “Aganda Paripoorana Sachidananda Sarguru Swamigal appeared first on SWASTHIKTV.COM.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 08/06/2016


சப்பாத்திக்கல்லி புதரில் சுயம்பு ரூபமாக தோன்றிய முருகன்

$
0
0

  திருவண்ணாமலை அடுத்த எலத்தூர் – மோட்ர்டூ நட்சத்திர கோயிலில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு  ;                                                                                                                                                                                              சுமார் 1200 ஆண்டுகள் பழமையான ஆலயமாய் இந்த ஆலயம் திகழ்கிறது. பிரம்ம குமாரர்களின் சாப விமோஷனத்தின் பொருட்டு முருகப்பெருமானுக்கு பிரம்மகத்தி தோசம் பிடித்தது. பார்வதி தேவியின் உபதேசபத்தின்படி பிரம்மகத்தி தோசம் நிவர்த்தி அடைய செய்நதிகரையோரம் வடகரையில் சப்த கரைண்டீஸ்வரரையும், தென்கரையில் சப்த கைலாசநாதரையும் முருகப்பெருமானே பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் பூஜித்து முருகப்பெருமானுக்கு பிரம்மஹத்தி தோசம் நிவர்த்தியடைந்தது. அந்த 14 சிவாலயங்களையும் முருகப்பெருமானை தொடர்ந்து சிரத்தையுடன்  பூஜித்து வந்தார். அவருக்கு உதவியாக பூசாரி ஒருவரும் சிவகைங்கறியம் செய்து வந்தார். இவர்கள் இருவரும் வருடாவருடம் ஆடிக்கிருத்திகை திருநாள் அன்று திருத்தணி சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

  ஒரு வருடம் திருத்தனி சென்று வழிபட முடியாமல் மிகுந்த மன வருத்தத்துடன் அவர்கள் இருவரும் அவர்களது இல்லத்தில் உறங்கினர் அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் முருகப்பெருமான் கனவில் தோன்றி நான் இங்கேயே இருக்கின்றேன் என்னை ஏன் அங்கு சென்று தேடுகிறாய் நட்சத்திரகிரி எனும் குன்றில் நடுமலையில் நடுநாயகமாக சுயம்பு ரூபமாக சிவசுப்பிரமணிய ஐக்கிய பாவத்தில் சிவசுப்பிரமண்யராக ஞானமே வடிவாக இருக்கின்றேன். இவ்வுலகில் சூரியன், சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்கள் வேரெங்கும் பூஜிக்காத சிவசர்ப்பமும், நித்யமும் என்னை பூஜிக்கின்றன. நான் தம்பதி சமேதராக அமர்ந்து நித்ய சிவபபூஜை செய்கின்றேன் என்று முருகப்பெருமனா; திருவருள் புரிந்தார். நட்சத்திரகிரி குன்றின் அடிவாரத்தில் இருக்கக்கூடிய சந்திரபுஷ்கரணி ஜொனையில் இருந்து சிவசர்ப்பம் வழிகாட்ட என்னை வந்து நீ சேருவாயாக. உன் மூலமாக இவ்வுலகிற்கு ஒரு தனிச்சிறப்புமிக்க ஆலயமாக உருவாகும் என முருகப்பெருமான் திருவருள் புரிந்தார்.

  திடுக்கிட்டு எழுந்த இருவரும் மறுநாள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ஊர்ப்பொதுமக்களுடன் சேர்ந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்திற்கு சென்றனா;. அங்கிருந்து சிவசர்ப்பம் வழிகாட்ட நடுமலையில் நடுநாயகமாக சப்பாத்திக்கல்லி புதரில் சுயம்பு ரூபமாக முருகப்பெருமானே சிவசுப்பிரமணியராக காட்சியளித்தார். உடனடியாக ஆலயம் அமைத்து வழிபடத் துவங்கினார்.

ஆலய அமைவிடம் :                                                                                                                                                                 திருவண்ணாமலையில் இருந்து கலசபாக்கம் வழியாக வில்வாரணிக்கு செல்லும் வழியில் நட்சத்திரகோயில் உள்ளது.

தொடர்ப்புக்கு :                                                                                                                                                                                                                                                சுந்தரமூர்த்தி குருக்கள் – 9487229930                                                                                                                                                                                                சந்தோஷ் குருக்கள் – 94867234                                                                                                                                                                                                        சுதாகர் குருக்கள் – 9943835167                                                                                                                                                                                                            படமும் , செய்தியும்                                                                                                                                                                                                                  ப.பரசுராமன்.

The post சப்பாத்திக்கல்லி புதரில் சுயம்பு ரூபமாக தோன்றிய முருகன் appeared first on SWASTHIKTV.COM.

துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றும்போது பின்பன்ற வேண்டிய வழிமுறைகள்

$
0
0

   பெண்கள் துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக விளக்கு ஏற்றியிருப்பார்கள். பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செய்யப்படுகின்றன., துர்க்கை அம்மனை ,ராகு காலத்தில் வழிபடவேண்டும். நம்முடைய  தீர வேண்டிய, தெய்வத்தின் அருளால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு, குடும்ப பிரச்சினைகளுக்கு, சொந்த பந்தத்தல் நிகழ்ந்த தீராத பிரச்சினையின் கடுமை குறைய, செவ்வாய்க்கிழமை மாலை 3.00 – 4.30 ராகு காலத்தில் துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்ற வேண்டும். . அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது  விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியவாறு விளக்கு இருக்க வேண்டும்..

     நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 – 6.00 ராகு கால வேளையில், மேற் குறிப்பிட்டவாறு விளக்கு ஏற்ற வேண்டும். நமது குடும்பத்திர்க்காண, வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேற்றம் முதலான நன்மையின் பொருட்டு வேண்டுதல் வெள்ளிக்கிழமை 10.30 -12.00 மணி நேரத்தில் மேற்குறிப்பிட்டபடி எலுமிச்ச பழ விளக்கு ஏற்ற வேண்டும். இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.

     அப்பொழுது, துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிசையிடக்கூடாது கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம். வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில்.   ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்து, நிம்மதியாக ஓய்வு எடுக்கவேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. கண்ட கதைகள் பேசி கொண்டிருக்க கூடாது. இதுவே முறைப்படி செய்யும் வழிபாட்டு முறையாகும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வது முறை. தொடர்ச்சியாக செய்வதே உத்தமம். நமது பிரச்சினை தீர, வேண்டுதளுக்காக, ஆலயம் செல்லும்போதும் வரும்போதும் இறை நினைப்பில் செல்ல வேண்டும். கும்பலாக செல்வதை தவிர்க்கவேண்டும். கண்ட கதைகளை ஆலயத்திலும், செல்லும்போதும், வரும்போதும் பேசுதலை தவிர்க்க வேண்டும்.

 

The post துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றும்போது பின்பன்ற வேண்டிய வழிமுறைகள் appeared first on SWASTHIKTV.COM.

ராகு- கேது பெயர்ச்சியின்  போது ஸ்ரீதுர்கைக்கு விளக்கு ஏற்றினால் கிடைக்கும் நன்மை

$
0
0

 கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் உள்ள ஸ்ரீதுர்கைக்கு அடுத்தபடி, சென்னை, பாரிமுனை அருகில் உள்ள அரண்மனைக்கார வீதியில் இருக்கும் ஸ்ரீகச்சாலீஸ்வரர் கோயிலில், சிவபெருமான்தான் மூலவர் என்றாலும், அங்கே கோஷ்டத்தில் கொலுவிருக்கும் ஸ்ரீதுர்கை அம்மனே அருளாட்சி வுடன் ஸ்ரீதுர்கையின் உத்ஸவத் திருக்கோலம் கொள்ளை அழகு!, இங்கே உள்ள ஸ்ரீதுர்கைக்கு உத்ஸவ மூர்த்தம் இருப்பது சிறப்பு.

   சூரிய பகவான் தன் இரண்டு மனைவியரான உஷா, பிரத்யுஷாவுடன் இங்கே காட்சி தருகிறார். கோயிலின் விமானத்தில், 27 நட்சத்திரங்களுக்கான தெய்வங்களின் திருவிக்கிரகங்கள் காட்சி தருகின்றன.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீதுர்கை அம்மனுக்கு  விளக்கு ஏற்றி, அர்ச்சனை செய்து, ஒன்பது முறை பிராகார வலம் வந்து வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம்.கார்த்திகை மற்றும் தேய்பிறை நவமி அன்று காலையில் இங்கு ஸ்ரீதுர்கா சண்டி ஹோமம் விமரிசையாக நடைபெறும். இதில் கலந்துகொண்டால், ஸ்ரீதுர்கையின் பேரருளைப் பெறலாம்! ராகு- கேது பெயர்ச்சியின்போது இங்கே உள்ள ஸ்ரீதுர்கைக்கும், சித்தி-புத்தி சமேத ஸ்ரீபஞ்சமுக விநாயகருக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால், சகல நன்மைகளும் கைகூடும் .ராகு- கேது பெயர்ச்சியின்  போது ஸ்ரீதுர்கை விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமணம் நடைபெறும் ,குழந்தை வரம் கிட்டும்

 

The post ராகு- கேது பெயர்ச்சியின்  போது ஸ்ரீதுர்கைக்கு விளக்கு ஏற்றினால் கிடைக்கும் நன்மை appeared first on SWASTHIKTV.COM.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 10/06/2016

அகிலமும் போற்றும் ஸ்ரீபுரம் தங்க கோவில்

$
0
0

ஸ்ரீ அன்னை நாராயணி!

   ஆன்மிக சாம்ராஜ்யத்தில் ஸ்ரீ நாராயணியே மறுஅவதாரமாக தோன்றி அற்புதங்கள் நிகழ்த்தும் ஞானகுரு சக்தி அம்மா”உலகம் என்பது மக்களின் ஒரு குழுமம் அல்ல. ஒவ்வொரு தனிமனிதனும் ஓர் உலகம். நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால் முதலில் உங்கள் மனதை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மனமாற்றம் உலகத்தை மாற்றிவிடும்” – ஸ்ரீ சக்தி அம்மா.நாடாண்ட மன்னர்கள் மக்களுக்கு இறைவழிபாட்டை உணர்த்தவும், தர்ம நெறிகளை கடைபிடிக்கவும் இமயம் முதல் குமரி வரை கோவில்களைக் கட்டி வழிபட உணர்த்தினர். ராஜராஜ சோழன் காலத்தில் கட்டிய கோவில்களில் கலைநயமிக்க சிற்ப வேலைபாடுகளுடன் கற்கோயில்கள் கட்டப்பட்டது.

கோவில் கல்வி பண்பாட்டு மையம்:

    சோழப் பேரரசு காலத்தில் கோயில்கள்’ மிகப்பெரும் பண்பாட்டு மையமாக திகழ்ந்தது. அங்கே சிவதர்மம் படிக்கப்பட்டது. பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டது. சிறார்கள் இசைப்பள்ளியும் நடத்தப்பட்டன. கோவில் ஓர் பண்பாட்டு மையமாக மட்டும் திகழாமல் பசிப்பிணி தீர்க்கும் மருந்தாகவும் அந்நாளில் விளங்கியது. ஆனால் இன்று பல கோயில்கள் இயற்கை சீற்றத்தால் சிதிலமடைந்தும் பல கோயில்கள் மண்மேடாகியும் விட்டது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சாதித்த மாமன்னர்களின் தர்ம நெறிகளையும் ஆன்மீகத்தையும் மக்களுக்கு போதிக்கும் மறுஅவதாரமாக தோன்றி ஞானகுருவான ஸ்ரீ சக்திஅம்மா ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி தகதக தங்க கோவிலை கட்டி உலக சாதனைபுரிந்துள்ளார்.

தனக்காக வாழாமல் சமுதாயத்திற்காக வாழும் ஸ்ரீ சக்திஅம்மா:

      sri sakthi amma 111ஆன்மீகப்பணி, சமுதாயப் பணி, மருத்துவ பணி என்று ஒவ்வொரு வினாடியும் இந்த உலகத்தை முன்னேற்ற சிந்தித்து செயல்பட்டுவரும் ஸ்ரீ சக்திஅம்மா உருவாக்கியுள்ள பிரமாண்டமான ஆன்மீக அதிசயம் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பொற்கோவில் பிரமிக்க வைக்கும் பண்டைய கால கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளது.

தங்க கோவில் அமைப்பும் சிறப்பும்:

        மூலவரான அன்னை லட்சுமி நாராயணி 9 அடி உயர விக்கிரகமாக அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மஞ்சள் நிறத்தில் தகதகவென்று மின்னும் தங்கக்கோவில், ராஜகோபுரம் 48 அடி உயரத்தில் 5 நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கருவறை, மகாமண்டபம், வசந்த மண்டபங்கள் உள்ளன. தங்கத்தால் ஆன இந்த மூன்று மண்டபங்களில் கலைநயமிக்க சிற்பு வேலைபாடுகளுடன் கூடிய 50க்கும் மேற்பட்ட பிரமாண்டமான தூண்கள் தாங்கி நிற்பது காண்போரை வியக்கவைக்கிறது. தங்க கோவிலை சுற்றி 9 அடி ஆழத்தில் குளம் வெட்டப்பட்டுள்ளது. அதில் தண்ணீர் நிறப்பப்பட்டு மின் விளக்குகளின் ஒளி, தங்க கோவிலின் பிம்பம் தகதகவென மின்னுவது காண்போரை மெய்மறக்கச் செய்கிறது.தங்கக்கோவிலை தரிசிக்க பக்தர்கள் நடந்து செல்லும் நட்சத்திர வடிவான நடைபாதை 13 வளைவுகளுடன் அமைக்கப்பட்டு சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று கோவிலை அடையலாம். நட்சத்திர வடிவிலான பாதையின் இருபுறமும் ஸ்ரீ சக்திஅம்மாவின் உபதேசமான ‘ ஸ்ரீ சக்திகீதை’ வாசகங்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.

 800x600_vellore_40217 ஸ்ரீபுரம் நாராயணி பீடம் உலகம் போற்றும் வகையில் பல நல்ல செயல்திட்டங்களைச் செய்கிறது என்றால் அந்த வெற்றிக்கான பின்னணியில் ஒரு ரகசியம் உண்டு என்றால் அது ஸ்ரீ சக்திஅம்மாவின் சக்திவாய்ந்த பூஜையே. ஸ்ரீபுரம் பொற்கோயில் காசால் பணத்தால் உருவாக்கப்பட்டதல்ல. எல்லாம் வல்ல அன்னை ஸ்ரீ நாராயணி ஆனந்த நிலையில் உருவானதுதான் ஸ்ரீபுரம். ஒவ்வொரு நாளும் சுமார் 10 மணிநேரம் ஸ்ரீ சக்திஅம்மா பூஜை செய்து வருகிறார். சுயம்பு சன்னதி வழிபாடு, நாராயணி சன்னதி வழிபாடு, ஆதி நாராயணி சன்னதி வழிபாடு, புற்று நாராயணி சன்னதி வழிபாடு, துளசி பூஜை, சூரிய பூஜை, கஜபூஜை, அசுவபூஜை, கோபூஜை, ஸ்ரீமங்கல நாராயணிக்கு 27 வகையான அபிஷேகங்களுடன் ஆராதனை பூஜையும் ஸ்ரீ சக்திஅம்மா பூஜை செய்து வருகிறார்.

     ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் ஸ்ரீ சக்திஅம்மா உருவாக்கியுள்ள 2வது சிருஷ்டி செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீ சுவர்ணலட்சுமி… அன்னை மகாலட்சுமிக்கு 70 கிலோ தங்கத்தில் விக்கிரகத்தில் உருவாக்கி ஸ்ரீ சுவர்ணலட்சுமி என்ற திருநாமத்துடன் ஸ்ரீ சக்திஅம்மா பிரதிஷ்டை செய்துள்ளார். உலகிலேயே 70 கிலோ தங்கத்தில் ஸ்ரீ மகாலட்சுமிக்கு விக்கிரகம் உருவாக்கியிருப்பது ஸ்ரீபுரம் தங்கக்கோயில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தர்களே செய்யும் துளசி அபிஷேகம்: 

     ஸ்ரீ சுவர்ணலட்சுமிக்கு பக்தர்கள் தங்கள் கைகளால் துளசி தீர்த்த அபிஷேகம் செய்து வழிபடும் பாக்கியத்தை இக்கோவிலில் ஸ்ரீ சக்திஅம்மா அருளியிருக்கிறார். இத்துடன் அனைத்து தெய்வங்களும் குடியிருக்கும் கோமாதாவின் சிறப்பை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 150 கிலோ வெள்ளியில் தங்கக்கோவிலில் ஸ்ரீ சக்திஅம்மா பிரதிருஷ்டை செய்துள்ளார். அன்று… வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வல்லளார்.

   இன்று… பாறை மலையாக இருந்த திருமலைக்கோடி கைலாசகிரிமலை, இன்று பசுமை மலையாக மாறியிருக்கிறது. ஆண்டுக்கு ஒரு லட்சம் மரம் வீதம் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை இந்த கைலாசகிரிமலையில் ஸ்ரீ நாராயணிபீடம் சார்பில் நடச்செய்து, திருமலைக்கோடியை பசுமைத் தலமாக உருவாக்கி மாமன்னர் அசோகரின் இயற்கையை நேசிக்கும்  நெஞ்சம்போல் இன்று சக்தி அம்மா விளங்குகிறார். இன்றைய ஸ்ரீபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயணி தங்கக்கோயில் அமைக்க பூமிபூஜைக்கு பிறகு ஸ்ரீ சக்திஅம்மா செய்த முதல் திட்டம்  100 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் எந்தெந்த இடங்கிளல் மரம், செடி கொடிகளை உருவாக்க வேண்டும் என்று வழிகாட்டி முதலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடச் செய்தார். இதனால்தான் ஸ்ரீபுரம் பொற்கோயிலை ‘ஸ்பிரட்சுவல் ஓசிஸ்’ என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள்.

ஸ்ரீ சக்திஅம்மாவின் ஆன்மீகமும் சமுதாயமும்:

   ஜோதி ஸ்வரூபினி: சிதிலமடைந்த கோயில்ளை புலன் அமைப்பதற்காக உரிய ஏற்பாடுகள் செய்து கொடுத்து கும்பாபிஷேகம் வரை அனைத்து பணிகளையும் செய்து கொடுப்பதற்கே ஜோதி ஸ்வரூபினி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வித்யா நேத்ரம் திட்டம்:

   ஆண்டுதோறும் மாணவ மாணவியர் பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பான வெற்றி பெறுவதற்காக சரஸ்வதி யாகத்தினை நடத்தி ஆசீர்வதித்து, சுற்றுப்புற மாவட்டங்களில் முதலிடம் பெறும் மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம்.

ஆரோக்யா திட்டம் :

   ஆரோக்கியா திட்டம் மூலம் உடல் ஊனமுற்றவர்கள் வாழ்வில் வளம் பெறவும், ஊனம் ஒரு குறையல்ல என்று அவர்கள் உள்ளம் திடம் பெறவும்      மூன்று சக்கர சைக்கிள்கள், காது கேட்கும் கருவிகள், செயற்கை கை கால் உறுப்புகள், நடக்க உதவும் உபகரணங்கருவிகள் வழங்கவும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.

கோசாலா:

  கோசாலா என்னும் பசுக்காப்பகத்தினை அமைத்து பசுக்களைப் பராமரித்து அதன்மூலம் பெறப்படும் பால் ஏழைக் குழந்தைகளுக்கும், நோய் வாய்ப்பட்டவர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.

கல்யாணி திட்டம்:

  வசதியில்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் திருமண பந்தத்தை அனுபவிக்க உதவுவதற்காக கல்யாணி திட்டம்.

புனர்ஜென்மா திட்டம்:

  சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்து சட்டத்தின் முன் குற்றவாயியாக தண்டனை பெற்றுவருபவர்களை சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாழ்வில் ஒளியேற்றும் நோக்கத்தோடு புனர்ஜென்மா திட்டம்.

மாத்ரு கங்கா திட்டம் :

   தண்ணீர் கிடைக்காத பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதற்காக மாத்ரு கங்கா திட்டம்

காடு வளர்ப்பு திட்டம் :

       காடு வளர்ப்புத் திட்டத்தின் மூலம் மலைகள், சமவெளிகள், சாலையோரங்கள் என பல இடங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகிறது. கோவில் பூசாரிகள் மாநாடு கூட்டப்பெற்று முறையாக தெய்வத்தை பூஜிக்கும் நெறிமுறைகளை பற்றி பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

  ஸ்ரீ நாராயணி சேவா உருவாக்கி அதன்மூலம் தினமும் பகல் வேளையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. காலை முதல் இரவு வரை பிரசாதங்கள் வழங்கப்படுகிறது

  • ஸ்ரீ லட்சுமி நாரயணி கோயில் வளாகத்தில் தினமும் காலையும் மாலையும் ஸ்ரீசூக்த ஹோமமும், ஸ்ரீநாராயணி பீடத்தில் ஸ்ரீ நாராயணி யாகமும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
  • அமாவாசை நாட்களில் ஸ்ரீபுரம் ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் வளாகத்தில் ஸ்ரீசண்டியாகம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

   ஆண்டுதோறும் 10008 பேர்களுக்கு சேலைகள், வேஷ்டிகள் வழங்கும் வஸ்திர தானம் திட்டத்தினை ஞானகுரு ஸ்ரீ சக்தி அம்மா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறார்.

ஆலய அமைவிடம்:  வேலூரிலிருந்து ஸ்ரீபுரம் 10வது கி.மீ. தூரத்தில் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதி மற்றும் ஷேர்ஆட்டோ வசதியும் உண்டு.

தொடர்புக்கு; 91+0416 2206500

 படமும் , செய்தியும்                                                                                                                                                                                                                  ப.பரசுராமன்.

The post அகிலமும் போற்றும் ஸ்ரீபுரம் தங்க கோவில் appeared first on SWASTHIKTV.COM.

‘‘நான்…நான்…நான்…என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

$
0
0

மகான்களின் அவதார தினம் எனும் ஜெயந்தி விழாவின்போது வெறுமே பூக்களால் தூவி சில நிமிடங்கள் கண்மூடி நின்று நகர்வதெல்லாம் போதாது. அதை வெற்று சம்பிரதாயமாக மாற்றி விடக் கூடாது. அந்த மகான் காட்டிய மார்க்கம் எப்படிப்பட்டது? என்பதை நிச்சயம் நினைவு கூற வேண்டும். அந்த ஞானி காட்டிய பாதையில் நாம் திரும்புவதற்கான வாய்ப்பாகவே அந்த நாளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியே நாமும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் காட்டிய பாதையை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

ramana-2கிரி உருவில் உள்ள அருணாசலம் வேங்கடராமன் எனும் திருப்பெயரில் மதுரைக்கு அருகிலுள்ள திருச்சுழி எனும் தலத்தில் அவதரித்தது. மீண்டும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி எனும் திருநாமத்தோடு அருணாசலத்திலேயே வாழ்ந்தது. பகவான் ரமணரின் அவதார நோக்கத்தை உற்று நோக்க நமக்கு கிடைப்பது ஒரேயொரு பதில்தான். அதாவது பகவான் தமது வாழ்வு முழுவதும் ஒரேயொரு உபதேசத்தை கூறிக் கொண்டேயிருந்தார். அதுதான் ‘நான் யார்?’’ எனும் ஆத்ம விசாரம். தன்னை அறிவது. ஏன் நான் யார்? என்பதை அறிய வேண்டும் என்கிற கேள்விக்கான பதிலைத்தான் விதம்விதமாக பல பாடல்களிலும், உபதேச நூல்கள் மூலமாகவும் உணர்த்தியபடி இருந்தார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக மௌன உபதேசத்தின் மூலமாக ஆலமர் கீழ் விளங்கும் தட்சிணா மூர்த்தமாக அமர்ந்தும் பிரம்மத்தை போதித்தார். மௌனத்தினால்தான் பிரம்மம் பிரகடனம் செய்யப்படுகிறது என்று உபநிஷதம் கூறியதையே தன் அனுபூதியில் நின்று காட்டினார்.

பகவான்  எல்லோருடைய பிரச்னைகளையும் தீர்த்தாரா?

ஆமாம், பிரச்னை என்று யார் சொல்வது என்று கேட்டார்.

‘‘நான்தான் சொல்கிறேன்’’ என்று பதில் வந்தது.

‘‘அந்த நான் யார் என்று பார்’’ என்று திருப்பிக் கேட்டு மடக்கினார்.

ஒரு கணம் இந்த பதிலைக் கேட்டவர்கள் திகைத்தார்கள். என்ன இது? நான் யார் என்று எப்படி என்னையே கேட்டுக் கொள்வது என்று குழம்பினார்கள். மீண்டும் பகவானை பார்த்தார்கள்.

‘‘பகவானே, நான் யார் என்று எப்படி கேட்டுக் கொள்வது’’ என்று புரியாது கேட்டபோது அழகாக பகவான் விளக்கினார்.

‘‘நான்… நான்… நான்… என்று சொல்கிறாய் அல்லவா. அந்த நான் யார்? என்று சற்று உள்ளே பாரேன். இந்த நான் எனும் எண்ண விருத்தி எங்கிருந்து வருகிறது என்று கவனத்தை உள்முகமாகத் திருப்பேன். இந்த உடலை நான் என்று சொன்னால் தூக்கத்தில் உடலைக் குறித்த நினைவு இல்லையே. ஆனால், சுகமாகத் தூங்கினேன் என்று மறுநாள் சொல்கிறாய். அப்போது இந்த தூக்கத்தை யார் அனுபவித்தது. விழித்திருக்கும்போதும் இந்த நான் உள்ளது. உடலும், உலகமும் மறைந்த தூக்கத்திலும் இந்த நான் என்பது இருக்கிறது. எனவே, இந்த நான் எனும் உணர்வு எங்கு உற்பத்தியாகிறது என்று தேடினால் மெல்ல இந்த நான் தன்னுடைய பிறப்பிடமான ஆத்மாவிற்குள் சென்று ஒடுங்கும்’’ என்று விளக்கினார்.

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் மார்க்கம் ராஜ மார்க்கம். எங்கேயோ கடவுள் இருக்கிறார். அவரை காண்பது மிகவும் கடினம். அது யாருக்கோ சிலருக்குத்தான் முடியும். வீட்டைத் துறக்க வேண்டும். குடும்பத்தை விட்டு ஓடிவிட வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தவே இல்லை.

‘‘பகவானே, கடவுளை அறிவது எப்படி‘‘

‘‘கடவுளை அறிவது இருக்கட்டும். உன்னை நீ யார் என்று தெரிந்து கொண்டு விட்டு அதற்கு அன்னியமாக, அதற்கு அப்பால் கடவுள் என்கிற விஷயம் தனியே இருக்கிறதா என்று பார். இந்த கேள்வியை கேட்பவன் யார் என்று தன்னையே ஏன் கேட்டுக் கொள்ளக் கூடாது‘‘ என்று ஞான மார்க்கத்தை போதித்தார்.

ramana_maharshi_monkey_devoteeமீண்டும், மீண்டும் பகவானிடம் நான் யார் என்கிற ஆத்ம விசாரத்தை எப்படி செய்வது என்று கேட்கப் பட்டது. மகரிஷிகளும், பொறுமையாக ‘‘அப்பா… ஓர் இருட்டு அறையில் இருக்கிறாய். இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஆனால், நான் இருக்கிறேனா என்று யாரிடமாவது கேட்பாயா. நான் எங்கே என்று இருட்டில் தேடுவாயா. கண்கள் இருட்டில் தவித்தாலும் நான் என்கிற உணர்வு. இருக்கிறேன் என்கிற நிச்சய உணர்வு அதாவது உன்னுடைய இருப்பு உனக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறதல்லவா. நீ இருக்கிறாய் என்பதை யாரேனும் சொல்ல வேண்டுமா என்ன? அந்த நான் இருக்கிறேன் என்கிற உணர்வின் மீது உன் கவனத்தை செலுத்து. மெல்ல அந்த நான் என்கிற உணர்வு எங்கு உற்பத்தியாகிறதோ அங்கு சென்று ஒடுங்கும். அந்த இடம்தான் அருணாசலம். அதுவே ஆத்ம ஸ்தானம்’’ என்று மிக எளிமையான மார்க்கத்தை கூறினார். நான் எனும் எண்ணம் தோன்றிய பிறகுதான் மற்ற எல்லா எண்ணங்களும் தோன்றுகின்றன. எனவே, இந்த மனதின் உற்பத்தி ஸ்தானத்திற்குச் செல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதை பார்ப்பீர்கள். இதைத்தான் உபதேச உந்தியார் எனும் நூலில் ‘‘உதித்த இடத்தில் ஒடுங்கியிருத்தல்‘‘ என்று அழகாக கூறுகிறார்.

‘‘பகவானே, மூர்த்தி வழிபாடு, பூஜை, மந்திரங்கள் என்று எத்தனையோ இருக்கிறதே‘‘

‘‘இவையெல்லாமும் சித்த சுத்தி தரும். மனதில் ஏகாக்கிரகம் என்கிற மன ஒருமையை உண்டாக்கும். மீண்டும் தன்னிடத்தேதான் வரவேண்டும்.‘‘ என்று பதில் பகன்றார்.

கடவுள் எங்கே என்று தேடுபவன் யார் என்று தேட வேண்டும். புறத்தே இந்த நான் செல்லும்போது உலகமாக விரியும். அகத்தே சென்றால் பிரம்மத்தில் சென்று ஒடுங்கும். இதுதான் எளிமையான கோட்பாடு. எனவே, ஒரு ஆன்மிக சாதகன் தியானம், ஜபம் என்று தொடங்கி செய்வதெல்லாம் மனதை உள்முகப்படுத்துதலே ஆகும். அதாவது இந்த மனம் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்று சிரத்தையோடு கவனத்தை திருப்புவதே ஆகும்.

ஒரு சாதகர், ‘‘பகவானே இந்த மனம் தானாகவே சென்று ஆத்ம ஸ்தானத்தில் சென்று உட்கார்ந்து கொள்ளக் கூடாதா‘‘ என்று கேட்டார். பகவான் அமைதி காத்தார். அருகே அணில் ஒன்று நிறைய குட்டி போட்டிருந்தது. அங்கும் இங்கும் தலையை தூக்கி ஓட எத்தனித்தது. மகரிஷி அதை ஒவ்வொன்றாக எடுத்து சிறு குடுவையில் எடுத்து பத்திரமாக வைத்து உணவும் கொடுத்தார். எதிரே இருந்தவர் முகம் மலர்ந்தது. பகவான் புரிகிறதா… என்பதுபோல பார்த்தார்.

‘‘இந்த அணில் குஞ்சுகளுக்கு நாம வெளியபோனா நம்மள பூனையோ, வேறு பிராணியோ கொத்தி தூக்கிண்டு போயிடும்னு தெரியாது. அதுக்கு அந்த விவேகம் வரதுக்கு வரைக்கும் நாமதான் அதை உள்ள போட்டுண்டே இருக்கணும். அதுமாதிரிதான் மனசுக்கு வெளிய போறதுனால துக்கம் வரும்கற விஷயம் தெரியாது. மனசுக்கா தெரியற வரைக்கும் நாமதான் அதை வெளியிலிருந்து உள்ள பிடிச்சு போட்டுண்டே இருக்கணும்’’ என்று எளிமையாக கூறினார்.

‘‘என்னால் நான் யார் எனும் விசாரம் செய்ய முடியவில்லை. என்ன செய்வது’’

‘‘அதை ஈசனிடம் விட்டுவிடு. சரணாகதி செய்து விடு.’’‘

‘‘அப்படிச் செய்தால்’’

‘‘வைத்தியனிடம் ஒப்புக்கொடுத்த பிறகு சும்மாயிருக்க வேண்டும். அதற்குப் பிறகு என்ன கேள்வி கூடாது. அவ்வளவுதான். அதை ஈசன் பார்த்துக் கொள்வார்’’ என்றும் உபதேசிப்பார். ஆனால், பல நூற்றுக் கணக்கான கேள்விகளுக்கு மௌனம்தான் உபதேசம். இதயத்தோடு இதயம் பேசுங்கால் என்றும் கூறிய ஸ்ரீ ரமண மகரிஷி

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளின் பாதத்தில் நம்மை சரணாகதி செய்வோம். ‘‘ஐயே.. அதி சுலபம்‘‘ என்று பகவான் கூறிய முக்திப் பதத்தை கூறுவோம்.

The post ‘‘நான்… நான்… நான்… என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி appeared first on SWASTHIKTV.COM.

தாயின் ஆன்மாவின் அமைதிக்காக –சித்திரா பௌர்ணமி விரதம்

$
0
0

பெற்று, வளர்த்து, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவுகூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தாய்மையின் பெருமைகளை மனதிலிருத்தி அவரது ஆன்மா அமைதியடைய இறைவனைத் தொழும் நாளாகவும் இந்நாள் அமைகின்றது.

அச்சுவினி முதல் ரேவதி வரையான இருபத்தேழு நட்சத்திரங்களில் பதின்நான்காவதாக வரும் சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்புத் தினமாக அமைகின்றது. மாதந்தோறும் வரும் இச்சித்திரை நட்சத்திர தினங்களில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்துடன் கூடிவரும் சித்திரை நட்சத்திர தினம் சித்திரா பௌர்ணமி என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது.

தாயாரை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருப்பதால் இந்நாள் பித்ருகளுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது. தந்தையை இழந்தவர்கள் ஆடிஅமாவாசையன்று விரதமிருப்பது போன்று தாயாரை இழந்தவர்கள் சித்திரா பௌர்ணமி விரதத்தை மேற்கொள்வது விதியாயமைந்துள்ளது.

சித்திரா பௌர்ணமியின் சிறப்பு:

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும். இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று பகவான் கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். இவ்வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திருவிழா) நடைபெறுகிறது. அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.
வானமண்டலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை “திதி’ என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு “திதி’ கொடுப்பதும், பௌர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் இணைந்த சந்திரன், தினமும் 12 டிகிரி நகர்ந்து 15ம் நாளான பௌர்ணமி அன்று 180ம் டிகிரியை அடைகிறது; சூரியனுக்கு சம சப்தமமாகி முழுமையான ஆகர்ஷண சக்தியை (புவியீர்ப்பு) வெளிப்படுத்துகிறது. அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் சிறப்பைப் பெறுகின்றன.

தானம் முறை:

நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் பிறந்த நாள் என்பதால் அன்று உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.

The post தாயின் ஆன்மாவின் அமைதிக்காக – சித்திரா பௌர்ணமி விரதம் appeared first on SWASTHIKTV.COM.


சுழல் கிரிவலத்திற்கு  வந்த ஆஞ்சநேயரின் தாயார்!

$
0
0

  திருவண்ணாமலையில் ஆஞ்சநேயரின் தாயார் சுழல் கிரிவலம் வந்து தனக்கு குழந்தைப் பிறக்கவில்லை வருந்தி உண்ணாமலை தீர்த்தத்தில் நீராடியப்பின் ஆஞ்சநேயர் பிறந்தார்.

 இராம பக்தர்களில் மிகவும் சிறந்தவர் ஆஞ்சநேயர் அவருடைய அன்னை அஞ்சனாதேவி. தனக்கு குழந்தை பிறக்கவில்லையே என்று அஞ்சனாதேவி பல திருத்தலங்களுக்கு சென்று புண்ணிய நீராடி தெய்வங்களை வணங்கிப் பிரார்த்தனை செய்தார். புண்ணிய நதிகளையும், தவஸ்தலங்களையும் தரிசித்தவாறே வந்த அஞ்சனாதேவி திருவண்ணாமலை வந்து சேர்ந்தாள். அங்கிருந்த பல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினாள். நாள்தோறும் கிரிவலம் மேற்கொண்டாள்.

 கிரிவலப்பாதையில் உண்ணாமலையம்மன் தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. கோடை காலத்தில் வற்றி விடுகிறது என்றாலும் சிவபெருமானின் தெய்வத் துணையாய் ஆவதற்கு அம்பிகை தவம் செய்த இடம் என்பதால் சூட்சமமாய் இங்கு எப்போதும் தீர்த்தம் உண்டு.திருவண்ணாமலையை அஞ்சனாதேவி சுழல்வல கிரிவலம் செய்தாள். அது என்ன என்பதை தெளிவாக பார்ப்போம். கௌதம முனிவர் ஆசிரமத்துக்கு அருகில் குடில் அமைத்து மலைவலம் வந்து அருள்பெற்றான்.

 ஓருவர் தன்னைத் தானே சுற்றிக்கொள்வது,ஆத்மபிரதட்சிணம் எனப்படும். நம் உள்ளிருந்து இயக்கும் கடவுளுக்கு வணக்கத்தை தெரிவிக்க வலப்புறமாக சுற்றுவது இது.இவ்வாறு தன்னைத்தானே சுற்றியவாறு திருவண்ணாமலையை கிரிவலம் வருவது சுழல்வல கிரிவலம் எனப்படும்.கிரிவலம் என்றாலே பலர் சற்று யோசிக்கின்றனர்,14 கி.மீட்டர் சுற்றளவை எவ்வாறு நடக்க முடியும் என சற்று ஆச்சமும் கொள்கின்றனர். முடியும் என்ற நிலையையும் உறுதியையும் மட்டுமே கைக்கொள்ளுங்கள் அதற்கு உறுதுணையாய் அருணாசலேஸ்வரன் இருப்பார் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஓரே நாள் இரவில் தொடங்கி சில மணி நேரங்களில் விடியுமுன்னே முடிவடைகிறது கிரிவலம்.

    ஆனால் அஞ்னாதேவி செய்த கிரிவலம் இரண்டுகளால் மட்டுமே செய்கிற கிரிவலம் அல்ல. மேலே சொன்னதுபோல் சுழல்வல கிரிவலம் முறையே தொடர்ந்து இரண்டு நாட்கள் திருவண்ணாமலையை கிரிவலம் வந்தார் என்றால் என்னே அவள் பக்தி. இப்படி கிரிவலம் செய்த அஞ்சனாதேவி ஆஞ்சநேய மகாபிரபுவை கர்ப்பம் தாங்கம் நல்வரம் பெற்ற புண்ணிய இடமே காயத்ரி தரிசனப்பகுதி.

  மேலும் குழந்தைகளுக்கு முதலாண்டு நிறைவில் செய்யப்படும் அன்னம் பிராசனம் அதாவது முதன் முறையாக அன்னடம் உட்டப்படும் விழா ஆஞ்சநேயருக்கு திருவண்ணாமலையில் தான் நடைபெற்றது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள உண்ணாமலையம்மன் தீர்த்தக் கரையில் அன்னதானம் செய்வோருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். குழந்தைகள் சிறந்த ஓழுக்கத்துடன் தெய்வபக்தியுடன் வளர்ந்து பெற்றோர்க்கு பெருமை சேர்ப்பர். குழந்தை பேறு இல்லாமல், வருந்துபவர்கள் பலர், அவர்கள் அருணாசலேஸ்வரனை மனதில் நன்கு தியானித்தவாறே செவ்வாய் கிழமையும், புதன் கிழமையும் கூடிவரும் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வரவேண்டும்.

அஞ்சநேயருக்கும் திருவண்ணாமலைக்கும் இடையே உள்ள தொடர்பை காண்போம்.

ஆஞ்சநேயரும் திருவண்ணாமலையும்:-

   சீதாபிராட்டியின் பூஜைக்காக பலவித லிங்கங்களை அவசர அவசரமாக கொடுத்தவர். சரியான நேரத்திற்கு வரமுடியாமல் போனதால் இவ்வாறு காலம் தாழ்த்தி வந்து விட்டோமே என்று மனம் வருந்தினாராம். தமது நீண்ட வாலால் அல்லவா லிங்கமூர்த்திகளை கொண்டு வந்து சேர்த்தார். பக்தி பெருக்கினால் அவர் அவ்வாறு செய்தார் எனினும், அதற்கு பிராயசித்தம் தேடியும் அந்த லிங்கமூர்த்திகளுக்கு பல பஞ்ச பூத சக்திகளை அளிக்க எண்ணியும், அதற்கான பூஜை முறைகளை அறிவதற்கான நேரத்தை எதிர்பார்த்திருந்தார். அச்சமயத்தில் ஓரு நாள் மார்க்கண்டேய் மகரிஷியோ அஞ்சநேயர் முன்னிலையில் வந்தார். அவருடைய வருகையால் அஞ்சநேயர் மட்டில்லா மகிழ்ச்சி கொண்டார். சிவபெருமான் தமது காலால் காலனையும் எட்டி உதைக்கும்படி செய்த ஞாலம் புகழ் மகரிஷி அல்லவா அவர், அஞ்சநேயரை பார்த்த மார்க்கண்டேயர் தமக்கு அருணாசலேஸ்வரர் அருளிய ரசமணி சித்தியை பெற தகுதி முற்றிலும் வாய்ந்தவர் அவரே என உணர்ந்தார்.

 அஞ்சநேயரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அவருடன் திருவண்ணாமலையை கிரிவலம் செய்து அங்குள்ள ஓரு பெரியமலை மீது அமர செய்து ரசமணி சித்தியை முறையாக உபதேசம் செய்தார், மார்க்கண்டேய மகரிஷி இந்நிகழ்ச்சி நடந்தது அனுமந்த் ஜெயந்திக்கு முந்த பௌர்ணமியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பௌர்ணமி என்பதால் தான் பௌர்ணமி அன்று திருவண்ணாமலையை கிரிவலம் வருவது மிகவும் பலன் தரக்கூடிய தாகும். எனவே தான் மற்ற நாட்களை விட மிக அதிகமாக அண்மை காலத்தில் இலட்சகணக்கில் மக்கள் பௌர்ணமி அன்று திருவண்ணாமலையை கிரிவலம் செய்து வருகிறார்கள்.

  திருவண்ணாமலையில் ஓவ்வொரு மாதப்பௌர்ணமியிலும் சந்திர ஓளியிலும் பல அபூர்வ மூலிகைகள் மலர்வதாக பெரியோர்கள் அறிந்து கூறியுள்ளனர். ஓவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று தோன்று சந்திரகிரணங்கிள் தாத்பரியங்கள் வெவ்வேறு தன்மை உடையவனாய் உள்ளன. எனவே ஓவ்வொன்றும் வேவ்வேறு வித கர்ம வினைகளையும், நோய்களையும் மனத்துன்பங்களையும் நீக்கும் சக்தி பெற்றனவாய் விளங்குகின்றன.

  மார்க்கண்டேய மகரிஷி அருணாசஸ்வரரின் அருளால் அகத்திய முனிவர் மூலமாக 108 லிங்கங்களை பிரதிஷ்டை செய்து அவற்றை வழிபாடு செய்யும் முறைகளை தெரிந்து கொண்டது திருவண்ணாமலையில் தான். அவர் 108 லிங்க பூஜை வழிபாட்டின் பலனாக 64  வித ரசமணி கோளங்களை திருவண்ணாமலையின் எட்டுத்திசைகளிலும் பூமியின் அடியில் பதித்து எட்டுதிக்கு லிங்க பூஜைகளையும் ஒதி தேவ மூர்த்திகளின் முன்னிலையில் சிறப்பாக நடத்தினார்.ஓவ்வொரு திக்கிற்கும் எட்டு ரசமணி கோளங்களை அஷட் கோணவடிவில் அவை பிரதிஷ்டை செய்யப்பட்டன. எனவே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்தாலும் அந்த ரசமணியின் தெய்வீக சக்தி குன்றாதாம். ஜோதிகயாக அருள் புரிந்து கொண்டிருக்கிறது.

செய்தி : ப.பரசுராமன்

படங்கள்:ப.வசந்த்

The post சுழல் கிரிவலத்திற்கு  வந்த ஆஞ்சநேயரின் தாயார்! appeared first on SWASTHIKTV.COM.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 11/06/2016

எதிரி என்று நினைத்து ஈசனை வாளால் வெட்டிய மன்னன்

$
0
0

      விழுப்புரம் ஆடுத்து எலவனாசூர் கோட்டையில் அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயரில் சிவன்,தாயார் பிரகன்னநாயகி உடன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் முன் ஜென்ம பாவமும்,சாபமும் தீரும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. முதலாம் ராஜராஜ சோழன் காலமாகிய (கி.பி.985-1014) கி.பி.10இம் நூற்றாண்டு முன்பே தமிழகத்தின் தொண்மை தலங்களுள் ஓன்றாக விளங்கியுள்ளது. பிற்காலத்தில் சோழ, பாண்டிய மன்னர்களில் சிலரும்,விஜய நகர மன்னர்களின் சிலரும் இக்கோவில் வளர்ச்சிக்கு காரணமாக திகழ்ந்தனர்.

தலபுராணம்:-

          ராஜராஜ சோழன் எலவனாசூர் கோட்டை வழியாக படை சூழ போருக்கு செல்லும்போது மண்டியிருந்த புதரில் சலசலப்பு கேட்டது. எதிரி தன்னை மறைந்து இருந்து தாக்க இருக்கிறான் என்று குதிரை மீது இருந்தவாரே புதர்களை வெட்டிக்கொண்டே வந்தான். அப்போது அந்த புதரில் இருந்த சிவலிங்கத்தின் மீது வாள் பட்டு ரத்தம் கொட்டத்தொடங்கியது. உடனே வாளை கீழே போட்ட மன்னன் ஆண்டவனே தெரியாமல் பட்டுவிட்டது. “எதிரிதான் என்னை தாக்க வருகிறான் என்று எண்ணி வாளால் புதர்களை வெட்டினேன்” என்றான். “தவறு செய்து விட்டேன்” என்று வருந்தினான் மன்னன். அப்போது அசரீய ஓலி கேட்டது. “மன்னா உன் நினைவாக இங்கு ஏனக்கு ஓர் ஆலயம் கட்டவேண்டும்” என்று சொல்லி மறைந்தது. ராஜராஜசோழன் உடனே தன் படைகளை தஞ்சாவூருக்கு அனுப்பி கட்டுமானப்பொருட்களை யானை, குதிரை, மீது கொண்டுவந்து கட்டப்பட்டதாகும் இந்த திருத்தலம். பிற்காலத்தில் திருக்கோவிலூரை ஆண்ட தெய்வீக மன்னன் என்பவன் சாபம் நீங்க அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு பின் சாப விமோசனம் பெற்றான் என்பது வரலாறு.

இறைவாச நல்லூர்:-

                பழங்காலத்தில் இத்திருத்தலம் சோழ கேரள சதுர்வேரி மங்கலம். சோழ கேரள நல்லூர் பிடாகம், இறைவாச நல்லூர் என்னும் பெயர்களால் வழங்கப்பெற்றது. இன்று இத்தலம் எலவனாசூர்கோட்டை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

கோவில் சிறப்பம்சம் :-

                இக்கோவிலானது மாடக்கோவில் இகும். மாடக்கோவிலின் அமைப்புக்குரிய இலக்கணம், யானை ஐறமுடியாத மேடைப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பெறுவதாகும். மேலும் சிவாகம இலக்கண முறைப்படியும் இத்திருக்கோவில் சிறப்பாக அமைந்துள்ளது. ஆறு அடுக்குகள் கொண்ட இராஜகோபுரம்.கோபுரத்திற்கும் கோவில் கட்டிடத்திற்கும் இடையே நூற்றுக்கால் மண்டபம், கோவிலின் நான்கு எல்லைகளிலும் துர்க்கை கோவில்கள் அமைந்துள்ளவை போன்றவைகள் இத்தலத்தின் கூடுதல் சிறப்பம்சமாகும்.

பூஜைகள் :-

                பிரதோஷ நாட்களில் மிகவும் விமரிசையாக பூஜைகள் நடைபெறும். பங்குனி மாத பெருவிழா, மாசி மகத்தில் தீர்த்தவாரி உற்சவம் ஆகியவை நடைபெற்று வருகிறது.

அமைவிடம்:-

                விழுப்புரம் மாவட்டம், உளூந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் எலவனாசூர் கோட்டை எனும் ஊரில் அர்த்தநாரீஸ்வரார் ஆலயமும், வைஷ்ணவ தலமான ஸ்ரீராஜ நாராயண பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது. உளூந்தூர் பேட்டையிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. சேலம் டு கள்ளக்குறிச்சி செல்லும் சாலையிலிருந்து 24 கி.மீ தொலைவில் எலவனாசூர் கோட்டை உள்ளது.

தொடர்புக்கு :-

       பாண்டுரங்கன் – 9443385223

        படமும் செய்தியும்

        ப.பரசுராமன்.

 

The post எதிரி என்று நினைத்து ஈசனை வாளால் வெட்டிய மன்னன் appeared first on SWASTHIKTV.COM.

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 13/06/2016

தீராத நோய் தீர்க்கும் பருவதமலை ஸ்ரீமல்லிகார்ஜீனர்

$
0
0

   திருவண்ணாமலை மாவட்டம், தென்மகாதேவமங்கலம் என்னும் பர்வதமலையில் மல்லிகார்ஜுனா என்ற பெயருடன் சிவன் அருள்பாலிக்கிறார். இவரை பவுர்ணமி அன்று வழிபட்டால் தீராத நோய்கள் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் திரும்பலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தலவரலாறு:

   parvathamalai-nature-trails3 அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து பறந்து சென்றபோது கீழே விழுந்த ஒரு பகுதியே இந்த மலை என்பதால் சஞ்சீவி பருவதமலை என்றும் தென்மகாதேவமங்கலம் அழைக்கப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த மலை பருவதமலை. இந்த மலையில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோயில் உள்ளது. இம்மலை சுமார் 4560 அடி உயரம் உள்ளது. மலை ஏறி செல்லும்போது மேகங்கள் நம்மீது தவழ்ந்து செல்லும். 700 அடி உயரம் உள்ள செங்குத்தான கடப்பாரை படி, ஏணிப்படி, ஆகாயப்படி உள்ள அதிசய மலையாகும். சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். பலருக்கு காட்சியும் கொடுத்துள்ளார்கள். இந்த மலையில் பல்வேறு மூலிகைகளும் நடுவில் துளையில்லாத கல்மூங்கில் மரமும், மூன்று இதழ்கள் கொண்ட பிரமாண்ட வில்வ மரங்களும் உள்ளன. இந்த மலையின் உச்சியில் பல நூற்றாண்டுகளை கடந்த பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை உடனமர் மல்கார்ஜுன திருக்கோயில் உள்ளது. இங்கு சிவபெருமான் நந்தியாகவும் லிங்கமாகவும், திரிசூலமாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

       பூர்வீகத்தில் சிலதா முனிவருக்கு மகனாக அவதரித்தவர் நந்தியம் பெருமான். அவர் பர்வதர் என்ற பெயர் கொண்டு தன்னுள் எப்பொழுதும் இறைவன் உறைந்து இருக்க வேண்டி தவம் புரிந்ததாகவும், பின்னர் சுயம்பு வடிவாகி சஞ்சீவி பர்வதமலை சிகரத்தின் உச்சியில் மேக கூட்டங்களுக்கு இடையில் விண்ணை தொடும் அளவிற்கு வடக்கு நோக்கி உள்ளார். இறைவனும் பர்வதத்தினுள் உறையவே பர்வதரின் சிரசின் மீது காரியூண்டிக் கடவுளாய் சிவன் இங்கு கிழக்கு நோக்கி இருந்தபடி அருள்பாலிக்கிறார். எனவே இதனை நந்திமலை, பர்வதமலை என பக்தர்கள் அழைக்கின்றனர். பர்வதராஜ மன்னனுக்கு மகளாக அவதரித்த பார்வதி தேவி ஈசனின் உடலில் இடபாகம் வேண்டி காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்தபோது இம்மலை அடிவாரத்தில் பச்சையம்மனாக தவமிருந்து இறைவனை வணங்கினார். எனவே இது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவபெருமானுக்கு வடநாட்டில் எப்படி அபிஷேகம் அவரவரே செய்வதுபோல் இங்கும் இறைவனுக்கு அபிஷேகம் செய்யலாம். இத்தனை சிறப்புகள் வாய்ந்த பர்வதமலை சன்னிதானத்திற்கு 600 ஆண்டுகளுக்கு பிறகு திருவல்லிக்கேணி ஸ்ரீ பர்வதமலை அடியார்கள் திருப்பணிச்சங்கம் பெரும் முயற்சியால் கடந்த 20.01.2016 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மராம்பிகை தாயார்:

 மலை மீது உள்ள ஆலயத்தில 3 பிரகாரங்கள் உள்ளன. முதலில் விநாயகர், வள்ளிதெய்வானை சமேத முருகர், வீரபத்திரர், காளி ஆகியோரை தரிசிக்கலாம். இரண்டாவதாக ஸ்ரீ மல்லிகார்ஜுனரையும் அடுத்து பிரம்மராம்பிகை தாயார் வேறெங்கும் காணமுடியாத பேரழகுடன் இரவில் அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியை காணலாம். அம்மனை வணங்குபவர்களுக்கு புத்திரபாக்கியம், திருமண தடைகள் விலகும், தீபம்போட்டு வணங்கினால் எல்லா குறையும் தீரும் என்பது ஐதீகம்.

கிரிவலம்:-

  மார்கழி மாதம் மாதபிறப்பில் தனுர் மாத உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த உற்சவ விழாவில் கோவில் மாதிமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரஹன் நாயகி சமேத கரைக்கண்டஈஸ்வரர் 24 கி.மீ. தூரம் கொண்ட பருவதமலையை கிரிவலம் வருவார். அப்போது 47 கிராமங்களைச் சேர்ந்த மண்டகபடியாளர்கள் சாமிக்கு அபிஷேகம் ஆராதனை செய்வார்கள். இந்த பர்வதமலைக கிரிவலம் முடிந்தபின்னர்தான் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மலையை சுற்றி கிரிவலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பணிக்கு உதவும் அன்பர்கள் தொடர்புக்கு

திருவல்லிக்கேணி ஸ்ரீ பர்வதமலை அடியார்கள் திருப்பணிச்சங்கம்

விகாஸ் இ.பாண்டியன், செல்: 9884236697

அமைவிடம்:  திருவண்ணாமலை இருத்து 35 கிமி தொலைவில் உள்ளது                                                                                படங்கள்  :ப.வசந்த்                                                                                                                                                                                                                              செய்தி: பரசுராமன்

The post தீராத நோய் தீர்க்கும் பருவதமலை ஸ்ரீமல்லிகார்ஜீனர் appeared first on SWASTHIKTV.COM.

Viewing all 15459 articles
Browse latest View live