Quantcast
Channel: SwasthikTv
Viewing all 15459 articles
Browse latest View live

முடியாத செயல்கள் முடிந்து விட வேண்டுமா?

$
0
0

முடியாத செயல்கள் முடிந்து விட வேண்டுமா?

காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்குப் படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.

சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.

சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.

சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.

ஆஞ்சநேயருக்கு வடை, வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

ஏழரை சனி, அஷ்டமத்து சனி மற்றும் சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.

ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.

சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.

சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.

சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.

ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.

கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.

சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும். சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.

சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும். பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.

சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம். சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை செய்து பயன்பெறலாம்.

For Details and news updates contact:

முனைவர் முருகு பாலமுருகன்

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post முடியாத செயல்கள் முடிந்து விட வேண்டுமா? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோவில்!

$
0
0

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோவில்!

 தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில், தென்றல் வீசும் குற்றால நீர்வீழ்ச்சியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தலத்தில் காலடி எடுத்து வைத்தவுடனே மூலிகை நறுமணம் நம்மை வரவேற்கும். இது கேரள நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குள் வரும் நுழைவு வாயில். இந்த கோவில் ஆயிரம் வருட பாரம்பர்யம் கொண்டது. இதன் சிற்ப வேலைப்பாடுகள் அதிசயத்தக்க வகையில் உள்ளது.தீபாவளி பண்டிகை கொண்டாடும் முறை

  நெல்லை மாவட்டத்தில் உள்ள இத்திருத்தலத்தில் ஈஸ்வரன் சுயம்புவாக எழுந்தருளி இருப்பது மிகவும் விசேஷம் என்கின்றனர். வடக்கே காசியிலுள்ள விஸ்வநாதரை தரிசித்த பலனும், சக்தியும் இங்குள்ள ஈஸ்வரனை தரிசித்தால் கிடைக்கும் என்று நம்புகின்றனர். இங்குள்ள அம்மனின் பெயர் உலகம்மன் என்பது ஆகும். இந்த கோவில் சுமார் 700 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதை கோவிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறியப் படுகிறது.

   இந்த இடத்தை முன்பு ஆட்சி புரிந்த பராக்கிரம பாண்டிய மன்னன் தீர்த்த யாத்திரையாக வடக்கே உள்ள காசிக்கு புறப்படத் தயாரானார். அன்று இரவு அவரது கனவில் சிவபெருமான் தோன்றி, பக்தனே ! என்னைக் காண பல நூறு கல் கடந்து பயணம் செய்வதற்கு பதிலாக இங்கேயே ஒரு கோவில் எழுப்பினால், நான் வந்து அருள் புரிகிறேன். என் சன்னிதானம் அமையும் இடத்தை உன் அரண் மனையின் வாசலில் உள்ள எறும்புக் கூட்டம் வழி காட்டும்” என்று கூறி மறைந்தார்.

சுயம்புவாக சுவாமி தோன்றினார்:

 மன்னர் விழித்து எழுந்து அரண்மனை வாசலுக்கு சென்று பார்த்தபொழுது, முன்பு காணாத எறும்பு கூட்டம் சாரை, சாரையாக, சென்றது. அதைப் பின் தொடர்ந்து செல்கையில் சிற்றாறு நதிக்கரையில் செண்பக மரங்கள் அடர்ந்த காட்டில் ஒரு எறும்பு புற்று இருந்தது. அத்துடன் எறும்பு கூட்டம் நின்றுவிட்டது. அந்த இடத்தில் சுவாமி, சுயம்புவாக தோன்றினார். அதை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து இந்த கோவிலை கட்டி முடித்தார்.

   1967-ம் ஆண்டு வரை கோபுரம் இல்லாமல் இருந்தது. 1990ம் ஆண்டு 9 அடுக்குகளுடன், 180 அடி உயரத் தில் கலை வேலைப்பாடுகளுடன் கட்டி முடிக்கப்பட்டு, கம்பீரமாக தோற்றமளிக்கின்றது. கோபுரத்தின் 9 கோணங்களிலிருந்தும் வீதியை காணும் அமைப்பும், அகலமான வீதியும், சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திலிருந்தும் சுவாமியைக் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 9வது அடுக்கில் ஒரு பால்கனி கட்டப்பட்டு அதிலிருந்து பார்த்தால் பச்சைப்பசேல் என்ற சுற்றுப்புறம் காண்பதற்கு ரம்மியமாய் உள்ளது. இக்கோவில் திரிகூட மலையின் அடிவாரத்தில் உள்ளது. (மூன்று மலைகள் சேர்ந்து இருப்பதால் திரிகூடம் என்று அழைக்கப்படுகிறது).  சுயம்புவான ஈசனார் லிங்க வடிவத்தில் கிழக்கு நோக்கிருக்கிறார். அருகில் பார்வதி தேவி உலகம்மனாக இருக்கிறார்.உடன் பாலசுப்ரமணியரும் உள்ளார்.

திருமணம் கைகூடும், புத்திரபாக்கியம் கிட்டும்

 நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவபக்தர்கள்,தங்கள் குடும்பங்களின் நடக்கும் அனைத்து சுப காரியங் களுக்கும் இங்கு வந்து காசி விஸ்வநாதரை வணங்கி, ஆசி பெற்று செல்கின்றனர். அதனால் வாழ்க்கை வளம் பெறும், தொழில் வளம் உயரும், ஆரோக்கியம் பெருகும், வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு உகந்த வேலை கிட்டும், திருமணம் கை கூடும், புத்திரபாக்கியம் தருவார், இல்லற வாழ்க்கையில் நிம்மதி வந்து சேரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

 இங்கு ஈஸ்வரனுக்கும், அன்னைக்கும் வஸ்திர வழிபாடு செய்து ஆராதிக்கின்றனர். மிகவும் அபூர்வமாக எல்லா தலங்களிலும், தெற்கு நோக்கி இருக்கும் துர்க்கா தேவி இங்கு மேற்கு நோக்கி இருக்கிறார். நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், இந்திரன், வாலி, நந்தி ஆகியோர் வழிபட்ட தலம் என்கின்றனர். மூன்று முக்கிய காரணங் களுக்காக இத்தலம் கீர்த்தி பெற்றது. பூர்வஜன்ம பாவங்கள் நீங்குதல், தோஷ நிவர்த்தி, புத்திர பாக்கியம் பெறுதல் ஆகியவைகள் ஆகும்.

 தீர்த்த குளங்களாக, காசி தீர்த்தம், சித்திர குளம், அன்னபூரணி தீர்த்தம், ஆனந்த தீர்த்தம் ஆகிய 4 தீர்த்தங்கள் இருக்கின்றது. சிற்றாறு நீர், கங்கைக்கு ஒப்பான சக்தி வாய்ந்ததாகும்.
இந்த கோவிலின் தல விருஷம் செண்பக மரம். இங்குள்ள சிற்பங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை என்று கூறப்படுகின்றது. குறிப்பாக, இரட்டை சிற்பங்களாகிய வீரபத்திரன்-வீரபாகு, இரண்டு தாண்டவ மூர்த்திகள், இரண்டு தமிழ் அன்னைகள், ரதி- மன்மதன் ஆகியவைகளும் மிகவும் நேர்த்தியான மஹாவிஷ்ணு, கம்பீரமான காளி தேவி அனைத்தும் வியக்கத்தக்க சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவைகள் ஆகும்.

 மதுரை நகரைப் போன்று, இந்த கோவிலைச் சுற்றிலும் பல கோவில்கள் இருக்கின்றன. மேற்கு பிரகாரத்தில் மூலை விநாயகர் வெகு அழகாய் அமர்ந்து அருள் தருகிறார். பஞ்சலிங்க அய்யனார், மஹாலஷ்மி, சந்தன மாரீஸ்வரர், நடராஜ பெருமான், சண்டீஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது. அர்த்த மண்டபம், மணிமண்டபம், பஞ்ச பாண்டவர் மண்டபம், மஹா மண்டபம், இசை எழுப்பும் கல் தூண் மண்டபம் ஆகியவைகளும், பராக்கிரம பாண்டியன் சுவாமியை வணங்குவது போன்ற தத்ரூபமான சிலைகளும் காண்போரை வியக்க வைக்கும். இக்கோவில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பெரியதாக உள்ளது.

 இந்த தலத்தில் மாசி மகம், நவராத்திரி, திருக்கல்யாணம், ஐப்பசி மாதத்திலும், தெப்பத்திருவிழா ஆவணி மாதம் மூல நட்சத்திரத்திலும், பத்ர திருவிழா தை அமாவாசை அன்றும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்படுகிறது

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோவில்! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்ற சதுரகிரி மலை

$
0
0

சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்ற சதுரகிரி மலை

Swasthiktv.com யின் ஆன்மீக ஆலய தரிசனம் இப்பகுதியில்  சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்ற சதுரகிரி மலை.

சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.

 சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ஆராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது.

  சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது.

சதுரகிரி தல வரலாறு :

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள். வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார்.

துன்பங்கள் போக்கும் திருநீலகண்ட பதிகம்

 பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு “சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது.

 ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.  சிவபெருமான் அவனை தேற்றி, “” நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய்.

ஆரோக்கியமும் ஆயுளும் நீடிக்க வேண்டுமா?

சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி “மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார்.

 இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.

 செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.

 இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.

pra2

 கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம். இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள்.  பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம்.

பெரிய மகாலிங்கம்:

நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை “பெரிய மகாலிங்கம்’ என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை:

மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். அருளை வழங்குவது “சுந்தரமகாலிங்கம்’, பொருளை வழங்குவது “சுந்தரமூர்த்தி லிங்கம்’ என்று கூறுவர்.

பார்வதி பூஜித்த லிங்கம் :

சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள்.

தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து “அர்த்தநாரீஸ்வரர்’ ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள்.  பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.

For Details and news updates contact:
 Send Your Feedback at : editor@swasthiktv.com
Mobile: 9941510000
To Receive Our Daily Devotional News Update on Whatsapp message with Your name to 8124516666
Like us our Facebook page swasthiktv.com
Subscribe in Youtube: https://www.youtube.com/channel/UCGcuIrojwgrYpm5cKdf2bhg

The post சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்ற சதுரகிரி மலை appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

பிரமிப்புயூட்டும் அதிசய சிவலிங்க ஸ்தலங்கள்

$
0
0

பிரமிப்புயூட்டும் அதிசய சிவலிங்க ஸ்தலங்கள்

சோழ மன்னர்களால் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோவில்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜ சுவாமி கோவிலின் சன்னதியில் லிங்கத்திற்கு பதிலாக ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது. இக்கோவிலில் புற்று வடிவில் சிவன் காட்சி தருகிறார்.

tv2

 கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 5 அடி உயரம் உடைய பசுபதீஸ்வரர் லிங்கம் உள்ளது. ஒரு பசுவின் காம்பில் இருந்து வடியும் பாலில் குளிப்பது போன்று லிங்கம் கர்ப்பகிரகத்தில் சிவபெருமான் காட்சியளிக்கிறது.

 பஞ்சபுத ஸ்தலங்களில் திருவானைக்கால் ஸ்தலம் நீர்த்தலம் ஆகும். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

 சென்னை அம்பத்தூருக்கு அருகிலுள்ள திருமுல்லைவாயிலில் உள்ள மாசில்லாமணீஸ்வரர் கோவிலில் வழக்கத்திற்கு மாறாக நந்தி சிலை சிவபெருமானை நேராகப் பார்த்து இருக்காமல், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

 கேரளா மாநிலம் திருச்சுரில் அமைந்துள்ள வடக்கும்நாதர் சிவன் கோவிலில் எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய் உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது.

 உறைந்த நெய்யின் உயரமே நான்கு அடி உயரம் இருக்கும். எத்தனை விளக்குகள் ஏற்றி வைத்தாலும் கூட, அந்த விளக்குகளின் சூட்டிலும் சரி, வெயில் காலத்தின் சூட்டிலும் சரி, அந்த லிங்கத்தின் மேல் உறைந்த நெய்யானது உருகுவதில்லை. இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது.

tv3

ஈரோடு மாவட்டம், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவிலில் உள்ள குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபுதி தோன்றுகிறது. இது இந்த காலத்திலும் நடக்கும் ஒரு அதிசயம் ஆகும். அந்த குளத்தை சிவபெருமான் தன் விரல் நகத்தால் மண்ணில் கிழித்து உருவாக்கினாராம். மிக உயரமான கல் விளக்கு இந்த கோவிலில் காணப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சால்மலா ஆற்றில் 1000த்திற்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடம் சஹஸ்கர ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த லிங்களுக்கு அருவியிலிருந்து வழியும் நீரால் இயற்கையாகவே அபிஷேகம் செய்யப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் தங்க சுரங்கத்திற்கு புகழ்பெற்ற கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற ஊரில் கோடிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் பல்வேறு அளவுகளிலான கிட்டத்தட்ட ஒரு கோடி சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதனாலேயே இக்கோவிலுக்கு கோடிலிங்கேஸ்வரர் கோவில் என்ற பெயர் வந்துள்ளது.

tv1

சிவகங்கை, திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை சமேத திருநோக்கிய அழகியநாதர் ஆலயம் உள்ளது. தனது குறைகளை போக்க வேண்டி இறைவி இத்தலத்தில் துளசி தளங்களால் ஈசனை வழிபட்டாளாம். அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது. மணப்பேறு கிட்டவும் பிரிந்த தம்பதியர் மீண்டும் சேரவும் இத்தலத்திற்கு வந்து தரிசித்து பயனடைகின்றனர். இங்கு பிரதோஷ காலங்களில் மட்டும் இரு மரகத லிங்கங்கள் வெளியே எடுக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன.

மதுரையிலிருந்து துவரிமான், தேனூர் வழியே சோழவந்தான் பேருந்து பாதையில் 18 கி.மீ. தொலைவில், திருவேடகம் இருக்கிறது. இறைவன் ஏடகநாதர், மந்திர மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். அனைத்து பில்லி, சூன்யங்களும் இவ்வாலய மூர்த்தியைத் தரிசித்ததும் நீங்கி விடுகின்றன. இங்கே எழுந்த ருளி அருள்பாலிக்கும் அம்பாள் ஏலவார் குழலி, பெண்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நீக்கித் தருகிறாள். இங்குள்ள ஸ்தல விருட்சமான வி ல்வ மரம் சக்தி படைத்தது. இத்தலத்தில் பிரம்ம தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்து நீரையே இறைவனுக்கு அபிஷேகத்தின் போது பயன்படுத்துகிறார்கள்.

The post பிரமிப்புயூட்டும் அதிசய சிவலிங்க ஸ்தலங்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தினசரி ராசிபலன்கள் இன்று 30.10.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

$
0
0

தினசரி ராசிபலன்கள் இன்று 30.10.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர் கள். உறவினர், நண்பர்க ளால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத் தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

சிம்மம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். மனைவிவழியில் எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர் கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அதிகாரப் பதவி யில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

துலாம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வந்துப் போகும். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத் தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

மீனம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார் கள். திடீர் பயணங்கள் உண்டு. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத் தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post தினசரி ராசிபலன்கள் இன்று 30.10.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஸ்ரீ மாதசிவராத்திரி விரதமும் வழிபாட்டு காலங்களும்

$
0
0

ஸ்ரீ மாதசிவராத்திரி விரதமும் வழிபாட்டு காலங்களும்

சிவராத்திரி வழிபாட்டுக் காலங்கள்

 உமாமகேஸ்வர விரத காலத்தில் உமா மகேஸ்வரரையும், திருவாதிரையில் நடராஜரையும், திரிசூலவிரதத்தின்போது அஸ்திரதேவரையும், வழிபடுவது போலவே சிவராத்திரியின் மூன்றாவது காலத்தில் லிங்கோற்ப மூர்த்தியை வழிபட வேண்டும்.  இதனால் சிவராத்திரியின் மூன்றாவது காலம் லிங்கோற்பவ காலம் என்றே அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் சிவபெருமான் நெருப்புத்தூண் நடுவில் இருந்து மான், மழு அபயவரத முத்திரைகளுடன் உருவம் தாங்கி அருள்பாலித்தார்.

 லிங்கம் என்ற சொல்லுக்கு உருவம் என்பது பொருள். உருவம் தாங்கி சிவபெருமான் வெளிப்பட்டு அருள்பாலித்ததால் இது லிங்கோத்பவம் என அழைக்கப்படுகிறது. இது சிவலிங்கமூர்த்தியின் மையத்தில் அழல் போன்ற பிளவில் தனித்த சந்திரசேகரமூர்த்தி எழுந்தருளியிருக்க லிங்கத்தின் வலப்புறம் பிரம்மதேவனும், இடப்புறம் திருமாலும் கைகூப்பி நிற்கின்ற நிலையாகும். பிளவினைச் சுற்றி அக்கினிச் சுடர்கள் காட்டப்படுகின்றன. பெருமானின் பாதமும், உச்சியும் காட்டப்படுவதில்லை. இதன் மூலம் முதலும் முடிவற்ற நிலையில் அவர் இருப்பது சுட்டப்படுகின்றது.

 லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் பன்றி வடிவில் திருமாலும், உச்சியில் அன்ன வடிவில் (அல்லது அன்னத்தின் மீது அமர்ந்தவாறு) பிரம்மதேவனும் பெருமானின் அடிமுடிதேடும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் வலப்பகுதியில் பிரம்மதேவனும் இடப்புறம் திருமாலும் அவரை வழிபடும் பாவனையில் கூப்பிய கரங்களுடன் உள்ளனர்.

எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும்

 இம்மூர்த்தியை புராணங்களும் கல்வெட்டுகளும் ‘‘லிங்கபுராணமூர்த்தி’’ என்றே குறிப்பிடுகின்றன. சிவாலயத்தில் இவருக்கான இடம் கருவறையின் பின்புறம் அமையும் மாடமாகும். ஆலயத்தின் மற்ற இடங்களில் லிங்கோற்பவ மூர்த்தியை வைக்கும் வழக்கம் இல்லை. இச்சிலையமைப்பில் காலப்போக்கில் ஏற்பட்ட சிலபுராண மாறுதல்களால் லிங்கத்தின் இடைப்பகுதியில் தாழம்பூவும் உச்சியில் கொன்றை மலர்க் கட்டும் காட்டப்படுகின்றன.

 ‘‘லிங்கபுராணத் தேவரான’’ லிங்கோற்பவரை கல் திருமேனியாக எழுந்தருளி வைப்பதே வழக்கமாகும். என்றாலும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் மனைவியால் செய்தளிக்கப்பட்ட உலோகத் திருமேனியிருந்ததை கல்வெட்டு குறிக்கின்றது.

  சிவபெருமான், அவரை வழிபட்டு அருள் பெறும் பிரம்மன், திருமால் ஆகிய மூர்த்திகள் அவர்களின் அவதாரமான பன்றி, அன்னம் ஆகிய வடிவங்களைக் கொண்டிருந்ததால் இம் மூர்த்தம் லிங்க புராணதேவர் என்றே அழைக்கப்பட்டது.

 சிவராத்திரியின் மூன்றாம் காலத்தில் இந்த மூர்த்திக்கு நெய்பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளித் துணிகள் அணிவித்து தாழைமடல்களால் அலங்கரித்து, எள்ளன்னம் நிவேதிக்க வேண்டும் என்பர். ஆகமங்களில் சொல்லப்பட்ட வகையில் லிங்கோற்பவரை பல்லவர்கள் கண்ட காஞ்சிக் கலைக்கோயில்கள் அனைத்திலும், வடஆற்காடு மாவட்டம் குடிமல்லூரிலும் காணலாம்.

தலம் எதுவானாலும் எங்கும் நானே இருக்கிறேன்

 சிவராத்திரியானது மாதசிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்யசிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, மாகசிவராத்திரி, (மகாசிவராத்திரி) என ஐந்து வகைப்படும்.

மகாசிவராத்திரி என்பது மாசிமாதத் தேய்பிறைச் சதுர்த்தசியில் வருவதாகும். இதனை வருஷ சிவராத்திரி என்றும் மகாசிவராத்திரி என்றும் அழைப்பர்.

யோக சிவராத்திரி என்பது திங்கட்கிழமை காலை முதல் 60 நாழிகை அமாவாசை இருப்பது அல்லது திங்கட்கிழமை அஸ்தமனம் முதல் செவ்வாய் காலைவரை தேய்பிறை சதுர்த்தசி இருப்பதுமாகும். இதனை வார சிவராத்திரி எனவும் கூறுவர். திங்கட்கிழமை இரவு நான்காம் சாமத்தில் அரைநாழிகை தேய்பிறை சதுர்த்தசி இருந்தாலும் அதுவே யோகசிவராத்திரியாம். இதனை அனுஷ்டிப்பதால் மூன்றுகோடி சிவராத்திரியை அனுஷ்டித்த பலன் கிடைக்கும்.

நித்ய சிவராத்திரி என்பது ஓராண்டு முழுவதும் உள்ள வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தசி நாட்களில் வரும் இரவுகளாகும்.

பக்ஷசிவராத்திரி என்பது தை மாதத்திய தேய்பிறைப் பௌணர்மி நாளில் தொடங்கி பதின்மூன்று நாட்கள் ஒரு வேளை உணவுண்டு 14ம் நாளாகிய சதுர்த்தசியில் முழுமையாக இரவு கண்விழித்து உபவாசம் இருந்து நோற்பதாகும்.

ஸ்ரீ மாதசிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு திதிகளை ஒட்டி அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி விரதமாகும். இதன்படி ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி தினங்கள் மாறி மாறி வரும்.

இவ்வாறு வரும் ஒவ்வொரு மாத சிவராத்திரியிலும் ஒவ்வொரு வகையான தேவர்கள் சிவபிரானை அர்ச்சித்து அருள் பெற்றுள்ளார்கள். சிவபெருமான் நந்தியம் பெருமானுக்கு சிவராத்திரியின் பெருமைகளை உபதேசிக்க அதை அவர் மற்றவர்களுக்கு உபதேசிக்க அதனைக் கடைபிடித்து பேறு பெற்றவர்கள் புராண காலத்திலிருந்தே அநேகம்பேர் உண்டு.

 சதுர்த்தசித் திதியானது ஒரு நாளில் இடம் பெற்றிருக்கிற நேரத்தைப் பொறுத்து சிவராத்திரி மூன்று வகையாக அழைக்கப்படுகிறது.  இவை உத்தமசிவராத்திரி, மத்திமசிவராத்திரி, அதமசிவராத்திரி என்பனவாகும்.

பிரம்மஹத்தி தோஷம் நீங்கி எண்ணிலடங்கா நற்பலன்களை பெற

உத்தமசிவராத்திரி :

சூரியன் அஸ்தமிக்கும்போது திரயோதசி நீங்கி சதுர்த்தசி வந்து, அந்தத் திதி அன்றிரவு முழுவதுமும் நீடித்திருந்து மறுநாள் பகல் முழுவதும் தொடர்ந்து இருப்பின் அதுவே உத்தமசிவராத்திரியாகும். சூரியன் அஸ்தமித்த பின்னும், இரவின் பத்துநாழிகைக்கு முன்னும் சதுர்த்தசி வந்தாலும் அது உத்தம சிவராத்திரியாகும்.

மத்திம சிவராத்திரி:

காலை தொடங்கி, மறுநாள் உதயம்வரை அதாவது, அறுபது நாழிகை அளவும் சதுர்த்தசி நிலவுதல், சூரியன் அஸ்தமனத்திற்கு முன்னரே வரும் சதுர்த்தசி, இரவின் பத்து நாழிகைக்குப் பின்னர் வரும் சதுர்த்தசி ஆகிய இரவுகள் மத்திம சிவராத்திரி என்று என்றழைக்கப்படும்.

அதம சிவராத்திரி:

இரவின் இருபது நாழிகை அளவு சதுர்த்தசி இருந்து, அதன் பின்னர் அமாவாசை வந்தால் அந்த இரவு அதம சிவராத்திரி ஆகும். இதனை வழிபாட்டிற்கு ஏற்கக் கூடாது. இந்நாளில் விரதம் அனுட்டித்தால் புண்ணியத்திற்கு பதில் பாவமும், நரகமும் வந்து சேரும்.

 திரயோதசியைச் சக்தி வடிவமாகவும் சதுர்த்தசியை சிவபெருமானாகவும் கொள்ளுவர். இத்திதிகள் சேர்ந்த இரவு சிவலிங்க வடிவமானதாகும். அமாவாசையோடு கூடிய சதுர்த்தசி வைதீகர்களுக்கும், சன்னியாசிகளுக்கு மட்டுமே உரியது. இந்நாளில் சுத்த சைவர்கள் விரதமிருக்க மாட்டார்கள்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post ஸ்ரீ மாதசிவராத்திரி விரதமும் வழிபாட்டு காலங்களும் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

சிவன், ஹரி, சக்தி! மூன்று அம்சங்களைக் கொண்ட வராகி அம்மன்

$
0
0

சிவன், ஹரி, சக்தி! மூன்று அம்சங்களைக் கொண்ட வராகி அம்மன்

 பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும். அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள்.

 சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள். கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள்.

 லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும். வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார்.

 இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .தண்டநாத வராகி பொன்னிறமானவர்.

 பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும். சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச் சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும்.

 இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும். சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும். இரண்யாட்சகன், இரண்ய கசிபுவின் தம்பி இருவருமே அரக்கர்கள்.

மேலான வரங்கள் பெற்ற இவர்கள் பூமிப்பந்தை பந்தாடிக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை இரண்யாட்சகன், பூமியையே பாதாள உலகத்தில் கொண்டு போய் பதுக்கி வைத்து சகல ஜீவராசிகளை இம்சித்தான். காக்கும் கடவுளான மகா விஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்டார்கள்.

 மகா விஷ்ணுவும், வராக அவதாரம் (பன்றி) எடுத்து பாதாள உலகம் சென்று பூமாதேவியை மீட்டு வந்தார். இதனால் பூவராகவன் எனப்பட்டார். சிவபெரு மான் அந்தகாசுரனுடன் போர் புரியும் பொழுது, வராகமூர்த்தி, வராகி அம்மனாக பெண் உருக்கொண்டு சிவனின் வெற்றிக்கு வித்திட்டாள். எனவே பகை நாட்டின் மீது படை எடுத்துச் செல்லும் வேந்தர்கள் வெற்றிவேண்டி வழிபட்டுச் செல்லும் தேவியாக வராகி அம்மன் போற்றப்பட்டாள்.

 வராக முகம் உடையவள். பின்னிரு கைகளில் கலப்பை, உலக்கை ஏந்தியிருப்பாள். முன்னிரு கைகளும் அபய வரத ஹஸ்தம் கொண்டு அருள்பாலிப்பவள். மேக நிறமுடையவள். கரிய வண்ணத்தை விரும்புபவள். இத்தேவியின் வாகனமாக சிம்மம், எருமை, கரும்புள்ளிமான், சர்ப்பம் ஆகியவை உள்ளன.

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post சிவன், ஹரி, சக்தி! மூன்று அம்சங்களைக் கொண்ட வராகி அம்மன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ராகு, கேது, செவ்வாய், களத்திர தோஷம் நீக்கும் பிரதோஷம்

$
0
0

ராகு, கேது, செவ்வாய், களத்திர தோஷம் நீக்கும் பிரதோஷம்

 சிற்றரசனான வானகோவராயனை, சேர, சோழ, பாண்டியர் மூவரும் தங்களுக்குக் கப்பம் கட்ட நிர்பந்தித்து வந்தனர். ஆனால் வானகோவராயன் அதற்கு உடன்படவில்லை. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் செவிசாய்க்காத வானகோவராயனின் மீது ஆத்திரமடைந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களின் படையோடு மகதம் நோக்கி வந்தனர். இதை அறிந்த வானகோவராயன், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் சொர்ண புரீஸ்வரரை வணங்கிவிட்டு வீரத்துடன் போருக்குக் கிளம்பினான்.

 ஈசனின் பூரண அருளைப் பெற்று போர் முரசு கொட்டி வந்த வானகோவ ராயனைப் பார்த்த மாத்திரத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்களது அரச முடிகளை கழற்றி வைத்துவிட்டு போர் நடவடிக்கையை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர். இதனாலேயே அந்த இடம் மும்முடி என்றழைக்கப்பட்ட தோடு, சொர்ண புரீஸ்வரரின் அருளுக்கும் வானகோவராயனின் பக்திக்கும் சான்றாகவும் இருந்து வருகிறது.

ஷோடசலிங்கத்தின் சிறப்பு

 இங்கு அருளாட்சி செய்யும் சொர்ணபுரீஸ்வரர் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அருள்பாலிக்கிறார். நவபாஷாணத்துக்கு நிகரான, காந்தத் தன்மையும் கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட இந்த லிங்கத் திருமேனி சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.

 ஷோடசலிங்கம் பல சிவாலயங்களில் இருந்தாலும், இங்கு லிங்கம் மட்டு மின்றி, விஷ்ணு பிரம்ம பீடங்களும் 16 முகங்கள் கொண்டதாகவும் வடிவமைக் கபட்டுள்ளதால், உலகையேகட்டியாளும் மும்மூர்த்திகளும் ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

நிறம் மாறும் அபிஷேகப் பால்

 பெரும்பாலான சிவாலயங்களில் உள்ள நந்தி வயது முதிர்ந்தது போலவும், அவரின் திருமுகம் ஏதேனும் ஒரு பக்கத்தில் சாய்ந்திருப்பது போலவும் காணப்படுவது இயல்பு. ஆனால் இக்கோயிலின் நந்தியானது இளங்கன்றாகவும், சொர்ண புரீஸ்வரருக்கு நேர்கோட்டில் இருக்கு மாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரதான நிலைப்படியில் இருந்து சிவ தரிசனம் செய்வதற்கு வசதியான அமைப்பில் இருப்பது சிறப்பாகும். இந்த நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால் உள்ளிட்டஅபிஷேக பொருட்கள் நீல நிறமாக மாறி வழிந்தோடுவது குறிப்பிடத்தக்கது.

தேன் அபிஷேக மகிமை

 ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகு காலங்கள் மற்றும் திங்கட்கிழமை, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து தேனபிஷேகம் செய்து வழிபட உகந்த நாட்களாகும். நீண்ட காலமாக திருமணமாகாதவர் கள், இந்தக் கோயிலுக்கு வந்து ஈசனுக்கு தேனபிஷேகம் செய்து வழிபடுவதுடன், தொடர்ந்து 16 பிரதோஷ தினங்களில் வந்திருந்து ஈசனைத் தரிசித்து வேண்டிக் கொண்டால் திருமணத் தடை நீங்கும். மேலும் ராகு, கேது, செவ்வாய் மற்றும் களத்திர தோஷம் முதலான தோஷங்கள் கொண்டவர்களும், பிள்ளை பாக்கியம் இல்லாதவர்களும், தீராத மனக்கவலை கொண்டவர்களும் சொர்ணபுரீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்து, பிரதோஷ காலங்களில் தொடர்ந்து வழிபட்டால் பிரச்னைகள் யாவும் அடியோடு நீங்கும் என்பது நம்பிக்கை.

தோஷம் உள்ளவர்கள், ஸ்வாமிக்கு தேன் அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தரப்பட்ட தேனை 16 தினங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுப பலன்கள் கிடைக்கும். இந்தத் தலத்தில் சிவபெருமான் முனிவருக்கு காட்சியளித்தது பிரதோஷ வேளை என்பதால், இந்த ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெறுகிறது. பிரதோஷ நாட்கள் மட்டுமின்றி பௌர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் திங்கட் கிழமைகளில் வரும் சோமவார பூஜை, தமிழ் வருடப்பிறப்பு, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை, கார்த்திகை தீபம் போன்றவையும் இங்கு வெகு விசேஷமாக நடைபெறுகின்றன.

காகபுஜண்டர் வழிபாடு

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காகபுஜண்ட சித்தர் சிவ தரிசனம் வேண்டி 16 ஆண்டுகள் கடுமையாக தவம் மேற்கொண்டிருந்தார்.அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் பிரதோஷ நேரத்தில் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அவருக்கு இங்கே காட்சி தந்தாராம். அதனாலேயே காக புஜண்டர் இங்கே சிவலிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், தற்போது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள பகுதியிலேயே ஈசானத்தில் அவர் ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இக்கோயில் ஈசானத்தில் அமைந்துள்ள சித்தரின் ஜீவ சமாதியை 16 முறை வலம் வந்து, 2 முதல் 16 தேங்காய் வரை உடைத்து வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவ தோஷங்கள், தீராத மனக் கவலைகள் நீங்கி சிவ புண்ணியம் பெறலாம் என்பது நம்பிக்கை. அவர் அருளிய நாடிச் சுவடியில் இக்கோயிலின் கருவறை மிக உக்கிரமானதாக இருக்கும் என்றும், அதனால் கருவறையில் ஏற்றப்படும் தீபம், எப்போதும் துடித்துக்கொண்டே இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றும் இறைவனின் கருவறையில் அமைந்துள்ள தீபம் துடிப்போடுதான் எரிந்து கொண்டிருக்கிறது.

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post ராகு, கேது, செவ்வாய், களத்திர தோஷம் நீக்கும் பிரதோஷம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

நவம்பர் மாத ராசிபலன்கள் 2017 வழங்குபவர் ராஜிவ் சிவம்

$
0
0

நவம்பர் மாத ராசிபலன்கள் 2017 வழங்குபவர் ராஜிவ் சிவம்

மேஷம்:

 ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் மனக்கவலை குறையும். தனாதிபதி சுக்கிரனின் சஞ்சாரத்தால் பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். ராசியை பார்க்கும் நிலையில் குரு மாறுவதால் சுணக்க நிலை நீங்கும். வீண்பழி மறையும். சில்லறை சண்டைகள் சரியாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். இதற்கு கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள்மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். தொழிற் ஸ்தானத்தை கேது பகவான் அலங்கரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷபம்:

 ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் நன்மை தரும். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். சப்தமாதிபதி செவ்வாயின் சுகஸ்தான சஞ்சாரம் பல வழிகளிலும் நன்மையான பலன்களை அள்ளித் தரும். வீடு, மனை வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கும். மனசஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள்மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் மனம் மாறுவார்கள். ரணருண ஸ்தானத்திற்கு குரு மாறியிருந்தாலும் அவர் பார்வையால் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும்.

மிதுனம்:

 ராசிநாதன் புதனின் சஞ்சாரம் திருப்தி அளிக்கும்வகையில் இருக்கிறது. மேலும் குரு பார்வையும் ராசியில் படிவதால் விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும்போது கவனம் தேவை. எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதைக் கேட்டு நிதானமாக பதிலளிப்பது நல்லது. பேச்சின் இனிமை, சாதூர்யத்தால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

கடகம்:

 ராசியில் சஞ்சாரம் செய்யும் சுக்கிரன் மூலம் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். ராசிக்கு இரண்டில் தனாதிபதி சூரியனின் ஆட்சி சஞ்சாரம் இருப்பதால் பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் காணாமல்போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன்மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்துசேரலாம். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து மோதல்கள் மறையும்.

சிம்மம்:

 ராசிநாதன் சூரியன் ராசியிலேயே ஆட்சி சஞ்சாரம் செய்கிறார். காரியங்களில் இருந்து வந்த தடை, தாமதம் நீங்கும். சுக பாக்கியாதிபதி செவ்வாயின் சஞ்சாரம் பயணங்களை ஏற்படுத்தலாம். குருவின் சஞ்சாரத்தின் மூலம் மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். ராசியைப் பார்க்கும் சனியால் மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உடல்நலம் பாதிக்கப்படலாம். உணவுக் கட்டுப்பாடு அவசியம். குடும்ப நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனம் வருந்தும்படியான நிலை மாறும்.

கன்னி:

 தனஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகி இருக்கும் குருவாலும் ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தாலும் நற்பலன்களை பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். அதே வேளையில் அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

துலாம்:

 ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சொத்துகள் வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். ராசிக்கு மாறியிருக்கும் குருவால் அனைத்து வகையிலும் நன்மை ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சால் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள்.

விருச்சிகம்:

 ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களுடன் நட்பை ஏற்படுத்தும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்னையை சமாளிக்க வேண்டியிருக்கும். ராசியில் இருக்கும் சனியின் சஞ்சாரத்தால் பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பணவிரயமும் இருக்கும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.

தனுசு:

 ராசிநாதனான குரு லாபஸ்தானத்திற்கு மாறியிருக்கிறார். நீண்டகாலமாக இருந்துவந்த கவலைகள் அகலும். ஆனாலும் விரயச்சனி இருப்பதால் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. ராசியாதிபதி குரு தனஸ்தானத்தைப் பார்ப்பதால் பணவரத்து நன்றாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். பார்ட்னர்களுடன் சுமுகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.

மகரம்:

 சுக்கிரனின் சஞ்சாரம் சிற்றின்ப சுகத்தை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் சரியாக புரிந்துகொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுபறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கும்பம்

 தனலாபாதிபதி குரு பகவான் பாக்கியஸ்தானத்திற்கு மாறியிருக்கிறார். தனது ஐந்தாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் காரியங்களில் இருந்த தாமதம் நீங்கும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாரால் சந்தோஷமான மனநிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம்விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

மீனம்:

 குரு அஷ்டம ஸ்தானத்திற்கு மாறினாலும் அவர் பார்வை மூலம் பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்னையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Image result for web whatsapp png+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post நவம்பர் மாத ராசிபலன்கள் 2017 வழங்குபவர் ராஜிவ் சிவம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

நவம்பர் மாத ராசிபலன்கள் 2017 வழங்குபவர் சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்

The post நவம்பர் மாத ராசிபலன்கள் 2017 வழங்குபவர் சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

நவம்பர் மாத ராசிபலன்கள் 2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

கும்பம்:

 தனலாபாதிபதி குரு பகவான் பாக்கியஸ்தானத்திற்கு மாறியிருக்கிறார். தனது ஐந்தாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் காரியங்களில் இருந்த தாமதம் நீங்கும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாரால் சந்தோஷமான மனநிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம்விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

மீனம்:

 குரு அஷ்டம ஸ்தானத்திற்கு மாறினாலும் அவர் பார்வை மூலம் பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்னையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Image result for web whatsapp png+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post நவம்பர் மாத ராசிபலன்கள் 2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

பிரதான தோஷங்களை நீக்கும் பிரதோஷ வழிபாட்டின் பலன்களும் மகிமையும்

$
0
0

பிரதான தோஷங்களை நீக்கும் பிரதோஷ வழிபாட்டின் பலன்களும் மகிமையும்

 பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன் பெறலாம். பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர்.  முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார்.

prathosha shiva

 அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு. நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் ஆவார். தான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும். எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது.

 எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

  காராம்பசுவின் பாலைக் கொண்டு நந்தியையும், சிவனையும் வழிபட்டால் பூர்வ ஜென்ம வினைகள், பிராமணனைக் கொன்ற சாபம், பெண்ணால் வந்த சாபம் உள்ளிட்டவை நீங்கும். எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும் காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post பிரதான தோஷங்களை நீக்கும் பிரதோஷ வழிபாட்டின் பலன்களும் மகிமையும் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மலர்கள் அன்னையின் நாமங்கள்

$
0
0

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மலர்கள் அன்னையின் நாமங்கள்

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மலர்களைப் பற்றிப் பேசும் அன்னையின் நாமங்களைப் பற்றிய தொகுப்பு ஏறக்குறைய பதினாறு நாமங்கள் பூக்களின் தொடர்பு பற்றி இருக்கின்றன. இவற்றில் ஐந்து நாமங்கள் தாமரை மலரினைப் பற்றி பேசுகின்றன. பன்னிரண்டு வகையான மலர்களைப் பற்றிய குறிப்பு வருகின்றது. சைதன்யம் என்னும் பேரறிவு பூவிற்கு உருவகமாகச் சொல்லப் பட்டுள்ளது.

lalitha

 சம்பகாசோ(h)க-புன்னாக ஸௌகந்தி கலஸத்கசா (13) செம்பகம் அசோகு புன்னாக சௌகந்திக இவைகளினால் சோபிக்கின்ற கூந்தலை உடையவள்
 நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா (19) புதிதாக மலர்ந்திருக்கும் சம்பக பூவினை ஒத்த மூக்கினால் அதிகமான சோபையை உடையவள்.
கதம்பமஞ்ஜரீ க்லுப்த கர்ணபூர மநோஹரா(21) கதம்பத்தின் துளிர்களை தன காதுகளில் தரித்திருக்கும் மநோஹரமான ரூபத்தை உடையவள்
* மஹாபத்மாடவீஸம்ஸ்தா (59)* பெரிய தாமரைப் பூக்களுடைய காட்டில் இருப்பவள்
ஸஹஸ்ராராம்புஜாரூடா (105) ஆயிரம் இதழ் தாமரை மேல் அருள்பவள்
பத்மநயநா (247) தாமரைப் பூ போன்ற கண்களையுடையவள்
பத்மாஸநா (278) தாமரைப் பூ ஆசனத்தை உடையவள்

 ராஜீவலோசநா (308) ராஜீவம் என்ற பதத்திற்கு மான் மீன் தாமரை என்ற அர்த்தங்களுண்டு. இவைகளைப் போன்ற கண்களை உடையவள் என்று பொருள் ராஜீவ பதத்திற்கு ராஜாவை அண்டியிருப்பவள் என்ற அர்த்தமும் உண்டு. தன் புருஷனான ராஜராஜேஸ்வரரை (மஹா கமேஸ்வரரை ) அணிடியிருக்கும் பக்தர்களை அனுகூலகமகப் பார்ப்பவள் என்றும் பொருள்

கதம்ப குஸுமப்ரியா (323) கதம்ப மலர்களில் ப்ரியமிருப்பவள்
* சாம்பேய குஸுமப்ரியா (435)* சம்பகப் பூவில் ப்ரியமுடையவள்
தாடிமீ குஸுமப்ரபா (560) மாதுளம்பூவின் காந்தியினைப் போன்ற காந்தியினை உடையவள்
ஜபாபுஷ்ப நிபாக்ருதி(766) செம்பருத்திப் பூவிற்கு இணையான நிறத்தினை உடைய மேனியை உடையவள்
பாடலீகுஸுமப்ரியா(773) பாதிரிப் பூக்களில் பிரியமுடையவள்
* மந்தார குஸுமப்ரியா (776)* மந்தாரப் பூக்களில் பிரியமுடையவள் மந்தாரம் என்பது தேவ லோகத்தின் ஐந்து மரங்களில் ஒன்று
சைதந்ய குஸுமப்ரியா(919) (சித்) சைதன்யமாகிற புஷ்பத்தில் பிரியமுடையவள்
* பந்தூக குஸும ப்ரக்யா (964)* பந்தூக புஷ்பத்தின் காந்தி போன்ற காந்தியை உடையவள் பந்தூகம் என்பது வங்க தேசத்தில் பிரசித்தமான ஒரு மரம். அதன் புஷ்பானது அதிக சிவப்பு நிறத்தை உடையது

அம்பாள் சரண த்யானம்

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மலர்கள் அன்னையின் நாமங்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் சோகங்கள் போக்கும் ஸ்ரீசோமநாதேஸ்வரர்

$
0
0

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் சோகங்கள் போக்கும் ஸ்ரீசோமநாதேஸ்வரர்

 சந்திரன் வழிபட்ட சிவத்தலங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அவற்றில் வேலூர் மாவட்டத்திலுள்ள மஹேந்திரவாடியும் ஒன்று. சந்திரன் வழிபட்ட காரணத்தினால், இத்தலத்திலுள்ள ஈசனின் பெயர் ஸ்ரீ சோமநாதேஸ்வரர். சில தலங்களில் சந்திரன் வழிபட்ட லிங்கங்கள் சோமேஸ்வரர், சந்திர சூடேஸ்வரர், சந்திரசேகரர், என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன.

 சந்திரன் வழிபட்ட தலங்களின் பெயர்கள் கூட, சந்திரனைக் குறித்தே, சில தலங்களில் அமைந்திருக்கின்றன. குறிப்பாக நவக்கிரஹத் தலங்களில் ஒன்றான திங்களூர், புதுச்சேரிக்கருகில் உள்ள பிறையூர், சென்னைக் கருகேயுள்ள சோமங்கலம், வடக்கேயுள்ள சோம்நாத்பூர்.

சாமுண்டி வழிபாட்டு தலம் வதாரண்யேஸ்வரர் திருக்கோயில்

புராணம்:

 அசுவனி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங் களும் தக்ஷனுடைய குமாரத்திகள். அவர்களை சந்திரனுக்குத் திருமணம் செய்து வைத்தான் தக்ஷன். தன்னுடைய மனைவிகளில் கார்த்திகை, ரோஹிணி ஆகிய இருவரிடம் மட்டுமே சந்திரன் அன்பு செலுத்தினான். மற்றவர்களை வெறுத்து ஒதுக்கினான். இதனால் கோபம் கொண்ட மற்ற பெண்கள் தன்னுடைய தந்தை யிடம் முறையிட்டனர்.

 இதன் விளைவாக தக்ஷனின் சாபத்திற்கு இலக்கானான் சந்திரன். அழகு நிரம்பிய சந்திரன், அழகு குன்றி, அமுதகலைகள் தேய்ந்து, ரோகத்தினால் வாடினான், தனக்கு ஏற்பட்ட கஷ்டங் களை, ஈசனால் மட்டுமே தீர்க்கமுடியும் என்று நம்பிய சந்திரன் ஈசனைத் தொழுது முறையிட்டான்.

 மனம் மகிழ்ந்த ஈசன், மூன்றாம் பிறையளவு இருந்த சந்திரனைத் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரன் ஆனார். திரும்பவும் சந்திர னின் கலைகள், ஈசனின் அருளால் வளரத் தொடங்கின. தக்ஷனின் சாபத்தினால் தேய்பிறையும், ஈசனின் அருளினால் வளர்பிறையும் ஏற்பட்டன.02

 முதலாம் மஹேந்திரவர்மன் பல்லவ குல திகலகமான முதலாம் மஹேந்தி ரவர்மன் கி.பி.7ம் நூற்றாண்டில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு, அரசாண்டான் சிறிது காலம் சமணமதத்தில் இவன் இருந் திருந்தாலும், பிறகு மதம் மாறி, சைவனாக இருந்து பல கோயில்களைக் கட்டினான். கி.பி.600 முதல் கி.பி 630வரை இவன் அரசாட்சி, செய்தான் இவன் சிற்பக்கலை இசைக்கலை, ஓவியக்கலை, காவியக்கலை முதலிய கலைகளில் தேர்ச்சி பெற்றவன்.

 அழிவில்லாத இறைவனுக்கு, அழிவில்லாத கோயில் எழுப்ப வேண்டும் என்ற கருத்தில் செங்கலும், சுண்ணாம்பும் கலந்து கோயில் கள் கட்டிய நிலையை மாற்றி, மலையைக் குடைந்து கோயில் கட்டிய மாமன்னன் இவன். இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த அரசன் தன்னுடைய படைகளை தங்க வைக்க ஒரு ஊரை ஏற்படுத்தினான். அந்த ஊருக்கு ‘மஹேந்திரபாடி’ என்ற பெயர் வைத்தான். ‘பாடி’ என்றால் படைகள் தங்கியிருந்த இடம். அவ்வூர் மக்கள் வழக்கில் இன்று மஹேந்திரவாடி என்று அழைக்கப் படுகிறது. இங்கு மஹேந்திரவர்மனால் ஒரு குடைவரைக்கோயில் எழுப்பப்பட்டது. அதற்கு ‘மஹேந்திர விஷ்ணுக்கிரஹம்’, என்று அவன் பெயரிட்டான். இவ்வூரில் அந்த மாமன்னன் ஒரு ஏரியை உண்டாக்கினான். அந்த ஏரிக்கு, பாலாற்றிலிருந்து ஒரு கால்வாய் ஏற்படுத்தி நீரை வரவழைத்தான். அந்த ஏரிக்கு ‘மஹேந்திரதடாகம்’ என்று பெயரிட்டான். ஆனால் இந்த ஊரில் உள்ள ஸ்ரீ சோம நாதேஸ்வரர் கோயில் பிற்காலப் பல்ல வர்களால் கற்களால் கட்டப்பட்டது.

ஸ்ரீ சோமநாதேஸ்வரர் கோயில்:

 இக்கோயில் ஊரில் நடுநாயகமாக உள்ளது. கோயிலைச்சுற்றி ஆக்ரமிப்பு கள். கோயிலைத் தேடிக்கண்டுபிடிப் பதே சிறிது கஷ்டம்தான். ஈசனின் கருவறை கிழக்கு நோக்கியுள்ளது கோயிலின் வாயிலுக்கு முன்புறம் விளக்கு ஏற்றும் ஒரு கல்தூண் உள்ளது. நந்தியெம் பெருமானையும் தூணுக்கு முன்புறம் உள்ள மண்டபத் தில் தரிசிக்கலாம். வடக்குப்புறம் சந்திர புஷ்கரணி உள்ளது. இதில் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

 கருவறையில் ஈசன் ஸ்ரீ சோமநாதேஸ்வரர் சற்றுப் பருத்த பாணத்துடன் அழகுறக் காட்சியளிக்கிறார். கருவறை முன் மண்டபத்தில் தெற்கு நோக்கி அன்னை ஸ்ரீ காமாட்சியைத் தரிசிக்கலாம். மண்டபத்தின் மேற்குப்புறத்தில் ராகு, சந்திரனைப் பிடிப்து போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. நமக்கு வலப்புறம் அரசனும் அரசியும் இறைவனை தொழுவது போன்ற ஒரு சிற்பம் உள்ளது.

 திருச்சுற்றில் முதலில் அஞ்சனை மைந்தனை தரிசிக்கலாம். அடுத்து சந்திரனின் சந்நிதி, தென்மேற்கு மூலையில் கணபதி தரிசனம். அடுத்து வள்ளி, தெய்வானையுடன், ஆறுமுகப் பெருமாளை தரிசிக்கிறோம். பன்னிரு திருக் கரங்களுடன், ஆறுமுகங்களுடன் அந்த கோல மயில் முருகன். மயில் மீது வீற்றிருக்கிறான். அடுத்து ஐயப்பனுக்கு தனிச் சந்நிதி உள்ளது.

 கோட்ட மூர்த்திகளில் முதலில் தெற்கு நோக்கிய தக்ஷிணாமூர்த்தியும், மேற்குப் பார்த்து பெருமாளும், வடக்குப் பார்த்து துர்க்கையும் அருளாட்சி புரிகின்றனர். சண்டிகேஸ்வரருக்கு, தனிச்சந்நிதி உள்ளது. வட கிழக்கில் பைரவருக்கு தனிச்சந்நிதி. அடுத்து முனீஸ்வரரை ஒரு சந்நிதியில் தரிசிக் கிறோம். அங்கே ஒங்கி வளர்ந்த அரசமரங்கள் இரண்டு உள்ளன. அத்துடன் வேம்பும் இணைந் திருப்பது வந்து தரிசனம் செய்பவர்களுக்கு சுத்தமான காற்றைத் தந்து உதவுகிறது. மரத்தடியில் நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள் ளன. இக்கோயிலுக்கு, 8.11.2010இல் சீரும் சிறப்புமாக குடமுழுக்கு நடந்தது.

சந்திரதோஷப் பரிகாரம்

 இங்குள்ள சந்திரபுஷ்கரனியில், திங்கட்கிழமை களில் நீராடி, இறைவனுக்கு அபிஷேகம் செய்வித்து, வெள்ளை அலரி, வெள்ளை அல்லி புஷ்பத்தினால் அர்ச்சித்து, சந்திர கிரஹ மந்திரங்களை ஜபித்து தயிர் சாதத்தை நிவேதனம் செய்தால் சந்திர தோஷம் நீங்கும். மேலும் இத்தலத்தில் நாகதோஷப் பரிகாரமும் செய்து கொள்ளலாம்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் சோகங்கள் போக்கும் ஸ்ரீசோமநாதேஸ்வரர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தினசரி ராசிபலன்கள் இன்று 02.11.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

$
0
0

தினசரி ராசிபலன்கள் இன்று 02.11.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர் கள். உறவினர், நண்பர்க ளால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத் தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

சிம்மம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். மனைவிவழியில் எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர் கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அதிகாரப் பதவி யில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

துலாம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வந்துப் போகும். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத் தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

மீனம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார் கள். திடீர் பயணங்கள் உண்டு. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத் தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post தினசரி ராசிபலன்கள் இன்று 02.11.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

செல்வம் தரும் அதிசிய மூலிகை – (அதிசியம், ஆச்சிரியம் )

$
0
0

This Guru Parambara starts from the God Himself in the form of Sri Dhakshinmoorthy and then descends to Sri Adhi Shankara and flows like a stream.. In this bright galaxy, Shines our Guru Srimath Bhuvaneswari Swamigal and occupies a predominant place. Sri Guruji, as he is affectionately called, founder of Sri Bharadwaj Ashram and Sri Bhuvaneswari Peetam at Ambattur (Chennai) lives like a legend in the hearts of millions and millions of devotees whom he has initiated in the Spiritual path

 Ashrama means the four orders or stages of life namely Brahmacharya, Grahastya, Vanaprastha and Sanyasa. It also means a hermitage or a place where a yogi stays. Sri Bharadwaj Ashram was established in the year 1990 by Paramahamsa Srimath Bhuvaneswari Swamigal of Yohamaya Bhuvaneswari Peetam. The Ashram , having Devi Bhuvaneswari as its main deity is situated in Ambattur, 20kms away from the heart of the chennai city.

A 27 ft. Mahavishnu statue is situated at the entrance. A big Gosala is also well maintained having 30 cows at the back side of the ashram. In the sanathana hindu dharma, cow, the gomatha is worshipped as the DEVI HERSELF. She has all the three Lokhas, Devas, all the vedha Rishies in her. When we worship HER we get the divine grace of all the Devas.

The post செல்வம் தரும் அதிசிய மூலிகை – (அதிசியம், ஆச்சிரியம் ) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

WEEKLY NUMEROLOGY PALANGAL OCT 31st TO NOV 06th

$
0
0

ONE: You must be careful to avoid falling into depression or withdrawing from life. You can’t change stressful situations, but you can refuse to allow negative or difficult forces to dominate your life. Expect wonderful new possibilities and unexpected opportunities this week. The present situation calls for a leap of faith. Go with the flow of events. Make time to have fun and do what you most enjoy.

TWO : This week you can dream. The possibility of a better life is all that matters. Exciting changes and radical honesty can force a break with tradition. No limitations don’t apply. When anything and everything is possible, stubbornly clinging to old ways can cause you to lose power and weaken passion. Choose special friends or lovers to share your adventures. Be playmates and free spirits together.

THREE : Your matured behavior will take you places. Don’t allow doubts, in secured feeling to disturb you. Dreams towards the glorious future. Set your heart to your goals. Honest communication can bring a breakthrough. Use technology to upgrade yourself and for the future.

FOUR: Take time to know about others and develop the appreciative attitude. Share your interests and have the courage to say what you think. Ask questions and be a good listener. Friends support your best interests. For some, the energy helps to take control. Doing what you like best can help you feel a greater sense of power. Now is the opportunity to leave behind issues from the past. Mistakes can be forgiven. Amends can be made.

FIVE : This is the time to meet other people’s needs. Reach out as a mother cares for a child to make a difference in your family or community. Sometimes moodiness and self-indulgence can cause estrangement. This is an ideal time to plan a party or join with a group that shares your interests. You can be quite charming and social.

SIX : Your moods may be very changeable this week. Understand, It isn’t your job to fix things. Focus on your own health and happiness. When you begin to trust your heart, a new way of being will take shape.
SEVEN:- You strength on patience, nurturing yourself, slow, steady approach with communication will come handy. Nevertheless, you’re in a strong position to make important changes. The energy is strong and new possibilities are everywhere. Timing is everything. Plan more time with home and family

EIGHT : This is a week when you can see clearly on where you are heading in your life. Speak up with confidence for what you want in any close relationship. Be more brisky and active. Your actions may inspire lot of people around you. Imagine the best possible future. Believe in this future.Happy and harmonious energy with relationship can impact your work life in a bigger way

NINE : This week will open the new possibilities or new beginning. This promises a happy outcome. Even difficult relationships can enjoy a new start. Honesty and sharing feelings will bring you closer. It’s a real opportunity to follow your heart. It won’t be as successful if you cling to old ways of thinking and being. Refuse to let fear or worries influence your decisions.

The post WEEKLY NUMEROLOGY PALANGAL OCT 31st TO NOV 06th appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கோவூர் சுந்தரேஸ்வரர் / திருமேனீஸ்வரர்

$
0
0

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கோவூர்  சுந்தரேஸ்வரர்  /  திருமேனீஸ்வரர்

வரலாறு:-

 பலவிதங்களிலும் சிறப்பு மிக்க இந்த ஆலயம் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு முன்பானது எத் தெரிகின்றது. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பாக சுந்தர சோழன் துவக்கி வைத்த ஆலயத்தை பல்லவ மன்னன் முடித்ததாகவும் கூறுகிறார்கள். ஆலயம் ஏழு அடுக்கானது. தெற்கு நோக்கி அமைக்கப்பட்டு உள்ளது. சாதாரணமாக அனைத்து ஆலயங்களுமே கிழக்கை நோக்கித்தான் அமைந்து இருக்கும். ஆனால் இந்த ஆலயமோ தெற்கு நோக்கி அமைந்து உள்ளதின் காரணம் அந்த ஆலயத்தில் சௌந்திராம்பிகையாக அன்னை பார்வதி அமர்ந்து இருந்தார்.

shiva rydram

 சிவபெருமான் ஒரு முறை தவத்தில் இருந்தார். வெகு காலம் கண் திறக்கவில்லை. ஆகவே தற்போது திருமேனீஸ்லரர் ஆலயம் உள்ள இடத்தின் அருகில் இருந்த மாங்காட்டில் பார்வதி சிவபெருமானின் அங்கத்தில் தாம் பாதியாகி அவரை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று தவத்தில் அமர்ந்து இருந்தார். அவள் தவத்தினால் ஏற்பட்ட உஷ்ணத்தினால் உலகம் தகிக்கலாயிற்று. அனைத்தும் கருகலாயின.

 உயிர் சேதங்கள் துவங்கின. அப்போது கண்களை மூடியபடி தவத்தில் அமர்ந்து இருந்த சிவபெருமானை எழுப்ப முடியாமல் போன தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று உதவி கேட்க அவர் தனது மனைவி மகாலஷ்மியை அந்த இடத்துக்கு அனுப்பினார். இலஷ்மி தேவியும் ஒரு பசுவின் உருவில் அந்த இடத்துக்குச் சென்று சிவலிங்கத்தின் மீது தன் மடியில் இருந்து பாலை சுரந்து அபிஷேகித்து சிவனை வேண்ட அவர் கண் திறந்தார். ரிஷப வாகனத்தில் பார்வதிக்கு காட்சி தந்தார். அவர் கண் திறந்ததும் அனைத்து இடங்களும் குளிர்ந்தன. அவளுடைய பக்தியை மெச்சிய சிவனார் அந்த இடத்துக்கு கோபுரி எனப் பெயரிட்டார். கோ என்றால் பசுமாடு. புரி என்றால் இடம். அதுவே பின்னர் மறுவி கோவூர் ( கோ+ஊர்) என ஆயிற்றாம்.

 புதன் கிரகம் சூட்டு சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு நிவாரணம் தருபவர். புதன் மன இறுக்கத்தையும் குறைப்பவர். அவர் குளுமையானவர். அதற்கும் ஒரு கர்ண பரம்பரைக் கதை உண்டு. ஒரு முறை சந்திரன் பிரஹஸ்பதியிடம் பாடம் பயின்று கொண்டு இருந்தபோது அவருடைய மனைவியின் மீது மையல் கொண்டு அவளை தூக்கிப் போய்விட சண்டை மூண்டது. யுத்தத்தில் தோற்றுப் போன சந்திரனுக்கு தான் செய்த தவறு புரிந்து மன்னிப்புக் கேட்டார்.

 ஆனால் அதற்குள் சந்திரனுக்கும் குருவின் மனைவிக்கும் குழந்தைப் பிறந்து விட்டது. அதை பிரகஸ்பதி ஏற்க மறுத்தார். ஆகவே அந்த குழந்தைக்கு விஷ்ணுவே பாடம் பயில்வித்து வளர்த்து பெருமையை ஏற்படுத்தினார். ஆகவேதான் சந்திரனின் குளுமையான குணம் புதனுக்கு வந்ததாம். ஆகவேதான் சிவபெருமான் கண் விழித்து குளுமையான அந்த இடம் புதனுக்கு அர்பணிக்கப்பட்டது. அங்கு தேவர்களுடன் சேர்ந்து வந்து வணங்கிய புதன் கிரகத்தை சிவபெருமான் தன்னுடன் அங்கு தங்கி அந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு அருள் புரியுமாறு கூற அந்த ஆலயம் புதன் கிரகத்துக்கு முதன்மை தரும் தலமாகியது.

அந்த ஆலயத்துக்கு மேலும் சில சிறப்புகள் உண்டு. இந்த ஆலயத்தில் மட்டுமே மகா வில்வம் என்று சொல்லக் கூடிய இந்த மரத் தளம் ஒவ்ஒன்றிலும் 5, 7 மற்றும் 9 இலைகளைக் கொண்ட தளங்களைக் கொண்ட வில்வ மரம் உள்ளதாம்.

 எந்த ஒரு இடத்திலும் வில்வத்துக்கு ஒரு தளத்தில் மூன்று இலைகள்தான் இருக்கும். ஆகவே இந்த இடத்தில் வந்து அந்த வில்வ இலைகளினால் பூஜை செய்பவர்கள் பெரும் பாக்கியத்தை அடைந்தவர்கள். ஒரு முறை தியாகராஜர் அந்த வழியாக செல்லும்போது திருடர்கள் தாக்கினர்.

 வழிப்போக்கர்கள் போல வந்து அவரை இராமரும் லஷ்மணரும் காப்பாற்றினர். அதற்கு முன்னர்தான் தியாகராஜரை இராமர் மீது பாடல்களைப் பாடுவது போல சிவன் மீதும் பாடல் பாடுமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ள அவர் மறுத்து இருந்தார்.

 ஆனால் தம்மை அந்த இடத்தில் ராம-லஷ்மணர்கள் காப்பாற்றியதினால் அந்த பூமிக்கு விஷேச சக்தி உள்ளது எனப் புரிந்து கொண்டு சுந்தரீஸ்வரர் புகழ் பாடும் பஞ்சரத்தின கீர்தனையை அந்த இடத்துக்கு மீண்டும் வந்து பாடினார். அது போல குன்றத்தூரில் அவதரித்த சேக்கிழார் இந்த இடத்தில்தான் வந்து பெரிய புராணத்தை இயற்றினாராம்.

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கோவூர் சுந்தரேஸ்வரர் / திருமேனீஸ்வரர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

தினசரி ராசிபலன்கள் இன்று 03.11.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

$
0
0

தினசரி ராசிபலன்கள் இன்று 03.11.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன்

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர் கள். உறவினர், நண்பர்க ளால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத் தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

சிம்மம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். மனைவிவழியில் எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர் கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அதிகாரப் பதவி யில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

துலாம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வந்துப் போகும். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத் தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

மீனம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார் கள். திடீர் பயணங்கள் உண்டு. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத் தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post தினசரி ராசிபலன்கள் இன்று 03.11.2017 வழங்குபவர் முனைவர் பஞ்சநாதன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

பௌர்ணமியின் விசேஷம் –“சந்திர மண்டல மத்யகா”

$
0
0

இன்று 03 November

பௌர்ணமி பௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”

 பராசக்தி இல்லாத இடம் ஏதுமில்லை. ஆனால் மனசுக்குப் பிடிப்பு உண்டாவதற்காக அவளுக்குப் மணித்வீபம், ஸ்ரீபுரம் உள்பட சில வாஸஸ்தானங்களைச் சொல்லியிருக்கிறது.

 தியானம் செய்வதற்குப் பரம சௌக்கியமாக இன்னொரு வாஸஸ்தானமும்  சொல்லியிருக்கிறது. ‘லலிதா ஸஹஸ்ரநாமத்’தின் பலச்ருதியில் சொல்லியிருக்கிற இந்த முறையில் பல மகான்கள் அவளுடைய இருப்பிடத்தைத் தியானம் செய்து பரமானந்தத்தை அநுபவிக்கிறார்கள்.

ருத்ராம்ச சக்திகளை உணர்த்தும் மத்யாஷ்டமி

 அது என்ன என்றால், பூரண சந்திர மண்டலத்திற்குள் அம்பாள் அமர்ந்திருப்பதாகத் தியானம் செய்வதாகும். ஸஹஸ்ர நாமத்திலேயே ‘சந்திர மண்டல மத்யகா’ என்று ஒரு நாமம் வருகிறது.

 பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகுள்ளது சந்திரன். நிலாச் சாப்பாடு, நிலா வெளிச்சத்தில் பாட்டுக் கச்சேரி எல்லாம் வைத்துக் கொண்டு சந்தோஷப்படுகிறோம். இருந்தாலும் எலெக்ட்ரிக் ஜோடனை அதிகமாகிவிட்ட இக்காலத்தவர்களுக்குச் சந்திரன் அருமை தெரிந்திருக்க நியாயமில்லை.

 சீதளமான அதன் பிரகாசம் அலாதியானது. கண்ணை உறுத்தாத ஒளி வாய்ந்தது சந்திரன். அதிலும் பௌர்ணமி சந்திரனின் அழகு விசேஷம். இந்த அழகு விசேஷமாகத் தெரிய வேண்டும் என்பதற்கே ஈசுவரநியதியில் முப்பது நாட்களுக்கு ஒரு முறைதான் பூர்ணிமை வருகிறது. தினமும் பௌர்ணமி இருந்தால் பூரண சந்திரனில் நாம் இத்தனை சந்தோஷம் அடைய முடியாது. இந்தப் பூரண சந்திரமண்டலத்தை முதலில் தியானித்து, அதில் அம்பாளைத் தியானிக்க வேண்டும்.

 பூரண சந்திரனைத் தியானிக்கிற போதே மனசும் அது போல் குளிர்ந்து போகிறது. அங்கே துக்கத்துக்கும் துவேஷத்துக்கும் இடமில்லாமல் சாந்தமாகிறது. வெளிப் பிரபஞ்சமெல்லாம் ஜீவனுக்குள்ளே இருக்கிறது. அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பார்கள். சகல ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாக இருக்கிற பராசக்தியின் மனஸே சந்திரனாக ஆகியிருக்கிறது. ‘புருஷ ஸூக்த’த்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது (சந்த்ரமா மனஸோ ஜாத:). இதனால் ஜீவராசிகளின் மனத்துக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

 இங்கிலீஷில் சித்தப் பிரமை பிடித்தவர்களை lunatic என்கிறார்கள். Lunar என்றாலே சந்திரனைப் பற்றியது என்றுதான் அர்த்தம். இது சித்தத்தின் விபரீத நிலையைச் சந்திரனோடு சேர்த்துச் சொல்கிறது. சித்த சுத்திக்கு அதே சந்திர மண்டலத்தில் அம்பாள் தியானத்தை நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

 சந்திரனில் அம்பாள் அமர்ந்திருப்பதாகச் தியானிக்க வேண்டும். அவ்வாறு அம்பாளை சந்திர மண்டல வாஸினியாக தியானித்தால், நம் மனமும் அவள் மனத்திலிருந்து வந்த சந்திரனைப்போல் குளிர்ச்சி அடையும். சந்திரன் தாபத்தைப் போக்குவதுபோல் நம் தாபமும் சமனமாகும். சந்திரிகையில் இருட்டு விலகுகிற மாதிரி அஞ்ஞானம் விலகும்.

 காளிதாஸர் ‘தேசிக ரூபேண தர்சிதாப்புதயாம்’, ‘குரு வடிவத்தில் வந்து தன் மகிமையைக் காட்டுகிறவள்’ என்று அம்பிகையை வர்ணிக்கிறார். எனவே சந்திரமண்டலத்தில் குரு பாதத்தையும் தியானிக்கலாம். நம் தாபங்கள் விலகவும், ஞானப்பிரகாசம் உண்டாகவும், நாம் எல்லோரிடம் குளிர்ந்து இருக்கவும் இம்மாதிரி சந்திர மண்டலத்தில் அம்பாளையோ, குரு பாதுகையையோ தியானிக்க வேண்டும்.

பெரியவா சரணம் 🙏

For Details and news updates contact:

 Send Your Feedback at : editor@swasthiktv.com

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

The post பௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா” appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.

Viewing all 15459 articles
Browse latest View live

Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>