Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

ஜொலிக்கும் மகாதீபத்தில் தீப கொப்பரையின் சிறப்பு

$
0
0

 கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவு நாளில், மகா தீபத்திருவிழா நடைபெறுகிறது. அப்போது 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். கருணையே வடிவான அண்ணாமலையை, ஜோதி பிழம்பாக ஏந்தி நிற்கும் பாக்கியம் பெற்றது தீப கொப்பரை.

    deepoma231115-2 மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் தீப கொப்பரை, வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்டது. கடந்த 1668ம் ஆண்டு, நாலரை பாகம் எடையுள்ள வெண்கல தீப கொப்பரையை, வேங்கடபதி எனும் சிவனடியார் திருக்கோயிலுக்கு அர்ப்பணித்தார்.                 தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட தீப கொப்பரை சேதமானது. எனவே கடந்த 1991ம் ஆண்டு புதியதாக 92 கிலோ செப்பு, 110 கிலோ இரும்பு சட்டங்களால் உருவான புதிய தீப கொப்பரை உருவானது. கொப்பரையின் அடிபாக விட்டம் 27 அங்குலம். மேல் விட்டம் 37 அங்குலம், மொத்த உயரம் 57 அங்குலம்.

78  மகா தீப விழாவுக்கு முன்பாக, தீப கொப்பரையை மலை உச்சிக்கு தலைச்சுமையாக கொண்டு செல்வது வழக்கம். 11 நாட்கள் மலை உச்சியில் தீபம் பிரகாசிக்கும். அதனை தொடர்ந்து, மலையில் இருந்து தீப கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும்.

  மகா தீபம் ஏற்றுவதற்காக, ஆயிரம் மீட்டர் பருத்தி துணியை (காட்டன்) திரியாக பயன்படுத்துகின்றனர். பக்தர்கள் வழங்கும் நெய் காணிக்கையை கொண்டு தீபம் ஏற்றப்படும். அதற்காக 3,500  கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. திரியும் நெய்யும் தீபம் ஏற்றும் முன்பாக அண்ணாமலையார் சன்னதியில் வைத்து பர்வதராஜகுல மரபினர்கள் சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்கின்றனர்.

தொடர்புக்கு : குமார்- 9442805327

செய்தி : ப.பரசுராமன்

படங்கள் : ப.வசந்த்

The post ஜொலிக்கும் மகாதீபத்தில் தீப கொப்பரையின் சிறப்பு appeared first on Swasthiktv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>