இந்த மலையிலிருந்து பல்வேறு சிவத்தலங்களுக்கு ரகசிய பாதைகள் செல்கின்றன.சூட்சம உலகில் உலவக்கூடியவர்கள் மட்டுமே இப்பாதைகளைப் பயன்படுத்த முடியும். பசிப்பிணியைப் போக்கக் கூடிய கனிதரும் விருட்சம் இந்த மலையில் உள்ளது. மிகப்பெரும் கணியையும், மிகப்பரந்த இலைகளையும் கொண்டது. மேல்நாட்டவர் திருவண்ணாமலையை உள்ளே நடமாட்டங்களை கொண்ட மலை என்றும் கூறியிருப்பது இங்கு நினைத்துப் பார்க்க தக்கதாகும். எண்ணிலா சித்தர்களும், ஞானிகளும், தபோதனர்களும், முனிவர்களும், ரிஷிகளும் செம்பொன் மயமான சிவஜோதியில் ஐக்கியமாக தவமிருப்பதும் இந்த மலையில் தான். இந்த மலையில் தான் பிரம்மயாகம் நடக்கிறது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் எந்த குருவும் தன் சீடர்களுக்கு பிரம்ப உபதேசம் செய்ய மாட்டார்கள்.
உலக ஷேமத்திற்காக உலகை அழிவில் இருந்து பாதுகாக்கப் பலவித ஹோமங்களை இந்த மலையில் இருக்கும் மகான்கன் நடத்தி உலகைக் காக்கின்றனர். தெய்வீக அரசு இந்த மலையில் செயல்படுகிறது என்றும் சொல்லலாம். தெய்வீக இசை இடையறாது ஓலித்துக் கொண்டே இருக்கின்றது. அதற்கேற்ப தாண்டவமாடும் தேவ நாட்டியமும் இடைவிடாது நடந்து கொண்டே இருக்கிறது. தெய்வீக இசையும், தாண்டவமும் நின்று போனால் உலகம் அழியும், பிரளயம் ஏற்படும். அது ஊழிக் கூத்தாக அமையும். மலையின் உள்ளே தினசரி பூஜை நடைபெறுகிறது. தேவர்களும், ரிஷிகளும், மகான்களும், நல்ல ஆத்மாக்களும், புண்ணியம் செய்தவர்களும், நல்ல மனமுடையவர்களும் தத்தமக்குரிய காலங்களில் தெய்வீக தரிசனம் கண்டு வணங்குகின்றனர். மலையில் சூட்சம் ரூபத்துடன் வசித்து வருபவர்களுக்கு நித்திய கடமைகள் உண்டு. அவர்கள் தெய்வீக கடமைகளுடன் மலைவலமும் அருவமாக செய்து வருகின்றனர்.
மலையிலிருந்து எப்போதும் ஓரு ஓளி வீசிக் கொண்டே இருக்கிறது. அது செம்பொன்னிரமான ஓளிக்கற்றைகள் ஆகும். மலையின் அதிர்வலைகள் மகத்தானது. மலையின் ஓவ்வொரு பூஜை வேளைக்கும் சங்கொலி கேட்டுக்கொண்டே இருக்கும். கோயிலில் அண்ணாமலையாருக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. அந்த அர்ச்சனை வில்வத்தின் சூட்சமரூபம் மலையாகிய அண்ணாமலையார் முன் குவிந்திருக்கிறது. கோயிலில் சுவாமி முன் காட்டப்படும் நிவேத்தியத்தில் இருந்து கற்கள் கூட மலையாக அண்ணாமலையாரிடம் போய் சேர்கின்றனர்.
மலையில் வெள்ளியை நிகர்த்த மீன்களும் தங்கம் போன்ற மீன்களும் உலவும் தடாகங்கள் உள்ளன. இவற்றில் பணியின் வெண்மையைத் தோற்கடிக்கும் வெள்ளி ஓளியுடைய நீர் நிரம்பி உள்ளது. இதன் பிரகாசம் கண்களை கூச வைக்கும். ருசியில் சிறந்த நீர் சுனைகளும் தெய்வீக சக்தி கொண்ட மூலிகை வாசம் பொருந்திய சலசலக்கும் அருவிகளும் உள்ளன. இது போல ஏராளமான ரகசியங்கள் மலையில் உள்ளன.
சாதாரணமாக இறைவன் பெயரால் ஊர்ப் பெயர் அமையும், ஆனால் இங்கு ஓரு மலையின் பெயரால் ஊர் விளங்குகிறது. ஈசனின் பெயர் கூட மலையின் பெயரால் அண்ணாமலை, அருணாசலேஸ்வரர் என்று தான் வழங்கப்படுகிறது. இறைவனுக்கு உருவம் கிடையாது. ஏகம்சத்விப்ரம் பஹீதா வதந்தி என்கிறது வேதம் உருவமில்லாத ஓன்றை எப்படி கிரகிப்பது? லிங்கத்திற்கு சொரூபம் உண்டா? மலைக்கு உருவம் உண்டா? கிடையாது. அதனால் தான் இறைவனை லிங்கமாகவும், மலையாகவும் கற்பித்தனர். பாமர மக்களுக்கு பிடித்துக் கொள்ள ஓரு ஊன்று கோல் வேண்டுமே? இறைவனை சிலர் சோதி சொரூபமாகவும் வணங்குவர். அந்த சோதி சொரூபமும் இங்கே உள்ளது. ஆக இத்தலத்தில் இறைவன் லிங்கமாகவும், மலையாகவும், சோதியாகவும், காட்சி அளிக்கிறார். இந்த மூன்று உருவங்களுக்கும் புராணக்கதைகள் உண்டு.
பல தலங்களைக் காட்டிலும் இத்தலம் மேன்மையானதற்கு காரணம் இந்த மூன்று அஸ்தவதைகளும் இத்தலத்தில் நிகழ்ந்ததால் தான் இத்தலத்தைப் பற்றி பெருமை பேசும் புராணங்களுக்கு கணக்கு கிடையாது. பல புனித ஸ்தலங்களுக்கு மத்தியில் இத்தலம் இரத்தினம் போல் ஜொலிக்கிறது. ஓரு கொடியின் வேரில் நீர் வார்த்தால் அது எங்கும் பரவி, அக்கொடியை மலரச் செய்கிறது. அதுபோல அருணாசலேச்ரவருக்கு பூசை முதலியன செய்தால் பெருத்த பயன் அளிக்கும் என்றெல்லாம் இதன் சிறப்பை மார்க்கண்டேய முனிவருக்கு நந்தி தேவர் உரைத்தார்.
விஞ்ஞான ரீதியாக பார்த்தாலும் இதைவிட புரதான மலை இல்லை என்பது விளங்குகிறது. இந்தியாவின் வடக்கே கோட்டை மதில் போல் வியாபித்தும் உயர்ந்தும் விளங்குகின்ற இமயமலை கூட காலத்தால் பிந்தியது தான் மிகப் பழைய காலத்தில் இது கடலில் மூழ்கியிருந்தது. இப்பொழுதும் இங்கு சில நீர் தேக்கங்களில் இருக்கும் ஜந்துக்கள் கடலில் மூழ்கியிருந்தது. இப்பொழுதும் இங்கு சில நீர் தேக்கங்கள் இருக்கும் ஜந்துக்கள் கடலில் வாழ்பவனாய் உள்ளன. நிலநடுக்கம் போன்ற இயற்கை கோளாறுகளால் கடல் மலையாகியது. இது பிற்கால சம்பவமே. திருவண்ணாமலையின் கதை வேறு. உலகிலேயே புராதனமான மலை இது.
அண்ணாமலை நமது பூமியின் மத்திய பாகம் என புராணங்கள் வர்ணிக்கின்றன. புவியை ஐந்து பிரிவுகளாக வகுத்தனர். பிருதிவி(மண்) தலம் காஞ்சி, இகாயதலம் சிதம்பரம், வாயுத்தலம் காளத்தி, நீர்த்தலம் திருவாணைக்காவல் (திருச்சிக்கு அருகே) நெருப்புத்தலம் அண்ணாமலை என்று பிரித்தார்கள். உண்மையிலேயே விஞ்ஞான ரீதியாக நெருப்புக்கோளம் குளிர்ந்து மலையாகியது. இதைத்தான் புராணங்கள் ரசமான கதைகளால் வர்ணிக்கின்றன.
அருண+அசலம் = அருணாசலம் அருணம் என்றால் சிவப்பு, அசலம் என்றால் மலை. அதாவது செம்மலை என்று அர்த்தம். தீவினைகளை நீக்கி நலம் தரும் மலை இது. திரு அண்ணாமலையானது எண்கோண அமைப்பில் காணப்படுகிறது. எட்டு திசைகளிலும் எட்டு லிங்கங்கள் காணப்படுகின்றன. மலையின் சுற்றளவு எட்டு மைல். எட்டு திசைகளிலும் எட்டு லிங்கங்கள் இருப்பது அபூர்வ ஓற்றுமை. மலை சுற்றும் வழியின் எட்டுத்திசைகளிலும் இருக்கும் நந்திகள் மலையை பார்த்த வண்ணம் உள்ளன. லிங்கத்தை பார்த்து அமர்ந்திருப்பது தானே நந்தியின் அமைப்புமுறை. அப்படி கவனித்தால் மலையை லிங்கம் என்பது நிரூபணமாகிறது.
நம் உடலுக்கு ஓன்பது வாசல்கள் அண்ணாமலையார் கோயிலிலும் ஓன்பது கோபுரங்கள். அதுபோல திருவண்ணாமலைக்குள் நுழையலாம். எந்த சாலை வழியாக வந்தாலும் எதிர்நின்று அழைப்பது அண்ணாமலையார் தான். எண் கோலத்தில் அண்ணாமலை அமைந்துள்ளதால் எட்டு திசைகளிலும் எட்டுவித அமைப்புகளில் தெரியும். மலையே லிங்கமாக இருப்பதால், தீபதிருவிழா நாளைத் தவிர மற்ற நாட்களில் மலைமீது எவரும் செல்லமாட்டார்கள்.
மலையாகவே இறைவன் எழுந்தருளி விட்டதால் மிகப்பெரிய அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்விக்கவும் பூமாலை சூட்டவும்,வில்வம் அர்ச்சிக்கவும் மனிதர்களாலும் முடியாது. தேவர்களாலும் முடியாது. எனவே எல்லோரும் வழிபட வசதியாக எளிமையாக மலையின் அடிவாரத்தில் சிறிய எளிய சுயம்பு லிங்கமாக சிவபெருமான் தோன்றி அருளினார். அதுவே இன்றை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்.
செய்தி : ப.பரசுராமன்
படங்கள்: ப.வசந்த்
The post தெய்வீக இசை இடையறாது ஒலித்துக்கொண்டிருக்கும் திருவண்ணாமலை. appeared first on Swasthiktv.