எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும்
ருத்ராட்சத்தின் பலன்கள்:
மனம், உடல், சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் நிவாரணியாய், உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது ருத்ராட்சம். மனதின் சலனங்களைச் சீர் செய்கிறது, தியான நிலையில் மூழ்கவைக்கிறது, சுவாசத்தைச் சுத்தப்படுத்துகிறது, உடலின் ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது எனப் பல்வேறு பலன்களை தருகிறது.
பஞ்சமுகி:
ஐந்து முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை, 14 வயதுக்கு மேல் உள்ள யாவரும் அணியலாம். இந்த ருத்ராட்சத்தை மாலையாக மட்டுமே அணிய வேண்டும். உள்நிலையில் ஆன்மாவைச் சுத்தப்படுத்த இது உதவும்.
த்விமுகி:
இரண்டு முகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை திருமணம் ஆனவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமண பந்தத்தைப் பலப்படுத்தும். இதை கணவன் மனைவி இருவரும் அணிய வேண்டும்.
ஷண்முகி:
இது குழந்தைகளுக்கான ருத்ராட்சம். ஆறுமுகம் கொண்ட இந்த ருத்ராட்சத்தை 14 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் அணிய வேண்டும். மன வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் இது அதிகரிக்கும்.
கௌரிஷங்கர்:
இரண்டு ருத்ராட்சங்கள் ஒட்டி இருப்பது போல இருக்கும் இதை 14 வயதுக்கு மேல் இருக்கும் அனைவரும் அணியலாம். இது ஈடா, பிங்களா என்கிற சக்தி நாடிகளைச் சமநிலைக்குக் கொண்டுவருகிறது. உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது.
ருத்ராட்த்தை சிவனின் வடிவமாகவே கருதி பூஜைகள் செய்வர். பல முகங்களில் ருத்ராட்சங்கள் உள்ளன. நட்சத்திரங்கள் இருபத்தி ஏழாகும். 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ருத்ராட்சங்கள் மாறுபடும்.
எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும்
நட்சத்திரங்களும், அதற்கேற்ற ருத்ராட்ச முகங்களும்
1. அஸ்வினி – ஒன்பது முகம்.
2. பரணி – ஆறுமுகம், பதின்மூன்று முகம்.
3. கார்த்திகை – பன்னிரெண்டு முகம்.
4. ரோஹிணி – இரண்டு முகம்.
5. மிருகசீரிஷம் – மூன்று முகம்.
6. திருவாதிரை – எட்டு முகம்.
7. புனர்பூசம் – ஐந்து முகம்.
8. பூசம் – ஏழு முகம்.
9. ஆயில்யம் – நான்கு முகம்.
10. மகம் – ஒன்பது முகம்.
11. பூரம் – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
12. உத்திரம் – பன்னிரெண்டு முகம்.
13. ஹஸ்தம் – இரண்டு முகம்.
14. சித்திரை – மூன்று முகம்.
15. ஸ்வாதி – எட்டு முகம்.
16. விசாகம் – ஐந்து முகம்.
17. அனுஷம் – ஏழு முகம்.
18. கேட்டை – நான்கு முகம்.
19. மூலம் – ஒன்பது முகம்.
20. பூராடம் – ஆறுமுகம். பதிமூன்று முகம்.
21. உத்திராடம் – பனிரெண்டு முகம்.
22. திருவோணம் – இரண்டு முகம்.
23. அவிட்டம் – மூன்று முகம்.
24. சதயம் – எட்டு முகம்.
25. பூரட்டாதி – ஐந்து முகம்.
26. உத்திரட்டாதி – ஏழு முகம்.
27. ரேவதி – நான்கு முகம்.
அந்தந்த நட்சத்திரதாரர்கள் அவரவருக்கு உரிய ருத்ராட்சத்தை அணிந்து பயன் மனம், உடல், சம்பந்தப்பட்ட அத்தனைக்கும் நிவாரணியாய், உலகமெங்கும் பயன்படுகிறது ருத்ராட்சம். மனதின் சலனங்களைச் சீர் செய்கிறது, தியான நிலையில் மூழ்கவைக்கிறது, சுவாசத்தைச் சுத்தப்படுத்துகிறது, உடலின் ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்துகிறது.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.