வாழ்விலும் வழக்குகளிலும் வெற்றி தரும் இந்திராணி
அசுரர் தலைவனான சும்பனின் தூதுவன் சுக்ரீவன் தேவியின் சொற்களைக் கோபத்துடன் திரும்பிச் சென்று தன் தலைவனிடம் செய்தி சொன்னான். இதனால் கோபம் கொண்ட சும்பன் தன் படைத் தலைவனான தூம்ரலோசனனை பெரும் படைகளுடன் அனுப்பி தேவியைப் பிடித்து வருமாறு கட்டளையிட்டான்.
சண்டிகா தேவியை நெருங்கிய படைத் தலைவனை தேவியானவள் தனது “ஹும்” என்ற கர்ஜனையாலேயே வீழ்த்தி விட்டாள். அவளுடைய சிங்க வாகனம் அந்தப் படைகளுக்கிடையே புகுந்து எதிர்ப்பட்டவர்களை எல்லாம் அழித்தது. சண்டிகா தேவியான அம்பிகை தூம்ரலோசன வதம் செய்த இந்திராணியாகக் காட்சியளிக்கிறாள்.
நவராத்திரியின் 6ஆம் நாள் கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும். பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம் போன்ற பூக்களைக் கட்டி மாலையாக சூட்டலாம். இந்த மலர்களைக் கொண்டு அர்ச்சனையும் செய்யலாம்.
இறைவியை, இந்திராணியாக வழிபட வேண்டிய நாள். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள்.
விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே. பெரிய, பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். வேலையில்லாதவருக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளேயாகும்.
இந்திராணியைப் போற்றிப் பாடப்படும் பாடல்களை நீலாம்பரி ராகத்தில் பாடலாம். இன்றைய தினம் தேங்காய் சாதம், தேங்காய் பால் பாயசம், ஆரஞ்சு பழம், மாதுளை, பச்சைப் பயறு சுண்டல், கதம்ப சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். கொலுவிற்கு வருபவர்களுக்கும் வழங்கலாம்.
இன்றைய தினம் இந்திராணியை பூஜிப்பதால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post வாழ்விலும் வழக்குகளிலும் வெற்றி தரும் இந்திராணி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.