பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருளும் ஸ்ரீ இந்திராணி
மூன்றாம் நாள்:–
இறைவியை, இந்திராணியாக வழிபட வேண்டிய நாள். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள்.
விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே. பெரிய, பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். வேலையில்லாதவருக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளேயாகும்.
சிவபெருமாள் அட்ட (எட்டு) வீரச்செயல்கள் புரிந்து தீய சக்திகளை வதம் செய்தார் என்பது சிவ புராணமாகும். அதே போன்று தேவியும், அசுர சக்திகளை அழிக்க எடுத்த ஏழு உன்னத வடிவங்களை தேவி மகாத்மியம் புகழ்ந்து பாடுகிறது.
சிவபெருமான் அந்தாகாசுரன் உள்ளிட்ட அசுரக் கூட்டத்தை அழித்திட பிரம்ம தேவன் முதலான ஆண் தெய்வங்களின் சக்திகள் (மனைவியர்) சப்தமாதர்கள் என்றும் பெண் தெய்வங்களாகி உதவினர். இத்தேவதைகளே சப்தமாதர்கள், சப்த கன்னியர், சப்த மங்கையர் என வழிபடப்படுகின்றனர்.
மிகப்பழமையான சிவாலயங்களில் கர்ப்பகிரகத்தை ஒட்டிய முதல் பிரகாரத்தில் தென்புறமுள்ள தென்முகக் கடவுளான தெட்சிணா மூர்த்தி சன்னதிக்கு முன்பாக சப்த மங்கையர் இருக்கக் காணலாம். வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் ஏழு தேவியரும் காட்சி தருவார்கள். சில இடங்களில் தனித்தனி சிற்பமாகவும், சில கோவில்களில் நீண்ட செவ்வகக்கல்லில் அடுத்தடுத்தும் இத்தேவியர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
ஸ்ரீ இந்திராணி
இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.
மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப் பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத் தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள்.
சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரை யும் கொண்டவள். இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும். தேவேந்திரனின் அம்சமாக இந்திராணி போற்றப்படுகிறாள். மாகேந்திரி என்றும் ஐந்தரி என்றும் இத்தேவதை கொண்டாடப்படுகிறாள். காளமேக வண்ணத்தினாள் ஒருமுகம், இரண்டு கண்கள் (ஆயிரம் கண்கள் உண்டெண்பர்) ஜொலிக்கும் ரத்ன கீரிடம் தரித்து வஜ்ராயுதம், சக்தி போன்ற ஆயுதங்களைத் தாங்கி நிற்பாள்.
வெள்ளை யானையின் மீது வலம் வருபவள். விருத்திகாசுரன் என்ற மாபெரும் அசுர சக்தியை அழித்த சக்தியாக இவ்வம்மை வணங்கப்படுகிறாள். சத்துரு பயம் நீங்க இத்தேவியை வழிபடும் வழக்கம் உள்ளது.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருளும் ஸ்ரீ இந்திராணி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.