வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரதிஷ்ட்டை செய்துள்ள மேதா தட்சிணாமுர்த்திமிகவும் பிரசித்தி வாய்ந்தது.
பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் தேவர்களுக்கு எல்லாம் தலைவன்.ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம் குருதான்.குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை இடப்பெயர்ச்சியடைகிறார்.குரு
நம் வாழ்வில் மிக முக்கியமானவை இரண்டு உள்ளது. தனம் என்று சொல்லக்கூடிய பணம், புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு பகவான் தான்.திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குருபலம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள். குருவின் அருள் இருந்தால் தான் ஞானம், கூர்ந்த மதிநுட்பம், ராஜாங்க யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி,கல்வி, வேத உபதேசம் போன்ற பல துறைகளில் பிரகாசிக்கலாம்.எனவேதான் குரு பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல ஸ்தான ஆதிபத்யம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்து விட்டால் அந்த ஜாதகத்துக்கு அந்த ஒரு பலமே போதுமானது. கவுரவம், செல்வாக்கு, பட்டம்,பதவிகள் தானாக தேடி வரும்.ஆன்மீக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார்.குரு பார்வை கோடி நன்மை குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி.குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
இவர் வாக்கிய பஞ்சாங்கப்படி 2.08.2016 செவ்வாய் கிழமை காலை சுமார் 9.30மணியளவிலும். திருக்கணிதப்படி ஆகஸ்ட் மாதம்,11 தேதி (11.08.2016) வியாழக் கிழமை இரவு சுமார் 9.30 அளவிலும் குருபகவான் சிம்மராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார். இடப்பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டுதன்வந்திரிபீடத்தில் இடப்பெயர்ச்சி நேரத்தில் இரண்டு முறை குருபெயர்ச்சி பரிகார மஹாயாகம் நடைபெறுகிறது
அவரவர் ஜாதகத்தில் நடக்கும் தசா புக்திகளுக்கு ஏற்ப நன்மை தீமை சமமாக கொடுக்கும் தன்மை கொண்டது என்பதை மனதில் கொள்ளவும்.
இந்த குருபெயர்ச்சியில் அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியராசிகள்.மேஷம், கடகம் ,கன்னி ,துலாம் ,தனுசு ,மற்றும் கும்பம்.
குரு பகவான் அருளும் யோக பலன்களை அனுபவிக்க மேற்கண்ட 12ராசிக்காரர்களும் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் குருபெயர்ச்சி மஹா யாகத்தில் பங்கேற்று பரிகாரம் சங்கல்பம் செய்து கொள்ளலாம்.
இந்தஆண்டு நடைபெறும் குருபெயர்ச்சி யாகத்திற்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் ஜோதிடர்கள் பங்கேற்க உள்ளதால் அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு –
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
The post தன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சிவிழா வரும் ஆகஸ்டு 02 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறுகிறது. appeared first on SWASTHIKTV.COM.