குருபகவான் சிம்மத்தில் இருந்து கன்னிராசிக்கு இடம் பெயரும் குரு பெயர்ச்சி நன்மைதரும், ஆடிப்பெருக்கு, ஆடி அம்மாவாசை என மூன்றும் இன்று நடப்பது விஷேசம்.குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர். நம் முன்னோர் ‘ குரு பார்க்க கோடி புண்ணியம்’ என்பார்கள். குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல… குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம் தான். பெயர்ச்சியன்று தேவர்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் அதிபதியாக இருக்கும் பிரகஸ்பதி என்கிற குருபகவானை வணங்க வேண்டும்.
அங்கிரச முனிவருக்கு பிறந் ‘பிரகஸ்பதி’ என்ற குருபகவான், கல்வியில் கல்வியில் சிறந்து விளங்க சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார். சிவபெருமான் குருபகவானின் தவத்தை ஏற்று, நவக்கிரங்களில் ஒருவராக திகழ ஆசி வழங்கினார். அத்துடன் சூரிய பகவானுக்கு மேலான சக்தி படைத்தவராகவும் திகழ ஆசி வழங்கினார். அதுபோல, மங்களங்கள யாவும் தரும் சக்தியையும் கொடுத்தார். எனவேதான், சிவனின் சக்தியை பெற்ற குருபகவானை, குரு பெயர்ச்சி அன்று வணங்குவது குருவின் ஆசி பெற வேண்டிதான், பெண்கள் மஞ்சள் நிற கயிற்றில் அல்லது இயற்கையாக மஞ்சள் நிறமுடைய தங்கத்தை திருமாங்கல்யமாக அணிகின்றனர். ஏன் மஞ்சளை அணிய வேண்டும்?
குரு பகவானின் நிறம் மஞ்சள்:
குரு பகவானின் நிறம் மஞ்சள், எனவேதான், இவருக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து பக்தர்கள் வணங்குகின்றனர். மஞ்சள் வஸ்திரமும் அணிவிக்கலாம். இதனால் குருதோஷம் நீங்கும். வியாழன்தோறும் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று இரண்டு நெய் தீபம் ஏற்றி, நவக்கிர சன்னதியில் உள்ள குரு பகவானை வணங்கினால், திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இறந்த முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் ஏற்றது ஆடி அமாவாசை:
அமாவாசை திதி. ஆண்டுக்கொரு முறை இறந்தவர்களின் திதி நாளில் திவசம் செய்தாலும், மாதந்தோறும் அமாவாசையன்று நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியம். அதிலும் ஆடி அமாவாசை மிகவும் விசேஷம். ஆடி அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுப்பது சிறப்பு. வஸ்திரதானம் செய்வது, நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பி்க்கை. இத்தகைய வழிபாடுகளால் முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும். மேலும் அவர்களது பரிபூரண ஆசீர்வாதம் நமது குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடிப்பட்டம் தேடி விதை:
ஆடி மாதமம் 18ம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி வார்கள் நதிக்கரை, குளக்கரைக்கு சென்று பூஜித்து படையலிட்டு, நோன்புக்கயிறு கட்டிக்கொள்வார்கள். மணமாகாத பெண்கள் கூட கழுத்தில் மஞ்சள் நூல் கட்டும் நாளாக கணவன் நலனுக்காக பிரார்த்திக்கலாம். காதொலை, கருகமணி, காப்பரிசி வைத்து பூஜை செய்யும் கன்னிப்பெண் சீக்கிரமே நல்ல கணவனை அடைவாள் என்பது நம்பிக்கை. பிள்ளையார் பிடித்து
ஆற்றில் வாழை இலையை விரித்து, பிள்ளையார் பிடித்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடைகள் இல்லாத விளைச்சலுக்காக விநாயகரை போற்றி வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல, அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும்
ஆடிப்பெருக்கு நாளில் நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால்தான், அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும்.
இப்படி வரும் முப்பெரும் விழாவில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும்.
The post சிவனின் சக்தியை பெற்ற குருபகவான் appeared first on SWASTHIKTV.COM.