தஞ்சை பெரிய கோவில்:-
ராஜராஜபுரம் என்ற பெயரில் சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோயில், தற்போது தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் தஞ்சைப் பெரியகோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த தஞ்சை பெரிய கோவில் போன்று வேறு எந்த தென்னிந்திய கோவில்களும் கட்டப்படவில்லை. இந்த தஞ்சை பெரிய கோவிலில் ராஜ கோபுரத்தை விட விமான கோபுரம் உயர்ந்தது. அதிலும் இந்தியாவிலேயே பழமை வாய்ந்த உயரமான கட்டிடங்களுக்கு நிகரானது.
விஜயநகர கோட்டை:
இந்த விஜயநகர கோட்டை தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த விஜயநகர கோட்டை 16ம் நூற்றாண்டின் மத்தியில் நாயக்க மற்றும் மராட்டா மன்னர்களின் பங்களிப்பில் இக்கோட்டையின் வெவ்வேறு அங்கங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
தஞ்சை அரண்மனை, சங்கீத மஹால், தஞ்சாவூர் கலைக்கூடம், சிவகங்கைபூங்கா மற்றும் சரஸ்வதி மஹால் நூலகம் ஆகியவை இந்த கோட்டை வளாகத்தினுள் இடம் பெற்றுள்ளன.
சரஸ்வதி மஹால் நூலகம்:-
ஆசியா கண்டத்திலேயே மிக பழமையான நூலகம் என்ற புகழை பெற்ற சரஸ்வதி மஹால் நூலகம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இந்த சரஸ்வதி மஹால் நூலகத்தில் மிக பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த நூலகத்தில் தமிழ், மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஏராளமான நூல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டின் சிந்தனையாளர்களும், தமிழ் ஆர்வலர்களும், அறிவுஜீவிகளும் ஒருமுறையாவது விஜயம் செய்ய வேண்டிய நூலகம் இது. இளைய தலைமுறைக்கு இந்த நூலகம் அறிமுகம் செய்யப்படவேண்டியதும் அவசியம்.