Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

திருமண தடை நீங்க செல்ல வேண்டிய கோவில்கள்..!

$
0
0

இந்த காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கத்திரிநத்தம் என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த காளகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு திங்கட்கிழமைகளில் பக்தர்கள் அதிகமாக வருவார்கள்.

அன்று ராகு கால வேளையான காலை 7.30 மணி முதல் 9 மணி வரை, இறைவனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். திருமணம் நடைபெற வேண்டும் என எண்ணும் கன்னியரோ, இளைஞரோ அல்லது அவர்களது பெற்றோர்களோ, சம்பந்தப்பட்டவர்களின் ஜாதகத்தை அர்ச்சனை தட்டில் வைத்து அர்ச்சனை செய்கின்றனர்.

அப்படிச் செய்தால், அந்த வரனுக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறுவது உறுதி என்று பக்தர்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். அன்று வெகு தொலைவிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து ஆராதனை செய்வது வழக்கமாக உள்ளது.

காளகஸ்தீ செல்லும் வழி:-

தஞ்சையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கத்திரிநத்தம் திருத்தலம்.

திருமண தடை நீங்க மற்றும் குழந்தை வரம் பெற திருமணஞ்சேரி:-

திருமணஞ்சேரி என்னும் திருத்தலம் திருமண தடை நீங்க (thirumana thadai neenga) வல்லது. மேலும் இந்த புனித தலத்தில் பூஜை செய்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.

ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் இங்குள்ள ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்ய ராகு தோஷம் நீங்கும். மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட இந்த தலத்தில் வந்து திருக்குளத்தில் நீராடி ராகு பகவானை மனதார வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்…

இக்கோவிலில் உள்ள ராகு பகவானுக்கு பால் என்றால் மிகவும் பிடித்த ஒன்றாகும். ஆகவே ராகு பகவானுக்கு பால் பொங்கல் பிரசாதமாக செய்து அதனை உண்டு வர புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.

திருமண தடை நீங்க செய்ய வேண்டியவை:

திருமணம் ஆகாதவர்கள் (thirumana thadai neenga) இந்த கோவிலில் உள்ள சப்தகிரி தீர்த்தத்தில் முதலில் குளித்துவிட்டு, பிறகு மூலவராக உள்ள கல்யாண சுந்தரருக்கு மாலை சாற்ற வேண்டும். பிறகு அர்ச்சனை செய்து அங்கு உள்ள தீபம் வைக்கப்படும் மேடையில் எண்ணி ஐந்து தீபம் ஏற்ற வேண்டும்.

பிறகு அங்கு திருமண மேடையில் வழங்கப்படும் எலுமிச்சம் பழத்தை உப்பு, சர்க்கரை சேர்க்காமல் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

பிரசாதமாக வழங்கப்படும் மாலையை பத்திரப்படுத்தி வீட்டிற்கு சென்றதும் அதனை ஒரு முறை போட்டு இறைவனை மனதார வணங்க வேண்டும்.

பிறகு கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதமான விபூதி மற்றும் குங்குமத்தை தினமும் பயன்படுத்த வேண்டும்.

மேலும் இந்த பத்திரப்படுத்தபட்ட மாலையானது திருமணம் ஆன உடனே கணவன் மனைவி இருவரும் வந்து கோவிலில் இட்டு அர்ச்சனை செய்து வேண்டுதலை முடிக்க வேண்டும்.

இந்த கோவிலுக்கு செல்ல கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளது.

திருமண தடை நீங்க மற்றும் குழந்தை வரம் பெற ஆயக்காரன்புலம் அய்யனார் கோவில்:-

இந்த கலிதீர்த்த அய்யனார் கோவில் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் என்னும் கிராமத்தில் இந்த கலிதீர்த்த அய்யனார் கோயில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் இருக்கும் பூசாரி தான் கலிதீர்த்தான். அருள்வாக்கு சொல்லும் இவர், இந்த தேதியில் இந்த குழந்தை பிறக்கும் என சரியாக கணித்து சொல்கிறாராம். இவரை பற்றி அறியாதவர்கள் அப்பகுதியில் யாரும் இருக்க முடியாது .

இதனாலேயே வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அதிக கூட்டம் வருகிறதாம் இந்த கோவிலுக்கு.

திருமண தடை நீங்க மற்றும் குழந்தை வரம் பெற :-

இந்த கோவிலை பொறுத்தவரை குழந்தை இல்லாத தம்பதிகள் ஏராளமானோர் வந்து குழந்தை பாக்கியம் பெறுகின்றனர். கலிதீர்த்தான் அருள்வாக்கின் போதே , அடுத்தாண்டு ஆணி மாத புதன்கிழமையில் குழந்தை பிறக்கும் என்று அருள்வாக்கு கூறுகின்றார். இதுபோன்று ஒவ்வொரு தம்பதியினருக்கும் மாதமும் கிழமையும் முன்கூட்டியே சொல்லி விடுகிறார் கலிதீர்த்தான்.

அவ்வாறு குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியினர் ஏராளமானோர், அந்த கோவிலில் குழந்தை சிலையை வைத்துவிட்டு செல்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல், திருமணம் நடைப்பெறுவதற்காகவும் (thirumana thadai neenga), உடல்நிலை சரியில்லை என கோவிலுக்கு வந்து தங்களது வேண்டுதலை வைத்து, நேர்த்திகடனை செய்கிறார்கள்

இதுபோன்று வேண்டியவர்கள், பெரும்பாலான மக்களுக்கு வரம் கிடைத்துவிட்டதால், குழந்தை பொம்மை வைத்தும், மனித உருவபொம்மை வைத்தும் நேர்த்திக்கடன் செய்துள்ளதால், பார்க்கும் இடமெல்லாம் நேர்த்திகடன் செய்த பொம்மைகளாகவே காணப்படுகிறது.

இந்த கோவிலுக்கு வந்து சென்றாலே மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்பதை மக்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள்.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>