துளசி மாடம் அமைத்து தினமும் அதனை பூஜை செய்து வந்தால் தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் பெருகும்.
அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும், 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.
கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் வழிபட்டு வணங்கத் தொழிலில் தடைகள் நீங்கி லாபம் கிட்டும்.
செவ்வாய்கிழமையில் செவ்வரளி மலரைக் கொண்டு முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம் பெருகும்.
குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.
வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கற்கண்டு போட்டு தீபம் ஏற்ற லட்சுமி பார்வை செய்வாள்.
ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைல தீபமேற்றி வழிபட பணம் கிடைக்கும்.
சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி தௌpத்திட செல்வம் சேரும்.
இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழ பணம் கிடைக்கும்.
வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் கொழிக்கும்.
சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில் பணம் தொழிலில் வரும்.
ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
கோவிலில் லட்சுமி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வந்தடையும்.
ஜோடி கழுதைப் படம், ஓடும் வெள்ளை குதிரை படம், அடிக்கடி பார்க்க பணம் வரும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும். ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும். ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷணமாகும்.