Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

வாஸ்து முறையில் பண சேர சில வழிகள்

$
0
0

வாஸ்து என்பது மிகவும் அற்புதமான மற்றும் முக்கியமான ஒரு சாஸ்திரம் ஆகும்.

வாஸ்து சாஸ்திரத்தை சரியான முறையில் பின்பற்றினால் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம்.

நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம்.

பணம் கிடைக்காமல் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை பயன்தரும்.

வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுப்பதன் மூலம் சோம்பேறிகளாகி விடுவீர்கள்.

உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருந்தால் வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும்.

வீட்டில் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது யாருக்கும் தெரியக்கூடாது. இதனால் உங்களுக்கு அதிகப்படியான பணம் வந்து சேரும்.

உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் உணவு வகைகள் தெரிய வேண்டும். இதனால் உங்களுக்கு பணம் அதிகரிக்கும்.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>