அனுமன் என்றால் நமக்கு ராமாயணம்தான் நினைவுக்கு வரும்; ஆனால், மகாபாரதத்திலும் அனுமன் வருகிறார். திரௌபதி விரும்பிக் கேட்ட மலர்களைப் பறித்து வர காட்டுவழியே பீமன் செல்கிறான். அங்கே வழியை அடைத்துக் கொண்டு ஒரு வானரம் உட்கார்ந்திருக்கிறது.
பீமசேனன், “வானரமே! எழுந்து வழியை விட்டுப் போ!’ என்றான்.
“எனக்கு எழுந்திருக்க சக்தி இல்லை. நான் கிழக் குரங்கு. அவசியம் போக வேண்டுமானால் என்னைத் தாண்டிச் செல்வாயாக!’ என்றது வானரம், “பிராணியைத் தாண்டிச் செல்லலாகாது என்பது சாஸ்திரம். நான் உன்னைத் தாண்டிச் செல்லவில்லை. இல்லாவிடில் அனுமன் சமுத்திரத்தைத் தாண்டியது போல் உன்னையும் மலையையும் ஒரே பாய்ச்சலாகத் தாவிச் சென்றிருப்பேன்’ என்றான் பீமன்.
“நர சிரேஷ்டனே! கடலைத் தாண்டிய அந்த அனுமன் யார்? உனக்குத் தெரிந்திருந்தால் எனக்குச் சொல்ல வேண்டும்’ என்றது வானரம். “ராமபத்தினியைத் தேடுவதற்காக நூறு யோசனை அகலமுள்ள கடலைத் தாண்டியவனும் எனக்கு அண்ணனுமான அனுமனை உனக்குத் தெரியாதா? பலத்திலும் நான் அவனுக்குச் சமானமாவேன்! ஒரு காரியமாக நான் இங்கே வந்திருக்கிறேன். வழியை விடு. எழுந்திரு, நான் சொன்னதை கேளாயாகில் உன்னை எமலோகத்திற்கு அனுப்புவேன்’ என்று பீமன் வானரத்தை அதட்டினான்.
“வீரனே! தோஷமற்றவனே! கோபம் தணிவாயாக! முதுமையால் எனக்க எழுந்திருக்கச் சக்தி இல்லை. என்னைத் தாண்டிச் செல்ல உனக்கு ஆட்சேபனை இருந்தால் என்மேல் கருணை கொண்டு இந்த வாலை நகர்த்தி விட்டுச் செல்வாயாக!’ என்றது வானரம். தன்னுடைய புஜ பலத்தில் கர்வம் கொண்ட பீமன், இவ்வாறு சொல்லப்பட்டவுடன், “இந்தக் குரங்கை வாலைப் பிடித்து இழுத்து அப்புறம் தள்ளுவேன்’ என்று எண்ணி அதனுடைய வாலைப் பிடித்தான்.
வாலை அசைப்பதற்கே முடியவில்லை. பீமன் வியப்படைந்தான். இரு கைகளையும் கொண்டு இழுத்துப் பார்த்தான். புருவங்கள் நெரிந்து விழி பிதுங்கி உடல் வியர்த்தது. வாலைத் தூக்கக் கூட முடியவில்லை. வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றான்.
நீர் சித்தரா? தேவரா?
கந்தர்வரா? நீர்
யார்?
“நீர்
யார்?
என்னைப் பொறுக்கு வேண்டும். நீர்
சித்தரா? தேவரா?
கந்தர்வரா? நீர்
யார்?
சிஷ்யன் கேட்கிறேன்; சரணம்!’
என்றான் பீமன். பலவானைக் கண்டால் பீமனுக்கு உடனே
பக்தி.
“தாமரைக் கண்ணனே!
பாண்டவ
வீரனே,
சர்வலோகங்களுக்கும் பிராண
ஆதரமான
வாயுவின் மகன்
அனுமன்
நான்தான். தம்பி,
பீமா!
யக்ஷரும் ராக்ஷதர்களும் இருக்கும் இந்த
வழியில் நீ
சென்றால் ஆபத்துக்கு ஆளாவாய் என்று
உன்னை
நான்
தடுத்தேன். இது தேவலோகம் போகும்
வழி.
இதில்
மனிதர்கள் செல்ல
முடியாது. நீ
தேடி
வந்த
சௌகத்தி மலர்ச்
செடி
இருக்கும் நீரோடையும் மடுவும் அதோ
பார்!’
என்றான் அனுமன்.
“வானர சிரேஷ்டரே! உம்மைக் கண்டேனானதால் என்னைக் காட்டிலும் பாக்கியசாலி யாருமில்லை. உம்முடைய கடல்
தாண்டிய வடிவத்தைப் பார்க்க ஆசைப்படுகிறேன்’ என்று
சொல்லி
பீமன்
நமஸ்கரித்தான்.
அனுமன்
நகைத்துத் தன்னுடைய உருவத்தை விருத்தி செய்து
கொண்டு,
இரண்டாவது மலைபோல் திசைகளை வியாபித்து நின்றான். பீமசேனன் அது
வரையில் கேள்விப்பட்டு மட்டு
மகிழ்ந்து வந்த
தன்
அண்ணனுடைய திவ்யரூபத்தை இப்போது நேரில்
பார்த்து ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தான். சூரியனைப் போல்
ஜொலிக்கும் அந்த
பிரகாசத்தைத் தாங்காமல் கண்களை
மூடிக்
கொண்டான்.
“பீமனே!
இதற்கு
மேல்
வளர்ந்து உனக்குக் காட்ட
இது
சமயமல்ல. பகைவரின் முன்
சரீரம்
இன்னும் பெரிதாக வளரும்’
என்றான். பிறகு
அனுமன்
தன்
வடிவத்தை முன்போல் சுருக்கிக் கொண்டு
பீமசேனனை அன்போடு தழுவிக் கொண்டான். மாருதியால் ஆலிங்கனம் செய்யப்பட்ட பீமனுடைய சிரமம்
எல்லாம் நீங்கி
அவனுக்கு முன்னைவிட அதிக
பலம்
உண்டாயிற்று என்கிறார் வியாச
பகவான்.
“வீரனே!
உன்
இருப்பிடத்துக்குப் போ!
சமயம்
நேரிட்டபோது என்னை
நினைக்கக் கடவாய்.
உன்னுடைய மானிட
தேகத்தை நான்
ஆலிங்கனம் செய்தபோது முன்
நாட்களில் ராமஷடைய தேகத்தை தீண்டியதுபோல் மகிழ்ச்சியடைந்தேன். உனக்கு
வேண்டிய வரத்தைக் கேள்’
என்றான் அனுமன்.
“வானர
சிரேஷ்டரே! உம்மை
நான்
கண்டதால் பாண்டவர்கள் எல்லோருமே பாக்கியசாலிகள் ஆனோம்.
உம்முடைய பலத்தினால் நாங்கள் எல்லாச் சத்ருக்களையும் ஜெயிப்போம்’ என்றான் பீமன்.
“நீ
எத்தத்தில் எப்போது சிம்மநாதம் செய்வாயோ, அப்போது என்னுடைய குரலும் உன்னுடைய சத்தத்துடன் சேர்ந்து பகைவர்களை நடுங்கச் செய்யும். உன்
தம்பி
அர்ச்சுனனுடைய தேரின்
கொடியில் நான்
இருப்பேன். உங்களுக்கு வெற்றி
உண்டாகும்!’
The post வானரமே! எழுந்து வழியை விட்டுப் போ! வழியை விடு! appeared first on SwasthikTv.