கும்பகோணம் அருகில் உள்ள திருவலஞ்சுழி சிவாலயத்தில் விநாயகரை தரிசித்து வழிபட்டால், பொருள் வளத்துடன், பாவங்கள் குறைந்து, வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
கும்பகோணம் அருகில் உள்ளது, திருவலஞ்சுழி சிவாலயம். இங்குள்ள விநாயகரை இந்திரன் பூஜித்ததாக தல வரலாறு சொல்கிறது. கடல் நுரையால் செய்த விக்கிரகம் என்பதால், இந்த விநாய கருக்கு கைகளால் தொட்டு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. சங்கு கொண்டு அபிஷேகம் நிகழ்த்தப்படுகிறது.
விநாயகருக்கு பச்சைக் கற்பூரம் சாத்தி வழிபடுகிறார்கள். ‘சுவேதம்’ என்பதற்கு ‘வெண்மை’ என்று பொருள். கடல் நுரை வெண்மை நிறம் கொண்டது என்பதால், இத்தல விநாயகர் ‘சுவேத விநாயகர்’ என்று பெயர் பெற்றுள்ளார். காவிரி வலமாக சுழன்று செல்வதால், இந்தத் திருத்தலத்திற்கு ‘திருவலஞ்சுழி’ என்ற பெயர் ஏற்பட்டது.
இங்குள்ள இறைவனின் பெயர் ‘வலஞ்சுழிநாதர்.’ அம்பாளின் திருநாமம் ‘பெரியநாயகி.’ இத்தல விநாயகரை தரிசித்து வழிபட்டால், பொருள் வளத்துடன், பாவங்கள் குறைந்து, வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
The post பாவங்களை போக்கும் சுவேத விநாயகர் appeared first on SwasthikTv.