Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

ராகி கொழுக்கட்டை

$
0
0

Ragi Kozhukattai Recipe: நம் வீடுகளில் அடிக்கடி செய்யும் பாரம்பரியமான ரெசிபிகளில் ஒன்று கொழுக்கட்டை.பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு எளிதாக ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க அம்மாக்களின் முதல் தேர்வு கொழுக்கட்டைதான்.விசேஷ நாட்களில் கடவுளுக்கு படைப்பதற்கும் நம் முதல் தேர்வு கொழுக்கட்டைதான்.வழக்கமாக நாம் கொழுக்கட்டையை அரிசி மாவில்தான் செய்வோம்.ஆனால் அரிசிவு கொழுக்கட்டையை விட ஆரோக்கியமானது இந்த ராகி கொழுக்கட்டை. கொழுக்கட்டைக்கு உள்ளே வைக்கப்படும் பூரணத்திற்கு நாம் வழக்கமாக வைக்கும் தேங்காய்,பொறிகடலை மற்றும்  சர்க்கரையோடு ட்ரை புருஃட்ஸ் பவுடரையும் சேர்த்துள்ளேன்.சுவையோடு மட்டுமல்லாமல் சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமும அள்ளி தருவதால் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய அற்புதமான ரெசிபி.

தேவையானவை

  • ராகி மாவு – 1 கப்
  • அரிசி மாவு – 1/2 கப்
  • தண்ணீர் – 1 கப்
  • நெய்- தேவையானவை

பூரணத்திற்கு தேவையானவை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைக்கவும்.தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்..ஒரு பவுலில் ராகி மாவு மற்றும் அரிசி மாவை எடுத்து கொள்ளவும். சூடான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும். மாவை கட்டிகள் இல்லாமல் மிருதுவாக பிசைந்து ஒரு ஓரமாக வைக்கவும்.ஒரு பவுலில் பூரணத்திற்கு தேவையான வெல்லத்தூள்,தேங்காய்த்துருவல்,பொறிகடலை,ட்ரை புரூட்ஸ் பவுடர் மற்றும் ஏலக்காய்த்தூளை சேர்த்து நன்றாக கலக்கவும். கொழுக்கட்டை அச்சை எடுத்துக்கொண்டு அதனுள்ளே நெய் தடவவும்.சிறிதளவு மாவை எடுத்து அச்சுக்குள் வைக்கவும்.கலந்து வைத்த பூரணத்தை உள்ளே வைத்து மேலும் சிறிதளவு மாவை அச்சுக்குள் வைத்து அடைக்கவும்.தயார் செய்து வைத்த மாவை இட்லி குக்கரில் வைத்து நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.தேங்காய்ப்பூ தூவி கொழுக்கட்டைகளை பரிமாறவும்.சத்தான ராகி கொழுக்கட்டை ரெடி.ழந்தைகளுக்கு தேவையான கால்சியத்தை ராகி அள்ளி கொடுப்பதால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.வழக்கமாக செய்து கொடுக்கும் கொழுக்கட்டையை விட வித்யாசமாக இருப்பதால் குழந்தைகள் கட்டாயம் விரும்பி உண்பர்.

The post ராகி கொழுக்கட்டை appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>