Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 03/05/2016

$
0
0

  உலகெங்கும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ஸ்வஸ்திக் டிவி.காம் நேயர்களுக்கு என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு பரிகாரமும்,பலன்களும் என்ற இந்த அருமையான ஒரு பகுதியில் நாம் இன்று எடுத்துக் கொண்ட தலைப்பு குருவிற்குரிய தாந்திரிக பரிகாரங்கள்.ஒருவருடைய ஜனன ஜாதகத்தை எடுத்து விசாரிக்கும் பொழுது குருவினுடைய அந்த காலம் என்னவென்றால் 16 வருட காலம்.குரு பாதிக்கப்பட்டதால் அவர்களுக்கு குருவின் காரதத்துவம் என்னவென்றால் புத்திரன்,தனம்,அவரை தன ஸ்தானாதிபதி என்றும் கூறுகிறார்கள். அப்படிப்பட்டவர் ஒரு ஜனன ஜாதகத்திலே பாதிக்கப்பட்டால் பொருளாதாரத் தொல்லைகள் அவர்களுக்கு வந்துவிடும்.புகழ், பெயர், இவை அனைத்தும் கெட்டு விடும்.மேலும் குழந்தைகளால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.குடல் நோய் உருவாகும்.மேலும் இந்த காலகட்டத்தில் ஆபத்து விபத்து மரணப் படுக்கை உண்டாகும்.குரு பேரறிவைக் காட்டுகின்றதாலே கல்வியிலே படிக்கின்ற நேரத்திலே அவர்களுக்கு பிரச்சனைகள் இருக்கும்.அப்படிப்பட்ட அந்த அம்சங்களை ஒரு மனிதன் எதிர்கொள்ளும் போது அதன் தாந்திரிக பரிகாரங்களை அவன் செய்ய வேண்டும்.

 குருவிற்கு வசியத்தை ஏற்படுத்துகின்ற கொண்டைக்கடலை வியாழனன்று கொண்டைக்கடலையைத் தயாரித்து மாலை வேளையிலே நெய் தீபம் ஏற்றி அதை விநியோகம் செய்ய வேண்டும்.இரண்டாவது நமக்கு யார்யாரெல்லாம் நல்லபடியாக இருந்து ஆசிரியர்களாக இருந்து நம்மை வழி நடத்துகிறார்களோ அவர்களை எல்லாம் நாம் நம் வீட்டிற்கு அழைத்து அவர்கள் காலில் விழுந்து வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து அவர்களுடைய அருளாசியைப் பெறலாம்.மேலும் திருவண்ணாமலையைச் சுற்றி குருக்கள் ஏகப்பட்ட ஆன்மீக குருக்கள் இருப்பதால் அந்த மலையை நாம் கிரிவலம் வருகின்ற அந்த நேரத்திலே ஒரு அகர்பத்தியை ஏற்றிக் கொண்டு நமசிவாய என்ற மந்திரத்தைச் சொல்லி அந்த கிரிவலம் வருகின்ற அந்த நேரத்திலே நமக்கு பலவிதமான மாற்றங்கள் உண்டாகும்.மேலும் ஒரு வியாழனன்று இரவு 8 மணியிலிருந்து 9 மணிவரை அந்த குரு ஓரை ஓடிக்கொண்டிருக்கும் நேரத்திலே மஞ்சள் துணியிலே இந்த கொண்டைக்கடலையை முடிந்து அதை தலையணை கீழே வைத்து படுத்து உறங்கி வர ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக இதை செய்து ஓடுகின்ற நீரிலே இதை கடத்தும் பொழுது நிச்சயமாக குருவின் அருளாசி நமக்கு கிடைக்கிறது.குருவை வசியம் செய்ய முல்லை மலரின் வேரில் சாப நிவர்த்தி செய்து அதை தாயத்தாக அணிந்து வர பலவிதமான நன்மைகள் நமக்கு உண்டாகிறது.

 மேலும் குரு ஓரை ஓடிக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் தாம்பாளத்தட்டில் இந்த கொண்டைக்கடலையைப் பரப்பி அதிலே நெய் தீபம் ஏற்றி ஒன்பது வெற்றிலை,ஒன்பது பாக்கு,ஒன்பது ஒரு ருபாய் நாணயங்களை வைத்து வணங்கி வர குருவின் அருளாசி நமக்கு கிடைக்கிறது மேலும் இந்த 16 வருட காலத்திலே குரு மகரத்தில் நீச்சம் பெற்று தசை நடத்தினால் அவர்களுக்கு பலவிதமான சோதனைகள் வரும் அப்பொழுது நான் சொன்ன இந்த பரிகாரங்களில் ஏதாவது ஒன்றை செய்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம்,மகிழ்ச்சி பெறலாம்.இந்த குருவின் பாதக நிலையை நாம் மாற்றலாம் என்று கூறுவதே தாந்திரிக பரிகாரம் என்று சொல்லி இந்த பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் சுக்கிரனின் தாந்திரிக பரிகாரங்கள் என்னென்ன என்பதை விரிவாகவும் விளக்கமாகவும்,பார்க்க இருக்கிறோம் என்று சொல்லி இந்த பகுதியை பூர்த்தி செய்து நாளைய தினம் உங்களை சந்திக்க இருக்கிறேன்.நன்றி,வணக்கம்.

ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார்

9962081424

The post இன்றைய ராசி பலனை வழங்குபவர் ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் – 03/05/2016 appeared first on Swasthiktv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>