Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

மூன்று ஜென்ம தோஷங்களை போக்கும் கோவில்

$
0
0

திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு வந்து செய்ய வேண்டிய பரிகாரத்தை செய்தால் மூன்று ஜென்மமாக இருந்து வந்த தோஷங்கள் விலகி சகலவிதமான பாக்கியத்தையும் பெறுவார்கள்.

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர்நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ளது திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில். இந்த கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 79-வது ஸ்தலமாக திகழ்கிறது.

பிரம்மனின் கபாலம், சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொள்ள இங்குள்ள குறுங்குடிவல்லித் தாயாரால் அம்ருதபிஷையிட்டு, சாபம் நீங்கப் பெற்ற தலம் இது. இக்கோவிலில் இருந்து  கி.மீ. தூரத்தில் திருப்பாற்கடல் என்ற ஓடை பாய்கிறது. அதன் கரையில், திருப்பாற்கடல் நம்பி சன்னதி இருக்கிறது.

இந்த தலத்திலிருந்து 10 கி.மீ. தூரத்தில் ஒரு குன்று இருக்கிறது. அக்குன்றின் மேல் மலை நம்பி சன்னதி இருக்கிறது. உடையவரை குருவாக ஏற்று உபதேசம் பெற்றதால், இந்த சேத்திரத்துப் பெருமாள் வைஷ்ணவ நம்பி என்ற நாமத்தைப் பெற்றார். இந்த தலத்திலிருந்து  கி.மீ. தூரத்தில் திருப்பாற்கடல் ஆறு ஓடுகிறது. அதன் நடுவில் உள்ள திருப்பரிவட்டப் பாறையில் உடையவர் சன்னதி இருக்கிறது.

பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருத்தலம் இது. கொடிய பாவம் செய்து, அதன் காரணமாக குழந்தை குட்டிகளோடு சொல்லவொண்ணாத் துன்பத்தை அடைந்து கொண்டிருக்கும் அனைவரும் இந்த திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு வந்து செய்ய வேண்டிய பரிகாரத்தை செய்தால் மூன்று ஜென்மமாக இருந்து வந்த தோஷங்கள் விலகி சகலவிதமான பாக்கியத்தையும் பெறுவார்கள்.

The post மூன்று ஜென்ம தோஷங்களை போக்கும் கோவில் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>