திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது, இங்கு தாயார் கோமதிவுடன் சங்கரலிங்கம் என்ற பெயரில் சிவனும் அரியும் அருள்பாலிக்கின்றனர், இவரை வணங்கினால் ஒற்றுமைகுணம் உண்டாகவும் தானே பெரியவன் என்ற என்னம் நீங்கவும் இங்கு ஒற்றுமை குணம் ஏற்படவும் வேண்டிகொள்கின்றனர்.பிராத்தனைகள் நிறைவேறியதும் சுவாமி அம்பாள் சங்கர நாராயணருக்கு வஸ்திரம் சார்த்தி பிராத்தனையை பக்தர்கள் நிறைவேற்றிகின்றனர்.
ஆடித்தபசு:
தபசு என்றால் தவம் அல்லது காட்சி எனப் பொருள் அம்பாள் சிவன் சங்கரநாராயனர் காட்சி தர வேண்டி தவம் இருந்து அவரது காட்சியை பெற்றநாளே ஆடித்தபசு தென்னாட்டில் மிக சிறந்து விளங்கும் சிவ ஸ்தலங்களில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். முன்பு இத்திருத்தலத்தின் பெயர் புன்னைவனப்பேரி என்றும், சங்கரரும், நாராயணரும் இணைந்து காட்சி அருளியதால் சங்கரநயினார் கோவில் என்றும் இதுவே நாளடைவில் மறுவி சங்கரன்கோவிலாக இன்று வழக்கத்தில் இருந்து வருகிறது.
சங்கரநாராயண சுவாமி கோவிலை கி.பி. 11ம் நூற்றாண்டில் உக்கிரன்கோட்டையை ஆண்டு அரசாட்சி செய்து வந்த உக்கிரம்பாண்டிய மண்ணன் பாண்டியன் மாமன்னன் கட்டினான். இவர் மணிக்கிரீவன் என்ற காவலின் சொல் கேட்டு புன்னை வனத்தின் புற்றின் அருகே இருந்த புன்னை வனக்காட்டினை சீர் செய்து, கோவிலை கட்டியதுடன், கோவிலின் முன் மண்டபங்களையும் கட்டி சுற்றுச்சுவரையும் எழுப்பினார். பதுமனும் சங்கனும் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளப்படுவதை தடுத்து நிறுத்தவும், நாட்டில் இந்து மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தவும், பாம்பரசர்களான சிவ பக்தன் சங்கனும், விஷ்ணு பக்தன் பதுமனும் சேர்ந்து திருக்கயிலை மலையில் அருந்தவம் மேற்கொண்டனர். பாம்பரசர்களின் அருந்தவத்தை கண்ட பார்வதி தேவியார் பாம்பரசர்கள் முன்பாகத் தோன்றி என்னவரம் வேண்டும் என்று கேட்க, அதற்கு அவர்கள் இருவரும் சிவன், விஷ்ணு இந்த இருவரில் உயர்ந்தவர்கள் யார் என்று வினா எழுப்பினார்கள்.
இதில் அம்பிகை யாரை உயர்ந்தவர் என்று கூற இயலும். ஒருபுறம் கணவர் சிவபெருமான், மறுபுறம் சகோதரர் விஷ்ணு, இதற்கு தீர்வை அம்பிகை சிவபெருமானிடமே கேட்க, அதற்கு ஈசனோ பொதிகை மலைச் சாரலில் புன்னைவனத்தில் தவம் மேற்கொள் உன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று அம்பிகைக்கு அருளினார், அதன்படி உமையம்மை தமைசூழ்ந்த பசுக்களாகிய வேதமாதர்களுடன் பார்வதி தேவி கோமதியம்மை, ஆவுடையம்மை எனும் காரணப் பெயர்களை தாங்கி புன்னைவனத்தில் தவம் மேற்கொண்டார். அம்மையின் அருந்தவத்திற்கு இணங்கி சிவபெருமான் ஆடித்திங்கள் உத்திராடம் நன்னாளில் அருள்தரும் கோமதி அம்பிகைக்கு அரியும், சிவனும் இணைந்த சங்கரநாராயணர் கோலத்தில் காட்சி கொடுத்து அருளினார். இந்த காட்சியைத்தான் ஆடித்தபசு திருவிழாவாக லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்து இறையருள் பெற்று வருகின்றனர். இக்கோவிலின் தீர்த்தமாக நாகசுனை நீரும், ஸ்தல விருட்சமாக புன்னைமரமும் விளங்குகிறது. இக்கோவிலின்
புன்னைவனக் காட்டில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பாம்பு புற்றின் அருகே அமையப்பெற்ற சன்னதியாக சங்கரலிங்க மூர்த்தி சன்னதியும், சிவனும், அரியும் இணைந்து காட்சி அருளிய இடத்தில் சங்கரநாராயணசுவாமி சன்னதியும், சிவபெருமானை நோக்கி உமையம்மை கடுந்தவம் மேற்கொண்ட இடத்தில் கோமதி அம்பாள் சன்னதியும் அமைந்துள்ளது, இங்கு ஒவ்வொரு தைத்திங்கள் பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் தெப்பத் திருவிழாவும், 41 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவும், இத்திருத்தலத்தின் பிரம்மோற்சவம் ஆகும். உத்ராயண, தட்சிணாயன காலங்களில் சூரிய பகவான் தனது சாலைகளுடன் வந்து சிவபெருமானை பூஜிக்கும் தினத்தில் சூரிய பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகிறது, அந்த காலங்களில் சூரிய பூஜை என்ற விழா கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 21,22,23 மற்றும் செப்டம்பர் 21,22,23 ஆகிய நாட்களில் சங்கரலிங்க மூர்த்தியை சூரிய பகவான் தரிசிப்பதை நாம் இன்றும் காண முடியும். கோவிலின் நுழைவு வாயிலின் வடபுறம் அமைந்துள்ள நாகசுனைத் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இதை பாம்பரசர்களான சங்கனும், பதுமனும் ஏற்படுத்தினார்கள்..
தமிழ்நாட்டில் நாகதோஷங்களை தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குவதற்கு இக்கோயிலின் சங்கரலிங்கசுவாமி சன்னதியின் கன்னி மூலையில் 6 அடி உயரத்தில் சர்ப்பத்தை கையில் பிடித்தபடி சர்ப்ப விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை வழிபாடு செய்பவர்கள் சர்ப்ப தோஷத்தில் விடுபட்டு, திருமணத்தடை நீங்கி வாழ்க்கையில் மேன்மை அடைகின்றனர் என்பது இக்கோயிலின் ஐதீகம்.
திருவிழாக்கள்:
சித்திரைப் பெருந்திருவிழா
ஆடித்தபசு திருவிழா
நவராத்திரி லட்சார்ச்சனை
கந்தசஷ்டி திருவிழா
திருவெம்பாவை திருவிழா
வெள்ளி அன்று
ஸ்ரீநந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு –
அமைவிடம்:
திருநெல்வேலியில் இருந்து சங்கரன் கோவிலுக்கு அடிக்கடி பஸ்வசதி உள்ளது.
தொடர்புக்கு : 91-4636-222265
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #lordshiva #sankaranarayanan
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post சங்கடங்களை தீர்க்கும் சங்கரநாராயணன் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.