உத்திரபிரதேஷம் மாநிலம் பிரயாகை கங்கைக்கரையில் தாராகஞ்ச் என்ற இடத்தில் பத்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மராட்டிய மன்னன் ஸ்ரீதர்பான்ஸ்லே என்ற மன்னன் தேஷநிவர்த்திக்காக நாகவாசுகி கோவிலைக்கட்டினான், இங்குள்ள நாக் வாசுகியை வணங்கினால் காளசர்ப தோஷம் நீங்கும் என்பது பக்தர்கள் தீராத நம்பிக்கை. பாற்கடலைக் கடையும் பொருட்டு கயிறாகப் பயன்பட்டது அஷ்ட நாகங்களின் தலைவனான வாசுகி ஆகும். சிவபெருமானின் பக்தனான வாசுகி சிவனருளால் அவர் கழுத்தை அலங்கரிக்கும் முக்கியமான ஆபரணமாகத் திகழ்கிறது.
பாற்கடலில் திருமாலின் படுக்கையாக விளங்கும் ஆதிசேஷன் பரமபதத்தில் விஷ்வக்சேனர், கருடன் ஆகியோருடன் நித்ய சூரியாகத் திகழ்கிறார். ஆதிசேஷனுக்கென்று தனி ஆலயம் இல்லாவிடினும் பெருமாள் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் தலங்களில் ஆதிசேஷனை நாம் தரிசிக்க முடியும். ஆனால், நாகராஜாவான வாசுகிக்கு என்று தனியே சில ஆலயங்கள் இந்தியாவில், குறிப்பாக வடநாட்டில் உள்ளன, உத்தரப் பிரதேசம் பிரயாகை கங்கைக் கரையில் தாராகஞ்ச் என்ற இடத்தில் அமைந்துள்ள நாக் வாசுகி ஆலயம் வாசுகிக்குரிய பிரபலமான ஆலயமாகத் திகழ்கிறது, ராமபிரான் தன் வனவாசத்தின்போது இங்கிருந்த பரத்வாஜ முனிவர் ஆசிரமத்திற்கு வந்து, இங்குதான் குகனின் படகில் ஏறி கங்கை ஆற்றைக் கடந்தாராம்.
கடவுளின் நகரம்:
இந்தத் தலத்திற்கு மொகலாய மன்னரான அக்பர் கடவுளின் நகரம் என்ற பொருள் படும் இலஹாபாத் என்று பெயரிட்டாராம். அலஹாபாத் நகரத்தின் ஒரு பகுதியாகத் திகழும் தாராகஞ்ச், கங்கை ஆற்றின் கரையில், திரிவேணி சங்கமத்தின் மிக அருகில் உள்ளது. இதை அடுத்துதான் கங்கையோடு யமுனை சங்கமிக்கிறது.
நாகவாசுகி ஆலயக் கருவறையில் ஐந்து தலைகளுடன் கருங்கல் புடைப்புச் சிற்பமாக வாசுகி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருவறையின் மீது வட இந்தியப் பாணியில் அமைக்கப்பட்ட கூம்பு போன்ற விமானம் உள்ளது. பத்தாவது நூற்றாண்டிலேயே இந்த நாக் வாசுகி ஆலயம் இருந்திருக்கக் கூடும் என்றும், பின்னர் மராட்டிய மன்னர் ஸ்ரீதர் பான்ஸ்லே ஆலயத் திருப்பணி செய்ததாகவும் கூறுகின்றனர்.
இத்தலத்திற்கு காள சர்ப்ப தோஷ நிவர்த்திக்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். நாகபஞ்சமி நாளன்று இந்த ஆலயத்தில் மிகப் பெரிய அளவில் மேளா நடைபெறுகிறது. தாராகஞ்ச் நாக்வாசுகி ஆலய வளாகத்தில் விநாயகர், சிவபெருமான், பார்வதி தேவி சந்நதிகள் உள்ளன. மேலும் ஆலயத்தின் அருகில் உள்ள வாசுகி தீர்த்தத்தின் அடியில் பாம்புகள் வசிப்பதாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
அமைவிடம் :
உத்திரபிரதேஷம் மாநிலம் அலகாபாத்தில் இருந்து 10 கி.மி தூரத்தில் உள்ளது.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #lordshiva #amman #naagavaasugi
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post காளசர்ப தோஷம் தீர்க்கும் உத்திரபிரதேஷம் நாகவாசுகி appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.