Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

பொறுப்பை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் கண்கலங்கிய ராகவேந்திரர்….

$
0
0

 சங்கு கர்ணன் என்ற தேவன் ஒரு சாபத்தின் காரணமாக பூவுலகில் அரக்கர் வேந்தன் இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதனாய் பிறந்தார். மஹா விஷ்ணுவின் மேல் இருந்த தீவிர பக்தியினால் பிரகலாதன் அரக்கன் இரண்ய கசிபுவை வதம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்தார். தனது அடுத்த பிறவியில் பாஹ்லிகனாக பிறந்தார். பாஹ்லிகர் மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டாலும் ஒரு நல்ல ஹரி பக்தராக விளங்கினார். இவர் போரில் பீமனின் கையில் உயிர் துறந்தார் . தன் அடுத்த பிறவியில் வியாசராயராய் பிறந்து மத்வரின் தத்துவத்தை வழிபட்டார். அப்பிறவியில் தாம் செய்த தொண்டினால் திருப்தி அடையாமல் மீண்டும் குருராகவேந்திரராக அவதரித்தார்.

  கடலூர் மாவட்ட  புவனகிரி என்ற கிராமத்தில் ராகவேந்திரர் 1595ம் ஆண்டு திம்மண்ணா பக்துவா கோபிகாம்பாள் தம்பதியரின் மகனாக தமிழகத்திலுள்ள கடலூர் மாவட்டத்தில் புவனகிரி என்ற கிராமத்தில் ராகவேந்திரர் (வெங்கட்ராமன்) பிறந்தார். இவரது பெற்றோர் வைணவக் கோட்பாடுகளை போற்றி வளர்த்ததுடன் மிகுந்த ஆசார பண்பாடுகளை போற்றிக் காப்பாற்றி வந்த குடும்பமாக இருந்தது. தந்தை வழியில் வெங்கட்ராமன், பகவான் கிருஷ்ணன் மீது மிகுந்த பக்தி கொண்டு வேண்டினார். அதன் காரணமாக சிறு வயதிலேயே அவர் புத்திசாலியாக போற்றப்பட்டார். அவர், சிறு பிள்ளையாக இருந்தபோது பெற்றோரை இழந்து அவரது அண்ணன் குருராஜருடைய பராமரிப்பில் இருந்தார். அவரது தாய் மாமனான மதுரையைச் சேர்ந்த லஷ்மி நரசிம்ம ஆச்சார்யாவிடம் ஆரம்பக் கல்வியை முடித்தார். வாலிப வயது வந்தபோது சரஸ்வதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். கும்பகோணத்திற்கு வந்து ஸ்ரீசுதீந்திர தீர்த்தரிடம் வேத ஆராய்ச்சிக்கான பயிற்சிகளை முடித்தார்.

 பிருந்தாவன் மடத்தின் 55 வது தீர்த்தராக பொறுப்பேற்றார். சுதீந்திர தீர்த்த சுவாமிகள் கனவில் தோன்றிய கலியுகக் கண்ணன் ஸ்ரீகிருஷ்ணன், மடத்தை வழிநடத்த ராகவேந்திர தீர்த்தர் சரியான நபர் என்று உணர்த்தினார். மறுநாள் தூங்கி எழுந்த பின் பகவான் கிருஷ்ணன் கனவில் கூறியதை ராகவேந்திரரிடம் சுதீந்திர தீர்த்தர் கூறி எனக்குப் பின் இந்தப் பொறுப்பை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். என்றதும் கண்கலங்கிய ராகவேந்திரர் அதன்பின் குருவின் சொல்லே ஏற்று பிருந்தாவன் மடத்தின் 55 வது தீர்த்தராக பொறுப்பேற்றார்.

ராகவேந்திரர் ஆராதனை விழா:

 ஆண்டுதோறும் ஆவணி மாதம் ராகவேந்திரர் ஆராதனை விழா கொண்டாடப்படுகிறது. பூர்வ ஆராதனை, மத்திய ஆராதனை, உத்ர ஆராதனை என்ற பெயரில் ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. கர்நாடக-ஆந்திரா மாநில எல்லையில் உள்ள மந்தராலயாவில் பிருந்தாவன் பூங்காவில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு புதிதாக கட்டிடயுள்ள தங்க கோபுரம், கலசமண்டபம், தங்க மண்டபம் உள்பட பல கட்டிடங்கள் பக்தர்களுக்கு அர்பணிக்கப்பட்டது.

ராகவேந்திரர் மந்திரம்

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச

பஜதாம் கல்பவ்ருக்ஷ?ய நமதாம் காமதேனவே

 1671 ஆம் ஆண்டு ராகவேதிர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்கு முன் தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கும் ஒரு உரையை தந்தார்.

அவ்வுரையிலிருந்து சில பகுதிகள்:

  • சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.
  • நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்
  • சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள்.
  • சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது
  • கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது’. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும்.
  • நமக்கு கடவுள் மேல் மற்றுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.

 இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #lordshiva #ragavendirar

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post பொறுப்பை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் கண்கலங்கிய ராகவேந்திரர்…. appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>