வங்க தேசத்தின் தலைநகரான கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் குதிராம் – சந்திரமணி என்னும் தம்பதியருக்கு மகனாக 1836 ஆம் ஆண்டு அவதரித்தார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். ராமக்ரிஷ்ணரின் இயற்பெயர் ககாதரன் என்பது.
சிறு வயதில் படிப்பின் மேல் நாட்டம் இல்லாத ராம கிருஷ்ணர் தன் அண்ணன் ராம்குமார் பூசாரியாக இருந்து வந்த தட்சினேஸ்வர காளி கோவிலுக்கு சென்று வரும் பழக்கத்தால் காளி தேவியின் தீவிர பக்தரானார்.
பார்க்கும் அனைத்தையுமே தன் இஷ்ட தெய்வமாக பாவிக்கும் ப்ராப்தம் அனைவருக்கும் அமையாது. அந்த ப்ராப்தம் முழுதாக அமையப்பெற்றவர் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர். காளியின் மேலுள்ள பக்தி பல முறை அவரை பித்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் அவருடைய பெற்றோர்களும் ஊர் உலகத்தினரும் அவருக்கு சித்த பிரமை பிடித்துவிட்டதாக எண்ணிய காலமும் உண்டு.
அதற்கு உதாரணமாக இரு சம்பவங்களை இங்கே காணலாம்.சாதாரண சம்பவங்கள் அல்ல அன்னை காளியே நேரில் தோன்றிய மெய்சிலிர்க்கும் சம்பவங்கள்.
தன் அண்ணனின் மறைவுக்கு பின் காளி தேவிக்கு நித்ய பூஜை செய்யும் பாக்கியத்தை பெற்ற ராமகிருஷ்ணர் அன்னையை எப்படியாவது நேரில் பார்த்திட பேராசை பட்டார். எனவே அன்னையை எண்ணி தொடர்ந்து தீவிர தியானத்தில் இருந்தார். அன்னை நேரில் வரவில்லை.ஒருகட்டத்தில் விரக்தியின் உச்சத்தை அடைந்த ராமகிருஷ்ணர் நேரே காளியின் சிலை அருகே சென்று அவளுடைய ஒரு கையில் உள்ள வாளை உருவி “உன்னை எனக்கு காட்டமாட்டாயா ? ” என்று கேட்டுக்கொண்டே தன்னுடைய கரங்களை துண்டிக்க துணிந்தார். உடனே அங்கே காலி தேவி தோன்றி தன் பக்தனுக்கு காட்சியளித்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய செயலை தடுத்து நிறுத்தவும் செய்தாள். கேட்கவும் வேண்டுமா ராமக்ரிஷ்ணரின் நிலையை? காளியை கண்டதும் பேரானந்தப்பரவசமடைந்தார் அன்னையை தவிர வேறொன்றும் அவர் கண்ணிற்கு புலப்படவில்லை.
பேரொளிப்ரவாகமாக தன் முன் காலி தோன்றிய அந்த நாளுக்குப்பிறகு அவருடைய பக்தி மேலும் முற்றியது. எப்படி என்கிறீர்களா ? அன்னையை அவர் கோபித்துக்கொள்ளும் அளவிற்கு..
தினமும் காளிக்கு பூஜையின் முடிவில் நிவேதனம் செய்யப்படும் உணவு, பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும். இப்படி இருக்க ஒரு நாள் ராமகிருஷ்ணர் காளியை நோக்கி ” இது என்ன தினமும் உனக்கு உணவு படைப்பதும் அதை நீ உண்ணாமலேயே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதுமாக வெறும் ஒரு சடங்காகாகவே எனக்கு தோன்றுகிறது. எனக்காக நீ ஒரு நாள் இந்த உணவை சாப்பிட வேண்டும் என்றும், என் கையாலேயே அதை உனக்கு நான் ஊட்டி விட வேண்டும் என்றும் காளியிடம் முறையிட்டார்.
காலி தேவியும் ஒரு குழந்தையை போல் ராமக்ரிஷ்ணரின் முன் தோன்றி ” இவ்வுலக உயிர்கள் அனைத்தும் என்னுள் அடக்கம் அப்படி இருக்க அவர்கள் சாப்பிட்டால் நான் சாப்பிட்டதாகத் தானே அர்த்தம்” என்றாள் .இருப்பினும் தன் பக்தனின் சொல்லை ஏற்று அவர் உணவை உருட்டிக்கொடுக்க தான் அதை வாங்கி உண்டாள்.
காளி மாதா கரங்களில் ஆயுதங்களுடன், தோற்றத்தில் பயங்கரியாக இருந்தாலும், ஒரு குழந்தையை போல் ஒரு பக்தனின் ஆசைக்கு இசைந்து, அவன் உருட்டிக்கொடுத்த உருண்டையை வாஞ்சையுடன் வாங்கி உண்டதை நம் அகக்கண்ணில் நினைத்துப்பார்த்தால் புரியும் – பக்தி என்பது எத்தகைய அற்பணிப்பை உள்ளடக்கியது என்பது..
The post உக்கிர தெய்வமான காளியை ஒரு குழந்தை போல பாவித்து அவளிடம் தினமும் பேசி, அமுதூட்டி மகிழ்ந்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். appeared first on Swasthiktv.