Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

மகாளய அமாவாசை பித்ரு கடன் நிவர்த்தி செய்ய உகந்த நாள்

$
0
0

 மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். ‘பட்சம்’ என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15 நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம். இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.

 அமாவாசை பிதுர் வழிபாட்டிற்கு உகந்த நாள். இந்நாளில் புனிதமான கடற்கரையிலோ, புண்ணிய நதிக்கரையிலோ, தீர்த்தங்களிலோ நீராடி, வேத விற்பன்னர் வழிகாட்டுதலுடன், நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையைச் செய்வது போற்றப்படுகிறது. அக்னி தீர்த்தம் உள்ள கடற்கரையான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமகத் தீர்த்தக்குளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு தலத்தில் ஓடும் பஞ்சநதிக்கரை ஆகியவை பிதுர் பூஜைக்குரிய தலங்கள் என்று போற்றப்படுகின்றன.

 தமிழகத்தில் பிதுர் பூஜைக்குரிய இடங்கள் பல இருப்பதுபோல், வட நாட்டில் காசி, பத்ரிநாத், கயா போன்ற இடங்களில் எப்பொழுதும் எந்நாளிலும் பிதுர் பூஜை செய்யலாம். அந்த வகையில் காசியில் மணிகர்ணிகா கட்டம் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதேபோல் கேரளாவில் ஐவர் மடம் என்னும் தலம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. ஐவர் மடத்தின் அருகில் பாரதப் புழா என்னும் நதி ஓடுகிறது. இந்த நதியில் ஐந்து நதிகள் கலந்து வருவதால் மேன்மேலும் சிறப்புப் பெறுகிறது.

 ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் அதற்குரிய பூஜைகள், ஹோமங்கள் செய்து, அந்த ஆத்மாவைச் சாந்தப்படுத்தி மேலுலகத்திற்குச் செல்ல வழிசெய்கிறார்கள். பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கான வழிபாட்டினைச் செய்வதுடன், அன்னதானமும் செய்தால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும். அதில் தை அமாவாசை மேலும் சிறப்புமிக்கது.

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.

முதல்நாள் – பிரதமை – பணம் சேரும்

2ம் நாள் – துவிதியை – ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்

3ம் நாள் – திரிதியை – நினைத்தது நிறைவேறுதல்

4ம் நாள் – சதுர்த்தி – பகைவர்களிடமிருந்து தப்பித்தல்

5ம் நாள் – பஞ்சமி – வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்

6ம் நாள் – சஷ்டி – புகழ் கிடைத்தல்

7ம்நாள் – சப்தமி – சிறந்த பதவிகளை அடைதல்

8ம் நாள் – அஷ்டமி – சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்

9ம்நாள் நவமி – சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.

10ம் நாள் – தசமி – நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல்

11ம்நாள் – ஏகாதசி – படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி

12ம் நாள் – துவாதசி – தங்கநகை சேர்தல்

13ம்நாள் – திரயோதசி – பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்

14ம்நாள் – சதுர்த்தசி – பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.

15ம் நாள் – மகாளய அமாவாசை – முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #prathosham

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post மகாளய அமாவாசை பித்ரு கடன் நிவர்த்தி செய்ய உகந்த நாள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459