Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

பயம் போக்கும் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார்

$
0
0

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனுக்கு சங்கு, சக்கரம், கதை, வில், கத்தி என்று ஐந்து ஆயுதங்கள் உண்டு. அவை முறையே பாஞ்சஜன்யம், சுதர்சனம், கௌமோதகீ, சார்ங்கம், நந்தகம் என்று பெயர் கொண்டவை. இந்த ஐந்திலும் விசேஷமானது சுதர்சனம் என்கிற சக்கரம். சக்கரத்தாழ்வார் என்று போற்றப்படுபவர் இவர்தான். இதன் சிறப்பைச் சொல்லும்போது, ‘எம்பெருமான் கருதுமிடம் பொருதும் ஆழி’ என்பார்கள் பெரியோர். ‘ஆதிமூலமே’ என்றழைத்த யானை கஜேந்திரனைக் காக்க எம்பெருமான் கரத்திலிருந்து சீறிக் கிளம்பி வந்தவர் இந்தச் சக்கரத்தாழ்வார் தான். சினங்கொண்ட துர்வாசரால் ஏவப்பூட்ட பூதத்தை வீழ்த்தி, மன்னன் அம்பரீஷன் நினைக்கும் முன்பே, துர்வாசரையும் துரத்திச் சென்றவர் இந்த சுதர்சனர். சிறைவாசம், பயம், கிரக தோஷங்கள், கடன் பிரச்னைகள், வழக்குகள்…உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து அடியார்களைக் காப்பவர் ஸ்ரீசுதர்சனர். சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம்.

ஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷா மந்திரம் :-

ஓம் நமோ சுதர்சன சக்ராய |

ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய |

த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய |

மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா ||    

செவ்வாய்க்கிழமைகளில் இவரை வலம் வந்து வழிபட்டால், கடன் தொல்லைகள் அகலும். தம் பதினாறு கரங்களிலும் பதினாறு ஆயுதங்களைக் கொண்டவராக விளங்குபவர் ஸ்ரீசுதர்சனர். சக்கரம், மழு, ஈட்டி, தண்டம், அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் ஆகியவற்றைக் கொண்டவராக இவர் காட்சி தருவார். இந்தக் கோல மூர்த்தியை, ‘ஷோடசாயுத ஸ்தோத்திரம்’ சொல்லி வழிபடுவது மிகச்சிறந்த பலனைத் தரும். சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகமும், ஹோட சாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் எளிதில் ஸ்ரீசுதர்சனரின் அருளைப் பெறலாம். இதைப் போன்றே, ஸ்ரீகூர நாராயண ஜீயர் அருளிய சுதர்சன சதகமும் விசேஷமானது.

சுதர்சனருக்கு ஸ்ரீரங்கம், திருமோகூர், மதுரை கூடலழகர் கோயில், சென்னை பார்க் டவுனில் உள்ள பைராகி மடம் திருவேங்கடமுடையான் திருக்கோயில். உள்ளிட்ட பல்வேறு தலங்களில் தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன. என்றாலும், சுதர்சனரே மூலவராக விளங்கும் தலம், கும்பகோணத்தில் உள்ள சக்ரபாணி திருக்கோயில். இவரை வழிபட்டே, தாம் இழந்த ஒளியை மீண்டும் பெற்றான் பகலவனான சூரியன். அவனால் எழுப்பப்பட்ட ஆலயம் சக்ரபாணி திருக்கோயில் என்றும், அதனாலேயே குடந்தைக்கு ‘பாஸ்கர கே்ஷத்திரம்’ என்று பெயர் வந்ததாகவும் தலபுராணம்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #murugan

 Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post பயம் போக்கும் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>