விழுப்புரம் மாவட்டம் அடுத்துள்ள பெரும்பாக்கத்தில் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு அம்பாள் காமாட்சியுடன் கைலாசநாதர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார், இவரை வணங்கினால் கண்திருஷ்டி தீரும் என்பதும், கடன் பிரச்சனைகள் விலகும் என்பதும் பக்தர்களின் தீராத நம்பிக்கை, இங்குள்ள காமாட்சியம்மனை வெள்ளிக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிப்பட்டால் திருமணம் நடக்கும் என்பது இத்தலத்தின் ஐதீகம்.
பிரகாராத்தில் உள்ள சித்திர குப்தரை வணங்கினால் ஆயுள் விருத்தி அடையும் என்பது இத்தலத்தில் சிறப்பு.
தலவிருட்சகமாக வில்வமரம் அமைந்துள்ளது :
பல நூறு ஆண்டுகள் பழமையானது. இந்த கோயில் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள படி, காஞ்சியை தலைநகரமாக கொண்டு நல்லாட்சி நடத்திய பல்லவ பேரரசன் நிருபதுங்கவர்மனுக்கும், பாண்டிய மன்னன் ஸ்ரீமாறனின் மகன் இரண்டாம் வரகுணனுக்கும் கி.பி 880ம் ஆண்டு கும்பகோணம் அருகே திருப்புளம்பியம் என்ற இடத்தில் போர் நடந்தது. அந்த போரில் நிருபதுங்கவர்மன் அபராஜிதவர்மன் மூலம் பாண்டியன் வரகுணனை தோற்கடித்தான். சிறப்பு மிக்க இந்த வெற்றியின் நினைவாக விஜய நிருபதுங்க செயந்தன் சதுர்வேதி மங்கலம் என்று தன் பெயரால் நான்கு வேதம் ஓதும் அந்தணர்களுக்கு இறையிலியாக கொடுத்தான்.
இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டு விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். கோயில் மற்றும் இராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறை கிழக்கு நோக்கியும், கோயில் நுழைவு வாயில் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது
அன்னாபிஷேகம், கார்த்திகை மாதத்தில் சோமவாரம், கார்த்திகை தீபம், மார்கழி மாதத்தில் ஆருத்ரா 10 நாள் விழா, மாசி மாதத்தில் மகா சிவராத்திரி போன்ற பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகின்றது.
தொடர்புக்கு:
சிவாலய நிர்வாகி : மேகநாதன்
9952148116
அமைவிடம்:
விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 5-வது கி.மி தூரத்தில் பொரும்பாக்கம் உள்ளது.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post கண்திருஷ்டி தீர்க்கும் பெரும்பாக்கம் கைலாச நாதர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.