Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

அருள் தரும் ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம்

$
0
0

ஓம் ஸ்கந்தாய நம: மேகத்திலிருந்து மின்னல் வெளிபடுவது போல்} சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டு பிறகு ஒன்று சேர்ந்து ஒரு வடிவம் கொண்டதால் “ஸ்கந்தன்” என்று பெயர் அந்த ஸ்கந்தனுக்கு நமஸ்காரம்.

ஓம் குஹாய நம: பக்தர்களின் இரு தயமாகிய குகையில் ஆத்ம சொரூபமாக இருக்கும் குகனுக்கு வணக்கம்.

ஓம் ஷண்முகாய நம: {தாமரை போன்ற} ஆறுமுகங்களுடைய கடவுளுக்கு வணக்கம்.

ஓம் பாலநேத்ரஸுதாய நம: சிவனின் கண்களிலிருந்து தீப்பிழம்பாக வந்ததால் சிவனின் பிள்ளை.

ஓம் பிரபவே நம: அனைத்தையும் அடக்கி ஆள்பவர்.

ஓம் பிங்களாய நம: பொன்னிறம் கலந்த சிவப்பு நிறம் கொண்டவர்.

ஓம் க்ருத்திகாஸூநவே நம: கிருத்திகை தேவதைகள் {கார்த்திகை பெண்கள்} என்ற ஆறுபேர் அவரை எடுத்து பாலூட்டினார்கள். எனவே கிருத்திகை பெண்களின் புதல்வன்.

ஓம் சிகி வாஹநாய நம: மயிலை வாகனமாக உடையவர்.

ஓம் த்விஷட்புஜாய நம: பன்னிரண்டு {வலிமை பொருந்திய} தோள்களை உடையவர்.

ஓம் த்விஷண்ணேத்ராய நம: பன்னிரண்டு விதமான தெய்வீக குணங்களைத் தமது பக்தர்களுக்கு அருளும் மகிமை பெற்ற பன்னிரண்டு கண்களை உடையவர்.

ஓம் சக்திதராய நம: பராசக்தியின் ஞான சொரூபமாகிய வேல் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தியவர்.

ஓம் பிசிதாச-பிரபஞ்ஜனாய நம: பிசாசு, நரமாமிசம் உண்ணும் அரக்கர்கள் போன்றவர்களின் பலத்தைத் தகர்த்து எறிந்து அழிப்பவர்.

ஓம் தாரகாஸூர-ஸம் ஹாராய நம: தாரகன் என்ற அசுரனை அழித்தவர்.

ரக்ஷோபல விமர்த்தனாய நமஹ: ராக்ஷஸ சேனையின் பலத்தை அழித்தவர்.

ஓம் மத்தாய நமஹ: மதம் பிடித்தவர் போல் யுத்தம் செய்பவர்.

ஓம் ப்ரமத்தனாய நமஹ: மிகவும் வெறி பிடித்தவர் போல் பயங்கரமாக யுத்தம் செய்து எதிரி சேனைகளை அழித்தவர்.{தன்னிடம் சரண் புகுந்தவர்களின் பக்தியில் சிறிதேனும் ஊக்க குறைவு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றி கைத்தூக்கிவிடும் இயல்புடையவர்.

ஓம் உன்மத்தாய நமஹ: தனது பராக்கிரமத்தில் மிகவும் தன்னம்பிக்கையுடன் போர் புரிபவர்.அல்லது {யோக நிஷ்டையில் யோகேஸ்வர்ராக இருப்பவர்

ஓம் ஸுர ஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ: தேவர்களின் சேனையை நன்றாக காப்பாற்றியவர்.

ஓம் தேவசேனாபதயே நமஹ: தேவசேனையின் {தெய்வானையின்} கணவர்.

ஓம் ப்ராஜ்ஞாய நமஹ : ஆத்ம ஞானத்தின் வடிவமாக இருப்பவர்.

ஓம் கிருபானவே நமஹ : பெரிதும் தயையும் கருணையும் மிக்கவர்.

ஓம் பக்தவத்ஸலாய நமஹ : பக்தர்களிடம் பெரிதும் அன்புள்ளவர்.

ஓம் உமாஸுதாய நமஹ : உமாதேவியின் புதல்வர்.

ஓம் சக்திதராய நமஹ: சிவசக்தி ஜோதியில் பிறந்து அசுரர்களை கொல்லும் வலிமைக்கும், ஞானத்திற்கும் இருப்பிடமானவர்.

ஓம் குமாராய நமஹ: சிவனுக்கும் பார்வத்க்கும் மத்தியில் செல்லக் குழந்தையாக இருப்பதால் குமாரன் எனப்படுவர்.

ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ: க்ரௌஞ்ச மலையைப் பிளந்தவர்.

ஓம் ஸேனான்யே நமஹ: தேவர்களின் படைத் தலைவர்.

ஓம் அக்னி ஜன்மனே நமஹ: அக்கினிச் சுடராக பிறந்தவர்.

ஓம் விசாகாய நமஹ: விசாக நக்ஷத்திரத்தில் உதித்தவர்.

ஓம் சங்கராத்மஜாய நமஹ: எல்லோருக்கும் மங்களத்தைக் கொடுக்கும் ஈசனின் புதல்வர்.

ஓம் சிவஸ்வாமிநே நமஹ: தந்தையாகிய சிவனுக்கு உபதேசம் செய்ததால் சிவஸ்வாமி என பெயர் பெற்றவர்.

ஓம் கணஸ்வாமிநே நமஹ: சிவ கணங்களை கொண்ட சேனையின் தலைவர்.

ஓம் ஸர்வஸ்வாமிநே நமஹ: ஜீவர்கள், ஜடப்பொருள்கள் உட்பட உலகம் முழுவதையும் தமது சொத்தாக்க் கொண்டிருப்பவர். எல்லோருக்கும் அருள் புரிபவர், எல்லோருக்கும் அருள் புரியும் உயர்ந்த தெய்வம் என்று கொண்டாடப்படுபவர். ஏற்ற தாழ்வு இல்லாத ஸர்வஸ்வாமி {உலக அதிபதி} என பெயர் பெற்றவர்.

ஓம் ஸநாதனாய நமஹ: மிகவும் பழமையானவர்.

ஓம் அனந்த சக்தயே நமஹ: அளவற்ற ஆற்றல் படைத்தவர்.

ஓம் அக்ஷோப்பியாய நமஹ: விருப்பு-வெறுப்பு போன்றவைகளால் {அல்லது எதிரிகளால் சலனமடையாதவர்.

ஓம் பார்வதி ப்ரிய நந்தனாய நமஹ: பார்வதியின் அன்புக்குரிய செல்லக் குழந்தை.

ஓம் கங்காஸுதாய நமஹ: சிவனின் கண்களிலிருந்து தோன்றி தீப்பொறிகள் கங்கையச் சென்றடைந்ததால் கங்கையின் மைந்தன் என்று பெயர்.

ஓம் சரோத்பூதாய நமஹ: சரவணப் பொய்கையில் பிறந்தவர்.

ஓம் ஆஹுதாய நமஹ: யாகங்களால் போற்றப்படுபவர்.

ஓம் பாவகாத்மஜாய நமஹ: அக்கினியின் புத்திரர்.

ஓம் ஜ்ரும்பாய நமஹ: எங்கும் நிறைந்திருப்பவர்.

ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ: பக்தர்களின் உள்ளத்தில் புகுந்து உயர்ந்த எண்ணங்களைத் தோற்றுவித்து மலரச் செய்பவர்.

ஓம் உஜ்ஜ்ரும்பாய நமஹ: பக்தர்களுக்கு நல்ல புத்தியையும் {உலக விசயங்களில் நல்ல அனுபவங்களையும்} முக்தியையும் ஞானத்தையும் அருளி அவர்களை வளரச் செய்பவர்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post அருள் தரும் ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>