கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடமதுரையில் 1500 ஆண்டுகள் குலோத்தங்க சோழனால் பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இங்கு அம்பாள் விசுவநாயகியுடன் விருந்தீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். இவரை திருமணமாகி பிரிந்த தம்பதிகள் வந்து அபிஷேகம் செய்து வந்தால் ஒன்றுசோர்வர்கள் என்பது இத்தலத்தின் ஐதீகம்.
பிராத்தனைகள் நிறைவேறியதும். தம்பதியர் ஒன்று சோர்ந்த பின் இங்குள்ள லட்சுமி நாரயணனுக்கு துளசியால் அர்ச்சனை செய்து பக்தர்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றுகின்றனர்.
பசியால் வந்த சுந்தரருக்கு அம்பாளும் சிவபெருமானும் அவருக்கு விசிறிவிட்டு உணவு உபசரித்தனர். மேலும் ஆண்டுதோறும் பங்குனிமாதம் 17ம் தேதி காலை 6.30 மணி முதல் 6.48 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் இறைவனது திருமேனியில் நேரடியாக விழுகிறது.
கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது. கோயிலின் கருவறை மண்டபம், மகா மண்டபம், திராவிடக் கட்டிடக் கலைப் பாணியில் விமானம் உள்ளது. கோயிலில் மூலவர் விருந்தீசுவரர், அம்பிகை விசுவநாயகி அம்மன், மூர்த்தி சுயம்பு. ஒரு காலத்தில் கொங்குநாடு 24 நாடுகளை உள்ளடக்கியதாக இருந்ததாம். இதில் வடபரிசார நாட்டில் உள்ள சிற்றூர்களில் வடமதுரையும் ஒன்று. இத்தலத்திலிருந்து மேற்குத்திசையில் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. அம்மலையின் ஒரு பகுதியில் குருரிஷி என்ற முனிவர் வாழ்ந்தமையால் அப்பகுதி குருரிஷி மலை என பெயர் பெற்றது. பின்னர் நாளடைவில் அப்பெயர் மருவி குருடிமலையென பெயர்பெற்றது.
முனிவர் இறைவன் மற்றும் இறைவியை தரிசிக்க வரும்போது ‘துடிசை’ என்னும் முரசு வாத்தியத்தை இசைத்த பின்னர் தரிசனம் மேற்கொண்டதால் இவ்வூருக்கு ‘திருத்துடிசையம்பதி’ எனப் பெயர் வழங்கப்பெற்றது. இக்கோயிலுக்கு வடக்கு திசையில் ‘மதுரநதி’ அமைந்த காரணத்தால் வடமதுரையெனவும், வடமன் என்பவரது ஆட்சி அதிகார எல்லையில் அமைந்ததால் வடமன்ஊர் என்று பெயர் பெற்று நாளடைவில் வடமதுரை எனப்பெயர் பெற்றது என்றும் கூறுகின்றனர். இத்தலத்தின் தென்திசையில் பூஜைக்காக நந்தவனம் ஒன்று சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
இக்கோயிலில் அமர்ந்து அடியார்களுக்கு அருள் பாவித்து வரும் இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். ஒரு முறை சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவிநாசி பகுதியில் உள்ள கருணாம்பிகை அவிநாசியப்பரை தரிசனம் செய்துவிட்டு, மலைநாட்டு தலம் செல்லும் வழியில் விருந்தீசுவரரை தொழ எண்ணி பயணித்தார். இவர் கோயில் அடையும் முன்பே பசியால் வாட்டமுற்று சோர்வுற்று தள்ளாடும் நிலைக்கு ஆளானார். இருப்பினும், கோயிலை அடைந்தார். சுந்தரர் வருவதை முன்கூட்டியே உணர்ந்த இறைவனும் இறைவியும் வேடுவர்குல மரபுப்படி ஆடை அணிந்து சுந்தரரை இன்முகத்துடன் வரவேற்றனர். பயணக்களைப்பு, பசிமயக்கம் ஆகியவற்றால் துவண்ட சுந்தரரை அமரச்செய்து தல விருட்சமான முருங்கை கீரை, பூ மற்றும் காய்களை கொண்டு உணவு வழங்கினர்.
பசியுடன் வந்த சுந்தரமுர்த்தி சுவாமிக்கு அவரின் பசியை போக்கி விருந்தளித்த காரணத்தால் இறைவருக்கு விருந்தீசுவரர் எனப் பெயர் வழங்கப்பட்டது. இறைவி விசுவ ரூபம் கொண்டு காட்சியளித்ததால் விசுவநாயகி அம்மன் எனப் பெயர் வழங்கப்பட்டது. இத்தலத்தை அகத்தியர் வழிபட்டுள்ளார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு குரு பூஜை விழா நடக்கிறது. இக்கோயில் வளாகத்தில் அரச மரத்து விநாயகர், பலிபீடம், நந்தியம் பெருமாள், விநாயகர், சமயக்குரவர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், லட்சுமி நாராயணப் பெருமாள் உள்ளன.
தொடர்புக்கு: 9442844884.
அமைவிடம்:
கோவையில் இருந்து வடமதுரைக்கு பஸ் வசதியுள்ளது.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post பசித்த பக்தனுக்கு உணவு கொடுத்த விருந்தீஸ்வரர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.