Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

சுயம்பு மூர்த்தியாக காட்சி தரும் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர்

$
0
0

 97_bigகடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்துள்ள மணவாளநல்லூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இங்கு சுயம்பு மூர்த்தியாக முருகன் கொளஞ்சியப்பர் என்ற பெயரில் முருகன் அருள்பாலிக்கிறார், இவரிடம் பிராது கட்டுதல் நேர்த்திகடனாக இங்கே புதுமையாக உள்ளது. பெருட்கள் திருடுபோய்விட்டாலே, நோய்களால் அவதிப்பட்டாலே, இவரை வணங்கி பிராது கட்டி விண்ணப்பித்து கொண்டால் நிறைவேறும் என்பது பக்தர்களின் தீராதநம்பிக்கை, பிராத்தனைகள் நிறைவேறியதும் உயிர் உள்ள ஜீவராசிகலையும், உயிர் அற்ற பெருட்களைபக்தர்கள் காணிக்கையாக நேர்த்திகடான செலுத்துகின்றனர், வேடனாய் வடிவெடுத்த வேலவன் சுந்தரர் கூட்டத்தை சுற்றி வளைத்தார். நாணேற்றி அம்பின் முனையில் நிறுத்தினார். அஞ்சி நின்ற சுந்தரர் வசமிருந்த பொன்னையும் பொருளையும் பறித்துக்கொண்டார் முருகன். அவற்றைத் திரும்பத் தரும்படி கெஞ்சினார் சுந்தரர்.

வேலவன் பழமலை:

 t_500_439வேலவன் பழமலை வந்து பெற்றுக்கொள் என்று கம்பீரமாய் கட்டளை இட்ட போதுதான், தான் ஈசனை மதிக்காமல் வந்தது தவறு என்பது பிடிபட்டது சுந்தரருக்கு.  உடனே பழமலை வந்து ஈசனைப் பாடி துதித்தார். உடனே இறையருள் கிட்டியது அவருக்கு. அரனின் ஆணைப்படி பழமலை பதியின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வமாய் அமர்ந்தார் வேலவன். அதிலொருவர்தான் மணவாளநல்லூரில் கோயில் கொண்டுள்ள கொளஞ்சியப்பர். இவர் இங்கு கோயில் கொண்ட கதையும் சுவையானது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு இன்று கொளஞ்சியப்பர் கோயில் கொண்டுள்ள மணவாளநல்லூர் அடர்ந்த காடாக இருந்தது. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் நான்கைந்து பேர்கள் சேர்ந்து கொண்டு, மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டியபடி அந்தப் பக்கம் செல்வார்கள். காலை செல்லும் அவர்கள் அந்தி சாய்வதற்குள் வீடு திரும்பி விடுவார்கள். அந்த அளவுக்கு மனித நடமாட்டம் மிகவும் குறைந்த பயமுறுத்தும் காட்டுப் பகுதி அது.

 அப்பகுதி மக்களின் அச்சம் தீர்க்கவும் குறைகளை போக்கவும் திருவுளம் கொண்டான் குமரன். எல்லா மாடுகளும் படிப் படியா பால் தருது.  ஒரு வெள்ள பசு மட்டும் நாலஞ்சி நாளாய் பொட்டு பால் கூட தர மாட்டேங்குதே. மடியில கைய வெச்சாலே எட்டி ஒதைக்குது  என்று மாடு மேய்ப்பவர்களில் ஒருவன் பேசிக் கொண்டிருந்த போதே, அதோ போவுதே அந்த மாடா? என்று கேட்டான் கூட இருந்தவன். ஆமாம்பா. இவ்ளோ வேகமா எங்க ஓடுது? என்று கேட்டபடி கூட்டமாய் பின் தொடர்ந்தார்கள். ஓரிடத்தில் நின்ற பசு, தலையைத் திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தது. யாருமில்லை என்று உறுதி செய்து கொண்டு கண்மூடி நின்றது. அதன் காம்பிலிருந்து பால் தானாய் பொழிந்தது. இதை மறைந்து நின்று பார்த்த மாடு மேய்ப்பவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள். பசுவின் அருகில் சென்று ஆதூரமாய் அதைத் தொட்டார்கள். கண் திறந்து பார்த்த பசு தன் பணி முடிந்த நிறைவில் மெல்ல நகர்ந்தது.

 பால் பொழிந்த இடம் ஒரு கல் பீடமாக இருக்கக் கண்டார்கள். ஊராரிடம் நடந்ததைச் சொல்லி கூட்டி வந்து காட்டினார்கள். இவர் குமரக்கடவுள் என உணர்ந்த பெரியவர்கள், கொளஞ்சி மரங்கள் சூழ்ந்த காட்டின் நடுவே தோன்றியதால் இவரை கொளஞ்சியப்பர் என வாய் நிறையப் போற்றி மகிழ்ந்தார்கள். ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்து வழிபடத் தொடங்கினார்கள்.

 கொளஞ்சியப்பர் கோயில். சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் இக்கோயிலின் அழகிய ராஜகோபுரம் காண்பவர் கண்களுக்கு விருந்தாகிறது. பலிபீடம், கொடிமரம், மயில் ஆகியவற்றைக் கடந்து, சித்தி விநாயகர். அருகே அருவமாய் சுயம்புவாய் தோன்றிய கொளஞ்சியப்பர் வீற்றிருக்கிறார்.

 விநாயகருக்கும் கொளஞ்சியப்பருக்கும் தனித்தனி விமானங்கள் உள்ளன. சுமார் மூன்றடி உயரம் கொண்ட பலி பீட வடிவம் கொண்ட கொளஞ்சியப்பரின் பீடத்தில் ஷடாட்சரம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த கொளஞ்சியப்பர் இப்பகுதி மக்கள் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் வாழும் பக்தர்களுக்கெல்லாம் மகா நீதிபதியாய் இருந்து நல்ல தீர்ப்பும் நல்வாழ்வும் வழங்கி அருள்கிறார். இத்தல நாதன் முருகன் ஒரு மகா நீதிபதிதான். இத்தலத்தில் பிராது கட்டுதல் என்று ஒரு வழிபாடு இருக்கிறது. கோயிலின் பிராகாரத்தில் அதற்காக முனீஸ்வரன் சந்நதி அருகே ஒரு இடமும் இருக்கிறது. பிராது கட்டுவது என்றால் என்ன? கோயில் அலுவலகத்தில் மனு எழுதிட தாள் கிடைக்கிறது. அதில், ‘மணவாளநல்லூர் அருள்மிகு கொளஞ்சியப்பர்  அவர்களுக்கு…. என ஆரம்பித்து, நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன்.

கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து

 இன்னாருடைய மகன். என் பெயர் இது. என்பன போன்ற விவரங்களை எழுதி தனது குறை, கோரிக்கை என்ன என்பதையும் குறிப்பிட்டு, கொளஞ்சியப்பர் சந்நதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் தர வேண்டும். அதை, அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சந்நதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலில் கட்ட வேண்டும். பிராது கட்டியவர்களின் கோரிக்கை பிராது கொடுத்த 90 நாட்களுக்குள் ஈடேறும் என்பது பக்தர்களின் அனுபவம். குழந்தைப் பேறு, கடன் தொல்லை தீர, திருடு போன பொருள் கிடைக்க, ஏமாற்றப்பட்ட பணம் திரும்ப கிடைக்க, பிரிந்து இருக்கும் கணவன், மனைவி ஒன்று சேர, தீராத நோய் தீர, தொலைந்த கால்நடைகள் திரும்ப கிடைக்க, பங்காளி சண்டை, துரோகம் தொலைய, வேலை வேண்டி, வேலை மாற்றம் என பல கோரிக்கைகளை பிராது சீட்டில் எழுதி, குமரன் குறைகளைத் தீர்த்தருள்வான் என்ற நம்பிக்கையோடு கட்டுகிறார்கள்.

 இவ்வாறு பிராது கட்டுவதற்குக் கட்டணம் உண்டு. பிராது கட்டணம் 4 ரூபாய். சம்மன் கட்டணம் 4 ரூபாய். தமுக்கு கட்டணம் 4 ரூபாய். இதர கட்டணம் 8 ரூபாய். இது தவிர படிப் பணமாக வழக்கு கொடுத்தவர் ஊரிலிருந்து மணவாளநல்லூர் கோயில் வரையான தூரத்திற்கு கிலோ மீட்டருக்கு 25 பைசா வீதம் தொகை செலுத்த வேண்டும். இது முதல் மாத கட்டணம். சில வழக்குகள் 90 நாள் வரை நடக்கக் கூடும். அந்த வழக்குகளுக்கு மீதி 2 மாதங்களுக்கு படி கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். வழக்கை வாபஸ் பெற விரும்பினால் 50 ரூபாய் செலுத்தி கொளஞ்சியப்பரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்! தமிழகம், இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, லண்டன், மலேசியா, போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் பக்தர்கள் வந்து இந்த மகா நீதிபதியிடம் நீதி கேட்டு மனு கொடுக்கிறார்கள்.

வேப்பெண்ணெய் மருந்து:

 இக்கோயிலில் வேப்பெண்ணெய் மருந்து தரும் வழக்கமும் இருக்கிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்தமான வேப்பெண்ணெய் வாங்கி வந்து இத்தல அர்ச்சகரிடம் கொடுத்தால் அதை கொளஞ்சி நாதனின் திருவடியில் வைத்து அவனது அருள் பிரசாதமான விபூதியை  சேர்த்து தெய்வீக மருந்தாக்கி தருவார். அதை பய பக்தியோடு பயன்படுத்தினால் தீராத சரும நோய்கள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை. இப்பகுதி விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கும் இந்த அருள் மருந்தை வாங்கி பூசி அவற்றின் நோய்களை தீர்ப்பார்கள். பல மாநிலங்களில் இருந்தும் இந்த மருந்தை பக்தர்கள்  பெற்றுச் செல்வதை இன்றும் காணமுடிகிறது. இந்தக் கோயிலுக்கு சேவல், ஆடு, மாடுகள் போன்றவற்றை நேர்ந்து விடுவதும் வழக்கமாயிருக்கிறது.

தொடர்புக்கு:  91-4143-230232 – 9362151949

அமைவிடம்:

  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post சுயம்பு மூர்த்தியாக காட்சி தரும் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>